பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைமை உரை 13

இடமாகிய பொதிய மலையிலேயே முதல் தமிழ்ச்சங்கங்கள் தோன்றியிருந்தது என்னும் தொன்மை வரலாற்றை உட்கொண்டேயாம் என்று கருதுவது பொருந்தும். பொதிகை மலைகளுள் முதுமையானது என்பதும், முதற்கண் உயிர்கள் அம்மலையின் கண்ணேயே பொதியிருந்தன என்பதும் முறையே இம்மலைக்கு வழங்கும் முதுகுன்று, பொதியில் என்னும் பெயர்களே நன்கு விளக்கும். இம் மலையே குமரிக்கோடு முதலிய மக்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிக் தமிழகத்துக்குக் தெற்கெல்லையாக இருந்தது என்பதனைச் சான்றோர் இதற்கு வழங்கும் தென்மலை என்னும் பெயரே நன்கு வலியுறுத்தும்.

" தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளம்" "தென் மலைப் பிறந்த சந்தனம் மறுக" "தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்" என்ற சான்றோர் வழக்குகளைக் காண்க.

இப் பொதியிற்கண் உயிர்கள் தோன்றியவுடன் அவைகள் நிலைத்திருக்க வேண்டிய உயிர்வளியும்' ஆங்கு உடன் தோன்றியமை பற்றியே போலும் தென்றல் காற்றின் பிறப்பகமாகப் பொதியத்தையே புலவர்கள் புனைந்து கூறுவாராயினர்.

தென்னவன் பொதியில் தென்றல் (சிலப்) ஆவியர் தென்றல் வெற்பின் (திருவிளை) என்பன காண்க.

இவற்றையெல்லாம் ஆராயுங்கால் தமிழரது தோற்றமும் தொன்மை நாகரிகமும் மொழியும் எல்லாம் இயற்கை அழகின் நிலையமாக விளங்கும் பொதிகை மலையிடைப் பிறந்து, நாளடைவில் மண்ணடைப் பரந்து காலக் கணிதத்திற்கு எட்டாத பழைமை உடையதென்பது பெறப்படும். உண்மை இங்ஙனமிருப்பவும் தமிழ்மக்களது பிறப்பிடத்தை ஆராய்ந்து கூறப்புக்க சரித அறிஞர் சிலர், தமி

1. Oxygen.