பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

போது செய்யத் தொடங்கிய காரியத்தைச் சிறிது நிறுத்தி வைக்க வேண்டும். நான் இரந்து கூறுவதைச் செவியேற்ற பிறகு திருவுள்ளத்துக்கு எது உடன்பாடோ அதைச் செய்யலாம்.

அரசன்:-ஓ! இதுவா? பகைவரால் அச்சம் நேராமல் நாட்டைப் பாதுகாப்பது அரசன் கடமை. அந்த நீதி பற்றி நான் இதை மேற்கொண்டேன். தாங்கள் இவ்வளவு வேகமாக வந்து ஒரு கருத்தைச் சொல்லப் புகும்போது நான் கேளாமல் இருப்பேனா? சொல்லுங்கள்.

கோவூர் கிழார்:-அரச நீதியை மன்னர்பிரான் உணர்ந்தது பற்றி உவகை கொள்கிறேன். அதனை முற்றும் உண்ரவேண்டும் என்பதுதான் என் கருத்து. வளவர் பெருங்குலம் வழிவழியாகப் புகழை ஈட்டி வருவது. அரசர்பிரானுடைய முன்னேர்களில் ஒவ்வொருவரும் உலகம் அறிந்த புகழை உடையவர். பிற உயிரைத் தம் உயிர்போல் எண்ணும் பேரருளாளர். ஒரு புறாவுக்காகத் தன் உடம்பின் தசையை அறுத்துத் தந்த சிபியின் புகழ் இன்று இதிகாசத்தை உண்டாக்கியிருக்கிறது. அவனுடைய பரம்பரையில் வந்த பெருமான் நம் மன்னர்பிரான் என்பதை நினைக்கையில் என் உள்ளம் பெருமிதம் அடைகிறது. இக்குல முதல்வோர் மனித சாதிக்கு வந்த இடுக்கண்கள் பலவற்றை நீக்கியிருக்கிருர்கள். - ‘.

(குழந்தைகள் அழுகிறார்கள். மக்களின் - ஆரவாரம்.)

கூட்டத்தில் ஒருவர்:-(மெல்லிய குரலில்) கோவூர் கிழார் வந்துவிட்டார். இனி இந்த அரசன் என்ன செய்யப் போகிறான், பார்க்கலாம்.