பக்கம்:ஆண் சிங்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


காது? பத்மாவுக்கு, பிறவியை விட உயர்ந்த மாப் பிள்ளை வேறே யாரு, எங்கிருந்து வந்து குதித்து விடப் போகிருனாம்? ஆவுடையம்மாள் அவள் இயல்புப்படி அடுக்கிக் கொண்டிருந்தாள்.

ராமலிங்கத்துக்கு இதுதான் பேரிடியாக அதிர்ச்சி தந்தது. பத்மா~ அந்தப் பெண்; அவளும் இப்படிச் செய்வாளா?...பத்மா ஒரு துரோகி என்று கத்த வேண்டும் போலிருந்தது...அவனுடைய உள்ளமே அவனைக் கண்டித்தது. அவளேக் குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? நீ அவளை மணம் புரிய ஆசைப்படுகிருய் என்பது அவளுக்கு எப்படித் தெரியும்?

‘என்னுடைய ஆசையை நான் எனது ஆசைக்கு உரியவளிடம்கூட வெளிப்படையாகத் தெரிவிக்கத் துணியவில்லையே! என்று வருந்தினான் அந்த சங்கோஜி.

அதிர்ஷ்டம் துணிச்சல்காரர்களுக்கே துணைபுரியுமாம். காதல்கூட துணிவுள்ளவர்களுக்குத்தான் இனிய வெற்றி தரும். எவருக்கும் காத்து நிற்காத காலத்தையும், அலையையும் போலவே காதலும் காத்துக் கிடப்ப தில்லை. அதன் வேகத்தோடு இணைந்து முன்னேறத் தயங்குகிறவர்கள் அதன் அருளைப் பெறாமல், அதையே இழந்து விடுகிறார்கள்...

ராமலிங்கத்தின் மனம் ஞானஒளி பெற்றுக் கொண்டிருந்தது. அவன் காதுகளில் தாயின் பேச்சு விழாமலில்லை.

‘உனக்கும் ஒரு இடத்திலே பெண் பார்த்திருக்கிறேன். பத்மா போல் அழகாக இல்லாவிட்டாலும், நல்ல குனம்! வீட்டு வேலை எல்லாம் நன்முகச் செய்யும்...’

‘பார்க்கலாம்’ என்று கூறிவிட்டு வெளியேறினான் ராமலிங்கம்.

‘இனிமேல் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?’ என்று கனத்தது அவன் மனக் குறளி, உரிய காலத்தில்

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/106&oldid=1072867" இலிருந்து மீள்விக்கப்பட்டது