பக்கம்:ஆதி அத்தி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 67 பொன்னி: ஆமாம் ஆமாம்-இப்படியே யாரையும் சந்திக்காமல் இந்த இடத்திலே நாம் அடைபட்டுக் கிடந் தால் நான் உனக்குக் காதலகை வேண்டியதுதான்-நீ எனக்குக் காதலகை வேண்டியதுதான். மருதி (சிரித்துக் கொண்டு): பொன்னி, இன்னும் ஒரு பதினைந்து நாள்-அதற்குள் என் தந்தை பாண்டிய நாட்டிலிருந்து திரும்பிவந்து விடுவார்கள். பிறகு நீ எங்கு வேண்டுமானலும் போகலாம். காவிரிப்பூம்பட்டி னத்தையே தினமும் நாலுதடவை சுற்றிவா-எனக்குச் சம்மதந்தான். பொன்னி: உன் தந்தை இங்கே இல்லாததால் நாம் யாரையும் பார்க்காமல் இங்கே ஏகாந்த வாசம் செய்ய வேணுமென்று கட்டாயமா என்ன?-நாட்டிலே என்ன நடக்கிறதென்றுகூடத் தெரிந்துகொள்ள வழியில்லையே? மருதி: சோழ நாடெல்லாம் நீ தெரிந்துகொள்ளா மலேயே சுகமாகத்தான் இருக்கிறது, பயப்படாதே. நமது அரசர் கரிகாற் பெருவளத்தானுக்கு நீ அமைச் சராக ஆகிறபோது நாட்டு விவகாரத்தை யெல்லாம் நாள் தவருமல் தெரிந்து கொள்ளலாம். பொன்னி: ஆமாம், கரிகாற் பெருவளத்தானுக்கு என்னைவிட்டால் அமைச்சராக வருவதற்கு உலகந் தெரியாத மண்டுகள் வேறு யார் கிடைக்கப்போகி முர்கள்? இந்தப் பதினைந்து நாட்களாக யாரையுமே சந்திக்காமலிருப்பது எனக்கு என்னவோ போலிருக்கிற தென்று சொல்ல வந்தால் இந்த நாட்டியராணி எனக்கு அமைச்சர் வேலை வாங்கித்தரப் போகிருளாம். மருதி: பொன்னி, யாருடனும் சம்பந்தமில்லாமல் காவிரிக்கரையிலே இப்படித் தனி மாளிகையிலே இருப்பது எனக்கு எவ்வளவோ ஆனந்தமாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/68&oldid=742458" இலிருந்து மீள்விக்கப்பட்டது