பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐங்குறுநூற்றுச் சொற்பொழிவுகள்

"பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து”

வில்லிபாரதமும் சொல்லியுள்ளது. இவ்வாறு தமிழின் பிறப்பகமாகத் தமிழ்ப்பாடல்கள் உரைக்கும். பொதியிலே என்பதனைக் கற்றார் பலரும் நன்கறிவர். "தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன்" பழைய செய்யுட்பகுதியில், பொதியில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் உடையது எனக் குறிக்கின்றது. "தஞ்சை வாணன் மலைய வெற்பில், தேரும் தோறும் இனிதான் தமிழ் போன்று" என்று தஞ்சைவாணன் கோவைச் செய்யுளடி பொதியத்தில் முத்தமிழை முன்னோர் ஆராய்ந்த செய்தியை உணர்த்துகின்றது. "தமிழ்க்குன்றில் வாழும் சடாதரி பேரியாழ்" எனத் தக்கயாகப்பரணி பொதியத்தைத் தமிழ்க்குன்றென்றே கூறுகிறது.

கம்பர் தமது இராமாவதாரக் காப்பியத்தில் சுக்கிரீவன் சீதாபிராட்டியைத் தேடிவர வானாவீரர்களே உய்த்த அவர்கள் செல்லவேண்டிய வழிகளையும், எதிர்ப்பின் இடங்களையும் குறிப்பிடுவதாகக் கூறுமிடத்து, "தென்தமிழ் நாட்டு அகன்பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற் பீரேல்?

இப் பொதியத்தில் அகத்திய முனிவரைத் தலைவராய்க் கண்ட தமிழ்ச்சங்கம் இருந்தனைச் சுட்டுகின்றார். வாலியோ இவ்விடத்தில், மலய மலையின் உச்சியில் ஞாயிற் கதிர்களோடு ஒத்த அறிவொளியின் பிழம்பாய்த் திகழும் அகத்திய முனிவரைக் கண்டு வணங்குங்கள் என்று வேதாக மாத்திரம் கூறியுள்ளார்.

வால்மீகி மலயத்தில் தமிழ்ச்சங்கம் இருந்ததெனச் சுட்டிச் செல்லவும், கம்பர் இங்ஙனம் கூறியது கடல் கண்ட தமிழகத்திலிருந்த தென்மதுரை கபாடபுரமேனும் நகரங்களும் அவற்றில் விளங்கியிருந்த சங்கங்களும் தோன்றுதற்கு முன்னரேயே தமிழரது முதற்