ஆலமரத்துப் பைங்கிளி/ஆலமரத்துப் பைங்கிளி

விக்கிமூலம் இலிருந்து

5
ஆலமரத்துப் பைங்கிளி

நான் பேசுகிறேன் :

தீபாவளிக்கு ஊருக்குப் போய் வந்தேன். அந்தச் செய்தி இப்போது யார் கவனத்தையும் கவர்ந்தால், அதற்கு நான் பொறுப்பு அல்ல. ஆனால், நான் ஊர் சென்றிருந்த தருணத்திலே கடந்த அந்தச் சம்பவம் என்னை இழுக்கவில்லை; சிந்தையை ஆகர்ஷித்தது: நான் சொல்லப் போகும் இந்தக் கதை உங்களைத் திருப்திப்படுத்தினாலும், படுத்தாமற் போனாலும் அதற்கும் அடியேன் காரணம் அல்ல.

எனக்காக எழுதிக்கொண்ட கதை இது ― அல்ல, நான் கண்டேன்; கண்ணீர் சொரிந்தேன். என்னையறியாமலே கண்ணீர்க் கறையில் உருவாகிவிட்ட நிகழ்ச்சிச் சித்திரம் இது.

என்னை நம்பாதீர்கள்; தயை உண்டு உங்களுக்கு, நான் ஜடம்! இதோ என்னை ஆட்டுவிக்கும் குரல்கள் சில கேட்கின்றன.

கிளியின் இதயம் :

ஆவியுலகத்தில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா?. ஜியோ, பாவம்!... இந்த எழுத்தாளரைச் சட்டை செய்யா தீர்கள், ஐயா! பாம்பின் சட்டைக்கும் இவருடைய உடற் கூண்டுக்கும் நூலிழைகூட வித்தியாசம் கிடையாது!

ஆலமரத்துப் பைங்கிளி நான். ஆனால் உங்களுக்கு உண்மை என்னவென்று தெரியுமா? உங்களைப்போல எனக்குப் பொய் பேசிப் பழக்கம் கிடையாது!...உண்மை இதுதான். ‘ஆலமரத்துப் பைங்கிளி’ என்னும் பட்டப் பெயர் பொன்னிக்கு உரித்தானது. பொன்னன் அப்படித்தான் அவளைக் கூப்பிடுவான். இப்படிக் கூவி அழைப்பதைக் கேட்டு நான் கூட பலமுறை ஏமாந்திருக்கிறேன். என் மூக்குச் சிவப்பு, ரத்தச் சிவப்பாகிக் கன்றி விடும். எனக்கே புரியாத எங்கள் ‘ரங்கா’ மொழியில் நான் பேசிக்கொள்வேன். ஆனால் அந்தக் காதலர்கள் வாய் ஓயாமல் பேசித் தீர்த்த பேச்சுக்கள் ― அவை தூவிய சம்பவங்கள் எல்லாம் ஒன்று பாக்கியில்லாமல் என் மனசுக்கு அத்துபடி.

“ஓ, மச்சான்!” என்பாள் ― அன்பு காட்ட உரிமை பூண்டவள்.

“ஆ, பொன்னி!” என்பான் ― நேசம் நிறைந்த மனம் கொண்டவன்.

அவள் சிரிப்பு மாதிரி நானும் சிரிக்கவேண்டுமாம்!― என்னவள் சொல்லுகிறாள். ஆனால், இந்தப் பொன்னி எவ்வளவு அந்தமாகச் சந்தம் கூட்டி இளநகை புரிகிறாள் என்கிறீர்கள்!...பார்த்துக்கொண்டே யிருக்கலாம்; கேட்டுக்கொண்டே யிருக்கவேண்டும்,

இதே ஆலமரத்து நிழலில்தான் அவர்களுடைய காதல் பிறந்தது; வளர்ந்தது.

ஆலமரப் பைங்கிளியே, அழகுள்ள தாழம்பூவே!
காலமெல்லாம் நீ சிரிப்பாய்; காத்திருப்பேன் உனக்காக!

ஆலமுண்ட ஐயன் அவன், அன்பு நிறை ஜோதியவன்!
பாலமொன்று கட்டிடுவான், காதலராம் நமக்காக!

இந்தப் பாட்டுக்கூட எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. இது என் துணைக்கும் பொருந்துவதாதலால், பாட்டுப்புனையும் ஒரு வேலை எனக்கு மிச்சம். என் நன்றி இவ்வூர் ஆசிரியருக்கு உண்டு.

