பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 ஐங்குறுநூற்றுச் சொற்பொழிவுகள்

தமிழ்ப் பெருஞ் செல்வமான இந் நூலை அச்சிட்டு வெளிப்படுத்திய மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையாரவர்களது பேருபகாரத் தகைமையைத் தமிழகம் என்றும் பாராட்டும். இந் நூலின் முதற் பகுதியாகிய மருதத்திணையின் நூறுபாடலுக்கும் தமிழ்மொழியின் செழுமையும் செறியப் புத்துரை ஒன்றெழுதி அச்சிட்டு வெளிப்படுத்திய சித்தாந்த கலாநிதி தமிழ்ப் பேராசிரியர் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளையவர்களது புலமையும் தகைமையும் சாலவும் போற்றற்குரியன.

தமிழ்மக்கள்

தமிழ்மக்களது தோற்றமும் வாழ்க்கை வரலாறும் அளவிடற்கரிய தொன்மை வாய்ந்தவை. பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகெலாம் நீர்ப்பரப்பாகவே இருந்ததென்றும், பின்னர் ஒரு காலத்தில் அந் நீர்ப்பரப்பினின்றும் மலைகள் தோன்றி, அதன் பின்பு மண் தோன்றித்தென்றும், அம்மலைமீது படிந்திருந்த நீரணுக்களில் செறிந்துள்ள உயிரணுக்களினின்றும் பல்வேறு உயிரினங்களும் மரஞ் செடி கொடி வகைகளும் தோன்றிப் பின்னர் மக்கள் தோன்றினர் என்றும் ஒரு சார் உயிரியல், மண்ணியல் முதலிய நுண்ணியல் கலைவல்லார் கூறுவரென்ப. வீரத்தமிழ் மக்களது தொன்மையைச் சுட்டுதற் கெழுந்த பழம் பாட்டொன்று,

"கல்தோன்றி மண்தோன்றிக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி.”

எனக் கூறுகின்றது. இது மேற்கூறிய கலைவல்லார் துணை யிற்கேற்பப் பொருந்தியிருப்பது, நம் முன்னோரது கலையறிவின் தேர்ச்சியைத் தெளிவுறக் காட்டிச் சாலவியப்பின்னைப் பயக்கின்றது. இப்பாட்டு தமிழ்ப் பழங்குடி தோற்றமுற்ற காலம், கல் மாத்திரம் தோன்றி மண் தோன்றாப் பழங்காலம் என்று குறிப்பிடுகின்றமையின் அவர்களது முதற் பிறப்பிட மலையே யொன்று கூறாமலே விளங்கும். இவ்