இதழியல் கலை அன்றும் இன்றும்/பத்திரிகைச் செய்திகளை வழங்கும் உலக, இந்திய அமைப்புகள்

விக்கிமூலம் இலிருந்து



19

பத்திரிகைச் செய்திகளை வழங்கும்
உலக, இந்திய அமைப்புகள்

மிழ்நாட்டில் செய்தித்தாளை நடத்துகின்றோம். அமெரிக்கா, இரஷ்யா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடைபெறும் அன்றாடச் செய்திகளை நாம் இங்கே இருந்து கொண்டே தெரிந்து கொள்கின்றோமே! எப்படி?

தமிழ்நாட்டுக்குள் நாம் செய்தித்தாளை நடத்தும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டத்திலும், பேரூர் சிற்றுார் க்ளிலும் செய்தியாளர்கள் மூலமாக செய்திகளைப் பெற்றுக் கொள்கிறோம். காரணம், ஒவ்வொரு ஊர்களிலும் நமது பத்திரிக்கைக்காக பணியாற்றும் நிருபர்கள் செய்திகளை அங்கங்கே இருந்து திரட்டி அனுப்புகிறார்கள்.

அந்தச் செய்திகளை நமது பத்திரிகையில் பணியாற்றும் செய்தி ஆசிரியர், துணையாசிரியர் ஒழுங்குபடச் செம்மைப் படுத்தி, உருவாக்குகிறார்கள். அதனால், நாம் நாள்தோறும் நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்ளும் நிலை உருவாகின்றது.

அதனைப் போலவே, இந்திய மாநிலங்களிலும், தலைநகரான புது தில்லியிலும் பண வசதி படைத்த பத்திரிகைகள் செய்தியாளர்களை நியமித்துக் கொண்டு அவர்கள் மூலமாகச் செய்திகளைப் பெற்று, செப்பஞ் செய்து பத்திரிகையில் வெளியிட்டு, பிற மாநில மக்களின் வாழ்வியல் குறை நிறைகளை நமது மக்களுக்கு அறிவிக்கின்றோம். மக்கள் அந்தச் செய்திகளைப் படித்து நாட்டு நிலைகளைத் தெரிந்து கொள்கிறார்கள்.

ஆனால், ஒவ்வொரு செய்தித் தாளும், அவை எவ்வளவுதான் பண வசதிகளைப் பெற்றிருந்தாலும், ஆங்காங்கே செய்தியாளர்களை நியமித்துச் செய்தி சேகரிப்பதென்பது மிகக் கடினமான வேலையாகும். ‘இந்து’ போன்றபெரிய பத்திரிகை நிறுவனங்கள் சிலவற்றுக்குத்தான் அத்தகையை சக்தி இருக்க முடியும்! எல்லா பத்திரிகைகளாலும் முடியாது.

அதனால்தான் செய்திகளைத் திரட்டி மற்ற நாடுகளுக்கு வழங்கிட; ஒவ்வொரு நாட்டிலும் செய்தி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை கூட்டுறவு மூலமோ அல்லது தனியார் வாயிலாகவோ நடைபெற்று வரும் செய்தி நிறுவனங்களாகும்.

இந்தச் செய்தி நிறுவனங்கள் பத்திரிகையாளர்களிடம் பணம் பெற்று உறுப்பினர்களாக்கிக் கொண்டு உரிய செய்திகளை உலகுக்குத் தருகின்றன. இதழ் நடத்தும் நமக்கும் பணம் பலம் இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட செய்தி நிறுவனங்களில் உறுப்பினராகிச் செய்திகளைப் பெறலாம்.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள செய்தி நிறுவனங்கள், உலகத்திலுள்ள புகழ் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து, உறுப்பினராகி, அந்தந்த நாட்டுச் செய்திகளை அவை பெற்று, அவற்றிலே இருந்து தங்களது நாடுகளிலுள்ள பத்திரிகை உறுப்பினர்களுக்குச் செய்திகளைக் கொடுத்து வெளியிடச் செய்கின்றன.