ஆஹா, இந்தக் காதலர்கள் உண்மையிலேயே பாக்கியம் செய்தவர்கள்தாம்! இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் ஆயிரத்தில் ஒரு ஜோடிக்குக் கூடக் கிடைக்காதே...!

என்ன சத்தம் அது? ஓ, நீயா? ம்... பேசம்மா, பேசு!

செல்லத் தேவன் ஊருணி :

ஆலமரத்துப் பைங்கிளி சொல்வது படிக்குப்பாதி! வாஸ்தவம்தான். ஆனாலும், அது உங்கள் முன் வைத்த நிகழ்ச்சிகள் அதிகம் இல்லை. ஆனால், என் மடியிலே பொன்னனும் பொன்னியும் வளர்ந்த விதமே அலாதி. அவர்களுடைய காதலுக்கு அன்பு என்ற பெயர் சூட்டக் கற்றுக்கொடுத்தவளே நான் தான். நான் பெண் அல்லவா? பூமிதேவிக்குச் சொந்தக்காரியாயிற்றே! பொன்னியின் மனம் எனக்குப் புரியாதா?

பொன்னன் ― பொன்னியார்? சொல்ல வேண்டாமா?

சோறு படைத்த சோழவளநாட்டுக் காவிரியோடு கலந்து உறவாட எனக்கு வாய்ப்பு ஏற்படாவிட்டாலும், அதன் எல்லைக்குள்ளாவது தலைசாய்த்து ‘பூந்து’ ப்டுக்க முடிகிறதே, அந்தமட்டும் நான் பாக்யவதி. என் அரவணப்பிலே நித்தம் நித்தம் ஆடிப்பாடித் தொட்டு மகிழ்ந்து விளையாடிய இந்த இணையின் இன்பம் எனக்கு அளவுகடந்த ஆனந்தம் நல்கும்.

பூவைமாநகர் என்ற பெயர்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே? ஊர் பேர் தெரியாமல் இருந்த ஊர், ஊர்பேர் தெரிந்த ஊராகப் பழகிப்போய்விட்டதே! அந்த ஊரிலே பிறந்தவர்கள்தாம் பொன்னனும் பொன்னியும்.

ஆணிப் பொன் திறம் அவள்; அவனும் கூடத்தான். ரதியும் மன்மதனும் அவர்கள் முன் தோன்றியது கிடையாது. ஆனாலும், நாலுபேர் அவர்களைப் பார்க்கும் போது சொல்லிக்கொள்வார்கள், “பொன்னியும் பொன்னனும் போலத்தான் அந்த ரதியும் மன்மதனும் இருப்பார்கள் போலிருக்கிறது,” என்று. அளவெடுத்துச் செதுக்கிய ஆண் ― பெண் சிலைகளையும் மிஞ்சிவிடும் அழகு கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட காதலர்களை எனக்குக் கண்டால் கொள்ளை மகிழ்ச்சி ஏற்படும். ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா?’ என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். என் இதயம், அல்லது என் மனத்திலுள்ள பொருள் அவர்களுக்கும் புரியுமோ, என்னவோ? உடனே ‘களுச்’கென்று சிரிப்பார்கள். என் சலசலப்பை மறந்து நோக்குவேன். செந்தாமரை மலரை நாடி ரீங்காரப் பண் பாடிவரும் வண்டின் தரிசனம்தான் எனக்குக் கிட்டும்.

உதயத்தின் தங்கரேக்கு நிறம் அவர்கள் மேனிகளில் பல்லாங்குழி விளையாடும். நிலவின் கீற்றுக்களின் இடைவெளியே இடைச் செருகல் கவி, மாதிரி பால் வெள்ளம் பாய்ந்தோடும். அந்திசந்தி எப்போதும் அவர்கள் என்னைக் கண்டார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்று கணத்திருப்பார்கள், பாவம்!

“மச்சான்!”

“என்ன...பொன்னி!”

“வந்து...வந்து!”

அவள் நாணிக் கோணிவிடுவாள். அவன் அவள் பூங்கரம் பற்றி நிற்பான். அவளது போதையை, அவனது போதை அறியாமல் இருக்க முடியுமா?

