அன்னப் பறவைகள்/அன்னப் பறவைகள்
மழைக் காலத்தில் தூக்கணாங் குருவிகள் பறந்து சென்று வசிக்கக் கூடிய ஒரு தூர தேசத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பதினொரு பிள்ளைகளும், ஒரு பெண்ணும் இருந்தனர். பதினொரு சகோதரர்களும் தங்கப் பலகைகளில் வயிர எழுதுகோல்களைக் கொண்டு எழுதிப் படித்து வந்தனர். அவர்கள் புத்தகங்கள் இல்லாமலே, பாடங்களைப் படித்துச் சொல்லக் கூடிய வல்லவர்கள். ஆகவே, அவர்கள் அரச குமாரர்கள் என்பதைக் கேட்காமலே சொல்லி விட முடியும். அவர்களுடைய தங்கை எழிலி ஒரு சிறு கண்ணாடி ஆசனத்தில் அமர்ந்து, படப் புத்தகம் ஒன்றைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். அரசர் அவளுக்காகப் பாதி ராஜ்யத்தை விலையாகக் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தார். இவ்வாறு பன்னிரெண்டு குழந்தைகளும் கவலையில்லாமல் இன்பமாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால் அந்த இன்பம் நீடித்திருக்க முடியவில்லை. முதல் மனைவி தவறிப் போயிருந்ததால், அரசர் வேறு ஒருத்தியை மணந்து, அவளைப் பட்டத்து இராணியாக்கிக் கொண்டார். அவள் மிகவும் கொடியவள். அரசருடைய குழந்தைகளிடம் அவளுக்கு அன்பே கிடையாது. இது, முதல் நாளிலேயே தெரிந்துவிட்டது. குழந்தைகள் வேடிக்கைக்காகத் தங்களுக்குள் விருந்து நடத்தி விளையாடுகையில் நிறையப் பணியாரங்களும் ஆப்பிள் பழங்களும் வைத்திருப்பார்கள். இராணியம்மாள் வந்த பிறகு, 'பணியாரங்கள், பழங்களுக்குப் பதிலாக ஒரு கிண்ணத்தில் மண்ணை வைத்துக் கொண்டு விளையாடுங்கள்! மண்ணையே பண்டங்கள் என்று பாவனை செய்து கொள்ளுங்கள்!' என்று கட்டளையிட்டாள்.
அடுத்தவாரம் எழிலி கிராமத்தில் ஒரு குடியானவன் வீட்டில் வசிக்கும்படி அனுப்பப்பட்டாள். பையன்களைப் பற்றி இராணி நாள்தோறும் சொல்லிவந்த பொய்யான தீய செய்திகளைக் கேட்டுக் கேட்டு, அரசர் அவர்களை எண்ணிப் பார்ப்பதேயில்லை.
கொடுமனம் படைத்த சிற்றன்னை அவர்களைப் பார்த்து, 'இனி நீங்கள் வெளியேறுங்கள்! உலகில் எங்காவது போய்ப் பிழையுங்கள்! நீங்கள் வாய் திறந்து கூவமுடியாத பறவைகளாக ஆகிவிடுவீர்கள்' என்று சபித்தாள்.
சகோதரர்கள் அனைவரும் அழகான பதினொரு அன்னப்பறவை வளாகிவிட்டனர். உடனே அங்கிருந்து அரண்மனைச் சாளரத்தின் வழியாக வெளியேறி, அவர்கள் பூந்தோட்டங்களையெல்லாம் தாண்டி, வனத்தை அடைந்தனர்.
அவர்கள் போகும் பொழுது, கிராமத்தில் எழிலி வாழ்ந்துவந்த குடியானவன் வீட்டுக் கூரைமீது சிறகடித்து வட்டமிட்டுப் பறந்தனர். அப்பொழுது வைகறை நேரமாயிருந்ததால், அவர்களை எவரும் கவனிக்கவில்லை. அவர்கள் வெகுதூரம் பறந்து செல்ல வேண்டியிருந்ததால், அங்கு அதிக நேரம் தங்க முடியவில்லை. கடைசியில் கடற்கரை ஓரமாயிருந்த ஒரு வனத்திற்குப் போய், அங்கே அவர்கள் தாங்கியிருந்தனர். குடியானவன் வீட்டில் எழிலி எப்படியோ பொழுது போக்கிக் கொண்டிருந்தாள். வியாடுவதற்குப் பொம்மைகளில்லை, துணைவியருமில்லை. அவள் கீழே கிடந்த ஓர் இலையைப் பொறுக்கி யெடுத்து, அதிலிருந்த ஒரு துளை வழியாகப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அப்படிக் கவனித்தால், தன் சகோதரர்களைக் கண்டுவிடலாம் என்று அவள் எண்ணிணாள் போலும்! காலம் கழிந்து கொண்டேயிருந்தது.
அவளுக்குப் பதினைந்து வயது நிரம்பியது. அப்பொழுது அவள் அரண்மனைக்குத் திரும்ப வேண்டும் என்பது இராணியின் ஏற்பாடு. இராணி அவளைக் கண்டதும் பெருமூச்சு விட்டுக் கலங்கினாள். எழிலி பேரழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் கொதித்தாள். ஆனால், அரசர் எழிலியைப் பார்க்க ஆசை கொண்டிருந்ததால், அவள் எழிலியையும் ஓர் அன்னமாக மாற்றிவிடாமலிருந்தாள். ஆயினும் அவள் வேறு ஒரு திட்டம் வைத்திருந்தாள்.
