பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்

ஆசக்குத் தூய அமிழ்தமாகவே தோன்றுவதைத் தலைவி

குறிப்பிடுவது, கற்புடைய மகளிர் தாம் எத்தனைச் செல்வக் குடியில் பிறந்தவரே எனினும் தம் தலைவர்களது வறுமையை அரும்பெருஞ் செல்வமாகவே மதித்து வாழ்வர் என்னும் உண்மையைப் புலப்படுத்தி மிக்க உவப்பையும் வியப்பையும் பயப்பதாக விளங்குகின்றது. எத்துணை இழிந்த உணவாயிருப்பினும், அது அன்போடு கலந்ததாக இருப்பின், அன்பினால் அது தூய தாக்கப்படுகினறது. இதுநாலன்றோ குகன், இராமனுக்கு மீனும் தேனும் அளித்தபோது, அவன் அதனை இழிந்த உணவாகக் கருதாது 'பவித்திரம்' அதாவது மிகவும் தூய்மையானது என்று பாராடடினான்.

'தாய் இரங்குபத்'தில் தன் மகளைத் தலைமகன் தன் ஊருக்கு உடன் போக்காகக் கொண்டுபோய்விட்ட கொடுமையை நினைந்து பிரிவாற்றாது வருந்தும் நற்றாய் நினைக்குந்தொறும் நான் அழும் இத்துயரம் அத்தலைவன் தாயும் படவேண்டும் ' என்று கூறுவதாகவுள்ள செய்யுள்

படிப்போர் உள்ளத்தை இரங்கச் செய்யும்.

உடன்போக்கில் வழியிடைக் கண்டோரை நோக்கித் தலைவி, நான் என் ஆருயிர்த் தலைவனுடன் வழிவருத்தம் மின்றிச் செல்கின்றேன் என்பதை, என் இன்பத்தைக் இதடுத்து இற்செறித்து வைத்திருந்த அந்த என் அறம் இல்லாத கொடிய தாய்க்குச் சொல்லுங்கள் ” என்று

உரைப்பதாகவுள்ள கருத்து, தாயிற் சிறந்த தமரில்லை' என்று தாயின் அன்பை எடுத்துக் கூறப்படும் தாயின் அன்பினையும் மறக்கச் செய்து, அவளைக் 'கொடியள்' 'அறனில்லாள்' எனக் உறவுஞ் செய்த காதலின் வன்மை இத்தகையதோ, என்று இடம் கொள்ளத்தக்கதாக உள்ளது.

'கின்னைபத்தில்' தலைவி, தினைப்புனங் காவல் ஒழிந்த பின் வளைந்து கொள்வேன் என்ற தலைவனுக்குத் தோழி,தலைவி புனங்காத்த லென்பது நாளேயே நின்று விடும் கடைக்குமென்று நினையற்க ; தினைக்கதிரைக் கவரும் கிளி ஓட்டத் தலைவி ஒலிக்கும் ஆயோ என்னுங் குரலேக்