பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தலைமை உரை

ஐந்திணை வாழ்க்கைஇலக்கணம்

நகரவாழ்க்கையினராகிய இவருள் ஒரு புதுமை பித்தர்களாய் முதலில் ஆரிய நாகரிகத்தைத் தழுவ முற்பட்டனர். இங்ஙனம் பன்னெடுங்காலம் தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழ்க்கை புரிந்த மக்களது வாழ்க்கை நெறியினை வரையறை செய்யக் கருதிய சான்றோர் அவர்களது காதலும், வீரமும ஆகிய அகம் புறம் என்னும் வாழ்க்கைகளுக்கு இலக்கணங்கள வகுப்பாராயினர். களவு,கற்பு என்னும் அவர்களது இருவகை மணமுறையையும் வகுத்துக் கூறும் அகப்பொருள இலக்கணத்துள் மக்கள் வாழும் குறிஞ்சி முதலாய நிலத்தையும் கூதிர்கால முதலாகிய காலவகைகளையும் முதற்பொருள் என்றும் அந்நிலக்களில் கருக்கொண்டு

வாழும் இயங்கும் இயங்காப் பொருளகளாகிய விலங்கு பறவை, மரம்செடி முதலியவற்றைக் கருப்பொருளென்றும் மககள் காதல் வாழ்க்கை ஒழுக்கங்களை உரிப்பொருளென்றும். அவ்வப் பொருள்களின் இயல்பிற்கேற்ப இயைபுடைய பெயர்களால் குறியீடுசெய்து இயம்பி வைத்தனர். பண்டைச் சான்றோர் தம் நூல்களுள் இம் முப்பொருளின் இயல்பினைப் பாகுபடுத்திக் கூறியிருக்கும் பான்மையினை ஆராயின் மண்ணியல் உயிரியல் மரபியல் உளவியல் முதலிய பல்கலைத் துறைகளிலும் அவர்கள் பெற்றிருந்த ஆன்ற அறிவின் திட்பம் எத்தகைய நுட்பமுடையதென இக்காலத்துக் கலைவல்லுனர்களும் பெரிதும் வியக்கத்தக்க இவ்விலக்கணநெறி வழாதே பண்டை புலவரெல்லாம். காதல் பனுவல்களாய் அகப் பொருட் பாட்டுக்கள் பாடிப் புலனெறிவழக்கம் செய்துள்ளனர். தமிழ் மொழியிலுள்ள பழம் பாட்டுக்களை ஆராயின் புறப்பொருட் பாட்டுக்களினும் அகப்பொருட் பாட்டுக்களே எண்ணிக்கையில் மிக்குள்ளன என்பதை அறியலாம். இது கொண்டே ஆசிரியர் நச்சினார்க்கினியர். தமிழ் மொழியில்

மிகப்பொலிந்திருக்கும் அகப்பொருள்” ੋ பொருளதிகார உரையில்) விதந்துரைப்பாராயினர். பண்டைத் தமிழ் மக்கள், அன்பினில் விளையும்