சாதாரணமாகக் கதைகளிலே இம்மாதிரி உள்ளம் ஒருமித்த காதலர்களுக்கு ஒரு எதிரி மச்சானோ, அல்லது அவர்களது கலியானத்தை விரும்பாத அப்பனோ, அல்லது, பொருந்தாத ஜாதகக் குறிப்போ எழுதப்பட்டிருக்கும். ஆனால், இவர்களுக்குக் குறுக்கே யாரும் இல்லை. ஆண்டவன். கூட அனுசரணைப் புரிந்தான்.

ஆனால்...!

இந்த ஆனாலில்தான் பாக்கிக் கதையே அடங்கிக் கிடக்கிறது. அதை இப்போது நினைத்தாலும் எனக்கு அழுகை அழுகையாக வருகின்றது!

ஆலயம் சிந்திக்கின்றது:

புனிதம் மண்டிய என் உள்ளத்துக்குத் தெரியாமல் உலகத்தில் எந்த ஒரு சிறுசம்பவமும் நடக்க முடியாது. அந்தச் செல்லத்தேவன் ஊருணியின் கண்கலக்கம் எனக்குப் புலனாகாமலா போய்விடும்!

ஆம், பொன்னி-பொன்னன் காதலர்கள் எத்தனை நாட்களுக்குத்தான் கரத்திருப்பார்கள்...? தட்டு திட்டங்கள் இல்லை; பருவமும் வயசும், நிலவும் . தென்றலும் அவர்களைச் சோதித்தன. ஆனால், அவர்கள் இருவரும் உயிர்விட்டு உயிர் மாற்றிக்கொண்டு அமைதியான ஆரவாரத்துடன் நிலவி வந்தார்கள் என சன்னதியையும் அவர்கள் மறந்துவிடவில்லை,

“இந்த ஆனந்த நடராசருக்குப் பொதுவா கான் உனக்குத்தான்!. எனக்குத்தான்!” என்று கையடித் துக் கொடுத்தான் இளைஞன்.

அவள் மெய்யம் மறந்து போளுள். விம்மினுள்; ஆனந்தக்கண்ணிர்’ என்றாள்.

என்ன பொன்னி?’ “என்னமோ, பயமாயிருக்குது...!”

“அப்பிடியா?”

ஆமா!’

“ஆத்தாடி!...சரி, சரி.வா, போகலாம்! ...இன் ணிக்கே உன் கழுத்திலே தாலி கட்டிப்பிடறேன். நல்ல நாள் தான்’ என்று சொல்லி பரபர வென்று இழுத் துக்கொண்டு ஓடினன். மங்கல நாண் பூட்டின்ை. ஒரே மூச்சு!

“அத்தான்,நீங்கள் இங்கேயர் இருக்கிறீர்கள்? ஐயோ, நீங்கள் எனக்கல்லவா சொந்தம்?...’ என்ற ஒரு புதிய பெண்குரல் பொன்னனைச் சர்டியது.

“ஒ...பொன்னி! நீ இங்கேயா இருக்கே...அட கட வுளே, நீ என் சொத்தாச்சுதே! வா!’ என்ற நூதன. மான ஆண்குரல் எதிரொவி பரப்பிற்று.

ஆவிகள் இரண்டும் பிறகு சிரிக்கத் தொடங்கி விட்டன.

பேசாத தெய்வம் பேசுகிறது. புனிதம் குழப்பிக் கிடக்கும் என் உள்ளத்தின் உள்ளம் குழப்பம் காட்டி விட்டதே!....பேசும் என் வாயைக் கூட அடைத்து விட்டே த!.எத்துணே பயங்கர மான சிரிப்பு அது!. - - - - - - - - -

அந்தச் சிரிப்பின் அலைகள் பயங்கரமாக ஆர்ப்பரித்தன; சிரிப்பில் அழுகை குரல் கொடுத்தது; விரக்தியின் வேதனை பரவியது; வெந்த நெஞ்சங்களின் தாபம் படர்ந்தது.

சிரிப்பு அழுகையாக மாறியது; அழுகை சிரிப்பாக மாறியது.

அழுகையும் சிரிப்பும் கலந்தது வாழ்க்கை!

ஆவிகள் இரண்டும் மறுபடி சிரிக்கத் தொடங்கி விட்டன: ஆவிகளின் நிழல் வடிவிலே நின்ற பூவிழியும் புவனநாதனும் திரும்பத் திரும்பச் சிரிப்பைக் கக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

முப்புரம் எரித்த சடாமுனியின் சிரிப்பை இவர்கள் கண்டதில்லையோ? கேட்டதில்லையோ?...

