பக்கம்:இரு விலங்கு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

இரு விலங்கு

  கோள் - கொள்ளுதல். கைக்கோளனை -   கையிலேய  கொள்ளுதலை உடையவனை. வானம்- தேவர்; ஆகுபெயர். பொருமா என்றாலும் மாவாய் நின்ற சூரன் அப்படி நிற் பதற்கு முன்பு பொருததையே குறித்தது. தரு மா- கனி களைத் தரும் மாமரம்; தருவாகிய மாமரம் என்றும் கொள்ளலாம். வாழ்த்துகை நாவின் செயல்; அது மனிதன் பெற்ற சிறப்பான கரணமாதலின் அதன் செயல் சால நன்றாயிற்று; நன்று - நன்மை தருவது.
  இது கந்தர் அலங்காரத்தில் வரும் 91-ஆம் பாட்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/82&oldid=1298806" இலிருந்து மீள்விக்கப்பட்டது