உயிர் நிலம்
தோற்றம்
உயிர் நிலம்
மேலாண்மை பொன்னுச்சாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41—B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை — 600 098.
☎ : 26258410, 26251968, 26359906
- Language : Tamil
- UYIR NILAM
- Author : Melanmai Ponnusaami
- First Edition : July, 2011
- Copyright : Author
- No. of pages : x+530 = 540
- Typesetting : Guru Raghavendra
- Publisher :
- New Century Book House Pvt. Ltd.
- Chennai - 600 098.
- Tamilnadu State, India.
- Email: ncbhbook@yahoo.co.in
- ISBN: 978 - 81 - 234 - 1933 - 6
- Code No.A 2303
- Rs. 270/-
- Branches
- Ambattur 044-26359906, 26258410, 26251968 Ashok Nagar
- 044-24899351 Thiruvanmiyur 044-24404873 Trichy 0431-2700885
- Tanjore 04362-231371 Pondicherry 0413-2213111 Tirunelveli
- 0462-2323990 Madurai 0452-2344106, 2350271 Dindigul
- 0451-2432172 Coimbatore 0422-2380554 Salem 0427-2450817
- Hosur 04344-245726 Ooty 0423-2441743 Vellore
- 0416-2234495.
- உயிர் நிலம்
- ஆசிரியர் : மேலாண்மை பொன்னுச்சாமி
- முதல் பதிப்பு : ஜூலை, 2011
Printed at Pavai Printers (P) Ltd.,
16(142), J.J.Khan Road, Ch - 14
Ph: 044-28482441, 28482973
பதிப்புரை
- நம் தமிழகத்திலும் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய நிலையில் செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் ஆட்சி செய்கிறது. ‘புதினங்கள் பொதுமக்களுக்கு வெறும் கதை; அறிஞர்களுக்குக் கருத்து விளக்கம்; கற்று வல்லார்க்கு அனுபவப்பிழிவு’ என்கிறார் மேனாட்டு அறிஞர் மார்ரே. நாவல்கள் உள்ளிட்ட பல இலக்கியங்களை வெளியிட்டு அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்ற உயர்திரு மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் உழவின் மேன்மையைப் போற்றும் ‘உயிர்நிலம்’ என்னும் சிறந்த நாவலைப் படைத்துள்ளார்.
- பாரம்பரியமாக உழுதொழில் செய்துவரும் குடும்பத்தில் பிறந்த பரமசிவம் தனது முதுமையிலும் தனது விளைநிலங்களைத் தானே ஏர்பூட்டி உழுது நீர் பாய்ச்சி நடவு நட்டு, களை பறித்து இயற்கை உரங்களையே போட்டு விளைச்சலை மிகுதியாகப் பெற்று ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்ற குறள் நெறிப்படி நிம்மதியாக வாழ்ந்து வருபவர். ஊரில் பெரும்பாலானோர் நவீன எந்திரங்கள், செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள், பயன்படுத்தி, கடன்சுமை ஏற்று நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்று பரமசிவத்தின் உழவுக் கொள்கையைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார் நாவலாசிரியர்.
iv
- பரமசிவம் காமாட்சி திருமணம் குறித்தும் அவர்களின் இல்லறத் தொடக்கத்தையும் இயல்பாகப் பதிவு செய்துள்ளார். இல்லறவாழ்வில் இன்பம் மிகுந்தது போல அவர்தம் அரிய உழைப்பால் விளைச்சலும் அதிகரித்து வந்தது.
- உண்மையும் நேர்மையும் கொண்டு ‘நிலமே உயிர்’ என்ற கொள்கையுடையோராய் அவர்கள் வாழ்ந்ததை,
- ‘ஒளிவு மறைவில்லாத வெள்ளைப் பேச்சு
உலகத்தையே ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கை வீச்சு’
என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
- ‘ஒளிவு மறைவில்லாத வெள்ளைப் பேச்சு
- வீட்டு வேலைகளைத் திறம்படச் செய்வதோடு வயல் வேலைகளிலும் கணவனுக்கு ஈடுகொடுத்து வேலை செய்வதில் வல்லவள் காமாட்சி. உரலில் கம்புபோட்டு உலக்கையால் குத்தும் நேர்த்தியை ஆசிரியர் படம்பிடித்தாற்போல வருணித்து வாசகரை வியக்க வைத்துள்ளார்.
