அறிவுக்கு உணவு/ஒன்றுபட்டால்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒன்றுபட்டால்

மனிதன் எதை எதையோ கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ளவில்லை. மனிதனால் மிக அற்பமானது என்று கருதப்படுகின்ற தேங்காய் நார்த் துசியானது சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டு, பலதுாசுகள் சேர்ந்து இழைகளாகி, மூன்று இழை சேர்ந்து சிறு கயிறாகி, அது மூன்று சேர்ந்து பந்தற் கயிறாகி, அது மூன்றும் சேர்ந்து நீர் இறைக்கும் வால் கயிறாகி, அது மூன்று சேர்ந்து தேர் இழுக்கும் வடக் கயிறாகித் தானே தேங்காயை உடைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது. மிக அற்பமான இத்தூசியினிடத்திலிருந்து சேர்ந்து வாழும் அறிவை மனிதன் பெறுவானா? -பெற்றால், அவன் வாழ்வு சிறக்காதா?