உள்ளடக்கத்துக்குச் செல்

ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/009

விக்கிமூலம் இலிருந்து

உழவுப் பாட்டு

1. பத்தேரு கட்டியல்லோ ஏலேலோ
பத்தேரு பத்தாதுன்னு பக்கத்திலே ஆனைகட்டி
ஆனைகட்டிச் சேறடிக்கும் அதிகாரி பண்ணைஇது.

2. எட்டேரு கட்டியல்லோ இடதுபுறம் ஆனைகட்டி
ஆனைகட்டிப் போரடிக்கும் அதிகாரி பண்ணைஇது.

3. குடத்திலே பாலுகொண்டு கூடையிலே சோறு
கொண்டு, பசியாத்தி வேலைகொள்ளும் பாக்கியவான்
பண்ணைஇது

4. காணிக் கரையோரம் காத்திருக்கும் பிள்ளையாரே,
காணிநட்டு நான்போறேன்; கரையேறும் பிள்ளையாரே.

5. எல்லைக் கரையோரம் இருப்பிருக்கும் பிள்ளையாரே,
எல்லைநட்டு நான்போறேன்; எழுந்துவாரும் பிள்ளையாரே!