உள்ளடக்கத்துக்குச் செல்

உதட்டில் உதடு/013

விக்கிமூலம் இலிருந்து

தித்திப்பு லோகம்


புருவத்தின் அடி யிலே
பிறந்த கண்ணை மயக்க
திருநாள் சிலையை போலே
அலங்காரம் செய்து கொண்டாள்

அழுக்கு நிலா வெளிச்சம்
அடிக்கை யிலே, கோவைப்
பழத்தில் பழம் போலே
பதியவைத் தாள் உதடு.

கத்திரிப் பூவு சேலை
கலைய, கூந்தல் கலைய,
தித்திப்பு லோகம் தன்னில்
தூங்கி விட்டாள் சோர்ந்து.

இருவிழி தவிர மற்
றெல்லாம் நனைந்த படி
கரையேறி னாள் குளித்து
காயாத சேலை யோடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=உதட்டில்_உதடு/013&oldid=1879464" இலிருந்து மீள்விக்கப்பட்டது