இத்தகைய உலகச் செய்தி நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு பெரிய நாடுகளிலும் நடந்து வருகின்றன.

அமெரிக்கா, இரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மன், இத்தாலி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளிலே இத்தகைய உலகச் செய்தி நிறுவனங்கள் திறமையாக இயங்கி வருகின்றன.

கம்பியில்லாத தந்தி, தொலைபேசி, கடலடித் தந்தி (cable), டெலி பிரிண்டர், டெலக்ஸ் (Telex) முறைகள் செய்திகளை உலக நாடுகளுக்கு அனுப்பிட வசதியாக உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலமாக பிற நாடுகளுக்குரிய செய்திகளை அந்தந்த நாடுகளின் நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன.

பத்திரிகையாளரான நாம், அந்த நிறுவனங்களின் உறுப்பினரானதால் அவை கட்டணம் பெற்றுக் கொண்டு நமக்கு உலகச் செய்திகளைத் தருகின்றன. இவ்வளவு வசதிகள் செய்திகளைப் பரிமாற இருந்தும்கூட, தற்போது விண்வெளித் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலமாக செயற்கைக் கோள் செய்தி அனுப்பும் முறையில் (Satellite) நேர் படி ஒளிப்படம் அனுப்பும் முறை (Facsimile Transmission)யால் தகவல் அனுப்புவதும் பெறுவதுமான புதிய முறைகள் உருவாகியுள்ளன.

அவற்றாலும் உடனுக்குடன் நிமிடங்கள் கணக்க்கில் உலகச் செய்திகளைப் பெற்று வருவதும், அனுப்புவதுமாக செய்தித் துறை நிறுவனங்கள் வளர்ந்து விட்டன. அதனால் செய்திப் பத்திரிகை வளர்ச்சியும் நாள்தோறும் முன்னேறி வரும் காட்சிகளைக் காண்கின்றோம்.

உலகத்தின் முதல் செய்தி நிறுவனத்தை அமைத்தவர் சார்லஸ் ஹாவாஸ் என்ற ஒரு பிரெஞ்சுக்காரர். அவர் 1825-ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் ஒரு செய்தி நிறுவனத்தை அமைத்து, அந்த நிறுவனம் தற்போது உலகெங்கும் பல கிளை நிறுவனங்களைத் தோற்றுவித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அந்த நிறுவனம் பத்தாண்டுகளுக்குள் நல்ல செல்வாக்குடன் வளர்ந்து செய்திகளை வழங்கி வருகிறது.

இலண்டன் நகரிலே உள்ள ராய்டர் செய்தி நிறுவனத்துடன் பங்கு கொண்டு, அவற்றிலிருந்து செய்திகளைப் பெற்றதுடன், 1875-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) என்ற நிறுவனத்துடன் செய்திகளை வழங்கும் பணியை வெற்றிகரமாகச் செய்து வருகின்றது.

அதே பிரெஞ்சுக்காரர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி பெர்னார்டு உல்ஃப் என்பவர், 1848ல் ஜெர்மன் நாட்டில் ஒரு செய்தி நிறுவனத்தை ஆரம்பித்தார். இவர் முதன் முதலாக வணிக நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றின் விலை விவரங்களைத் தொகுத்து, உலக நாடுகளிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு வழங்கி வருவாய் தேடிய அவர், பிறகு, அரசியல், சமுதாயச் செய்திகளையும் திரட்டித் தரும் பணியில் உயர்ந்து நின்று செல்வர் ஆனார்.

இவரது நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளைகளை அமைத்துக் கொண்டு இலண்டன் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வளர்ந்தார்.

பெர்னால்டு உல்ஃப் நிறுவனம், பல்கேரியா, ருமேனியா, ரஷ்யா, கிரிஸ், துருக்கி போன்ற பல்வேறு நாடுகளிலும் செய்தி நிறுவனங்களை நிறுவி வந்தபோது முதல் உலகப் போர் 1914-18ல் உருவானதால், அதன் வளர்ச்சி குன்றி வீழ்ச்சியுற்றது.