மூன்று பச்சை நிறத் தவளைகளைக் கொண்டு வந்து, அவள் குளிப்பறையிலிருந்த நீரில் மிதக்கவிட்டாள். அவைகளில் ஒன்று இளவரசியின் தலையில் அமர வேண்டும்; மற்ற ஒன்று நெற்றியிலும், மூன்றாவது நெஞ்சிலும் அமர வேண்டுமென்று அவள் தன் மந்திர சக்தியால் ஏற்பாடு செய்தாள். தவளை தலையில் இருந்தால், எழிலியும் அதைப் போல கறுகறுப்பில்லாமல் மக்காக மாறிவிடுவாள்; தவளை நெற்றியில் இருந்தால், அவள் முகம் முழுதும் விகாரமாகி விடும். தவளை நெஞ்சிலேயிருந்தால், இதயத்தில் கவலைகள் அதிகமாகும்.
இத்தகைய திட்டத்துடன் இராணி எழிலியைக் குளிப்பறைக்குப் போகச் சொன்னாள். அங்கே மூன்று தவளைகளும் தங்களுக்குக் குறிப்பிடப்பட்ட இடங்களில் ஏறி அமர்ந்து கொண்டன. ஒரு பாவமும் அறியாத இளவரசியின் உடலைத் தீண்டியவுடன், அவைகள் செந்நிறப் பூக்களாகி விட்டன. மந்திர வித்தை அவளிடம் பலிக்க வில்லை!
இதை அறிந்து கொண்ட அரசி அவள் தலையிலும், முகத்திலும் வேப்பமுத்துக்களை மாவாக்கிப் பூசி வைத்தாள். கூந்தலை விகார மாகப் பின்னித் தொங்கவிட்டாள். அந்த நிலையில் எழிலியைக் கண்டவர்களுக்கு அவளை அடையாளமே தெரியாது. அரசர் அவளைப் பார்த்ததும், 'இவள் என் மகளில்லை!' என்று சொல்லிவிட்டார். ________________
8 எழிலி விம்மினாள், அழுதாள், தன் அருமைச் சகோதரர்களைப் பற்றி எண்ணினாள். அவளும் அரண்மனையை விட்டு வெளியேறி னாள். பகல் முழுதும் பல புல்வெளிகளிலும், சதுப்பு நிலங்களிலும் அவள் நடந்து திரிந்தாள். இறுதியில் ஒரு வனத்தை வந்தடைந் தாள். எங்கே செல்ல வேண்டும் என்பதோ, எப்படிச் செல்ல வேண்டும் என்பதோ அவளுக்குத் தெரியவில்லை. அவள் உள்ளத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. தன் சகோதரர்களைக் கண்டு பிடிக்க எங்கேயாவது நடந்து சென்று கொண்டேயிருக்க வேண்டும் என்று அவள் எண்ணினாள். ஆனால் அவள் வனத்தினுள் நுழைந்ததும் இருட்டிவிட்டது. அவள் 'ஆண்டவனைத் தொழுதுவிட்டு, புல்லையே பாயாகக் கொண்டு, ஒரு வேரில் தலைசாய்த்துக் கீழே படுத்தாள். சுற்றிலும் அமைதியாயிருந்தது. காற்றும் ஓசையில்லாமல் தவழ்ந்து சென்றது. நூற்றுக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் அவளைச் சூழ்ந்து பறந்து பச்சை நிறமாக ஒளிவீசிக்கொண்டிருந்தன. காலையில் அவள் எழுந்தவுடன், அருகிலிருந்த ஒரு பொய்கையில் முகம் கழுவுவதற்காகச் சென்றாள். அங்கே அவள் நீருள் தன்முகத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். தன் கோரமான உருவத்தை மாற்றிக் கொள்வதற்காக அவள் தண்ணீரைக் கொண்டு முகத்தையும் தலையையும் நன்றாகத் தேய்த்துக் கழுவினாள். பிறகு நீருள் பார்த்த பிறகுதான் அவள் உண்மையான அரசகுமாரி என்று தெரிந்தது. வனத்திலே சிறிது தூரம் நடந்து செல்லும் பொழுது அவள் ஒரு கிழவியைக் கண்டாள். கிழவியிடம் பேரிக்காய்கள் நிறைய இருந்ததால், இருவரும் அவைகளில் சிலவற்றைத் தின்று பசியாறினர். சாப்பிடும்பொழுது எழிலி தன் சகோதரர்களான பதினொரு இளவரசர்களைக் கண்டது உண்டா என்று கிழவியிடம் கேட்டாள். இல்லை, நான் பதினொரு பேர்களைக் கண்டதில்லை. ஆனால் நேற்று ஓர் ஆற்றில் பதினொரு அன்னங்கள் நீந்திக்கொண்டிருப்ப தைப் பார்த்தேன். அவைகளின் தலைகளில் சிறு தங்கக் கிரீடங்களும் இருந்தன!' என்றாள் கிழவி. பிறகு அவள் எழிலியை அந்த ஆற்றுக்கு அழைத்துச் சென் றாள். இளவரசி அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு, ஆற்றின் போக்கி லேயே கரையில் நெடுந்தூரம் நடந்து சென்றாள். ஆறு இறுதியில் கடலில் போய் விழுந்து கொண்டிருந்தது. கடலில் ஒரு கப்பலையோ, ஓடத்தையோ காணவில்லை. அவள் மேற்கொண்டு எங்கே செல்லமுடியும்? கடற்கரையிலுள்ள வழவழப்பான உருண்டைக் கற்களை அவள் பார்த்தாள். தன் கைகளைவிட மென்மையாக இருந்த கடல் நீர் அந்தக் கற்களை உருட்டி, நாளடைவில் அவ்வளவு மென்மையாகச் செய்திருக்கிறது. 'இதே போல நானும் உழைப்பேன். கடல் அலைகளைப் போல நானும் ஓயாமல் அலைவேன். நாளடைவில் நானும் என் உடன்பிறந்தார்களைச் சந்திக்கவே செய்வேன்!' என்று அவள் அங்கேயே உறுதி செய்து கொண்டாள்.
