ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/இந்தியா என்றால், இங்கு இருப்பவர்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தியா என்றால், இங்கு இருப்பவர்கள் இந்தி பேசும் வடநாட்டவரும், ஆரியத்தமிழ் பேசும் பார்ப்பனருந்தாமா?

வேறு இனத்தவரே இங்கு இல்லையா?
தொலைக்காட்சியில் தில்லுமுல்லுக் கருத்துப் பரப்புதல்கள்!
தேசியம் என்றாலே இந்தியும் வடநாட்டுக்காரனுந்தாமா?

தொலைக்காட்சி நிலையத்தில் மானமுள்ள தமிழர் ஒருவருமில்லையா?
போராடிச் சாவதுதானே!

தொலைக்காட்சித் துறையின் அழிம்புகளும் கொடுமைகளும்!

ர வர தொலைக்காட்சித் துறையினரின் அழிம்புகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் ஒர் அளவே இல்லாமல் போய்விட்டது. தேசிய நிகழ்ச்சிகள் என்னும் பெயரால், இந்தி கொடி கட்டிப் பறக்கிறது. தேசியத்தின் பெயரால், வடநாட்டினரின் இந்துப் பண்பாட்டுக்கே வலை விரிக்கப்படுகிறது. ஒருமைப்பாட்டின் பெயரால், இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனத்தினரையும், இந்தி, இந்துமதம், இவற்றை ஒப்புக்கொள்ளும் இந்திரா கட்சித் தொண்டர்களாக மாற்றி, ஒரியன்மைப் படுத்தும் முயற்சியில், நடுவணரசின் செய்தித்துறை படுவேகமாகவும், வஞ்சகமாகவும், சூழ்ச்சியாகவும் செயல்பட்டு வருகிறது. எந்த வகையான மக்கள் எதிர்ப்பையும் அவர்கள் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. தொலைக்காட்சித் துறையை இதற்காகவே அவர்கள் வளர்த்தெடுக்கிறார்கள்.

இந்தியா என்றால், இங்கு இருப்பவர்கள் இந்தி பேசும் வட நாட்டு மக்களே, அல்லது ஆரியத்தமிழ் பேசும் பார்ப்பனர்களே, என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர்கள் அடித்துக் கூறிக் கொண்டு வருகிறார்கள். வேறு இனத்தவர்களே இங்கு வாழவில்லை என்று பொருள்படும்படி காட்சிகளையும் கருத்துகளையும் அமைத்துத் தொலைக்காட்சிக் கருவியை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி நேரத்தில், 2 மணி நேரத்தையே தமிழுக்கு ஒதுக்குகிறார்கள். அதிலும் அந்த நேரத்தில் அருவருப்பும், இழிவும் நிறைந்த காட்சியைக் கொண்ட ஆட்டமும் கூத்தும் மிகுந்த திரைப்படப் பாடல்களையும் மிகப்பழைய அல்லது பயனற்ற புதிய திரைப்படங்களையுமே அவர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். அவற்றில் மத மூட நம்பிக்கைகளே, அல்லது கீழ்த்தர உணர்வுகளே நிரம்பியிருக்கின்றன. இந்திமொழிக் காட்சிகள், கருத்து நிறைந்த அரசியல், அறிவியல் செய்திகள் அடங்கிய தொகுப்புகளாகத் தரப்படுகின்றன. இவற்றால், மக்கள் மனங்களில், தமிழில் மூடநம்பிக்கைகளும், அருவருப்புகளும் தவிர வேறொன்றுமில்லை என்னும் எண்ணத்தை மறைமுகமா, சூழ்ச்சியாக விதைக்கிறார்கள். இந்தி நிகழ்ச்சிகளுளக்கு மட்டும் 4.30 மணி நேரத்தை ஒதுக்கிக் கொள்கிறார்கள்.