- மூத்த மகன் அழகேசன் தந்தை சொற்படி நடந்து உழுதொழிலுக்கு உதவியாயிருக்க, இளையவன் முருகேசன் ஓரளவு படித்திருந்ததால் அவன் நடை உடை பாவனைகளில் நாகரிகத்தை விரும்பியவனாகவும் பெற்றோர் சொல்லை மீறுபவனாகவும் படைக்கப்பட்டுள்ளான். தந்தையைப் பற்றி,
- ‘அய்யா கொடுமை பழங்கொடுமை, பெருங்கொடுமை,
வைராக்கியப் பிற்போக்கு, பழம் பஞ்சாங்கம்’
என்பது இளையவனின் மதிப்பீடு.
- ‘அய்யா கொடுமை பழங்கொடுமை, பெருங்கொடுமை,
- சமீபத்தில் தான் வாங்கிய நிலத்தைத் தனக்குப் பாகமாகத் தருமாறு முருகேசன் ஊர்ப் பெரியவர்களிடம் சிபாரிசு கேட்க வணிகர் அருஞ்சுனையின் ஆலோசனையின் பேரில்
- சமீபத்தில் தான் வாங்கிய நிலத்தைத் தனக்குப் பாகமாகத் தருமாறு முருகேசன் ஊர்ப் பெரியவர்களிடம் சிபாரிசு கேட்க வணிகர் அருஞ்சுனையின் ஆலோசனையின் பேரில்
V
- தானே முன்வந்து அந்நிலத்தை அவனுக்கு உரிமையாக்கினார் பரமசிவம்.
- நவீன விவசாய முறையில் பயிர் செய்து அமோக விளைச்சல் காண வேண்டும், தந்தையின் உழவு முறைக்குச் சவால் விடும் வண்ணம் செல்வம் குவிக்க வேண்டும் என்ற நோக்கில் முருகேசன் எந்திரங்களைப் பயன்படுத்தி உழுதல், விதைத்தல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல் மூலம் மகசூல் குவியும் என்று துணிந்தவன் அவற்றிற்கு ஆகும் செலவினங்களை எவ்வாறு சமாளிப்பது என்ற வகையறியான் என்பதை ஆசிரியர் திறம்பட விளக்கியுள்ளார்.
- பரமசிவம் நாற்றுக் கூளக்கட்டுகளைத் தன் தலை மீது சுமந்து திணறித் தவித்துக் கொண்டுவந்து சேர்க்க, இளையவனோ தந்தை மாட்டு வண்டியில் கொண்டுவரச் சொன்ன கட்டுகளைக் கூலி பேசி டிராக்டரில் கொண்டு வந்ததைக் குறிப்பிட்டு மகனின் பணத்தின் அருமை புரியாத தன்மையை நயமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.
- இளையமகன் சோளச்சோறு உண்ண விரும்பாமையை அறிந்து தந்தை பரமசிவம், தன் மகன் பெற்றோர் சொல் கேளாதவனாக இருந்தாலும் பெற்ற பாசம் விடாது என்பதை வெளிப்படுத்த அரிசி வாங்கி மூட்டையைச் சுமந்துகொண்டு வீடு அடையக் கண்ட காமாட்சி மகன் மேல் தந்தைக்குள்ள அக்கறையை அறிந்து மெய்சிலிர்த்துக் கண்ணீர் விட்டதைப் படக்காட்சிபோல் மனதில் பதியச் செய்துள்ளார் நாவலாசிரியர்.