கதிரவன் மறையும் நேரத்தில், எழிலி வானத்தில் பதினொரு அன்னங்கள் கரை நோக்கிப் பறந்து வருவதைக் கண்டாள். கிழவி கூறியபடியே அவைகளின் தலைகளில் சிறு பொன் முடிகள் இருந்தன. ஒன்றன் பின் ஒன்றாக, அவை பறந்து வந்தது ஆகாயத்தில் ஒரு வெள்ளை நாடா பறப்பது போல் இருந்தது. எழிலி கரையில் ஒரு புதருக்குப் பின்புறம் சென்று மறைந்து கொண்டாள். அன்னங்கள் கரையில் இறங்கி, தங்களுடைய பரந்த சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தன.
கதிரொளி மறைந்தபின், அவைகள் தங்கள் இறகுகளையெல் லாம் உதிர்த்துவிட்டு, பதினொரு அழகிய இளவரசர்களாகி விட்டன. அவர்கள் எழிலியின் சகோதரர்களே! அவர்கள் எவ்வளவு மாறியிருந்த போதிலும் அவள் அவர்களை ஒரு நொடியில் தெரிந்து கொண்டு விட்டாள். உடனே புதரிலிருந்த அவள், அவர்கள் நடுவே பாய்ந்து, ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி அழைத்தாள். அவர்களும் தங்கள் சின்னஞ்சிறு சகோதரி எவ்வளவு பெரியவளாகவும், அழகாகவும் வளர்ந்துவிட்டாள் என்று ஆச்சரியப்பட்டனர். ஒருவர் மாறி ஒருவராக அவர்கள் அவளைப் பிடித்து இழுத்துக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்; அழுதார்கள்; சிற்றன்னை தங்களுக்குச் செய்த தீமைகளைப் பற்றிப் பேசினார்கள்.
பிறகு எல்லோருக்கும் மூத்தவன் தங்கள் வரலாற்றைச் சுருக் கமாகச் சொன்னான். 'சூரியன் உதித்தவுடன் நாங்கள் அன்னங்க ளாகி ஆகாயத்தில் பறக்கிறோம். அது மலைவாயிலில் விழும் பொழுது நாங்கள் மீண்டும் மனித உருப் பெறுகிறோம். ஆதலால் சூரியன் மறையும் இடத்திற்கு எவ்வளவு அருகிலே இருக்க முடியுமோ அவ்வளவு அருகில் நாங்கள் போய்த் தங்குகிறோம். அந்த இடம் வெகு தொலைவில் இருக்கிறது. அது ஒரு பெரிய பாறை. அதன்மீது நாங்கள் பதினொரு பேர்களும் மனித உருவில் சேர்ந்துநிற்கத்தான் இடம் இருக்கும். நாங்கள் அங்கு போவதற்கும், பின்பு திரும்புவதற்கும் வருடத்தில் பகற்பொழுது அதிகமாயுள்ள இரண்டு நாட்களை நாங்கள் குறிப்பிட்டுக் கொள்கிறோம். இந்தப் பக்கத்தில் நாங்கள் இன்னும் இரண்டு நாட்களே தங்கியிருக்க முடியும்'.
நான் உங்களை எவ்வாறு காப்பாற்ற முடியும், சொல்லுங்கள்!' பான்று எழிலி வினவினாள். இதைப்பற்றி அவர்கள் எல்லோரும் இரவு முழுதும் பேசிக்கொண்டேயிருந்தனர். இடையில் சிறிது சிறிது கண்ணயர்ந்ததுதான் அன்று அவர்களுடைய தூக்கம்.
காலையில் அன்னங்கள் வானத்தில் சிறகடித்துப் பறக்கும் ஓசை கேட்டு எழிலி விழித்துக் கொண்டாள். கதிரொளி வந்தவுடன் அவர்கள் உருமாற நேர்ந்தது, பதினொரு பேர்களும் அன்னங்களாகி விட்டனர். மற்ற அன்னங்கள் உயரே பறந்தபொழுது, ஓர் அன்னம் மட்டும் கீழேயிருந்து அவள் மடியில் தலைசாய்த்துக் கொஞ்சிக்கொண்டிருந்தது. அதுதான் சகோதரர்களில் மிகவும் இளையவனுடைய உருவம் என்று அவள் நன்றாகத் தெரிந்து கொண்டு, அதை அன்புடன் தடவிக் கொடுத்தாள். அன்று பகல் முழுதும் அவளுடனேயே அது தங்கியிருந்தது. மாலையில் மற்ற அன்னங்களும் திரும்பி வந்தன. இருள் படரும் நேரத்தில் அவைகள் யாவும் சொந்த உருவங்களைப் பெற்றன.
'நாளை நாங்கள் வெகு தூரம் பறந்து செல்ல வேண்டும்' என்று சகோதரர்கள் சொன்னார்கள். 'ஓர் ஆண்டுக் காலம் நாங்கள் திரும்பிவர இயலாது. உன்னை இந்தக் கோலத்தில் நாங்கள் எப்படி விட்டுச் செல்ல முடியும்? நீயும் எங்களுடன் வருகிறாயா? உனக்குப் பொதிய தைரியம் இருக்கிறதா? நீயும் வந்தால் நாங்கள் தங்கும் இடத்தை ஒரு முறை பார்க்கலாம். உன்னை ஒரு வலையில் வைத்து, நாங்கள் எல்லோரும் சேர்ந்து தூக்கிச் செல்ல முடியும் என்று நம்புகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
'நானும் உங்களோடு வருகிறேன். என்னையும் எடுத்துச் செல்லுங்கள்' என்றாள் எழிலி.