இவர்கள் ― ஆம்; பொன்னனும் பொன்னியும் மெய் விதிர்த்துப் போயினர்; அவர்களது உடல் முழுவதிலும் வியர்வைத் துளிகள் பெய்திருந்தன ― ஊசி குத்த இடம் வைக்காமல். அச்சம் ராஜாங்கம் நடத்திற்று ― அராஜக நீதியின் விளைவு போன்று. தாம் நிற்பது சாந்தி பூமியா என்ற சந்தேகம் முளைத்தெழுந்தது. தாங்கள் மண்ணில் முளைத்து விட்டமாதிரி புதியதொரு அனுபவம் கிளர்ச்சி, புரிந்தது. காதலையும் கனவையும் ஒரே மூச்சாக ― ஒரே உயிராகப் பிணைத்து இணைத்த மங்கல நாண் பொன்னியையும் பொன்னனையும் கண்டு கண்ணிர் சொரிந்தது.

அவள் நிலை கலங்கினாள்: “ஐயோ, அத்தான்!...”

அவன் விம்மிப் பொருமினான்: “ஆ! பொன்னி!”

பைங்கிளி:

ஆவியுலகத்தில் உங்களுக்கு கம்பிக்கை உண்டென்பதை நான் அறிந்துகொண்டேன்.

பேசாத தெய்வத்திற்குப் பேச முடிந்தது; ஆனால் பேசும் எனக்குப் பேச முடியவில்லை. ஆத்திரமும் அழுகையும் என் சிவப்பு உதடுகளுக்குக் கட்டுப்பாடு விதித்து விட்டன. குறளிமோடி கிறுக்கி விட்டதா, என்ன?

பொன்னனும் பொன்னியும் கனவுகளைத் தாங்கிக் கொண்டு காதலர்கள் என்ற உறவை இன்னும் பலமாக்கத் தம்பதியாயினர். ஆனால், அவர்களுக்கு இவ்வளவு சீக்கிரத்திலேயே சோதனை விளையுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்ன, சற்று முன் குரல் கொடுத்த அந்தத் தெய்வம் கூட நினைக்கவில்லை போலிருக்கிறது!

பொன்னி என் பேரில் பரிவு காட்டினாள். என் துணைக்குப் பொன்னன் என்றால் நிரம்பப் பிடித்தம். இந்த இணையின் துயரம் கண்டு எங்கள் இதயங்கள் வெடித்து விட்டன.

மறுபடியும் அழுகைச் சத்தம் கேட்டது. பரிதாபம்! புதுமணக் காதல்ர்கள் பரிதபித்துக்கொண்டிருந்தனர். ஈருடலே ஓருயிராக்கிக் கொண்டவர்கள் ஓருயிர் இரண்டாக வெட்டப்பட்ட மாதிரி துடிதுடித்தனர். பொன்னனும் பொன்னியும் ஒருவரையொருவர் இறுகத் தழுவிய வண்ணம் அலறினர். அவர்களது ஓலத்தினை மிஞ்சிவிட்டது, இடையீடு. விட்டு எதிரொலித்த நையாண்டிச் சிரிப்பு.

கண்ணோட்ட்த்தை ஒரு வழிப்படுத்தக் கண்ணீரை விலக்கினேன் நான். என் இறகுகள் பட படத்தன; உயிர்க்கூடு தத்தளித்தது.

“ஆசை அத்தான்! திருப்புச் சீட்டுக்கள் இடம் மாறி விழுந்திருக்கின்றன. நான்தான் உங்களை ஆடைய வேண்டிய ஆடுதன் ராணி!... ஓடி வாருங்கள், தேடி வந்தவளிடம்!...ம்...சிக்கிரம் அவள் விட்டு விலகி வாருங்கள். என் குரலுடன் சேர்ந்து கத்தும் அந்த ஆண் குரல் அவளு அவளுடைய குரல் வளையைக் கௌவிப் பிடிக்க எத்தனிக்கிறது.. அதற்குள் ஓட்டமாக என்னிடம் வந்து விடுங்கள். அவனும் அவளும்தான் ஜோடிக்குப் பொருத்தம். நாகரீகத்தின் உச்சாணிக் கிளையில் இருந்த நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்?..வாருங்கள், நாம் உம்மை மறுபடியும் அழகு இளைஞனாக மாற்றுகிறேன்... என் அந்தமும் அன்பும் உங்களைக் காப்பாற்றும் நீங்கள் வரமாட்டீர்களா? அத்தான் உங்களுக்குச் சிரமம் ஏன்?... இதோ, நானே உங்களை அண்டி அழைத்துக் கொள்ளுகிறேன்!... அத்தான்.......! இன்றுதான் என் கனவு பலிக்கப் போகிறது"

ஏன் இந்தச் சத்தம்?

