உள்ளடக்கத்துக்குச் செல்

அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக






அறிஞர்
அண்ணா சொன்ன
100
நகைச்சுவைக் கதைகள்

தொகுத்தவர்
வெ. பார்த்திபன்

கிடைக்குமிடம்:
ராமன் பதிப்பகம்
சென்னை-18

மறு பதிப்பு: 1970

விலை ரூ. 2-00

முத்து வெளியீடு

தோடுகுளம்


மூவேந்தர் அச்சகம், 37, சீ. பெ. ச. தெரு, சென்னை - 14.

அண்ணாவைப்பற்றி: ரா. பி. சேதுப்பிள்ளை
அண்ணா ஒரு மருத்துவர்

இளந்தமிழுலகத்தில்—எழுகின்ற தமிழகத்தில்—இன்று ‘அண்ணா’ என்று அருமையாக அழைக்கப்படுகின்றவர் தோழர் திரு. அண்ணாதுரை, அவர் ஆயிரம் மேடை ஏறிய அறிஞர்; பல்லாயிரம் மக்களின் உள்ளத்தை ஒருங்கே கவரும் சீரிய கூரிய சொல்லாளர்; கண்ணினின்று கண்ணறச் சொல்லும் திண்ணியர்.

அண்ணாதுரை கலையறிந்தவர். தமிழ் நாட்டின் பழைய நிலையறிந்தவர். “மன்னும் இமயமலை எங்கள் மலையே” என்று மார்தட்டிக் கூறிய வீரர் வாழ்ந்த தமிழகத்தில் இன்று கோழைகளாய், மோழைகளாய் நாம் குன்றலாகாது; காளைகளாய்க் களிறுகளாய் வாழ்தல் வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர் அவர்.

தமிழ்க் குலத்தை அழிக்கும் வேர்ப் புழுக்களை அழித்தாலன்றித் தமிழகம் தழைக்குமாறில்லை; ஊழ்வினையே பேசி ஆள்வினை அற்றிருக்குமளவும் நாம் உய்யுமாறில்லை என்று உறுதியாகக் கருதுகின்றவர் அவர்.

தமிழ்நாட்டைப் பிடித்த பீடைகள் ஒழிய வேண்டுமாயின், “நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்று வள்ளுவர் வகுத்த, மருத்துவ முறையைத் தயங்காது தமிழர் கையாளுதல் வேண்டும் என்பது அவர் கொள்கை. புண்ணுற்ற மேனியைப் புறம் பொதிந்து மூடுதலால் என்ன பயன்? என்பது அவர் கேள்வி.

பதிநலம் வாய்ந்த மருத்துவர் அழுகிய தசையைப் பார்த்து அறுத்தால் தமிழ்க்குலம் தலையெடுக்கும் என்பதில் என்ன தடை? உள்ளொன்றும் வைத்துப் புறமொன்று பேசும் கள்வரது நச்சுப் பகைமையை நசுக்காவிட்டால் நாடு நலம் பெறுவதெப்படி?

தமிழர் வாழவேண்டும், தமிழர் பண்பாடு சிறக்க வேண்டும் என்ற அரும் பெருங்குறிக்கோளுடையவர் அறிஞர் ‘அண்ணா’ அவர்கள்.

ரா.பி. சேதுப்பிள்ளை

அண்ணாவின் விருந்து

இளைஞர்களிடையில் அண்ணாதுரைக்கு செல்வாக்கு அதிகரித்து வந்திருக்கிறது. அண்ணாதுரையின் சொல்வன்மையும் எழுத்துவன்மையும், இளைய உள்ளங்களுக்கு ருசித்ததே இதற்குக் காரணம்.

உலக அறிவோடும், அரசியல் உணர்ச்சியோடும், இனவெழுச்சியும்,கலை ஆர்வமும், மொழிப்பற்றும், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வண்ணம் கிளர்ந்தெழுந்தன. இந்தப் புதிய எழுச்சியும், உணர்ச்சியும் வாலிபர்களையும் தீண்டாமலில்லை. அண்ணாதுரையின் பேச்சிலும் எழுத்திலும் புத்துணர்ச்சிக்கு ஒருவித கவர்ச்சியும், திருப்தியும் ஏற்பட்டது. அண்ணாதுரையை மாணவர்கள் விரும்பினர்; வாலிபர்கள் சூழ்ந்தனர்.

அண்ணாதுரை, “சமூக சீர்திருத்தத்திற்குப் புதிய மெருகு கொடுத்து, புதிய உணர்ச்சிகளைத் தழுவிப் போகாவிட்டால் கட்சிக்கு வளர்ச்சியில்லை” எனக் கண்டார். அதனால் புதிய அமைப்புக்கு வேண்டிய பூர்வாங்க வேலைகளைப் பூர்த்தி செய்தார்.

ப. ஜீவானந்தம்


உள்ளடக்கம்