சகோதரர்கள் இரவு முழுதும் வேலை செய்து, கொடிகளையும் செடிகளையும் உரித்து, வலிமையுள்ள ஒரு வலையைத் தயாரித்தார்கள். அதில் எழிலியைத் தூக்கி வைத்துக்கொண்டு, விடியற்காலையில் அவர்கள் அன்னங்களாகி, தங்கள் அலகுகளில் வலையைப் பிடித்துக்கொண்டு பறந்து சென்றார்கள். அவள் அப்போது உறக்கத்திலிருந்தாள். கதிரவன் சுடர் அவள் முகத்தில் பட்டபொழுது, ஓர் அன்னம் அவளுக்கு நிழலாயிருக்கும்படி அவளுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்தது. அவள் கண்விழித்துப் பார்த்ததும், அக் காட்சியைக் கண்டுகொண்டாள். தனக்கு மேலே பறந்தது கடைசி இளவரசன் என்றும் யூகித்துக்கொண்டாள். அவனே அவளுக்காகச் சில கனியும் பறித்து வலையில் வைத்திருந்தான். அவள் அவனைப் பார்த்து முறுவல் செய்தாள்.
அன்னங்கள் பறந்து பறந்து நெடுந்தூரம் சென்றன. அவைகள் வழக்கம்போல் அதிக வேகமாகப் பறக்கமுடியவில்லை. ஏனெனில் அவைகள் அன்று எழிலியையும் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. புயல் ஒன்று வீசிற்று; இரவும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மேல் திசையில் கதிரவன் இறங்கிக்கொண்டே யிருந்ததை எழிலி கவனித்தாள். இறங்க வேண்டிய பாறையும் கண்ணுக்குத் தெரியவேயில்லை. திடீரென்று இருட்டிவிட்டால், அவளும் சகோதரர்களும் நடுக் கடலில் விழ வேண்டியிருக்கும். தன்னால் தன் சகோதரர்களுக்கும் ஆபத்து விளையுமே என்று அவள் அஞ்சி நடுங்கினாள். அன்னங்கள் மேலும் அதிக வேகமாகப் பறந்து சென்றன.
கதிரவன் கடலின் விளிம்புக்கு இறங்கி விட்டான். சிறிது நேரத்தில் நீருள் பாதி மறைந்து விட்டான். அப்பொழுது அன்னங்கள் செங்குத்தாக கீழே விழுவது போல் இறங்கி, சிறிது தூரம் பறந்து சென்றன. அங்கே சிறிது வெளிச்சம் இருந்தது. எழிலியும் பாறையைக் கண்டு கொண்டாள். அவள் பாறையின்மீது இறங்கும்பொழுது சூரியன் ஒரு சிறு தாரகைபோல் தென்பட்டது. அப்பொழுது அவளுடைய . சகோதரர்கள் கைகளைச் சேர்த்துக் கொண்டு அவளைச் சுற்றி நின்றனர். பாறை அவர்கள் நெருங்கி நிற்பதற்கு மட்டும் போதுமானதாகயிருந்தது.
அலைகள் பாறையிலே மோதின. நீர்த் திவலைகள் அவர்கள் அனைவர் மீதும் தெறித்துக்கொண்டிருந்தன. வானம் செக்கச் செவேலென்று சிவந்து காணப்பட்டது. இடிகளும் உருண்டு கொண்டிருந்தன. எழிலியும் சகோதரர்களும் கைகோத்து நின்று இனிமையான கீதம் பாடினர். அதனால் அவர்களுடைய உள்ளத்தில் நம்பிக்கையும் வீரமும் பொங்கிப் பெருகின.
வைகறையில் காற்று அமைதியாகவும் பரிசுத்தமாகவும் வீசிக் கொண்டிருந்தது. சூரியன் உதித்தவுடன், அன்னங்கள் எழிலியைத் தூக்கிக்கொண்டு பறந்து சென்றன. காற்றில் மிதந்து கொண்டே, அவள் பனிபடர்ந்த மலைச் சிகரங்கள் பலவற்றைக்கண்டாள். அவைகளின் நடுவில் மாபெரும் அரண்மனை ஒன்று இருந்தது. அதன் நீளம் மட்டுமே ஒரு மைல் இருக்கும். அதைச் சுற்றி வரிசை வரிசை யாகக் கமுக மரங்கள் ஓங்கிவளர்ந்திருந்தன. வண்ண வண்ணமான மலர்களுடன் பல பூச்செடிகளும் அழகு செய்துகொண்டிருந்தன. 'இந்த இடத்திற்கா நாம் செல்கிறோம்?' என்று அவள் கேட்டாள். அன்னங்கள் இல்லையென்று தலைகளை அசைத்தன. அந்த அரண்மனையும் தோட்டங்களும் துரவுகளும் மார்கானை என்ற ஒரு தேவதையினுடையவை. விவரம் தெரிந்த மனிதர் எவரும் அந்தப் பக்கத்தில் போகவே மாட்டார். எழிலி அங்கேயே பார்த்துக்கொண்டிருக்கையில், எத்தனையோ மாற்றங்களைக் கண்டாள். நிலங்களும் மலைகளும் நிறம் மாறின. கட்டிடங்களின் உருவங்களும் மாறி மாறிக் காட்சி யளித்தன. சூரியன் சாய்வதற்கு வெகு நேரத்திற்கு முன்பே அவளும் சகோதரர்களும் குன்றுகள் சூழ்ந்த ஒரு பெரிய குகையை அடைந்தனர். குகையைச் சுற்றித் திராட்சைக் கொடிகள் படர்ந்திருந்தன.
கடைசி சகோதரன் எழிலிக்குத் தான் துயில வேண்டிய இடத்தைக் காட்டினான். அப்பொழுது, 'இன்றிரவு இங்கே நீ என்ன கனவு காண்கிறாய் என்று பார்ப்போம்!' என்றான்.
