பக்கம்:ஆண் சிங்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்



வைத்தால் நல்லது. அவன் உன்னை மாதிரி அமரிக்கை யாய் இருக்க மாட்டான். ஊரிலே நாலு பேரு நாலு சொல்றதுக்கு முன்னாலே நாமே அவனுக்கு ஒரு கால் கட்டைப் போட்டு வைப்பது நல்லதில்லையா? என்று அவள் சொன்னாள். பிறவி ஒரு பெண்ணைக் காதலிக் கிருனாம்; அவளையே கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் என்றும் அவள் இங்கிதமாக அறிவித் தாள்.

தம்பியின் தீவிரம் அண்ணனுக்கு வியப்பைத் தந்தது. அம்மா சிரித்தாள்.'எல்லாரும் உன்னைப் போலவே இருப்பார்களா? நீ குனிந்த தலை நிமிராத தருமரு. இந்தக் காலத்துப் புள்ளெக கணக்காகவா நீ இருக்கிறே?’ என்றாள்.

தனது ஆசையைத் தாயிடம் தெரிவிப்பதற்கு இப்பொழுது கூடத் தயங்கினான் ராமலிங்கம். இளையவன் மனசைக் கவர்ந்த பெண் யாரோ, எந்த ஊரோ என்று அறிந்து கொள்ள முந்தினான்.

‘இதே தெருவில்தான் இருக்கிருள். நீ கூட எப்பவாவது அவளைப் பார்த்திருப்பாய். பத்மா, பத்மா என்று ஒரு பெண்ணைப்பற்றி நான்கூட உன்னிடம் இரண்டு மூன்று தடவை சொல்லவில்லையா?...’

எத்தகைய கூரிய கருவியைத் தன் மூத்த மகனின் இதயத்தில் பாய்ச்சுகிரறோம் எனும் உணர்வு ஒரு சிறிதும் இல்லாமலே அவள் பேசினாள். எதிர்பாராத தாக்குதலால் ராமலிங்கம் திக்குமுக்காடினான். ஒரு நம்பிக்கை ஊசலிட, அதைப் பற்றிக்கொண்டு நிற்க முயன்றான் அவன்.'அந்தப் பெண் வந்து...’ என்று வார்த்தைகளை மென்று விழுங்கலானான்.

‘அதுக்கும் இஷ்டம் இருக்குமின்னுதான் தோணுது. பிறவி அடிக்கடி தெருவில் போகிறபோது அது அவனைப் பார்த்திருக்கும் போலிருக்கு. அவள் அப்பாவுக்கும் சம்மதம்தான். நம்ம பிறவிக்கு என்ன குறை? படிச்சிருக்கான். நல்ல சம்பளத்திலே வேலை பார்க்கிருன் அழகாக இருக்கிருன். எந்தப் பெண் தான் அவனைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதிக்

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/105&oldid=1072234" இலிருந்து மீள்விக்கப்பட்டது