உள்ளடக்கத்துக்குச் செல்

உதட்டில் உதடு/008

விக்கிமூலம் இலிருந்து

காற்றுக்கு வர்ணம் பூசலாம்


காற்றுக்கு வர்ணம் பூசலாம்—அது
காணும் பொருளாய் இருந்திடில்—மழைத்

தூற்றலை முத்தாய் மாற்றலாம்—கடல்
சிப்பி சிநேகம் கிடைத்திடில்—மேகம்

ஊற்றுகின்ற தண் ணீரினால்—மண்
வயிற்றில் கர்ப்பம் உண்டாக்கலாம்—ருசி

ஏற்றும் உதட்டிலே இருக்கும் வெளிச்சத்—தால்
இருட்டைத் துரத்த முடியுமோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=உதட்டில்_உதடு/008&oldid=1879459" இலிருந்து மீள்விக்கப்பட்டது