பக்கம்:இரு விலங்கு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சால நன்று

41

}}

இடத்திலும் மனத்தில் நினைக்கலாம். பலகாலும் தரிசித்த பழக்கத்தால் நம்முடைய உள்ளத்தையே கோயிலாக அமைத்துக் கொண்டுவிடலாம்.

"செங்கோடைக் குமரன் என

எங்கே நினைப்பினும் அங்கே என் முன்வந்து எதிர் நிற்பனே’’

என்று அருணகிரியார் சொல்வார். செங்கோட்டு வேல வனை எங்கே நினைத்தாலும் அங்கே வந்து அவன் தோன்றுவானாம். அவருடைய தியான நிலை அப்படிச் சிறந்து நின்றது.

                                           "பதுமமலர்க் 

கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன்என எங்கேநினைப்பினும் அங்கேஎன் முன்வந்து எதிர்நிற்பனே.” என்று பாடினார். நமக்கு அத்தகைய தகுதி இல்லை. அவனுடைய காட்சியை மனத்திலே காண முடிவதில்லை, அகத்திலே கண்ட பிறகல்லவா புறத்திலே காண முடியும்? ஆனாலும் எந்த இடத்திலும் ஆண்டவனை வாழ்த்தலாம். அவனுடைய புகழை எல்லா இடங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

திருநாமத்தின் பெருமை

 வனுடைய நாமத்தைஎங்கும்சொல்லலாம். அவ னுடைய உருவத்தைக் கோயிலுக்குச் சென்றால்தான் கண்ணால் காண முடியும். நா ம த்  தை  யோ எங்கும் சொல்லலாம்; எப்போதும் சொல்லலாம். ஆகவேதான் இறைவனுடைய உருவத்தைக் காட்டிலும் நாமம் சிறந்தது என்றுசொல்வார்கள். இன்று நாம் உலகத்தில் தரிசிக்கின்ற உருவங்கள் ஆண்டவனுடைய நேரான உருவம் அல்ல. அவனைத் தம்முடைய அருள் கண்ணால் கண்ட பெரியவர்கள் அவன் இப்படித்தான் இருப்பான்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/63&oldid=1402472" இலிருந்து மீள்விக்கப்பட்டது