உள்ளடக்கத்துக்குச் செல்

உதட்டில் உதடு/003

விக்கிமூலம் இலிருந்து

நான்கு வேளை


காலை

அவன் : நீலக் கிழக்கு சுடர் ஆச்சு—வயலில்
நிற்கும் கதிர்கள் முற்றிப் போச்சு ;

அவள் : ஆகையினால் நீங்க
அறுவடைக்குப் போங்க
அதற்கு அரிவாள் இந்தாங்க !

பகல்



அவன் : நெருப்பு வெய்யில் வந்தாச்சு—பனைமர
நிழலை நம்பி வீணாச்சு ;

அவள் : அந்தத் துயர் நீங்க
வந்த வெய்யில் தாங்க
முந்தானைக் குடை இந்தாங்க !

அந்தி



அவன் : மேற்கு வானம் ரத்தம் ஆச்சு—உன்னால்
மலர்ந்த உதடு வெள்ளை யாச்சு ;

அவள் : வாசனையும் ஓங்க
சிவப்பு நிறம் தேங்க
வெற்றிலைப் பாக்கு இந்தாங்க !

இரவு

அவன் : நிலவு, பிரசவம் ஆச்சு—உன்னால்
நித்திரை சிதறிப் போச்சு ;

அவள் : மன்னவரே நீங்க
மயக்கத்தோடு தூங்க
எச்சில் முத்தம் இந்தாங்க !

"https://ta.wikisource.org/w/index.php?title=உதட்டில்_உதடு/003&oldid=1879454" இலிருந்து மீள்விக்கப்பட்டது