உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக் கனிகள்/தியாகம்

விக்கிமூலம் இலிருந்து

51. தியாகம்


820. மனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம் மனிதனுக்காக இறக்கு மிடமே.

எம்.ஜே.பாரி

821.முள் தைக்கா வண்ணம் ரோஜா பறிப்பது எப்படி?

பில்பே

822. நல்ல காரியங்களுக்காகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் பொழுதுதான் அவை அதிகப் பிரியமானவை ஆகின்றன.

வாவனார்கூஸ்

823.நெருப்பு வழிச் செல்பவன் புகைக்கு அஞ்ச மாட்டான்.

டெனிஸன்

824. திராட்சைக் கொடி கனி தருவதாக எண்ணாமல் கனி தந்துகொண்டிருப்பதுபோல், தியாகம் செய்வதாக எண்ணாமல் தியாகம் செய்வதே மனிதனுடைய உண்மையான இயல்பாகும்.

மார்க்க ஒளரேலியன்

825.தன்னைப் பிறர்க்காகத் தியாகம் செய்தல் சகல சமயங்களுக்கும் அழியாத அஸ்திவாரம்—அது ஒன்றே சாஸ்வதமான உண்மையறம்.

மாஜினி

826.உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் உங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன்.

கிறிஸ்து

827.இலட்சியம் சீக்கிரமாகப் பழுத்துப் பயன் தருவது, தியாகம் செய்வோருடைய இரத்தம் பாய்ந்து போஷிக்கப்படும் பொழுதுதான்.

மாஜினி

828.தன்னை ஒடுக்கும் தியாகம்—இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானமாகும்.

கார்லைல்

829.பெரிய விஷயங்களில் தியாகம் செய்தல் எளிது, சிறிய விஷயங்களில் தியாகம் செய்வதே கடினமாகும்.

கதே

830. எவ்வித தியாகமுமின்றி எவ்வித நன்மையும் பெற முடியாது.

ஹெல்ப்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/தியாகம்&oldid=1000103" இலிருந்து மீள்விக்கப்பட்டது