ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community
( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
நாடோடிப் பாடல்கள், வரிசை–1
தொழிற் பாடல்களும்
தொகுத்தவர் :
கி. வா. ஜகந்நாதன்
46, ராயப்பேட்டை ஹைரோடு,
சென்னை-600 014.
- நாடோடிப் பாடல்கள்-வரிசை-1
- அமுதம் : 273
- உரிமை : தொகுத்தவருக்கே
- முதற்பதிப்பு : மே, 1983
- விலை: 6-50
- அச்சிட்டோர்: சாந்தி எண்டர்பிரைசஸ்,
இராயப்பேட்டை ஹைரோடு, சென்னை-600 014.
- அச்சிட்டோர்: சாந்தி எண்டர்பிரைசஸ்,
முன்னுரை
தமிழ் நாட்டில் வழங்கும் நாடோடிப் பாடல்கள் பல. வெவ்வேறு இடங்களில் அந்த அந்த இடத்துக் கேற்ற வகையில் அந்தப் பாடல்கள் வழங்குகின்றன. நாடு முழுவதும் சென்று வழங்குவதனால் இவற்றை நாடோடிப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், பாமரர் பாடல்கள் என்று வழங்குவார்கள்.
இந்தப் புத்தகத்தில், எனக்குக் கிடைத்த ஏற்றப் பாடல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். உழைப்பாளிகளின் பாடல்களும் இத்தொகுதியில் உள்ளன.
நாடோடிப் பாடல்களில் உலக வழக்கில் உள்ள கொச்சைச் சொற்களே மிகுதியாக இருக்கும். இலக்கியப் புலவர்களின் பாடல்களுக்கும் இவற்றுக்கும் பல வேறு பாடுகள் உண்டு இவற்றில் ஒரடியே திருப்பித் திருப்பிவரும்.
ஏற்றமரத்தில் மேலே ஏறி இரண்டு அல்லது மூன்று பேர் மேலும் கீழும் நடந்து பாடுவார்கள். மரத்தின் நுனியில் இணைத்துத் தொங்கும் கோலின் நுனியில் சாலைக் கட்டியிருப்பார்கள். ஏற்றமரம் சாயும்போது கோல் கீழே சென்று சாலில் தண்ணிரை முகக்கும். மறுபடி மேலுள்ளவர்கள் கீழே போகும்போது சால் மேலே வரத் தண்ணிரை இறைப்பவன், “ஒருபதியால் ஒண்ணு, இருபதியால் ரெண்டு” என்று இறைக்கும் சாலின் எண்ணிக்கையைச் சொல்வான்.
“ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டில்லை: பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை” என்று ஒரு பழமொழி வழங்குகிறது. இயற்கையாகவே ஏற்றப் பாடல்களை
வழிவழியாகவே பாடி வருகிறாகள். அவற்றை யார் முதலில் இயற்றினார்கள் என்று தெரியாது. பல இடங்களில் வழங்கும்போது ஒரே பாட்டில் பல அடிகள் கூடியிருக்கும்; சில அடிகள் குறைந்திருக்கும்; சில அடிகளில் பாட பேதம் இருக்கும். அத்தகைய பாட பேதங்களில் சிலவற்றை அடிக்குறிப்பில் கொடுத்திருக்கிறேன்.
இவற்றில் பொருள் தொடர்ச்சியாக இராது. சில அடிகளில் தொடர்ச்சி இருக்கும். எதுகை, மோனை, ஓசை ஆகியனவற்றை இவற்றில் காணலாம் இடையிடையே பல அரிய கருத்துக்கள் வரும். அப்படி வருவனவற்றில் சில வருமாறு :
ஒருவன்தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வான்.
மழைபெய்த வாசலிலே மைந்தனடி காணேனே!
எங்கும் பராசக்தி எல்லாம் ஆன ஒத்தி.
அன்னங்கள் அழுமோ ஆண் மயிலைத் தேடி ?
ஏழைக் கேது காலம்?
எழுதாத ஓலை சுருளாமோ பொண்ணே?
பசுவும் கிழம் ஆனால் பால்குணமும் போமோ?
பாம்பும் கிழம் ஆனால் பல் விஷமும் போமோ?
