உதட்டில் உதடு/004
தோற்றம்
இருட்டுக்கு சேலை தந்தாள்
உயர்வுக்கு திறமை தந்தாள் — பொது
உடமைக்கு அரசு தந்தாள்.
உணர்வுக்கு வீரம் தந்தாள் — மொழி
வளர்ச்சிக்கு எண்ணம் தந்தாள்.
புலமைக்கு அழைப்பு தந்தாள் — புரட்சி
புதுமைக்கு பட்டம் தந்தாள்.
பதுமைக்கு அழகு தந்தாள் — தென்னம்
பாளைக்கு சிரிப்பு தந்தாள்.
அல்லிக்கு உதடு தந்தாள் — அதை
அடிக்கடி எனக்கு தந்தாள்.
இளமைக்கு வேலை தந்தாள் — தினம்
இருட்டுக்கு சேலை தந்தாள்!