கணினி களஞ்சியப் பேரகராதி-1./P

விக்கிமூலம் இலிருந்து
P

PABx : பிஏபிஎக்ஸ் : "தனியார் தானியக்கக் கிளை இணைப்பகம்"என்று பொருள்படும்“Private Automated Branch Exchange"என்பதன் குறும்பெயர்

pack : திரட்டிக் கட்டு;பொதி : தரவுகளின் பல்வேறு குறுகிய அலகுகளை தனியொரு சேமிப்புச் சிற்றத்தினுள் செறிவாகத் திரட்டி வைத்தல். இதிலுள்ள தனித்தனி அலகுகளைப் பின்னர் மீட்டுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டு : இரண்டு 4 துண்மிக்கு இரும எண் குறியீடிட்ட பதின்ம (BCD) எண்களை ஒரே 8 துண்மிக்குச் சேமிப்பி அமைவிடத்தில் சேமித்து வைத்தல். இது"கட்டவிழ்த்தல்" (unpack) என்பதற்கு மாறானது.

package : திரள் தொகுதி;பொதிவு;தொகுதி;பொதி;தொகுப்பு : ஒன்றுக்கு மேற்பட்ட வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படத்தக்க செயல் முறை அல்லது செயல்முறைகளின் தொகுதி.

package, application : பயன் பாட்டுத் தொகுப்பு.

packaged software : திரள் தொகுதி மென்பொருள்;பொதி மென்பொருள் : ஒரு வன்பொருள் உற்பத்தியாளரினால் அல்லது ஒரு வன்பொருள் நிறுவனத்தினால் ஒர் உடன் பயன் தொகுதியாக விற்பனை செய்யப்படும் மென்பொருள். இதில், செயல்முறைகள், தொடர் வரிசை வரைபடங்கள் போன்ற ஆவணங்கள், பயனாளர் கையேடுகள், பரிசோதனை தரவுகள் அடங்கியிருக்கும். இவை வாடிக்கையாளரின் கணினியில் செயல்முறை பொருத்தப்பட்ட பிறகு, அது சரிவர செயற்படுவதற்கு உதவி புரிகிறது.

packed binary : இரும எண் தொகுதி.

packed decimal : பொதிந்த பதின்மம் : இரண்டு பதின்ம எண்களை ஒரு எட்டியலில் வைக்கக்கூடிய சேமிப்பு முறை. ஒவ்வொரு எண்ணும் நான்கு துண்மிகளில் இருக்கும். குறைந்த முக்கியத்துவ எட்டியலில் இந்தக் குறியீடு நான்கு துண்மிகளைப் பிடித்திருக்கும்.

packet : பொதிவு : ;பொட்டலம் : தரவுகளை அனுப்புவதற்கான தரவு பொதிவு. வாலாயம், முகவரி, பிழைக்கட்டுப்பாடு போன்ற கட்டுப்பாட்டு செய்திகளையும், தரவுகளையும் இது உள்ளடக்கியிருக்கும்.

packet assembler/disassembler : பொட்டலச் சேர்ப்பி/பிரிப்பி;பொதிச் சேர்ப்பி/பிரிப்பி : ஒரு பொட்டல இணைப்பகப் பிணையத்துக்கும், பொட்டல இணைப்பகமல்லாக் கருவிக்கும் இடையிலான ஒர் இடைமுகம்.

packet driver : பொட்டல இயக்கி;பொதி இயக்கி.

packet filtering : பொட்டல வடிகட்டல்;பொதி வடிகட்டல் : ஐபீ முகவரிகளின் அடிப்படையிலான பிணைய அணுகலைக் கட்டுப்படுத்தும் செயல்பாடு. பொதுவாக, தீச்சுவர் (firewall) அமைப்புகள் வடிகட்டிகளைக் கொண்டுள்ளன. பயனாளர்கள் ஒரு குறும்பரப்புப் பிணையத்துள் நுழையவோ வெளியேறவோ அனுமதி அளிக்கும் அல்லது மறுக்கும் பணியை இவ்வடிகட்டிகள் செய்கின்றன. மின்னஞ்சல் போன்ற தரவுப்பொட்டலங் களை அவை அனுப்பப்பட்ட இடத்தின் அடிப்படையில் ஏற்கவோ, புறக்கணிக்கவோ பொட்டல வடிகட்டல்முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனியார் பிணையத்தின் பாதுகாப்பு இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

packetized voice : பொதியப்பட்ட குரல் : நடப்பு நேர குரலை பொதி நிலை மாற்று கட்டமைப்பில் அனுப்புதல்.

packing : பொதிவாக்கம்;பொதித்தல் : தனியொரு சேமிப்பாக எட்டியலில் இரு எண்களைச் சேமித்து வைக்கும் செய்முறை.

packing density : பொதிவாக்க அடர்த்தி;பொதியடர்த்தி : பரப்பிடத்தின் ஒர் அலகில் அல்லது நீளத்தில் அடக்கி வைக்கப்படும் பயனுள்ள சேமிப்புச் சிற்றங்களின் எண்ணிக்கை. இது, பதிவாக்க அடர்த்தி என்றும் அழைக்கப் படும். எடுத்துக்காட்டு : ஒர் அங்குலத்திலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை.

