இலக்கியச் சோலை
- இலக்கியச் சோலை
- பேரறிஞர்
- டாக்டர் சி. என். அண்ணாதுரை, எம்.ஏ.,
- பூம்புகார் பதிப்பகம்
- 63, பிராட்வே
- சென்னை-600 108
- தொலைபேசி: 513143
- விலை ரூ.10.00
- பூம்புகார் வெளியீட்டு எண் : 247
- முதற் பதிப்பு : 1988
- இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி, 1994
- உரிமை : திருமதி இராணி அண்ணாதுரை
- அச்சிட்டவர்கள்: பூம்புகார் பதிப்பகம் (பிரஸ்), சென்னை-600 108.
- தோரண வாயில்
பேரறிஞர் அண்ணாவின் பல்துறை ஆற்றல் யாவரும் அறிந்ததே. அவருடைய எழுத்துக்கள், படைப்புகள் காலத்தை வென்று நிற்பவை. அவர் எழுதிய சிறுகதைகள் 90 ; நெடுங்கதைகள் 14 ; ஓரங்க நாடகங்கள் 42 ; நாடகங்கள் 10 ; கவிதைகள் 73 ; இன்னும் தம்பிக்கு கடிதங்கள் 290. தலையங்கங்கள் கட்டுரைகள் ஏராளம். அறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் பணி, இவைகளோடு ஒப்பிடும் போது மிகக் குறைவு எனலாம். அவருடைய சமுதாயப் பணி அரசியல் பணி இவைகளே அவர் வாழ்க்கையின் முழுநேரத்தையும் ஆக்ரமித்துக் கொண்டிருந்ததால், இலக்கியப் பணியை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியாது போனது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’யாக தெளிவாகிறது. அவர் ‘தம்பிக்கு, எழுதிய கடிதங்களில் மேடைப்பேச்சுக்களில் ஆற்றிய இலக்கியப் பணிகூட சமுதாய எழுச்சிக்கும் அவர் நடாத்திய விடுதலை இயக்கத்திற்கும் தன் தம்பியர் படையை தயார் செய்ததற்குத்தான் பயன் படுத்தியிருக்கிறார். தம்பிக்கு கடிதத்தில் கூட, கருத்து விளக்கக் கதைகளை எழுதி ‘தம்பி, கருத்து விளக்கத்திற்கு இந்தக் கதை... வெறும் கதை பேசும் பழக்கம்தான் நம்மிடம்கிடையாதே’ எனச் சொல்லியிருப்பது இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
தம்பிக்கு கடிதத்தில் வந்த இலக்கிய கட்டுரைகள், தனியாக எழுதிய இலக்கியக் கட்டுரைகள் இவைகளை தொகுத்து இங்கே அளித்திருக்கிறேன்.
அப்படி தொகுத்த சில முத்துக்கள் அகநானூறு, புறநானூறு கலிங்கத்துப் பரணி, சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இதில் அண்ணாவின் கைவண்ணம் காணலாம். அறிஞர் அண்ணாவின் இலக்கியச் சுவையைத் தமிழர்கள் பருக வேண்டும் என்ற அவாவின் உந்துதலே இந்த தொகுப்பின் பின்னணி.
டாக்டர் சி. என். ஏ. பரிமளம்
- பதிப்புரை
தமிழ்நாடு மிகவும் தொன்மை உடைய நாடு ; தமிழ் மிகவும் தொன்மையான மொழி. பழந்தமிழகம் செய்தியால் விரிந்ததாகவும், சிறப்பால் ஆழ்ந்ததாகவும், வரலாற்றுச் சான்றுகள் எட்டமுடியாத அளவு உயர்ந்ததாகவும் விளங்குகிறது.
ரசனைக்காக எழுதுவதைவிட, கவலையை மறப்பதற்காக கற்பனையில் பறப்பதைவிட, பொழுது போக்கிற்காக படிப்பதைவிட, நேரிடையாகவே பழந் தமிழகத்தைக் காண—பழந் தமிழ் மக்களைக் காண அமரர் அண்ணா அவர்கள் புறநானூறு, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம், திருக்குறள், முல்லைப்பாட்டு ஆகிய சங்க கால நூல்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள் இந்நூலின் மூலம்.
அண்ணாவின் இலக்கியச் சோலையில் புகும் நாம், அவர் காட்டும் வழியினை—நெறியினை போற்றிப் புகழ்வதோடு, நடை முறையில் கொண்டு, நம் வாழ்வினை விழுப்பமுடையதாக்க வேண்டுகிறோம்.
இந்தச் சோலையை அமரர் அண்ணா அவர்கள் தம் கரத்தில் ஏந்தித் தவழ விட்டிருக்கும் பாங்கை நீங்கள் இதில் பரவலாகக் காணலாம்.
அண்ணாவின் கைவண்ணத்தைக் காண இதை நமக்கு தொகுத்துக் கொடுத்த டாக்டர். சி. என். ஏ.பரிமளம் அவர்களுக்கும், உரிமை வழங்கிய திருமதி இராணி அண்ணாதுரை அவர்கட்கும் வாசகர்களாகிய உங்களின் சார்பில் எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
—பூம்புகார் பதிப்பகத்தார்
பொருளடக்கம்
| 1) | 7 |
| | மொழிவளம் |
8 |
| | கவிதைவளம் |
19 |
| | பழந்தமிழர் போர்த்திறன் |
23 |
| 2) | 30 |
| | மாதவியின் ஒப்பனை |
33 |
| 3) |
| | தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் |
35 |
| | புறநானூற்றுக் காட்சி |
37 |
| 4) |
| | பாசறையில் நெடுஞ்செழியன் பாங்கு! |
40 |
| | பிரிவு |
41 |
| 5) | 44 |
| | பாரி பறித்த பறி |
45 |
| 6) | 47 |
| 7) | 49 |
| 8) | 50 |
| 9) | 53 |
| 10) | 56 |
| 11) | 60 |
| 12) | 73 |