இலண்டன் இராய்ட்டர்
நிறுவனம் (Reuter)

இராய்ட்டர் என்ற உலகச் செய்தி நிறுவனம் தற்போது இலண்டன் நகரிலே இருந்தாலும், இது 1850-ஆம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட்டில் துவக்கப்பட்டு, 1851ல் இலண்டன் நகர் சென்றது.

இந்த நிறுவனம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் நாடுகளிலே உள்ள 4 பத்திரிகைகளுக்கு உரிமையானது.

60 நாடுகளில் 150 நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் செய்திகளை வழங்கி வருகின்றது. தனியார் இதைத் துவக்கியபோது என்ன செல்வாக்கோடிருந்ததோ அதே மதிப்போடு இன்றும் உலகில் செய்திகளை அது வழங்கி வருகின்றது. ஏஜென்சி ஃபிரான்ஸ் பிரஸ் (Agency Franle Press) எனப்படும் செய்தி நிறுவனம், 1835-ஆம் ஆண்டில் சார்லஸ் ஹாவஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

ஏறக்குறைய 109 ஆண்டுகளாக இது செயல்படுவதுடன் உலகின் முதல் செய்தி நிறுவனம் என்ற புகழை நிலை நாட்டிக் கொண்டது.

இந்த நிறுவனம் ஃபிரான்சுக்குரியதாக இருந்தபோது, செர்மன் இதை ஆக்ரமித்துக் கொண்டது. ஃபிரெஞ்சுக்காரர்கள் போராட்டம் நடத்தியபோது இது தோன்றியது. அதனால் இது ஃபிரெஞ்சுக்காரர்களின் தலைமறைவுச் செய்திகளை வெளியிட்டதால் ஜெர்மானியர் இதைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இதற்கு ஆண்டுதோறும் பிரிட்டன் அரசு மானியம் வழங்கி வருகின்றது.

இந்த ஏஜென்சி நிறுவனத்தை 1957-ஆம் ஆண்டு முதல் ஃபிரெஞ்சுக்காரர்கள் சட்டத்தின் துணையால் தனித்தியங்க வைத்துள்ளார்கள். ஃபிரெஞ்சு செய்தித் தாள்கள், வானொலி, தொலைக்காட்சிகள், பொதுமக்கள் சார்பாளரும் இந்தச் செய்தி நிறுவன ஊழியர்களாகப் பணிபுரிகிறார்கள்.

ஏறக்குறைய 167 நாடுகளிலே இதற்குச் செய்தி நிறுவனக் கிளைகள் உள்ளன. 152 நாடுகளுக்குச் செய்திகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அனைத்துலக யுனைடெட்
பிரஸ் செய்தி நிறுவனம்

இது 1907-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. ஸ்கிரிப்ஸ் யுனைடெட் பிரஸ் அசோசியேஷன் என்பது இதன் முழு பெயர். 1908-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஹர்ஸ்டஸ் இண்டர்நேஷனல் நியூஸ் சர்வீஸ் இத்துடன் இணைந்தது. 1958-ஆம் ஆண்டில் இது யுனைடெட் பிரஸ் இண்டர் நேஷனல் (UPI) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

இது தனியார் நிர்வாகத்தில் இயங்கி வரும் ஒரே ஓர் உலகச் செய்தி நிறுவனம். இதில் 92 நாடுகளிலுள்ள 7097 பத்திரிகைகள் கட்டண உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இரஷ்யாவின் டாஸ்
செய்தி நிறுவனம்

இந்த நிறுவனம் சோவியத் ரஷ்யாவில் செய்தி நிறுவனமாக இயங்கி வருகிறது. Telegrafnoe Agentsvo Sovetsrovo Soiuza என்பது இதன் முழு பெயர். இது 1918 முதல் TASS என்ற பெயரில் செய்தி நிறுவனமாக உள்ளது. இதனை 1925-ஆம் ஆண்டு வரை ரோஸ்டா (Rosta) என்று குறிப்பிட்டார்கள்.

இந்த நிறுவனம் சோவியத் ரஷ்யா அரசின் நேரடி நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. அரசையும், பொதுவுடமைக் கட்சியையும் சார்ந்த நிறுவனமாகும்.

