பக்கம்:ஆதி அத்தி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆதி அத்தி மாரன் (விசனத்தோடு) ; இந்த வருசம் விளா இப்படியா முடியவேனும்? சந்தோசமா திரிஞ்ச சனங் களே இப்போ ஒரு குஞ்சைக் காணுேம். எல்லாரும் அளுது கிடக்கிரு.ர்கள். சாத்தன் : ஏண்டா, உனக்கு வியாபாரம் போச் சேன்னு பார்க்கிறயா? மாரன் : அடே போடா-இந்த வியாபாரம் யாருக்கு வேனும்? நம்ம இளவரசிக்கு இப்படி வந்துதே -எனக்கு நெஞ்சமெல்லாம் துடிக்குது. சாத்தன் : சேர நாட்டு சின்னராசா ஆட்டனத்தி தான் அவங்களுக்கு உயிர்-இனி எப்படித்தான் பிழைக்கப் போருங்களோ? மாரன் : அதுதாண்டா எனக்கும் ஒரே மலேப்பா இருக்குது. இத்தனை ஆட்டமும் பாட்டமும்-இத்தனை அழகும் தெய்வத்துக்கே பொறுக்கலை. சாத்தன் : தெய்வமா? தெய்வத்துக்கு கண்ணி ருந்தா இப்படி நடக்குமா? மாரன் : வாடா, போய் விசாரிச்சுப் பார்ப்போம். ஒருவேளை எல்லாம் சுகமா முடிஞ்சாலும் முடியும். வா போகலாம். (புறப்பட்டுப் போகிருன்.) சாத்தன் : மாரா, முறுக்குக் கூடையை மறந் திட்டியா? மாரன் : அடே அது கிடக்குது வாடா. நீ சொன் ட்ைபடி அதை இந்த வெள்ளத்து வாயில்தான் போடணும். வா போகலாம். (இருவரும் போகிரு.ர்கள். முறுக்குக் கூடை கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.) திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/56&oldid=742445" இலிருந்து மீள்விக்கப்பட்டது