பக்கம்:இரு விலங்கு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாயிரம் கண்

37


மூன்று காரியங்களுக்கும் கண்கள் இன்றியமையாதன. ஆதலின் அவற்றை வற்புறுத்தினார்.

 மேதினியில் நாம் சென்று அடையும் எல்லையில் இருக்கும் திருச்செங்கோட்டுக்குப் போக இரண்டு கால் கள் போதும். இரண்டு கால்களால் நடக்கும் அளவுக்குள் அகப்பட்டவை அத்தலமும் மலையும், இறைவனைத் தொழும்போது, எனக்கு வேறு செ ய லி ல் லை என்ப தற்கு அடையாளமாக இரண்டு கைகளையும் குவிக்கிறோம். அந்த இரண்டுமே செயலின்றிக் குவியும்போது வேறு கைகள் எதற்கு? ஆனால் முருகனுடைய அழகோ காணக் காண விரிவது; எல்லை காண ஒண்ணாதது
  "அண்ணலார் குமரன்மேனி அடிமுதல் முடியின் காறும்
   எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி னாலும் 
   
   கண்ணினால் அடங்காது"

என்பது கந்தபுராணம். ஆகவேதான்' "நாலாயிரம் கண் படைத்திலனே" என்று கண்ணை மாத்திரம் சொன்னார்.

நாலாயிரம் கண்கள்

 பொ துவாக எதைப்பற்றிச் சொன்னாலும் ஆயிரம் என்று சொல்வது வழக்கு. அவ்வாறு இங்கே ஆயிரம் கண் படைத்திலனே என்று சொல்லியிருக்கலாம். ஆனால்,

நாலாயிரம் கண் படைத்திலனே

என்று சொல்கிறார். அதற்கு என்ன பொருத்தம் என்பதைப் பார்க்கலாம். கண்களைப் படைக்கிறவன் பிரமன். அவனை,

நான்முகன்

என்று சொல்கிறார் அருணகிரியார். 'இவர் திருச்செங் கோட்டுக்குச் செல்வார். அங்கே முருகப்பெருமானைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/59&oldid=1402470" இலிருந்து மீள்விக்கப்பட்டது