'கனவில் உங்களைக் காப்பாற்ற ஒரு வழி தெரிந்தால் போதும்!' என்று அவள் சொன்னாள். அதிலிருந்து அவள் உள்ளத்தில் அதே சிந்தனை நிறைந்து விட்டது. படுப்பதற்கு முன் அவள் இறைவனை மனமாரப் பிரார்த்தனை செய்தாள்; உறக்கத்திலும்கூடப் பிரார்த்தனை நிற்கவில்லை. இடையில் அவள் தேவதை மார்கானையின் அரண்மனைக்குப் பறந்து செல்வதுபோல் தோன்றிற்று. தேவதை அவளிடம் வரும்பொழுது ஒளி மயமாகத் திகழ்ந்து கொண்டிருந்தாள். ஆயினும் உற்றுப் பார்க்கையில் அவள் முன்னொரு நாள் கண்ட கிழவியைப் போலவும் தோன்றினாள். அந்தக் கிழவிதான் அன்னங்களைக் கண்டதாக அவளிடம் முதலில் சொன்னவள். மார்கானை, நீ உன் சகோதரர்களைக் காப்பாற்றிவிட முடியும்' என்று, அதற்குரிய விவரத்தையும் சொன்னாள்; 'க.டல் நீரால் கல்லும் தேய்ந்துவிடுகிறது. கடலைப்போல் நீயும் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும். நெஞ்சில் நிறைய உறுதிவேண்டும். கடலில் ஓயாமல் அலை வீசிக்கொண்டிருக்கும். அதற்கு இதயம் கிடை யாது, வேதனையும் தெரியாது. ஆனால் உனக்கு மென்மையான இதயமுண்டு. உனக்கு வேதனைகள் வரும். நீ எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு உரத்துடன் இருக்கவேண்டும். என் கைகளிலுள்ள முட்செடிகளைப் பார்! இவைகளைத் தொட்டாலே முள் குத்தி உன் கைகளில் உதிரம் வரும். இவைகளைக் கால்களால் நன்றாக மிதித்து, இவைகளிலிருந்து பொடி நார்களை உரிக்கவேண்டும். அந்த நார்களைக் கொண்டு நீ சட்டைகள் பின்னவேண்டும். பதினொரு சட்டைகள் பின்னி முடிந்தவுடன், நீ அவைகளை அவர்கள் மீது போடவேண்டும். அவர்கள் அதுமுதல் அன்ன உருவிலிருந்து மாறி நிலையாக அரசகுமாரர்களாகவே இருப்பார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் நீ நார் உரிக்கத் தொடங்குவதிலிருந்து பதினொரு சட்டைகளும் பின்னி முடியும்வரை, நீ எவரிடமும் வாய்திறந்து பேசவே கூடாது. பேசினால், உன்னுடைய முதல் வார்த்தையே அம்புபோல் பாய்ந்து உன் சகோதரர் அனைவரையும் கொன்றுவிடும். ஆகவே அவர்களுடைய ஆவிகள் உன் நாவைப் பொறுத்திருக்கின்றன! இந்தச் செடிகள் இந்தக் குகையைச் சுற்றி நிறைய உண்டாகியிருக்கின்றன.
எழிலி விழித்தெழுந்தபொழுது பூமியில் சூரியன் ஒளி எங்கும் பரவியிருந்தது. எழுந்தவுடன் அவள் ஆண்டவனுக்கு நன்றி சொல்லித் தொழுதாள். உடனே அவள் தன் வேலையைத் தொடங்குவதற்காகக் குகையை விட்டு வெளியே சென்றாள். - பூப்போன்ற தன் மெல்லிய கைகளால் அவள் முள் செடிகளைப் பற்றி ஒடித்துச் சேர்க்கலானாள். கைகளில் முள் குத்தியதால் இரத்தம் வடிந்தது. கைகள் புண்ணாகிவிட்டன. எனினும் எவர்களுக்காகச் செடிகளைப் பறிக்கிறாள் என்று எண்ணியவுடன், அவள் மேலும் உறுதியுடன் அவைகளை ஒடித்தாள். பிறகு அவைகளைப் பஞ்சுபோன்ற பாதங்களால் மிதித்து நேர்த்தியான நார்களாகும்படி செய்தாள்.
மேல் வானத்தில் பரிதி ஒளிமறைந்ததும், சகோதரர்கள் திரும்பி வந்தனர். அவள் பேச்சில்லாமல் மௌனமாயிருந்ததைக் கண்டதும் அவர்கள் திடுக்கிட்டுக் கவலையடைந்தனர். தங்கள், சிற்றன்னை இழைத்த புதிய தீமைதான் இதற்குக் காரணமாயிருக் குமோ என்று அவர்கள் பயந்தனர். அவளுடைய கைகளைப் பார்த்த பின், அவள் தங்களுக்காக அப்படியிருக்கிறாள் என்று அவர்கள் யூகித்தனர். கடைசிப் பையன் அவள் அருகிலே சென்று அழுதான். அவன் கண்ணீர்த் துளிகள் பட்ட இடமெல்லாம் அவளுக்கு வலியில்லாமற் போயின; புண்களும் ஆறிவிட்டன.
