பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

என்று சொல்லும் வழக்கம் அவனிடம் இல்லை. ஆதலின், "நீங்கள் இங்கேயே இருங்கள். உங்கள் வீடாகவே இந்த இடத்தைக் கருதி வேண்டியவற்றைப் பெற்று இன்புறலாம். இன்றியமையாத கடமை ஒன்றை நிறைவேற்ற நான் போக வேண்டியிருக்கிறது. விரைவில் வந்துவிடுகிறேன். என்றும் வராத நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களை உடனிருந்து உபசரிக்கும் நிலை எனக்கு இப்போது இல்லாமைக்கு வருந்துகிறேன். ஆனாலும் நீங்கள் ஒரு குறைவும் இல்லாமல் இங்கே தங்கலாம்" என்று அன்புடன் சொன்னவன், அமைச்சரிடமும் பிற அதிகாரிகளிடமும் அவர்களைத் தக்க வண்ணம் உபசரிக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றான். அவன் மீண்டும் வருவதற்கு ஒரு வாரம் ஆகிவிட்டது. பாணன் நள்ளியின் அரண்மனையில் தங்கியிருந்தான். ஒவ்வொரு வேளையும் விருந்துதான். புதிய ஆடைகளை அவனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் அரண்மனை அதிகாரிகள் அளித்தார்கள். அவற்றை அணிந்து மனம் விரும்பியமட்டும் இனிய உணவை உண்டு ஒரு நாளைக்கு ஒரு நாள் உடம்பு பொலிவு பெற, அவர்கள் அங்கே தங்கியிருந்தார்கள்.

நள்ளி வந்தான். "உங்களை இங்கு இருப்பவர்கள் சரியாகக் கவனித்துக் கொண்டார்களா?” என்று கேட்டான்.

"எங்கள் வாழ்நாளில் பெருத உபசாரங்களை இங்கே ஒரு வாரமாகப் பெற்று வாழ்கிருேம். முன்பு எங்களைப் பார்த்தவர்கள் இப்போது எங்களைப் பார்த்தால் அடையாளமே கண்டுபிடிக்க மாட்டார்கள்" என்றான் பாணன்.

"உங்கள் பெருந்தன்மையால் நீங்கள் அப்படித் தான் சொல்வீர்கள். நீங்கள் போகும் இடங்களில்