ஏறக்குறைய 110 நாடுகளில் 40 செய்தி திரட்டும் அலுவலகங்களும், 61 தனியார் செய்தியாளர்களும் இந்நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

இந்தியாவில் இயங்கும்
செய்தி நிறுவனங்கள்

இந்தியப் பத்திரிகை உலகத்திற்கான உலகச் செய்திகளை வழங்குவதற்காக இலண்டன் நகரத்தில் இயங்கி வரும் இராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கிளை 1878-ஆம் ஆண்டில் மும்பை நகரில் துவங்கியது.

ஆனால், Bombay Times என்ற இங்லீஷ் பத்திரிகை 860-ஆம் ஆண்டு முதல் ராய்ட்டர் செய்தி நிறுவனம் இலண்டன் நகரிலுள்ள காலத்திலிருந்தே, உலகச் செய்திகளை அதனிடமிருந்து ‘பம்பாய் டைம்ஸ்’ ஏடு பெற்று வெளியிட்டு வந்தது. பிறகு, ராய்ட்டர் பம்பாய் வந்த பிறகு அதனிடம் நேரடித் தொடர்பு கொண்டது.

திரு. கே.சி.ராய் என்பவர்தான் முதன் முதலில் இந்திய பத்திரிகைகளுக்கான உலகச் செய்திகளை வழங்கும் நிறுவனத்தைத் துவக்கினார். அப்போது பயணியர் (Pioneer) என்ற இங்லீஷ் நாளேடு புகழ் பெற்றிருந்ததோடிராமல், ஆங்கிலேயர் ஆட்சியின் செல்வாக்கோடும், செழித்திருந்தது.

‘பயணியர்’ இதழின் ஆட்சிச் செல்வாக்கைப் பெற்ற ஹென்ஸ்மேன் (Hensman) என்பவரோடு கே.சி.ராய் சேர்ந்து கொண்டு, தொழில் போட்டியைத் துவக்கினார். அதற்குத் துணையாக ஸ்டேட்ஸ்மேன்’( States man) ‘இங்லீஷ்மேன்’ (English man), இந்தியன் டெய்லி நியூஸ் (Indian Daily News) போன்ற பத்திரிகையாளர்களைப் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு ‘இந்தியாவின் அசோசியேட்டட்’ (Associated Press of india) என்ற செய்தி நிறுவனத்தைப் பம்பாய் நகரில் துவக்கினார்.

கே.சி.ராய் . அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகச் செயற்பட விரும்பியதை, அவரது கூட்டாளிப் பத்திரிகைகள் விரும்பவில்லை. அதனால் அந்த நிறுவனத்தை விட்டு விலகினார். ‘பிரஸ் பீரோ’ (Press Bureau) என்ற அமைப்பை உருவாக்கினார்.

சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களில் ராய் பிரஸ் பீரோ கிளைகளைத் துவக்கினார். இந்திய இதழ்கள் ஒவ்வொன்றும் மாதந்தோறும் 350 ரூபாயைச் செய்திக் கட்டணமாகச் செலுத்தின.

திடீரென்று ராய்க்குப் பணத் தேவைகள் அதிகமாயின. அவரால் அந்த நிறுவனத்தை நடத்த முடியாததால், இந்தியாவிலே புதிய கிளைச் செய்தி நிறுவனத்தை அப்போது துவக்கி இருந்த இராய்ட்டர் செய்தி நிறுவனத்தோடு அதைச் சேர்த்து விட்டார்.

அதற்குப் பிறகு ராய் இந்தியன் நியூஸ் ஏஜென்சி (Indian News Agency) என்ற நிறுவனத்தைத் துவக்கி 1947-ஆம் ஆண்டு வரை நடத்தி வந்தார்.

