உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு சத்தியத்தின் அழுகை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

ஒரு சத்தியத்தின் அழுகை

சு. சமுத்திரம்

மணிவாசகர் பதிப்பகம்
8/7 சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600108.

முதற் பதிப்பு : 1981
இரண்டாம் பதிப்பு : ஆகஸ்டு 1997
உரிமை : ஆசிரியர்க்கு
விலை ரூ. 15.00

பதிப்பாசிரியர்
டாக்டர் ச.மெய்யப்பன்

டாக்டர் ச.மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்; திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம் தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர்; தமிழகப் புலவர் குழுவின் துணைத்தலைவர்; பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். இவர், தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்; பதினாறு நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய ‘தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர், துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார், ‘தமிழவேள்’ என்னும் விருதினை வழங்கியுள்ளார். குளித்தலை கா.சு. பிள்ளை இலக்கியக்குழு, ‘தமிழ் நெறிக் காவலர்’ என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது. பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.

கிடைக்குமிடம்:
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் – 608 001.
8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108.
28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை – 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் – 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி – 620 002.



தொலைபேசி


சிதம்பரம் : 23069
கோயமுத்தூர் : 397155


சென்னை : 561039
மதுரை : 622853

திருச்சி : 706450

ஒளி அச்சு : லட்சுமி லேசர், சென்னை – 600 108.
அச்சிட்டோர் : பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை – 600 013.

பதிப்புரை

பதிப்புச்செம்மல் முனைவர் ச. மெய்யப்பன்

இலக்கிய நூல்கள் பல வெளியிட்டுச் சிறந்து விளங்கும் மணிவாசகர் பதிப்பகம், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புதினம், சிறுகதை ஆகியவற்றையும் வெளியிட்டிருக்கிறது. நண்பர் சு. சமுத்திரம் அவர்களின் ஏழு புதினங்களையும், நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் இதுவரை பதிப்பகம் வெளியிட்டிருப்பதில் பெருமை கொள்கிறது. அந்த நான்கு சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான ‘ஒரு சத்தியத்தின் அழுகை’ இரண்டாம் பதிப்பு, பதிப்பகத்தின் வெள்ளி விழா ஆண்டில் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

சிந்தனையாளர் சமுத்திரம் அவர்கள் அண்மைக் காலத்தில் புகழ் பெற்றுவரும் எழுத்தாளர். அவர் கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கதைகள் அல்ல. இவருடைய பல கதைகள் “ஆண்டின் சிறந்த கதை” எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. “திறமையான புலமையெனில் பிற நாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கருத்துக்கேற்ப இவரது பல கதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற சிறப்பினை உடையன.

தலைசிறந்த கதைகளைப் படைத்துவரும் சமுத்திரத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. பெயருக்கேற்ப சமுத்திரத்தின் கதைகள் ஆழம் காண முடியாத அழகினை உடையவை. தமிழுக்கு இவர் கதைகள் ஒரு சமுத்திரம்–கதைக் கடல்.

கதையினை வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியர் அவர்களுக்கும், நல்ல நூல்களை வாங்கி ஆதரிக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒரு_சத்தியத்தின்_அழுகை&oldid=1864585" இலிருந்து மீள்விக்கப்பட்டது