இரவு முழுதும் எழிலி சட்டை பின்னிக்கொண்டிருந்தாள். சகோதரர்களைக் காப்பாற்றி முடியும்வரை அவள் எப்படி ஓய்ந்திருக்க முடியும்? மறு நாள் முழுதும் சகோதரர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் அவள் தனியே தன் வேலையை விடாமல் செய்து கொண்டிருந்தாள். நேரம் கழிவதே தெரியவில்லை; ஒரு சட்டை தயாராகி முடிந்தது; இரண்டாவது சட்டையை அவன் பின்னத் தொடங்கிய சமயத்தில், வெளியே வேட்டைக்காரருடையா கொம்பு ஊதும் ஓசையை அவள்கேட்டு நடுக்கமடைந்தாள். அவள் குகைக்குள்ளே ஓடிச்சென்று, தான் சேகரித்த முட் செடிகளை யெல்லாம் ஒரே கட்டாகக் கட்டி, அதன்மீது அமர்ந்து கொண்டாள். கொம்பின் ஒலி நெருங்கி வந்துகொண்டிருந்தது. வேட்டைநாய்களும் குரைக்கத் தொடங்கின; பெரிய நாய் ஒன்று குகையின் பக்கம் ஓடி வந்தது. அதைத்தொடர்ந்து மற்றொன்று. மேலும் ஒன்றாக நாய்கள் வந்து கொண்டிருந்தன! சிறிது நேரத்தில் வேட்டைக்காரர் சிலரும் குகைக்கு வெளியே காணப்பட்டனர். அவர்களில் மிகவும் அழகாகயிருந்தவன் தான் அந்நாட்டு அரசன். அவன் எழிலியிடம் நெருங்கிக் கவனித்தான். அவளைப்போன்ற அழகியை அவன் இதற்கு முன்பு கண்டதேயில்லை.
'அருமைப் பெண்ணே , நீ இங்கு எப்படி வந்து சேர்ந்தாய்?' சான்று அவன் கேட்டான். எழிலி தலையை ஆட்டினாள். பதில் பேசுவதற்கு அவளுக்குத் துணிவு வரவில்லை. அவளுடைய மௌனம்தான் சகோதரர்களின் உயிர்நாடி. அதை அவள் உணராத ஒரு விநாடி கூட இல்லை. தன் கைகளின் தழும்புகளை அரசன் பார்த்துவிடாதபடி அவள் கைகளை முன்றானைக்குள் மறைத்து வைத்துக்கொண்டாள்.
அரசன் அவளைப் பார்த்து; 'இனி நீ இங்கே யிருத்தல் தகாது; நீ என்னுடன் வந்துவிடு! உன் அழகைப் போல உன் குணமும் அமைந்திருந்தால், நான் உன்னைப் பட்டினாலும், பொன்னினாலும் - அலங்கரிப்பேன். எல்லாச் செல்வங்களும் பொருந்திய என் அரண்மனையிலேயே நீ வசிக்கலாம்!' என்று சொன்னான்.
பிறகு அவன் அவளைத் தூக்கித் தன் குதிரைமீது வைத்துக் கொண்டான். அவள் அழத்தொடங்கினாள். அப்பொழுது, 'நான் உன்னுடைய நன்மையையே நாடுகிறேன். இதற்காக நீ பின் ஒரு காலத்தில் எனக்கு நன்றி கூறுவாய் ! என்று அவன் சொல்லிக் கொண்டே குதிரையைத் தட்டிவிட்டான். மற்ற வேட்டைக்காரர் களும் அவனைத் தொடர்ந்து சவாரி செய்தனர்.
கதிரவன் அடையும் பொழுது அவர்கள் தலைநகரை அடைந் தனர்; அரசன் எழிலியைத் தன் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றன். அரண்மனைதான் எவ்வளவு பெரிது, எவ்வளவு அழகு! சுவர்களிலும், முகடுகளிலும் வர்ணம் தீட்டிய பல சித்திரங்கள் காணப்பட்டன. ஆளுல் அவைகளை யெல்லாம் கண்டு களிக்கும் மனப்பான்மையிலா எழிலி இருந்தாள்? அவள் அழுதாள், விம்மினள், அவ்வளவுதான். அரசிக்குரிய உடைகளைப் பணிப் பெண்கள் கொண்டு வந்து அவளுக்கு அணிவித்தார்கள். முத்துக்களை அவள் கூந்தலில் சேர்த்துவைத்துப் பின்னினர்கள். தழும்புகளுள்ள அவள் கைகளில் பட்டு உறைகளை மாட்டினார்கள்.
விலை மதிப்புள்ள உடைகளை அணிந்த பின் அவள் மகாராணி யாகவே தோன்றினாள். அதிகாரிகளும் அமைச்சர்களும் தாமாகவே அவளை வணங்கினர். ஆனால் அரசருடைய மதகுரு மட்டும் விலகியிருந்து தலையை ஆட்டினார். அவள் ஒரு சூனியக்காரியாயிருந்து மங்திர வித்தைகள் செய்கிறாளோ என்று அவருக்கு ஐயமிருந்தது.
அவருடைய பேச்சு எதையும் அரசன் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. எழிலிக்காக இன்னிசை விருந்துக்கு அரசன் ஏற்பாடு செய்தான். அவளுக்கு உயர்ந்த அறுசுவை உண்டிகள் பரிமாறச் செய்தான். பிறகு அவள் நந்தவனங்களுக்கும், நடன மண்டபங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டாள். ஆயினும் அவள் மனம் எதிலும் பற்றவில்லை; அவளுடைய பவள இதழ்தளில் புன்னகையே பூக்கவில்லை.
பின்னால் அரசன் ஒரு சிறு அறையைத் திறந்து அவளுக்குக் காட்டினான். தரையிலே பச்சைக் கம்பளங்கள் விரிக்கப் பெற்றி ருந்தன. அவள் முன்பு தங்கியிருந்த குகையைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக அரசன் இப்படிச் செய்திருந்தான். முட் செடிகளிலிருந்து அவள் உரித்துவைத்திருந்த நார்க் கட்டு அங்கே இருந்தது. அவள் பின்னிவைத்திருந்த சட்டை உயரே தொங்கிக் கொண்டிருந்தது. இவைகளை யெல்லாம் வேட்டைக்காரன் ஒருவன் அதிசயப் பொருள்கள் என்று கருதிக் குகையிலிருந்து எடுத்து வந்திருந்தான். 'இது உனது பழைய குகை; இங்கே நீ நன்றாகக் கனவு கண்டு கொண்டிருக்கலாம். பழைய சூழ்நிலைகள் உனக்கு இன்பமளிக்கும்! என்று அரசன் கூறினன்.
