உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/முதுகெலும்புள்ள உயிரினங்கள்

விக்கிமூலம் இலிருந்து

முதுகெலும்புள்ள உயிரினங்கள் : இவை முதுகுத்தண்டை அடிப்படையாகக் கொண்ட முதுகெலும்புகளையுடைய உயிரினங்களாகும். இவைகளின் முதுகெலும்புகளே இவற்றின் உடலைத் தாங்கும் சட்டகமாகப் பயன்பட்டு வருகின்றன.

தண்டுவடத்தினுள்ளே நீண்ட நரம்புவடம் ஒன்று உண்டு. இதுவே முதுகெலும்பின் இன்றியமையா முக்கியப் பகுதி. இந்நரம்பு வடம் மூளைப் பகுதியுடன இணைக்கப்பட்டுள்ளது. மூளைப் பாதுகாப்புக்கு மண்டையோடு அமைந்திருப்பது போன்று நரம்பு வடத்தின் பாதுகாப்புக் கேடயமாக முதுகெலும்பு அமைந்துள்ளது. பெரும்பாலான முதுகெலும்புள்ள உயிரினங்களில் இரு துணையுறுப்புகள் உண்டு. இவை ஒன்றுக்கொன்று இணையாக இல்லை. அவ்வாறு அமைந்த துணை உறுப்புக்களே மனிதனுக்குள்ள இரு கைகள், பறவைகளுக்குள்ள இரு இறக்கைகள்; மீன்களுக்குள்ள துடுப்புகள்; ஊர்வன, நடப்பன ஆகியவற்றுக்குள்ள முன்னங்கால்களும் பின்னங்கால்களும்.

முதுகெலும்புள்ள உயிரினங்களில் எழுபதாயிரம் வகைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஐந்து பெரும் தொகுப்புகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை நீரில் மட்டும் வாழக்கூடிய மீனினங்கள்; நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரிகள் நிலத்திலும்

முதுகெலும்புள்ள உயிரினங்கள்

மரத்திலும் ஊர்ந்து வாழ்வன, பறக்கும் இயல்புடைய பறவைகள்; பாலூட்டிகள் ஆகியனவாகும். மனிதன் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவனாவான்.