உள்ளடக்கத்துக்குச் செல்

உதட்டில் உதடு/011

விக்கிமூலம் இலிருந்து

வாலிபம் ஏற்பட்டது


ட்டை உடுத்திய பச்சை மரத்தினிலே—கிளை
பக்கத்திலே, இலை கக்கத்திலே, உன்னைக்
கட்டிவைத்து சாறு கொட்டியது யாரு
உந்தன் உடம்பி னிலே—பழமே
உந்தன் உடம்பி னிலே ?

பெண்களின் பாவாடை, வெண்பட்டு சேலையிலே—தேன்
பொங்கும் உதட்டிலே, தொங்கும் கரத்திலே,
வந்து இழையாமல் வீண்காலம் போக்காதே
வாழைக் குருத் தினிலே—நத்தையே
வாழைக் குருத் தினிலே !

ஆக்கும் அரிசியைத் தூக்கிச் சுமக்காமல்—மலர்
ஆகும் அரும்புகள் நீஎடுத்து வந்தால்,
தூக்கி உன்னைப் பெண்கள் தாலாட்டுக் காட்டித்—தொ
டையில் வளர்ப் பார்களே—எறும்பே, தொ
டையில் வளர்ப் பார்களே !

கத்தத் தெரியாத பூவைக் கெடுத்திடவே—அதன்
கற்பைக் கலைத்துமே, அற்பத்தனம் செய்யும்
சித்தத்துடன் வந்தால், குத்து உதை விழும்,
சங்கீதப் பூச்சி களே—வண்டுகளே
சங்கீதப் பூச்சி களே !


மாவிலைத் தோரணம் மாதிரி உட்கார்ந்து—மர
மட்டையிலே தொங்கும் கொட்டைப் பழங்களை,
காவிநிற மூக்கால் கொத்தையில், ஏற்படும்
காயத்தை ஆற்றுவ தார்—கிளியே
காயத்தை ஆற்றுவ தார்?

சாயக் கடலிலே, சந்திரன் தோணையிலே—நீ
சத்து நிரம்பிய முத்தம் கொடுத்ததால்
வாயிலே தாமரை வர்ணம் கலந்தது
வாலிபம் ஏற்பட் டது—பெண்ணே
வாலிபம் ஏற்பட் டது !

"https://ta.wikisource.org/w/index.php?title=உதட்டில்_உதடு/011&oldid=1879462" இலிருந்து மீள்விக்கப்பட்டது