தன் உள்ளத்திற்கு உவப்பான பொருள்களைக் கண்டதிலும், தனக்கு ஏற்ற சூழ்நிலை அமைந்ததிலும் எழிலிக்கு மனம் குளிர்ந்தது. அவள் ஒருவாறு புன்னகை செய்து, அரசனுடைய கையை மகிழ்ச்சியோடு முத்தமிட்டாள். அரசன் அவளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டான். அவன் அவளே பட்டத்து இராணியாவாள் என்று முரசறையும்படி கட்டளையிட்டான்.
மதகுரு மட்டும் அவள் சூனியக்காரி என்று அடிக்கடி அரசனுக்கு அந்தரங்கமாக ஓதி வந்தார்; ஆயினும் அரசனுடைய மனம் அதை நம்ப மறுத்தது. திருமணம் நெருங்கிவிட்டது. மதகுருவே எழிலியின் தலையில் பொன் முடியைச் சூட்ட வேண்டியிருந்தது. அவரால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. அவர் கிரீடத்தை வைக்கும் பொழுது சிறிது பலமாக அழுத்தி வைத்தார். எழிலி அந்த வலியைப் பொறுத்துக் கொண்டாள். அவளுடைய துக்கமெல்லாம் தன் சகோதரர்களைப் பற்றியதுதான்; ஆகவே அவள் அழாமலிருந்தாள்.
நாள்தோறும் அவளுக்கு அரசன்பால் அன்பு பெருகிக் கொண்டிருந்தது. அவளுக்காக அவன் என்னென்ன ஏற்பாடுகள் செய்துவந்தான்! அவன் நல்லவன். அவளுக்கு நல்லவைகளையே செய்து, அவள் மகிழ்ச்சியடைவதையே அவன் நாடினான். அவளும் தன் சோகத்தின் காரணத்தை அவனிடம் விளக்கிச்சொல்ல வேண்டுமென்று விரும்பினாள். ஆனால் அவள் மெளனமாகவே இருக்க வேண்டியிருந்தது. ஆதலால் அவள் ஒவ்வோர் இரவிலும் தன் அறையில் தங்கி ஒவ்வொரு சட்டையாகப் பின்னி முடிப்பதில் ஈடுபட்டாள். ஏழாவது சட்டையைப் பின்னத் தொடங்கிய பொழுது நார் தீர்ந்துபோயிருந்தது. அவளுக்கு வேண்டிய முட்செடிகள் தேவாலயத்திற்கு அருகில் கல்லறைகளைச் சுற்றி ஏராளமாக வளர்ந்திருந்தன. ஒருவருக்கும் தெரியாமல் அவளே போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரவேண்டியிருந்தது.
ஓர் இரவில் நிலவு வீசிக்கொண்டிருக்கையில் அவள் தோட்டத்திற்குச் சென்றாள். மனம் பதறியது. ஏதோ தவறான வேலையைச் செய்வதுபோல் மனச்சான்று உறுத்திற்று. அவள் துணிந்து அங்கிருந்து வெளியேறி, அரவம் அடங்கியிருந்த பல தெருக்களின் வழியாக நடந்து சென்று, ஆலயத்தை ஒட்டியிருந்த இடுகாட்டை அடைந்தாள். அங்கே தனக்கு வேண்டிய முட்செடிகளைப் பறித்துக் கொண்டு, அவள் வேகமாக அரண்மனை திரும்பினாள்.
இரவில் ஒரே ஓர் ஆசாமிதான் அவளைக் கண்டது; அவரே மதகுரு. அவள் சாதாரணப் பெண் அல்லள்; சூனியக்காரிதான் என்று அவர் நிச்சயம் செய்துகொண்டார். மந்திர வித்தையால் அவள் மன்னனையும் மக்களையும் மயக்கி வைத்திருக்கிறாள் என்பது அவருக்கு உறுதியாகி விட்டது.
மதகுரு கண்டவிஷயத்தை அரசனும் கேள்விப்பட்டான். எழிலி தன் பக்கம் நிற்காமலே அவசரமாக அறைக்குள்ளே சென்றதையும் அவன் கவனித்திருந்தான். அடுத்த நாள் இரவும், அதற்கு அடுத்த நாள் இரவும் எழிலி சட்டைகள் பின்னிக்கொண்டிருந்தாள்; மேற் கொண்டு ஒரு சட்டைதான் பின்ன வேண்டியிருந்தது. மீண்டும் நார் தீர்ந்து போய்விட்டது. எனவே, அவள் மீண்டும் இரவில் தனியாக இடுகாட்டுக்குச் செல்ல நேர்ந்தது. அவள் போன பின்பு, மதகுருவுடன் அரசனும் சேர்ந்துகொண்டு, தொடர்ந்து சென்றான்.
நடந்ததையெல்லாம் நேரில் பார்த்த மன்னன், 'இனி மக்கள் தாம் இதை விசாரித்துத் தீர்ப்புக்கூற வேண்டும்!' என்று வருத்தத் தோடு சொன்னான். அவளுடைய இரகசியமான போக்குவரத் துக்களைப் பற்றிக் கேட்ட பொதுமக்கள், "இவள் சூனியக்காரிதான்!' என்று முடிவு செய்தனர். அக்கால வழக்கப்படி அவளை நெருப்பில் கொளுத்திவிட வேண்டும் என்று முடிவும் கூறப்பட்டது.
