உள்ளடக்கத்துக்குச் செல்

அழகர் கோயில்/029

விக்கிமூலம் இலிருந்து

பிற்சேர்க்கை III : 1

வெள்ளியக்குன்றம் பட்டயம் 1

சுபஸ்தி ஸ்ரீமன் மகா மண்டலேஸ்பான் அரியதள விபாட
பாஷைக்குத் தப்புவறாய கண்டன் மூவறாய கண்டன் கண்டநாடு
கொண்டு கொண்டநாடு கொடாதான் யெம்மண்டலமுந் திறை
கொண்டருளிய றாஜாதிறாஜன் ராஜ பரமேஸ்வரன் ராஜ
5 பிரதாபன் றாஜ மாத்தாண்டன் ராஜ கெம்பீரன் ராஜ ரணசூரன்
அசுபதி கஜபதி நரபதி நவகோடி நாறாயணன் சர்வதேச விஜயங்
கொண்டருளிய ராய சிங்காசனத் தாபனாச்சாரிய சுரபலனேந்திர
றாயர், வீர சௌந்திரராயர் தெய்வராயர் தர்மராயர் மல்லி கார்ச்சுன
ராயர் கொடுமலுக்கும்ப றாயர் விருப்பாச்சிறாயர் நரங்கறாயர்
10 கிருஷ்ணறாயர் அச்சுதறாயர் சதாசிவறாயர்ஆன குந்தி வெங்கிடபதி
றாயர் சீரங்கறாயர் திருவிராஜ்யம் பண்ணி அருளாநின்ற
ஸ்ரீசாலியலாகள சகாப்தம் 1436 க்கு மேல்
செல்லாநின்ற ருத்ரோக்காரி வரு. தை௴, 10௳. சுக்கிரவார
சுபதினத்தில் ஸ்ரீமது விஸ்வதாத நாயக்கரவர்கள் விருதுராயர்
15 மெச்சிய விருதுராயர் கண்டன் இம்முடி கணக்கறாமய்யக் கவண்டனுக்கு
பட்டய சாதனம் பண்ணிக் கொ (கு) டுத்த பட்டய சாதனமாவது திருமாலிருஞ் சோலைமலை திருப்பதி வளநாட்டில் வழி
மார்க்கங்களில் கள்ளர்கள் சல்லியம் மிகுதியா யிருந்த காலத்தில்
சுவாமி ஆண்டவன் சன்னிதானத்துக்கு சேர்வ
20 காலத்துக்கு வந்த ஜனங்களை சர் சௌர பாரமும் பிடுங்கிக்
கொண்டு பிராண வதையும் பண்ணின படியினாலே அந்த முன்னுக்குத்
தன்னை வரவழைத்து ஆஞ்ஞாபித்து முன் தனக்கு சௌந்தரீக
பாண்டியன் விட்டுகொடுத்த படிக்கி நாங்களும் அந்தப்படிக்கி
விட்டுக் கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டுக் கொடுத்ததற்கு
25 எல்கையாவது
வடபார்க் கெல்கை பாளாத்தி குடைக்கும் நாயக்கம்
பட்டி எல்கைப் பாரைக்கும் தெற்கு கீழ்பார்க் கெல்கை மாங்குளம்
மந்தைப் பாரைக்கும் தலமலை முன்தலுக்கும் மேற்கு தென்
பார்க்கெல்கையாவது நரசிங்கத்து எல்கைக்கும் மூணுமாவடிக்கும்
30 சிவதூர் எல்கைக்கும் வடக்கு மேல்பார்க் கெல்கையாவது செட்டி
குளம் கூலப்பாண்டி தொண்டமாம் பட்டிக்கும் கிழக்கு மிதற்குட்பட்ட கிராமங்களில் பாதுகாவல்...
குதிரைக் குழம்பு கண்ணுகுடி பெரியகுளம் தென்மேல் மூலை
முடுவார்ப்பட்டி யெல்கைக்கும் ... கப்புரவு தென்மேற்கு
35 பசலை தண்டல் யிதன் தெற்கு புட்டுராஜ பளையத்துக்கும்
கிழக்குட்பட்டதும் ஆத்துக்கு வடக்கே திருப்புவன யெல்கை
வரைக்கும் யிதன் வடக்கு கிடாரிப்பட்டி குளிப்புப்பாரைவரைக்கும்
தனக்குக் காவலும் கட்டளையிட்டு காவலுக் குண்டாகிய சம்பளம்
உம்பளம் நஞ்சையும் நஞ்சை சுவந்திரம் 1ம் காலில் 1 கட்டும்
40 1தலுக்கும் போர்அடிப்பில் குருணி முக்கையும் புஞ்சைக்கு காடு
ஒன்னுக்கு 1 பணமும் குருணி தவசம் குடியிருப்பு கிராமங்களுக்கு
வீட்டுக்கு ஒரு பணமும் மாவடை மரவடை உள்ள கிராமத்து
மானியம் ஒரு மரமும் கிறாமக்காய்ச்சி ஆடி கார்த்திகை தீபாவளி
சங்கறாந்திக்கு உள்ள காட்சியும் சந்நிதியில் நித்தியப்பிரசாதம்
45 குருணி அமுதுப்படி பிரசாதமும் ஒரு தோசை பிரசாதமும் திருப்
பணியார வகையில் அஞ்சு கூறாவும் மார்கழித்திருவிளாவிற்கு ஒரு
பரிவட்டமும் சித்திரைத் திருவிழாவில் அஞ்சு பொன்னும் திருக்கண்ணுக்கு
சுவாமி ஆண்டவன் பிரசாதமும் ஒரு பணமும்சிறப்புக் கட்டளைக்கு
ஒரு பூண்(ஜை) பிரசாதமும் ஒரு உருமாலும் ஒரு பட்டுக்கவரும்
50 கம்பத்தடியில் உண்டியல் கொப்பரையில் மூணுவிரல் கொண்ட பணமும்
ஆடி திருவிழாவில் நித்தியப்படி பிரசாதமும் தவிற சன்னிதிக்கு
வந்த ஜனமட்டுக்கும் பிரசாதமும் ரத உற்சவத்தி னன்றைக்கு
ஒரு பரிவட்டமும் தீர்த்த பிரசாதமும் வாங்கிக்கொண்டு தனக்குக்
கட்டளைப் படிக்கு உம்பளக்கிறாமமும் அனுபவித்துக் கொண்டு
55 சன்னிதி தானத்தில் காத்திருந்து சன்னதி கார்யங்களில் தாழ்வு
வராமல் நடந்துகொண்டு சன்னதி முதல் பாத மார்க்கங்களிலும்
திரு ஆபரணப் பொட்டியும் சன்னதியில் கொண்டுவத்து ஒப்புவித்து
சன்னதி கார்யங்களில் தப்பிதம் வராமல் உத்திரவாதம் பண்ணிக் கொண்டுவருவாராகவும்.
இந்தப் படிக்கி கல்லும் காவேரியும் புல்லும் பூமியும்
உள்ள வரைக்கும் சந்திரபிரவண சூரிய பிரவண உள்ளவரைக்கும்
புத்திர பவுத்திர பாரம்பரியமாய் ஆண்டு அனுபவித்துக் கொள்வ ராகவும்
இந்தப்படிக்கு சாதனம் எழுதியது சமூகம் ராயசம் அனந்த நாறாயண அய்யன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அழகர்_கோயில்/029&oldid=1820773" இலிருந்து மீள்விக்கப்பட்டது