ஊழித்தாண்டவம் தொடங்கிவிட்டது போலும்?

நான் இந்தக் கண்ணாறாவிக் காட்சியைக் காண என்ன பாவம் செய்திருக்க வேண்டும்!

பொன்னன் - பொன்னியின் - வெறும்கூடுகள் தாம் தரையில் கிடக்கின்றன. உயிர்கள் இரண்டும் வெவ்வேறு திசை நோக்கிப் புறப்பட்டுவிட்டன.

வந்த ஆவிகள் இரண்டும் வெவ்வேறு முனையிலிருந்து, சிரித்தன!

வானவீதியில் குரல்:

மனிதன் உண்டாக்கிய செயற்கைச் சந்திரனைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்கள்; மேலை நாட்டு விஞ்ஞானியின் சிந்தனைக்குப் புகழ் மாலை புனைந்து நிம்மதியுடன் வீற்றிருக்கும். உங்களுக்கு ஒற்றைத் தனி விண்மீனான என்னுடைய குரல் கேட்குமோ, என்னவோ?

அதோ, பொன்னன் சிலையென மலைத்து நிற்கிறான். அவனுடைய உடம்போடு உரசியவண்ணம் அவள் நிற்கிறாள். காற்றைச் சாடி வந்த களைப்பு, பூலோகத்தைக் கடந்து வந்த அயர்வு அவ்விரு ஆவிகளின் முகத் திரையில் நிழலாடுகின்றன.

பொன்னன் இளமுறுவலை உதட்டுக் கரையில் உலவ விட்டவாறு நின்றான். அவனுக்கு எப்படி இத்துணை ஆனந்தமும் அமைதியும் ஏற்பட்டன?......

“அத்தான்!”

“பூவிழி!”

“அத்தான், உங்களைக் காணாமல் நான் எவ்வளவு சஞ்சலப்பட்டுப் போனேன், தெரியுமா?... நான் உங்களைக் காதலித்தேன். ஆனால், விதி நம் இரண்டு பேரையும் ஒன்றுகூட வைக்கவில்லை. ஆகவே, நான் மரித்தேன். உங்களைத் தேடித் தேடி அலைந்தேன். கடைசியில் ஒரு நாள் உங்களைச் சந்தித்தேன்...!”

“பூவிழி, களிப்பு வேளையில் கண்ணீருக்கு அலுவல் வைக்காதே. நாம் இப்போது எங்கு இருக்கிறோம்?...”

“சொர்க்கத்தில்!”

“பூலோக சொர்க்கத்திலா?”

“இல்லை, இரண்டாவது சொர்க்கத்தில்!...”

“அப்படியென்றால்!...”

“நான் நிர்மானித்திருக்கின்ற இந்த இரண்டாவது சொர்க்கத்துக்கு நான் தான் ராணி, நீங்கள்தான் ராஜா!...”

“ஓஹோ!”

“ஆமாம்...!”

“அத்தான், என்னை மறந்து விட்டீர்களா?”

“எப்படி மறப்பேன்?”

“பின், ஏன் என்னைத் தேடி வரவில்லை?”

“நான் எங்கு வந்து உங்களைக் காண்பது?”

“நான் உங்களைக் கண்டு கொண்டேனே?”

“வாஸ்தவத்தான்!”

“ஒன்று சொல்கிறேன்...”

“சொல், பூவிழி!”

“உங்களுக்குப் பூலோகத்தின் நினைவு நெஞ்சில் எட்டிப் பார்க்கிறதா?”

“இ...இல்...இல்லே!”

“தடுமாறுகிறீர்களே!”

“நான் அல்ல; என் உதடுகள்!”

“ஏன்?”

“காற்றில் அழுத்தமும் சீதளத்தின் தண்மையும் உதடுகளே ஆட்டுவிக்கின்றன.”

அவளுடைய மென்னகைக்கு அவசரச் சிரிப்பு பின்னணி அமைத்தது.