- கிராம மக்களாக இருந்தாலும் உடலுழைப்பையே ஆதாரமாகக் கருதி வாழ்பவர்கள். ஊர் மக்களிடம் உறவு, நட்பு கொண்டு வாழ்பவர்கள், ஆனால் மானக்கேடு வருமானால் மிகவும் வருந்தி ஒரு கடினமான முடிவெடுப்பர் vi
- என்பதை நாவலாசிரியர், தந்தை வாங்கிய நிலத்தைத் தனக்குத் தரவேண்டுமென்று ஊர் துணை நாடியது தனது மனத்தை வருத்த அவனது திருமணத்தில் தான் பங்குகொள்ளப் போவதில்லை என்ற முடிவை அறிவிக்கும் நிகழ்ச்சியால் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
- கரண்ட் மூலம் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சினால் பயிர்களின் வேர்கள் பாதிக்கப்படுமே என்ற கருத்துடைய பெண்களின் அறியாமையைச் சுட்டி நாவலுக்குச் சுவை கூட்டியுள்ளார்.
- முருகேசன் தான் சொந்தமாகப் பயிர் செய்து கிடைத்த விளைச்சலை விற்றுக் கிடைத்த பணம், செய்ய வேண்டியுள்ள செலவினங்களுக்குப் போதாது என்பதால், உரக் கடைக்காரரிடம் உரம் கடன் கேட்க மோட்டார் சைக்கிளில் போனபோது அவனுக்கு ஏற்பட்ட விபத்துக்குக் கடன் சுமையே காரணம் என்பதை ஆசிரியர் குறிப்பால் உணர்த்தியுள்ளார். மருத்துவமனையில் தன் தந்தையார், தான் செய்த பொருந்தாச் செயல்களையெல்லாம் மறந்து தன்னைப் பார்க்க வந்ததைப் பெரும் பேறாகக் கருதி மனம் நெகிழ்ந்த நிகழ்ச்சியால் வாசகர் உள்ளங்களிலும் இரக்கத்தை வெளிப்படுத்திகிறார்.
- முருகேசன் பல நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதோடு தனியாரிடமும் அதிக வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தான். அடுத்து பயிர் செய்வதற்கு பல இனங்களில் ஏராளமான தொகை சமாளிக்க வேண்டும். மாதா மாதம் அசலும் வட்டியும் வசூலித்துச் செல்லும் பழநிமலை திடீரென ஒரு நாள் வந்து ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்நாளில் தனக்கு ரூ 1 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கொடுக்கத் தவறினால் அவன் மனைவியைத்
- முருகேசன் பல நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதோடு தனியாரிடமும் அதிக வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தான். அடுத்து பயிர் செய்வதற்கு பல இனங்களில் ஏராளமான தொகை சமாளிக்க வேண்டும். மாதா மாதம் அசலும் வட்டியும் வசூலித்துச் செல்லும் பழநிமலை திடீரென ஒரு நாள் வந்து ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்நாளில் தனக்கு ரூ 1 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கொடுக்கத் தவறினால் அவன் மனைவியைத்
vii
- தூக்கிக் கொண்டு சென்றுவிடுவதாகவும் அச்சுறுத்திவிட்டுச் சென்றான். இத்ததைய வார்த்தைகளைக் கேட்ட முருகேசன் செய்வதறியாது வெறிபிடித்தவன் போல் வேக நடை நடந்த நேரத்தில் ஆசிரியர், முருகேசனுக்கு வீரவுணர்ச்சி மேலிடாமல் மூர்க்கம் எழாமல் கோழைத்தனம்தான் மிகுந்திருந்ததாக வருந்திக் கூறுகிறார். தன் ஐயாவிடம் புகலிடம் அடையவும் அவனுக்குத் துணிவில்லை. பழநிமலைக்குத் தன் எதிர்ப்பைக் காட்டவும் வீரமில்லை. முடிவாகத் தன் உயிரைப் போக்கிக்கொள்வதுதான் தீர்வு என்ற முடிவோடு பூச்சி மருந்தைக் குடித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டான் என்று துன்பியல் நிலையில் ஆசிரியர் இந்நாவலை நிறைவு செய்கின்றார்.
