பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

强, கீ. ! நான் இரண்டு முறைதான் பார்த்துப்பேசியிருக்கிறேன் என்பது உண்மையே. ஆயினும் இதைக் கொண்டு அவள் குணத்தை நான் மதிப்பது தவருகாது என்று நான் உறுதியாய் கம்புகிறேன். அப்பா, நான் சொல்வதற்காக நீ கோபித்துக் கொள் ளக் கூடாது. இப்படி வெறும் அழகைக் கண்டு விவா கம் செய்து கொண்ட்வர்கள் எத்த்னையோ பேர் நம்மு டைய தேசத்திலேயே மோசம் போயிருக்கிறர்கள். ஐரோப்பா, அமெரிக்கா தேசத்திலுள்ள ஆடவர் பல நாள் பழகிய பின்னர் கல்யாணம் செய்து கொண்ட போதிலும் பிறகு மோசம் போயிருக்கிருர்கள் அவர் கள் மனைவிகளின் மன நிலை அறியாதவர்களாய்-அத் தேசங்களில் எத்தனை தம்பதிகள் சிறிது காலத்திற் கெல்லாம் மனம் ஒவ்வாது பிரிந்தவர்களாய் ஒவ்வொ ருவரும் வேறு மனத்தை நாடி இருக்கின்றனர் என்கிற க்ணக்கினே ஆராய்ந்து பார். என் அனுபோகப்படி இந்துக்களாகிய நமக்கு நமது பெற்ருேர்கள் ஆராய்ந்து பார்த்து செய்விக்கும் மணமே மேலானது. அவர்கள் செய்விக்கும் மண்ம் எல்லாம் சரியாக முடிகிறது என்று நான் கூறவில்லே. ஆயினும் மற்ற தேசங் களில் இருப்பதை விட நமது நாட்டில் தான் ஏறக் குறைய மனம் ஒத்து வாழ்ந்து இல்லறத்தை இடத்தும் கம்பதிகள் அதிகம் என்று நிச்சயமாய் கம்புகிறேன். நான் உன்னைக் கட்டாயப் படுத்துகிறேன் என்று ே நினைக்க வேண்டாம். நீயே யோசித்துப் பார். நான் கூறினது சரி என்று தோன்றில்ை அதன்படி கட, சரியல்ல என்று கோன்றில்ை உன் இஷ்டப்படி நட அப்பா, சற்று தியானித்து நீயே உன் அந்தராத் மாவைக் கேட்டுப்பார். (சற்று கண் மூடி மெளனியாயிருந்து பிறகு கண் விழித்து) ஸ்வாமிஜி என் மாமன் மகளேயே நான் மனப்பது சரியான மார்க்கம் என்று தோன்றுகிறது. இதல்ை என் பெற்றேர்களுடைய கட்டளையையும் என்னை வளர்த்து வந்தவர் கட்டளையையும் என் குரு வாகிய தங்களுடைய கட்டளையையும் நிறைவேற்றி யவனுவேன் என்று தோற்றுகிறது. - அப்ப இதில் உன் மனதில் இன்னும் ஏதோ கஷ்டம் இருக்கிறதுபோல் காண்கிறது.