பக்கம்:ஆதி அத்தி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏕ0 ஆதி அத்தி வேண்மாள் : காவிரிப் பூம்பட்டினத்திலே காவிரி கடலோடு கலக்குமிடம் சென்ற பிறகு அவள் என்ன செய்வாளோ? (அலறித் தேம்புகிருள்.) கரிகாலன் : வேண்மாள், நீ அதைரியப் படாதே. கடற்கரைக்குப் போவதற்குள்ளே அவள் மனம் ஒருவாறு சாந்தி யடையுமென்று நம்புவோம்...... அமைச்சரே, நீங்கள் உடனே புறப்படுங்கள் , எங்கள் உயிர் உங்கள் வசத்திலே இருக்கிறது. (அமைச்சர் வணங்கிப் புறப்படுகிரு.ர்.) திரை காட்சி இரண்டு (காவிரியின் கரையிலே மரங்களும் செடிகளும் அடர்ந்த ஓரிடம். ஆற்றங்கரையிலே கிடைக் கும் மலர்களையெல்லாம் கொத்துக் கொத்தாக அணிந்துகொண்டு சோகமே வடிவாக மனத் தெளிவில்லாத நிலையில் ஆதிமந்தி வருகிருள். காவிரியைப் பார்த்துப் பாடுகிருள். மாலை 6 மணியிருக்கும். பொழுது சாய்ந்து இருள் கூடுகின்ற நேரம்.) ஆதிமந்தி: (பாட்டு) பல்லவி காவிரித் தாயே-என் கணவனைத் தருவாய் (காவிரி) அனுபல்லவி நீர் விளையாடிய மருகனை அன்போடு யேழைத்துக் கொண்டாயே எனை மறந்தாயோ (காவிரி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/62&oldid=742452" இலிருந்து மீள்விக்கப்பட்டது