- இயற்கை வேளாண்மையைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலில் தந்தை, தாய், பிள்ளைகள் எனச் சில முழுநிலைப் பாத்திரங்களைப் படைத்து அவர்தம் இயல்புகளை நிகழ்ச்சிகளூடே இணைத்து நாவலின் உச்சகட்டமாக விஞ்ஞானத் தொழில்நுட்ப விவசாயம் எளிய விவசாயிகளுக்கு இயலாத நிலையை விளக்கி ‘முதலிலார்க்கு ஊதியமில்லை’ என்ற கருத்தை ஆசிரியர் நாவலின் முடிபாக அறிவுறுத்தியுள்ளார். எளிய விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ள வேண்டிய திட்டங்களைக் குறித்து ஆவன செய்யத் தூண்டும் இந்நாவல் வாசகரைப் பெரிதும் கவரும் என்ற நோக்கில் எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்நூலை வெளியிட்டு எல்லோர் ஆதரவினையும் விழைகின்றது.
- பதிப்பகத்தார்
சமர்ப்பணம்......
- மரபு சார்ந்த இயற்கை விவசாய முறைமைக்காக வாதாடி, போராடி, இயக்கம் நடத்தி, பன்னாட்டு ஏகபோகத்துக்கு எதிரான செயல் செய்து வருகிற இயற்கை விஞ்ஞானி திருமிகு நம்மாழ்வார் அவர்களுக்கும்,
- எம்.பி.ஏ.முடித்த பிறகு ஏர்க்கலப்பையுடன் இயற்கை விவசாயம் செய்கிற களப்போராளி ஏங்கல்ஸ் ராஜா அவர்களுக்கும்...
அத்தியாயங்கள்
- உயிர் நிலம்/001
- உயிர் நிலம்/002
- உயிர் நிலம்/003
- உயிர் நிலம்/004
- உயிர் நிலம்/005
- உயிர் நிலம்/006
- உயிர் நிலம்/007
- உயிர் நிலம்/008
- உயிர் நிலம்/009
- உயிர் நிலம்/010
- உயிர் நிலம்/011
- உயிர் நிலம்/012
- உயிர் நிலம்/013
- உயிர் நிலம்/014
- உயிர் நிலம்/015
- உயிர் நிலம்/016
- உயிர் நிலம்/017
- உயிர் நிலம்/018
- உயிர் நிலம்/019
- உயிர் நிலம்/020
- உயிர் நிலம்/021
- உயிர் நிலம்/022
- உயிர் நிலம்/023
- உயிர் நிலம்/024
- உயிர் நிலம்/025
- உயிர் நிலம்/026
- உயிர் நிலம்/027
- உயிர் நிலம்/028
- உயிர் நிலம்/029
- உயிர் நிலம்/030
- உயிர் நிலம்/031
- உயிர் நிலம்/032
- உயிர் நிலம்/033
- உயிர் நிலம்/034
- உயிர் நிலம்/035
- உயிர் நிலம்/036
- உயிர் நிலம்/037
- உயிர் நிலம்/038
- உயிர் நிலம்/039
- உயிர் நிலம்/040
- உயிர் நிலம்/041
- உயிர் நிலம்/042
- உயிர் நிலம்/043
- உயிர் நிலம்/044
- உயிர் நிலம்/045
- உயிர் நிலம்/046
- உயிர் நிலம்/047
- உயிர் நிலம்/048
- உயிர் நிலம்/049
- உயிர் நிலம்/050
- உயிர் நிலம்/051
- உயிர் நிலம்/052
- உயிர் நிலம்/053
- உயிர் நிலம்/054
- உயிர் நிலம்/055
- உயிர் நிலம்/056
- உயிர் நிலம்/057
- உயிர் நிலம்/058
- உயிர் நிலம்/059
- உயிர் நிலம்/060
- உயிர் நிலம்/061