பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

43

 சொன்னாள். ஒரு முக்கியமான சேதி அம்மா. இரவில் நம் வீட்டருகே ஒரு வண்டி நின்றிருக்கிறது. குதிரைகள் பூட்டப்பட்ட நிலையிலேயே நின்ற அந்த வண்டி திருமாறனுடையது...' என்றாள்.

‘என்ன?’ என்று அடக்கமுடியா ஆர்வத்தோடு கேட்டபடி எழுந்து உட்கார்த்தாள் அமுதம். 'திருமாறனின் சொந்த வண்டியா? அப்படியானால்...'

'அதுதான் எனக்கும் விளங்கவில்லை அம்மா. ஒரு வேளை அவர் வந்திருப்பாரோ?' என்று அன்னக்கிளி இழுத்தாள்.

'வந்திருந்து, ஆந்தை அவரைத் தாக்கிக் கொன்று விட்டு அவனே இங்கு வந்திருப்பானோ? அவள் சந்தேகம் வளர்ந்தது.

விடிவின் வெள்ளொளி எங்கும் பரவிவிட்டது. உயிர்ப்பின் கானம் விண்ணை நிறைத்தது. உயிரின அசைவுகள் மண்ணகத்துக்கு விழிப்பும் இளமையும் தந்தன.

அமுதவல்லி ஓர் ஆளை அழைத்தாள்.

‘இவர்கள் காட்டும் இடம் சேர்ந்து அங்கு நிற்கும் குதிரை வண்டியை ஒட்டி வந்து நம் வீட்டில் நிறுத்து போ!' என்று அவள் கட்டளையிட்டாள்.

வீரர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். அப்பொழுது கூடத் திருமலையின் கண்ணொளி அன்னத்தின் முக மலரில் செம்மையும் மலர்ச்சியும் சேர்த்ததை அமுதவல்லி கவனிக்கத் தவறவில்லை.