உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் பேச்சு:சு. சமுத்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

சு. சமுத்திரம் படைப்புகள் மீதான கவனம்

[தொகு]

வணக்கம் @Info-farmer, @Booradleyp1, @Balajijagadesh. தொடர்ந்து அண்மைய மாற்றங்களில் பல நூல்கள் சு. சமுத்திரம் எழுதிய நூல்களாகக் காணப்படுகின்றன. இவை பயனர்களின் தனிப்பட்ட விருப்பமாகச் செய்யப்படுகிறதா, இல்லை, விக்கிமூலத்தில் ஒவ்வொரு ஆசிரியராகக் கவனம் செலுத்தி மெய்ப்பு பார்க்கும் பணி நடைபெறுகிறதா என்று புரிந்து கொள்ள விரும்புகிறேன். மற்ற சில ஆசிரியர்களின் சில படைப்புகளும் கவனம் பெற்றிருப்பதையும் பார்க்கிறேன். இத்திட்டம் பற்றிய என் புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்காகக் கேட்கிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 09:03, 4 ஆகத்து 2025 (UTC)Reply

மற்றவர் எப்படியோ தெரியவில்லை. நான் யாரேனும் தொடர்ந்து பங்களிப்பு செய்தால், அவர்களுடன் இணைந்து எந்நூலாக இருந்தாலும் பங்களிப்பேன். கற்கவும், கற்பிக்கவும் இதுவே சிறந்த அணுகுமுறையாக எண்ணுகிறேன். கேட்டால் பரிந்துரைப்பேன். அப்படிதான், இந்த இருபது தொகுதிகளை முடித்தோம். கூட்டாக செயற்படும் போது எனக்கு பங்களிப்பு மகிழ்ச்சி அதிகமாகிறது. துப்புரவு பணியும் குறைகிறது. அடுத்து பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள். உங்கள் விருப்பமாக சாகித்ய அகாதெமி விருதுகள் குறித்து தெரிவித்து இருந்தீர்கள். பக்கம்:வீரர் உலகம்.pdf/102 முதல் 126 வரை மேற்பார்வையிட்டு தருகிறீர்களா? Info-farmer (பேச்சு) 17:12, 4 ஆகத்து 2025 (UTC)Reply
நான் பொதுவாக எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள், கருத்துகள் அடங்கிய புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரி பார்க்கலாம் என்று எண்ணியுள்ளேன். வீரர் உலகம் நூலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பக்கங்களைக் கவனிக்கிறேன். ஆனால், அந்தப் பக்கங்கள் முறையாக மெய்ப்புப் பார்க்கப்படாமலேயே பணி முடிந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது ஏன் என்று புரியவில்லை. - இரவி (பேச்சு) 12:59, 6 ஆகத்து 2025 (UTC)Reply
//மெய்ப்புப் பார்க்கப்படாமலேயே பணி முடிந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது// எந்த பக்கத்தில் எனக்கூறுங்கள். Info-farmer (பேச்சு) 15:17, 6 ஆகத்து 2025 (UTC)Reply
எடுத்துக்காட்டுக்கு, பார்க்க - பக்கம் பேச்சு:வீரர் உலகம்.pdf/102 - இரவி (பேச்சு) 16:05, 6 ஆகத்து 2025 (UTC)Reply
இணைப்பில் பதில் இட்டுள்ளேன். Info-farmer (பேச்சு) 02:07, 7 ஆகத்து 2025 (UTC)Reply