ஐங்குறுநூறு 101-110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இவற்றைப் பாடிய புலவர் அம்மூவனார். இவை தாய்க்கு உரைத்த பத்து என்னும் தலைப்பின் கீழ் உள்ளன.

  • இவை அனைத்தும் ஆசிரிப்பாவால் ஆனவை. இவற்றில் 101, 110 எண்ணுள்ள பாடல்கள் 5 அடிகள் கொண்டவை. ஏனையவை நான்கடிப் பாடல்கள்.
  • எல்லாப் பாடல்களும் 'அன்னை வாழி வேண்டு அன்னை' என்று தொடங்குகின்றன. தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள வந்து நிற்பதைத் தோழி செவிலித் தாய்க்குக் காட்டிச் சொல்வதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.
  • வேண்டு - தன்மை ஒருமை. வேண்டுகிறேன் என்பது அதன் பொருள்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

101[தொகு]

அதோ பார்! அடும்பு, நெய்தல் பூக்களின் மேல் ஏறிக் கொண்கன் தேர் வந்துகொண்டிருக்கிறது. (கௌவை பேசிய ஊர் வாயை ஏறி மிதிக்கிறது என்பது உள்ளுறை உவமம்)

  • கொண்கன் (பழந்தமிழ்) = பெண்ணைக் கொள்ள வந்த மணமகன்

102[தொகு]

அவர் தேர்மணி கடலில் மேயும் பறவைகளைப் போல ஒலிக்கிறது.

103[தொகு]

திருமண நிகழ்ச்சியின்போது சொன்னது
கொண்கன் புன்னையும் ஞாழலும் பூக்கும் துறையின் தலைவன். அவனுக்காகவே இவளது மா நிற அழகு பூத்திருக்கிறது.

104[தொகு]

பிள்ளைப் பேற்றுக்குப் பின் கொண்டவன் வீட்டுக்குச் சென்றுவந்து கூறியது
தம் வீட்டுக்கு எல்லாரும் தூங்கும்போது வந்த அவன் தன் ஊரில் பெருஞ் செல்வன்.

105[தொகு]

அவளுக்கு விலையாக(பரிசமாக) முத்துச் செல்வத்தோடு வந்த அவனைப் பார்த்ததும் அவள் நெற்றியிலிருந்த தேமல் முகப்பருவாக மாறியுள்ளதைக் காட்டிக் கூறுவது

  • பசப்பு = தேமல்
  • பொன் = முகத்தில் தோன்றும் கதிர்ப்புக் கட்டி, முகப்பரு

அவன் கடல் மணல் கூட முத்துப் போல் இமைக்கும். அவன் முத்துடன் வந்ததும் இவள் பசப்புக் கூட முத்தாக மாறிவிட்டது. (மணல் முத்தாகத் தோன்றுவது போல் பசப்பு பொன்னாக மாறியுள்ளது என்பது உள்ளுறை உவமம்)

106[தொகு]

அறத்தொடு நிற்கும் தோழி கூறியது
அவர் நாட்டில் ஆண்அன்னம் சங்கைத் தன் பெண்அன்னம் என நினைத்து மிதிக்கும். அதுபோல இவள் மார்பகம் அவர் மார்பால் நசுங்கிப்போனதைப் பார்.

107[தொகு]

தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்
கடலலை ஒலியை அவர் தேர் ஒலி என்று எண்ணி இவள் தூங்காமல் இருப்பதைப் பார்.

108[தொகு]

அவன் திருமணம் செய்துகொள்வானோ, மாட்டானோ என்று ஐயுற்ற செவிலிக்குத் தோழி சொல்லல்
அவன் கழியில் முண்டகப் பூ மணக்கும். என் தோளில் அவன் தோளும், அவன் தோளில் என் தோளும் மணப்பதைப் பார். வேறு யார் அவன் தோளை மணப்பர்?

109[தொகு]

அவன் கைவிட்டுவிட்டான் போலும் என ஐயுற்ற செவிலிக்குத் தோழி சொல்லல்
நெய்தல் பூ நீரின் மேல் பூக்கிறது. அதன் தூம்பு நிலத்தில் பற்றிக்கொண்டுள்ளது. அதுபோல அவன் நினைவு என்னைப் பற்றிக்கொண்டிருக்கும். அவன் என்னைத் தழுவிய நேரம் ஒவ்வொரு நாளும் வருகிறது. அதுபோல அவன் என்னை நினைப்பான்.

110[தொகு]

  • நொதுமலர் = தூரத்து உறவினர்
  • ஐ = தலைவன்
  • பால் = விதி

நொதுமலர் பெண் கேட்கின்றனர். இவள் புன்னை மரம் பொன்னிறம் கொண்டு விரியும் ஊரனை 'என் ஐ' என்கின்றாள். இவள் பால் அவளது ஊரனை விட்டுவிட்டு நொதுமலரிடல் சேர்த்துவிடுமோ? - என்று தோழி செவலியிடம் அறத்தொடு நிற்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஐங்குறுநூறு_101-110&oldid=9110" இருந்து மீள்விக்கப்பட்டது