“அத்தான், பல வருஷமாக நான் உயிரற்ற உடலாக உலவி வந்தேன்; இன்றைக்குத் தான் இந்த உடலில் உயிர் ஒட்டியிருக்கிறது. என்னுடைய முதற் காதல் பலித்த புனித நாள் இது!”

“ஒரு திருத்தம் அன்பே!”

“என்ன?”

“அச்சம் தவிர். ‘என்னுடைய’ என்று சொல்லி சுய கலக்காரியாக ஆகிவிடாதே. ‘நம்முடைய’ என்று சொல் கண்ணே!”

“ஆகட்டும், அத்தான். நம் காதலைத் தோற்கடித்த விதியின் வஞ்சகச் செயலினால் நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தோம். நம் இருவர் உடல்களும் எந்தச் சுடுகாட்டிற்குக் காணிக்கையானதோ?” இல்லை, ஓடிச்சென்றக் காட்டாற்றின் இதயத்தில்தான் ஜீரணம் ஆனதோ, தெரியாது.”

“குப்பையைக் கிளறாதே!”

“வினாடிப் பேச்சுக்கு பொறுமை காட்டவில்லை உங்கள் மனம். ஆனால் நித்தம் நித்தம் நான் இதே குப்பையைக் கிளறிக் கிளறி எத்துதுணை துன்பம் அனுபவித்திருப்பேன் என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்தீர்களா? ...”

“பூவிழி”

“கொஞ்சம் உன் பேச்சை நிறுத்து. என்னைத் கொஞ்சம் பார், அத்தை மகளே!”

“ஓகோ! புதுஉள்ளம் கொண்டது எனக்கு அதிசயமான செய்தி, நீங்கள் புது எழில்கொண்டு விளங்குவது உங்களுக்கு வினேதமான தகவல். சரி, புது உலகம் அழைக்கிறது, போவோம் வாருங்கள் அத்தான்!”

பொன்னன் அவளுடன் தொடர்ந்தான். புதுமையின் மணம் பரவியிருந்த பகுதிகளிலெல்லாம் இருவரும் ஜோடியென மிதந்தார்கள்; எழில் மண்டித் திகழ்ந்த பாதைகள் அத்தனையிலும் அவர்களது தொடராத நிழல் பதிந்து புதைந்தது.

“அத்தான்!” அவள் அவளை நோக்கினான். இளமை கொழித்த கன்னியின் பருவம் போதை கொண்டு திகழ்ந்தது. “அத்தான்!"

“பூவிழி!” அவனுடைய காமகோக்கு அவளுடைய துய அழகில் ஊர வேளை பார்த்தது.

யாரோ துஷ்யக்த மகராஜா கந்தர்வ மனம் புரிந்த சகுக்தலையை முனி சாபத்தால் மறந்தாராமே உண்மையா?

அப்பொழுது அவள் அவனது கரங்களைப் பற்றினாள். அவள் மேகத் தட்டொன்றில் சாய்ந்தான். அவளும் சாய்ந்தாள். நிலவுக் குழந்தை கண்களைப் பொத்திக் கொண்ட நேரத்தில் எரிமலை வெடித்தது.

“ஐயோ, அத்தான்!”

ஹஹ்ஹஹ்ஹா!

இளந்தென்றல்:

“அத்தான்...அத்தான்!”

பொன்னியின் அந்தத் துயரக் குரல் பொன்னனுக்கு எப்படிக் கேட்கும்?― பாவம், இந்தக் கன்னிப்புறா வைத்தான் புவனநாதனின் இதயச் சிறை கம்பிகளைக் காட்டி எண்ணிக்கையைக் கணக்கெடுக்கச் சொல்லுகிறதே!...

பூந்தென்றல் நான்; என் நெஞ்சம் சூறாவளியாகச் சுழல்கிறது. நான் துயரருகிறேன்; வேறென்ன செய்வேன்?... கூடுவிட்டுக் கூடு பாயவாவது தெரிந்திருந்தால், பொன்னிக்கு விடுதலை அளித்திருக்கமாட்டேனா?...

“மாமன் மகளே!”

“யார் நீங்கள்?”

“உன் அத்தான்!”

“நான்!”
“நீ என் சொத்து!”

“உங்கள் கண்ணோட்டத்தில் புதிய சொத்துரிமைச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறதா? நீங்கள் வேற்று மனிதர்!... நான் வேறொருத்தரின் நிதி!”

