இளையர் அறிவியல் களஞ்சியம்/ஏவுகணை

விக்கிமூலம் இலிருந்து

ஏவுகணை : 'மிசில்’ என அழைக்கப்படும் ஏவுகணை இன்றையப் படைக்கலன்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் சென்று தாக்குவ

சிறிய அளவிலான ஏவுகணைகள்

தால் இஃது ஏவுகனை அல்லது ஏவு படைக் கலம் என அழைக்கப்படுகிறது. வல்லரசு நாடுகளிடம் மட்டுமல்லாது வளர்ந்து வரும் பல நாடுகளில் பாதுகாப்புக்கென ஏராளமான ஏவுகணைப் படைக்கலங்கள் உள்ளன.

மிகுந்த ஆற்றல் உள்ள ஏவுகணைகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் ஜெர்மானியர்களே ஆவர். இரண்டாம் உலகப் போரின்போது பல நவீன ஏவு படைக்கலன்களைக் கண்டறிந்து பயன்படுத்தினர், ஏவு கணைகளால் மிகுந்த நாசம் விளைவதை அறிந்த ரஷியர்களும் அமெரிக்கர்களும் ஏவுகணைத் தயாரிப்புத் தொழில் நுட்பங்களை

பெரிய ஏவுகணைகள்

அறிந்து ஏவுகணைகளை உருவாக்கினர். மேலும் தீவிர ஆய்வுகளை நடத்தி அதி நவீன ஏவுகணைகளை இன்று உருவாக்கி உள்ளனர். இவ் வேவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஆற்றல் பெற்றவை. தாக்க வரும் ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் 'பேட்ரியாட்’ போன்ற பேராற்றல்மிக்க ஏவுகணை எதிர்ப்புப் படைக்கலன்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. கணிப்பொறியால் இயக்கப்படும் இச் சாதனம் ஏவுகணைகள் செல்லுவதைத் துல்லியமாக அறிந்து வானில் தாக்கி அழிக்கும் வல்ல மைகொண்டுள்ளன. இத்தகைய ஏவுகணைகள் ஈராக் போரின்போது ஈராக்கிய ஸ்கட் ஏவுகணைகளை வானிலேயே அழிக்க அமெரிக்கப் படையினரால் பயன்படுத்தப்பட்டன.

ஏவுகணை வடிவில் விமானத்தைப் போன்றே இரு சிறு இறக்கைகளும் திசை திருப்பும் சுக்கானும் உடையதாக இருக்கும். அதனை இயக்குவதற்கான என்ஜினும் அதனுள் இருக்கும். ஆளில்லாமல் இயங்கும் இதைத் தரையிலிருந்தவாறே வேண்டிய திக்கில் திருப்பிச் செலுத்த இயலும். தலைப்பகுதியில் இதன் சக்திமிக்க குண்டு வைக்கப்பட்டிருக்கும். இலக்கை அடைந்த ஏவுகணையின் குண்டு கட்டிடத்தின்

அக்னி ஏவுகணை

மீதோ அல்லது வேறெந்தப் பொருளின் மீதோ தரையின் மீதோ மோதியவுடன்குண்டு வெடித்துச்சிதறிச் சேதத்தை ஏற்படுத்தும். குண்டின் சக்திக்கேற்ப அழிவு ஏற்படும்.

பீரங்கியால் செலுத்தப்படும் குண்டுகளை ஏவிய பின் கட்டுப்படுத்தவோ திசை திருப்பவோ இயலாது. ஆனால் ராக்கெட் மூலம் ஏவப்படும் ஏவுகணையைக் கட்டுப்படுத்தவோ திசை திருப்

விண்ணோக்கிப் பாயும் ஏவுகணை

பவோ இயலும். தற்கால ஏவுகணைகள் கணிப்பொறி துணை கொண்டு துல்லியமாக இயங்குகின்றன.

ஏவுகணைகளைத் தரையிலிருந்தோ விமானத்திலிருந்தோ கடலில் மிதக்கும் கப்பலிலிருந்தோ கடலுள் செலுத்தும் நீர் மூழ்கிக் கப்பலிலிருந்தோ செலுத்த முடியும்.

இந்தியாவும் ஆற்றல் மிக்க 'அக்னி' எனும் ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. 'ஆகாஸ்' என்பது இந்தியா உருவாக்கியுள்ள மற்றொரு ஏவுகணை ஆகும்.