பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போரும் நீரும்

இளமைக் காலத்திலே பட்டத்தைப் பெற்றவன் பாண்டியன் நெடுஞ்செழியன். சூழ இருந்த சிற்றரசர் களும் பேரரசர்களும் பாண்டி நாட்டின்மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்கள். ஐந்து வகையான நிலங்களும் விரவியுள்ள நாடு அது. தமிழுக்குச் சிறந்த நாடு. செந்தமிழ் நாடு என்ற சிறப்புப் பெயரைப் பெற்றதல்லவா பாண்டி நாடு?

நெடுஞ்செழியனை இளம்பிள்ளை யென்று எண்ணிய பகைவர்கள் அவனோடு பொருது வென்றுவிடலாம் என்று நினைத்தார்கள். முக்கியமாக யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர அரசனுக்குத்தான் இந்த எண்ணம் அதிகமாக இருந்தது. "இப்போதுதான் இவன் பட்டத்துக்கு வந்திருக் கிருன். சின்னஞ் சிறுவன். இவனுக்கு அடங்கி நடக்கும் அமைச்சரோ படைத் தலைவரோ அதிகமாக இருக்கமாட்டார்கள். நாம் சில மன்னர்களையும் துணை யாகக் கொண்டு போருக்கு எழுந்தால் மிக எளிதில் வெற்றி பெறலாம்” என்று அவன் மனக்கோட்டை கட்டினன். தன் கருத்தை மெல்லப் பரவ விட்டான். "இவ்வளவு பெரிய அரசன் போருக்குப் புறப்பட்டால் வெற்றி கிடைப்பதற்கு என்ன தடை? நாம் இவனுடன் சேர்வதால் இவனுக்குத் துணைவலி மிகுதியாகும் என்பதைக் காட்டிலும், கிடைக்கும் வெற்றியில் நமக்கும் பங்கு கிடைக்கும் என்பதுதான் உண்மை. தக்க சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது" என்று எண்ணிய வேற்று அரசர் சிலர் அவனுடைய