“பைத்தியக்காரப் பெண் நீ!”

“இதே மொழிக்கு ‘ஆண்பால்’ தந்து நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள், ஐயா!”

“ஐயாவா?”

“நான் உன் ஐயனல்லவா?”

“என் ஐயனை எங்கோ மறைத்துவிட்டீர்!”

“குற்றம் செய்தவன் நான் அல்ல; வேறு யாரோ ஒருத்தி!”

“பார்க்கிறேன் அவளை!”

“அவளை நீ பார்க்க முடியாது!”

“ஏன் முடியாது? என் தாலி எனக்கு அவளைக் காட்டும்!”

“அப்படியா?. உன் நினைவு மாறவில்லையா? பூவுலக ஞாபகம் இன்னும் உன்னைப் பிரிந்து ஓடவில்லையா?”

“ஊஹும்!”

“அதிசயமாக இருக்கிறதே!”

“இந்த மாங்கல்யத்தின் சிறப்பும் அதுவேதான்!”

“முந்தைப் பிறவியில் நாம் இருவரும் முறைமை கொண்டு முறையாகக் காதலித்தோம்; நாம் இருவரும் கலியாணம் செய்து கொள்ள இருந்தோம். ஆனால், காலன் வழிப்பட்டு விட்டோம்.”

"பழய ராமாயணம் இது!" .

"நம் காதல் ...?"

"நம் முன் அதுவும் இறந்துபட்டது!"

“அப்படியென்றால்...!"

"உன் வாயிலிருந்து இந்த மாதிரி. முடிவை எதிர்ப் பார்க்கத்தானா இவ்வளவு காலமாக நான் ஆவியாக அலைந்து திரிந்தேன்!"

'நான் என் அத்தானுக்கு உரியவள். என்னை அவரிடம் அனுப்பிவிடுங்கள்!..."

"பொன்னி !..."

"ம்... நெருங்காதீர்கள்!"

"பொன்னி ...!"

"என் தாலி உம்மை சுட்டெரித்துவிடும்!"

"என்னைப் பற்றி நான் அக்கறை கொள்ள வேண்டாமா? இதோ, தமிழ்ப் பண்புக் கோட்டைக் கிழித்திக் காட்டுகிறேன். இதை தாண்டினால், உம் ஆவி. நரகலோ கத்துக்குச் சென்றுவிடும்; நினைவுறுத்துங்கள்!"

"பொன்னி !"

"ஐயா, புவனநாதரே!"

"அத்தான் என்றாவது கூப்பிடு!"

"நீர் அதற்கு உரிமையற்றவர்"

"பொன்னி !"

"ம்...விலகுங்கள்!"

"முடியாது!"

"முடியாதா?"

"ம்!"

"இதோ பாரும்!" “ஆ....ஐயோ !... தீ பரவி வீட்டதே!... ஐயோ!... பொன்னி!"

"ஐயா, ஓடுங்கள் இனி தீயைக் கட்டுப்படுத்திவிடுகிறேன்!..."

“வேண்டாம்... தீ வளரட்டும்; பரவட்டும் தீ!...என் காதலுடன் என் ஆசையும் தீக்கிரையாகட்டும்!... இனி நான் மறுபிறவி எடுக்கவே வேண்டாம்!...என்னை மன் னித்து விடு!"

கடவுளே!

ரதி-மன்மதன் காரியாலயம் :

“ஹல்லோ : நான் தான் ...டெலிபோன் பேசுகிறது. உங்கள் அன்பு பிராட்டியார் திருமதி ரதி தேவியார் அவர்கள் உங்களிடம் முக்கியமான இச்செய்தியைத் தெரிவிக்கச் சொன்னார்கள்; நீங்கள் உங்கள் நாயகியுடன் போட்டி. நடத்தினீர்களாம்: பொன்னியின் கற்பின் திறன் தான் கடைசியில் வென்றுவிட்டதாம்... பொன்னனின் சபல சித்தம் நல்ல பாடம் கற்றுக்கொண்டதாம்... கதையின் கதை முழுவதையும் நீங்கள் அறிவீர்களானாலும், அவர்கள் வாயால் தன் வெற்றியைச் சொல்லவேண்டுமென்று காத் திருக்கிறார்களாம்! இன்னொன்று; பொன்னனும் பொன்னியும் பூலோகத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்!... வணக்கம்...!"