அகில இந்தியத் தேசிய இயக்கம் பலம் பெற்று ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் பல போராட்டங்களை காந்தியடிகள் நடத்தி வந்த காலத்தில், சதானந்தர் என்பவர் ‘ஃபிரி பிரஸ் இந்தியா நியூஸ் ஏஜென்சி’(The Free Press of lndia News Agency) என்ற ஓர் உலகச் செய்தி நிறுவன அமைப்பை, மற்ற சில பத்திரிகையாளர்களோடு இணைந்து நடத்தினார். ஆங்கிலேயர் ஆட்சியின் கெடுபிடிகளால் அவருக்கு நிதி நெருக்கடி நிலை உண்டானது.

ஓர் இந்தியர் நடத்தும் செய்தி நிறுவனம் என்பதால், யார்யார் இந்திய நிறுவனத்திடம் செய்திகளைப் பெற்றுப் பத்திரிகைகளில் வெளியிட்டார்களோ, அந்தப் பத்திரிகையாளர்களைச் சட்டமெனும் இரும்புக் கரத்தால் அடக்கி ஆங்கிலேயர் ஆட்சி அபராதங்களை விதிக்கச் செய்தது.

இதனை எதிர்த்த இந்தியர் சதானந்தர், ‘ஃப்ரிபிரஸ் ஜெர்னல்’ (Free Press Journal) என்ற பத்திரிகையை துவக்கி நடத்தினார். இருந்தாலும், ஆட்சியின் முன்பு சங்கீதமா? என்ற கருத்தின்படி சதானந்தரால் சமாளிக்க முடியாமல் பத்திரிகையை நிறுத்தி விட்டார்.

‘ஃப்ரி பிரஸ் ஜெர்னலில் பணியாற்றிய பி. சென்குப்தா, (Sengupta) என்பவர், இந்திய யுனைடெட் பிரஸ் என்ற செய்தி நிறுவனத்தை உருவாக்கி, அதனின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார். அந்த நிறுவனத் தலைவர் டாக்டர் பி.சி. ராய் என்பவராவார். 1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு இது வளர்ச்சிப் பெற்று வந்தது.

தற்போது இந்தியாவில் டெலி பிரிண்டர் வசதிகளுடன் நான்கு பெரிய செய்தி நிறுவனங்கள் உள்ளன. அவை : இந்தியாவின் பிரஸ் டிரஸ்ட் (Press Trust of India), இந்தியாவின் யுனைடெட் நியூஸ் (United News of India) அதாவது UNI, இந்துஸ்தான் சமாச்சார் (Hindustan Samachar) சமாச்சார் பாரதி (Samachar Bharathi) என்பவைகளே அவை.

இந்தச் செய்தி நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவின் மாநிலங்களிலே இருந்து வெளிவரும் இந்தி, மராத்தி, நேபாளி, குஜராத்தி, ஒரியா, கன்னடா, பஞ்சாபி, உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், வங்காளம் ஆகிய இந்திய மொழிப் பத்திரிகைகளுக்குரிய, எல்லாச் செய்திகளையும் வழங்கி வருகின்றன.

இந்துஸ்தான் சமாச்சார், சமாச்சார் பாரதி, இந்தியாவின் யுனைடெட் நியூஸ் ஆகிய மூன்றின் செய்தி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் இந்தியாவின் தலைநகரமான புது தில்லியிலே இயங்கி வருகின்றன. Press Trust of India என்ற செய்தி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பை நகரிலே அமைந்து இயங்கி வருகின்றது.

சமாச்சார்

இந்திரா காந்தி அம்மையார் இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலையை 1976-ஆம் ஆண்டின் போது நாட்டில் அமல்படுத்தினார் அல்லவா? அப்போது இந்திய அரசு மேற்கண்ட நான்கு செய்தி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ‘சமாச்சர்’ (Samachar) என்ற செய்தி நிறுவன அமைப்பை உருவாக்கிச் செய்திகளை, சென்சார் செய்து வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு 50 லட்சம் ரூபாயை மானியமாகக் கொடுத்தது.

மத்திய ஆட்சியில் 1977-ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு புதிய மாற்றம் உருவானாது. 14.4.1978ஆம் ஆண்டில் மறுபடியும் இணைந்த பழைய நிறுவனங்கள் நான்கும் பிரிந்து அதனதன் சுதந்திர உரிமைகளோடு இயங்கின என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.