உள்ளடக்கத்துக்குச் செல்

ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/035

விக்கிமூலம் இலிருந்து

வண்ணான் பாட்டு

ஆனைக் கல்லு ஓரத்திலே
             ஆள்மட்டுந் தண்ணியிலே

நீலக் கல்லுப் பாறை மேலே
             நின்னடிக்கும் சின்ன வண்ணான்

நான்போக நேரம் ஆச்சு;
             என்துகிலைத் தாரு மோடா;

போனாலும் போவே புள்ளே;
             போவதற்கு முன்னே கொஞ்சம்

வெள்ளாவி அடுப்புக்கு
             விறகெடுத்துப் போடுபுள்ளே.