எழிலி தன் அழகான அறையை விட்டு வெளியேறி, இருளடைந்த சிறையில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருந்தாள். பொன்னுக்கும் பட்டுக்கும் பதிலாக அவள் பின்னியிருந்த சட்டைகளே அவளுக்கு மானத்தைக் காத்துக்கொள்ள அளிக்கப்பட்டன. முட் செடிகளின் கட்டு அவளுக்குத் தலையணையாக - வைக்கப்பட்டது. அந்த நிலையிலும், அவள் தன் வேலையைத் தொடர்ந்து செய்யலாம் என்று மகிழ்ச்சியே அடைந்தாள். கடவுளைத் தொழுதுவிட்டு, அவள் வேலையைத் தொடங்கினாள்.
மாலை நேரத்தில் வெளியே ஏதோ சிறகுகள் அடிப்பதுபோல் ஓசை கேட்டது. அவளுடைய கடைசிச் சகோதரன் அவள் இருக்கு மிடம் அறிந்து, அன்ன உருவில் அங்கே வந்திருந்தான். மறுநாள் இரவுதான் அவளுடைய கடைசி இரவாக இருக்கும். அந்த நிலையிலும், அவளைக் கண்டதிலேயே அவன் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினான். எழிலுக்கும் மகிழ்ச்சிதான். கடைசிச் சட்டையும் முடியும் தருவாயிலிருந்தது. அவளுடைய சகோதரர்கள் அவள் இருக்கும் இடத்திற்கு அருகில் வந்துவிட்டார்கள் என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள்.
சுண்டெலி ஒன்று அன்றிரவு அவளுக்கு மிகவும் உதவி செய்தது. தொலைவில் கிடந்த நார்களை அது வாயால் இழுத்து அவள் அருகில் கொண்டு வந்து வைத்துக்கொண்டிருந்தது. சாளரத்திற்கு வெளியே குயில் ஒன்று இரவு முழுதும் விடாமல் பாடிக் கொண்டிருந்தது; இதுவும் அவள் தைரியத்தைக் கைவிடாமலிருக்க உதவி செய்தது. அவள் பின்னிக்கொண்டே யிருந்தாள்.
பொழுதுவிடிய ஒருமணி நேரத்திற்கு முன்னால், பதினொரு சகோதரர்களும் அரண்மனை வாயிலில் போய்க் காத்திருந்து மன்னனைப் பேட்டி காண வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டார்கள். அரண்மனைக் காவலர்கள் அப்பொழுது அரசனை எழுப்ப இயலாது என்று மறுத்துச் சொன்னர்கள். வாயிலில் என்ன சப்தம் என்று பார்க்க அரசனே அங்கு வந்து பார்த்தான். அந்த நேரத்தில் கதிரொளி பரவிவிட்டதால் சகோதரர்கள் அங்கில்லை. அவர்கள் உருமாறி அன்னங்களாகி அரண்மனைக்கு மேலாகப் பறந்து சென்று விட்டனர்.
சூனியக்காரி எரிக்கப்படுவதைப் பார்க்க வேண்டுமென்று அன்று காலையிலிருந்தே மக்கள், கூட்டம் கூட்டமாக நகர வாயி லுக்கு வெளியே சென்று கொண்டிருந்தனர்.
எழிலி ஒரு கட்டை வண்டியிலே கொண்டு செல்லப்பட்டாள். சாக்குப் போன்ற துணியில் அவளுக்கு உடை அணிவிக்கப்பட்டி ருந்தது. அவள் வண்டியில் நின்றுகொண்டே, கடைசிச் சட்டையை முடித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய நீண்ட கூந்தல் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது. அவள் கன்னங்கள் வெளிறியிருந்தன. உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. பாமர மக்கள் மாயக்காரி மந்திரம் சபிக்கிருள்! என்று அறியாமல் பேசினர்கள். அவள் கையிலிருக்கிற சட்டையைப் பிடுங்கிக் கிழித்தெறியுங்கள்!' என்றும் அவர்கள் கத்தினர்கள்.
கூட்டம் அவளைச் சுற்றி நெருக்கிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் வானத்திலிருந்து பதினொரு அன்னப்பறவைகள் வண்டியினை நோக்கி வேகமாகச் சிறகடித்துப் பறந்து வந்தன. அருகில் வந்ததும், எழிலி ஒவ்வொரு சட்டையாக ஒவ்வோர் அன்னத்தின் மீதும் அவசரமாகப் போர்த்தினுள். பதினொரு அன்னங்களும் பதினுெரு இளவரசர்களாக மாறி நின்றனர். ஆனால், கடைசி இளவரசனுக்கு மட்டும் ஒருகைக்குப் பதிலாக ஒரு சிறகு இருந்தது. ஏனெனில் சட்டையில் அந்தக் கையை மட்டும் பின்ன எழிலுக்கு நேரமில்லை.இனி நான் பேசலாம்! நான் ஒரு பாவமும் அறியாதவள்!' என்று அவள் உரக்கக் கூவினாள்.
கடந்த காட்சிகளைக் கண்ணுற்ற பின் மக்கள் மனம் மாறி அவளைத் தெய்வப் பெண்ணாகப் போற்றினார்கள். ஆனால், கடுமையான வேலையினாலும், கவலையினாலும், துயரத்தினாலும், அச்சத்தினாலும் அவதிப்பட்டுக்கொண்டிருந்த எழிலி மயங்கித் தன் சகோதரர்கள் மீது சாய்ந்து கிடந்தாள்.
மூத்த சகோதரன், அவள் அபலையென்றும், அப்பாவியென்றும் சொல்லித் தங்கள் வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைத்தான்.
எழிலி விழித்தெழுந்த சமயத்தில் அவள் உள்ளத்தில் இன்பமும் அமைதியும் தேங்கி நின்றன. தேவாலயங்களில் மணிகள் தாமாகவே அடித்து முழங்கின. பறவைகள் இன்னிசைக் குரலில் பாடி மகிழ்ந்தன. அந்த இடத்திலிருந்து மணக்கோலத்துடன் எழிலி ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். மன்னனும் எல்லையற்ற மகிழ்ச்சி யடைந்தான். 1779–3