அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்/அண்ணாவின் அறிவு மொழிகள்
அடக்கு முறைகள் எல்லாம் விளையாட்டுக் கருவிகளே.
அழகு ஒர் ஆபத்தான ஆயுதம்.
அறிவிப்பு சாதனையல்ல.
அன்பைவிடப் பெரியது உலகில் ஒன்றுமில்லை.
இது பாமரனின் காலம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
ஏமாற்றத்தின் விளைவே சினம்.
ஏழைகளுக்கு உதவுவது நாட்டுக்கு உதவுவது ஆகும்.
ஏழையின் சிரிப்பிலே இறைவன்.
ஒரு நாட்டின் உயிர் அதன் பண்பாட்டிலே.
கட்டாயம் எப்பொழுதும் எதிர்ப்பைத் தோற்றுவிக்கும்.
கடமை கண்ணியங், கட்டுப்பாடு.
கத்தியைத் தீட்டாதே; புத்தியைத் திட்டு.
கதை என்பது கட்டுவதுதானே!
கருத்து சிந்தனையின் விளைவு
கவிதையின் அடிப்படை உணர்வுப் பெருக்கு.
காலம் என்னுஞ் சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்ளாதவன் சிறந்த கவியாகான்.
சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.
சர்வாதிகாரம் ஒரு காட்டுத்தீ.
சாலை ஓரத்திலே வேலையற்றதுகள். வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள். அது தான் காலத்தின் குறி!
நடந்ததை நடத்தவாறு உரைப்பது இதழ் அறம்.
நல்லவன் வாழ்வான்.
நீதியே நிலையானது; தீர்ப்பன்று.
பண்பாடு நிலையானது.
பூகோளத்துடன் விஞ்ஞானம் சேரவில்லை என்றால் சூயஸ்கால்வாய் ஏது.
பொது வாழ்விலே எரிமலை, அலைகடல், பூகம்பம் தீ எல்லாம் உண்டு?
போர் மனிதப் பண்புகளுக்கு நேர்மாறானது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
மக்களாட்சி ஒரு வீட்டு விளக்கு.
மறப்போம்; மன்னிப்போம்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
மாறாத சமுதாயம் மறைந்துவிடும்.
முணுமுணுப்பு இன்று இடி முழக்கமாகிவிட்டது.
முத்தமிழ் என்றால் அது முக்கணித் தோட்டம்.
மொழி காக்கப்படவேண்டும், இனம் அழித்து விடாமல் இருக்க.
விடாமுயற்சி இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்.
வீட்டிற்கோர் புத்தகசாலை நாட்டுக்கு நலந்தரும்.