அறிவுக் கனிகள்/ஜீவிய சரிதம்
Jump to navigation
Jump to search
63. ஜீவிய சரிதம்
990. சரியாக ஆராய்ந்து பார்த்தால் " சரித்திரம்" என்று ஒன்று இல்லை; உள்ளது ஜீவிய சரிதமே.
லாண்டார்
991.சகல நூல்களிலும் அதிகமான சந்தோஷம் அளிப்பதும் உபயோகமானதும் ஜீவிய சரிதமே.
லாண்டார்
992.உண்மையாக எழுதும் ஜீவிய சரிதம் எப்பொழுதும் உபயோகமே செய்யும்.
ஜாண்ஸன்
993.எல்லா நூல்களிலும் ஜீவிய சரிதைகளே எல்லோர்க்கும் இனியன, பயன் அளிப்பன.
கார்லைல்
994.நல்ல முறையில் நடத்திய ஜீவியத்தைப் போலவே நல்ல முறையில் எழுதிய ஜீவிய சரிதமும் அபூர்வமானதாகும்.
கார்லைல்