ஞாயிற்றுக் கிழமைகளில், காலை 8.30 மணியில் இருந்து நாள் முழுவதும் காட்டப்படும்ட 15, 16 மணி நேர நிகழ்ச்சிகளில் தமிழில் ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சிக்கும், வரட்டுத்தனமான திரைப்படத்துக்கும் 3 மணி நேரம், ஆங்கிலத்துக்கு 1 மணி நேரம், இந்திக்கு மட்டும் 11 அல்லது 12 மணி நேரம் இந்தி மொழியையும், தேசியத்தையும் வளர்க்க, தமிழ்நாட்டு வரிப்பணம் கொள்ளை போகிறது. தேசியம் என்றால் இந்தி மொழியும், வடநாட்டுக்காரனின் கதைகளும், நாடகங்களும் காட்சிகளுந்தாமா? உழவனைக் காட்டினால் இந்திக்காரன், வணிகனைக் காட்டினால் வடநாட்டுக்காரன்; கலைகளைக் காட்டினாலும் அவன்கள்தாம்! வயிற்றெரிச்சல்! வயிற்றெரிச்சல்! தப்பித் தவறித் தமிழ்நாட்டைப் பற்றி ஒரு செய்தியோ, கலியாணமோ, கருமமோ இருந்தால் அவற்றில் பார்ப்பான்! அவன் குடும்பம்! இஃதென்ன குடியரசு நாடா? அல்லது இந்திக்காரனின் கும்மாளக் கூத்தாட்ட மேடையா? தொலைக்காட்சி நிலையத்தில் மானமுள்ள தமிழர் ஒருவருமே இல்லையா? எல்லாருமா பார்ப்பானுக்கும் வடநாட்டுக்காரனுக்கும் பிறந்தவர்களாகப் போய்விட்டனர்?

மதம் என்றால் இந்துமதம்தானா? மதத்தலைவன் என்றால் காஞ்சி காமகோடி ஊசைப் பார்ப்பான்தானா? உலா வரும் ஒளிக்கதிர் ‘நிகழ்ச்சிகளில் ஏதோ ஒரு முசுலீம் நிகழ்ச்சியையோ, ஒரு கிறித்தவ நிகழ்ச்சியையோ மருந்துக்குக் காட்டிவிட்டு, மீதி அத்தனையும் இந்துமத நிகழ்ச்சிகளுக்கே பட்டயம் எழுதிக் கொடுக்கப்பட்டு விட்டதா? இந்துமதத்தில்தானா நெய் வடிகிறது? மீதி மதங்களில் என்ன சீழா வடிகிறது?

சாதி வெறியர்களும், மத வெறியர்களும், தேசியம், ஒருமைப்பாடு பேசும் திருடர்களும், கொள்ளை கொலைகாரர்களுளம் ஆட்சியில் உள்ளவரை, நிலைமை இதுதான்; இப்படித்தான் இருக்க முடியும்! மானமுள்ள ஒரு தமிழனாவது இதுபற்றிப் பேச முன்வருகின்றானா? அனைவருமா இளித்தவாயர்களாக, பணத்துக்கு வீங்கிகளாகப் போய்விட்டனர்? காந்தி குடும்பத்துக்கே நாடு அடகு வைக்கப்பட்டு விட்டதா? இங்குள்ளவர்கள் அடிமையாகி விட்டார்களா! கேட்பதற்கே யாருமில்லையா? இந்நிலையில் செயலுக்கு எங்கே வரப் போகிறார்கள்?

இனி, வரலாற்றுச் சான்றுகளோ, அறப்பேச்சுகளோ, இணக்க முயற்சிகளோ, இந்த நாட்டில் எடுபடப் போவதில்லை. இன்னும் பத்து ஆண்டுகளில் எல்லாவற்றையுமே அழித்துவிடுவார்கள். இன்று அரசியலைக் கைப்பற்றிக்கொண்டிருக்கும் எத்தர்கள். தமிழினத்துக்கென்றோ, பஞ்சாபியர்களுக்கென்றோ, அசாமியர்க்கென்றோ, மிசோக்களுக்கென்றோ, நாகர்களுக்கென்றோ, இனிமேல், எந்தத் தேசிய இனத்துக்கும் என்றோ, இனிமேல், எந்த மொழியோ, கலையோ, பண்பாடோ, அல்லது அவ்வினங்களின் தனித்தனியான எந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோ எதையுமே விட்டுவைக்கப் போவதில்லை என்றும் அழித்துவிடுவதென்றும், அரசியல் பணியாப் பார்ப்பன முதலைகள் திட்டங்கள் தீட்டிக் கொண்டன. அத் திட்டங்களின் படிதான்: தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் என்னும் வலிவுமிக்க அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி மக்களை மூளைச் சலவை செய்து வருகிறார்கள்; அதிகாரத்தில் உள்ள வன்முறையாளர்கள்!

இனி, என்ன செய்யப் போகிறோம் நாம்! மதிகெட்டு, மானமற்றுத் தறிகெட்டுத் திசைகெட்டுத் தன்மானமும், தன் மதிப்பும் கெட்டு, நாமும் தேசியத்திற்குப் பாட்டுப் பாட வேண்டியதுதானா? இல்லை, தேசிய இனப் போராட்ட எழுச்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறோமா? எது செய்யப் போகிறோம்! எண்ணிப் பாருங்கள்!

- தமிழ்நிலம், இதழ் எண் : 58, 1985