பார்ப்பான் கிழமானால் பஞ்சாங்கம் பொய்யாமோ?
என்னைக் கிருந்தாலும் இரவல் இந்தக் காயம்.
எனக்குத் தெய்வம் நீரே! உமக் கடிமை நானே.
இடுவஞ்சனை சூது இரண்டும் உதவாது.
அம்பிலே சமர்த்தன் அருச்சுனன் ஒருவன்.
ஆறுமுகம் என்றால் தீரும்வினை எல்லாம்.
ஏழை எளியோரைத் தாழச் சொல்லலாமோ ?
எழுதிப்படி தம்பி, கவனி பாடம் எல்லாம்.
இந்தப் பாடல்களில் பல அடிகள் தொடர்பும் பொருளும் இல்லாமல் இருந்தாலும் பழமையைக் காக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் அப்படியே வெளியிடுகிறேன்.
நாடோடிப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சியை இப்போது பலர் செய்கிறார்கள். பல நூல்கள் வெளியாகியுள்ளன. பழங்காலத்தில் 'பாலிகா பூஷணம்' என்ற நூல் ஒன்று உண்டு. அதில் பல நாடோடிப் பாடல்கள் இருந்தன.
பெரும்பாலும் பெண்களே ஏற்றப்பாட்டு அல்லாத பிற பாடல்களைப் பாடுகிறார்கள். ஏற்றப்பாட்டு ஆண்கள் பாடுவது. ஏற்றத்தை இயக்குகிறவர்கள் ஆண்கள் தாமே?
ஏற்றப்பாட்டைப் போலப் பிற நாடோடிப் பாடல்களையும் தொகுத்து வைத்திருக்கிறேன். நாற்பதாண்டுக் காலமாகத் தொகுத்தவை இவை.
இலக்கியப் புலவர்கள் பாட்டிற் காணும் இன்பம் வேறு; நாடோடிப் பாடல்களிற் காணும் இயற்கைச் சுவை வேறு. மனிதனுடைய நற்குணங்களும் தீய குணங்களும் இவற்றில் வரும். ஒரு சாதியை மற்றொரு சாதியினர் இழிவாகச் சொல்வதும் உண்டு. இவை பழம்பாடல்கள் என்று எண்ணி அவர்கள் அந்த இகழ்ச்சியைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.
இப்போதெல்லாம் சினிமா வந்த பிறகு இத்தகைய பாடல்களைப் பாடுவோர் குறைந்துவிட்டனர். இன்னும்
பல ஆண்டுகள் போனால் இவை அடியோடு மறந்து போகும். ஆதலால் இவற்றை இந்தமட்டும் வெளியிட்டு வைக்கலாம் என்று எண்ணினேன்.
பாமரரும் புலவர்களும் இவற்றில் இன்பம் காணலாம். காட்டுப் பூக்களைப் போலவும், மலையருவியைப் போலவும், நாகரிகம் தெரியாமல் இயற்கையோடு ஒன்றி வாழும் வஞ்சகமற்ற மக்களின் பேச்சைப் போலவும், குழந்தைகள் தொடர்பின்றிப் பேசுவதைப் போலவும் உள்ளவை இவை.
இவற்றைப் படித்துச் சுவைகாணும் அன்பர்களுக்கும் இவற்றை அங்கங்கே போன இடங்களில் சொன்னவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
| ‘காந்தமலை’, மந்தைவெளி |
கி.வா. ஜகந்நாதன் | ||||
| 10—05—1983 | |||||
உள்ளுறை
பக்கம்
| | 1 |
| | 20 |
| | 30 |
| | 40 |
| | 44 |
| | 58 |
| | 62-71 |
| | 62 |
| | 62 |
| | 62 |
| | 63 |
| | 64 |
| | 64 |
| | 65 |
| | 66 |
| | 66 |
| | 67 |
| | 67 |
| | 68 |
| | 68 |
| | 68 |
| | 72 |
| | 76 |
| | 80 |
| | 81 |
| | 87 |
| | 88 |
| | 91 |
| | 92 |
| | 95 |
| | 102 |
| | 106 |
| | 107 |
| | 108 |
| | 111 |