packet lossage : பொதிவு இழப்பு : ஒரு ஏற்புடைய நேரத்திற்குள் கிளம்பிய இடத்திலிருந்து போய்ச் சேரவேண்டிய இடத்திற்குத் தரவுகள் போய்ச் சேராத நிலை ஒரு கட்டமைப் பில் தரவுகளுக்கு ஏற்படுதல். பாக்கெட்டுகள் தொலைந்து போனால் அவற்றை மீண்டும் அனுப்ப வேண்டும். இதனால் தரவுத் தொடர்பு தாமதமாகிறது.

packet sniffing : பொதி முகர்தல் : ஒரு கட்டமைப்பில் உங்களுக்காக இல்லாத பொதிகளைப் படித்தல். ஈத்தர்நெட் புரோட்டோகால் வேலை களினால் உங்கள் எந்திரத்தை பிறருக்கான பொதியை கவனிக்குமாறும் அதே குறும்பரப்புக் கட்டமைப்பில் உள்ள பிற கணினிகளைப் பார்க்குமாறும் அமைக்கலாம். இதன் மூலம்"in the clear"என்ற முறையில் அவர்கள் அனுப்புவதை கவனிக்கலாம். (அதாவது ஒரு பொதி முகரும் நிரல் தொடர் மற்றும் in the clear இல் பயனாளர் அனுப்பும் பெயர் மற்றும் அனுமதிச் சொல்லைக் கவனிக்கலாம்).

packet switching : பொதி நிலை மாற்று : ஒரு தகவல் அனுப்பும் செயல்முறை. பொதியை அனுப்பும் சமயத்தில் மட்டுமே அந்த வழித்தடம் அடைபட்டிருப்பது போன்று முகவரியிடப்பட்ட பொதிகளை இது அனுப்புகிறது.

PacKIT : பேக்கிட் : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் பயன்படுத்தப் படும் ஒரு கோப்பு வடிவாக்கம். மேக் (mac) கோப்புகளின் தொகுதிகளைக் குறிக்கிறது. பெரும்பாலும் அக்கோப்புகள்-ஹஃப் மேன் முறையில் இறுக்கிச் சுருக்கப்பட்டிருக்கும்.

pad : திண்டு : அட்டை மேடை : 1. ஒர் அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகையில் அமைப்பாக வரித்தகடுகளைப் பற்றவைப்பதற்கான ஒர் இணைப்பினை ஏற்படுத்துகிற தகடாக்கிய செப்புப் பரப்பு. அதாவது அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாறிச் செல்வதற்கான செப்புவழி. 2. ஒரு தரவு புலத்தை வெற்றிட அச்செழுத்துகளால் நிரப்புதல்.

pad character : திண்டு எழுத்து : ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இடைத்தடுப்பு எழுத்து.

padding : திண்டாக்கம் : ஒரு குறிப்பிட்ட நீளத் தகவல் பாளத்தினை போலி எழுத்துகள், சொற்கள், பதிவுகள், ஆகியவற்றினால் நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் உத்தி.

paddle : துடுப்பு : மத்து : ஒரு காட்சி முனையச் சறுக்குச் சட்டத்தை நகரும்படி செய்வதற்காகக் கையாளப்படும் சாதனம். துடுப்பிலுள்ள ஒரு சுழல்
துடுப்பு

வட்டினைச் சுழற்றுவதன் மூலம் சறுக்குச் சட்டத்தினை மேலும் கீழும் இடமும் வலமும் நகர்த்தலாம். இது கணிணியுடன் ஒரு கம்பிவடம் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இது கணிணி வரைகலைகளிலும் ஒளிப்பேழை விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

page : பக்கம் : 1. ஒரு செயல் முறையின் அல்லது தகவலின் கூறு. இது பொதுவாக, குறிப்பிட்ட நீளமுடையதாக இருக்கும். இது ஒரு குறிப்பிட்ட முகவரியைக் கொண்டிருக்கும். எனினும், இதனைக் கணினியின் உள்முகச் சேமிப்பகத்தின் எந்தப் பகுதியிலும் இருத்தி வைக்கலாம். 2. திரையில் ஒரே சமயத்தில் காட்சியாகக் காட்டப்படும் வாசகம் அல்லது வரைகலை.

page break : பக்கம் நிறுத்தல் : மிகப் பல மென்பொருள் பயன்பாடுகளில் உள்ள ஒரு தன்மை. இதில் குறிப்பிடப்பட்ட பக்க (காகித) நீளத்திற்கு ஏற்ற வகையில் சொற்கள் கட்டங்களாக அனுப்பப்படும். அச்சிடுதலில் பக்கத்தின் இறுதியைக் குறிப்பிடும் குறியீடு. வன்பக்க நிறுத்தத்தை பயனாளர் நுழைத்தால் பக்கமானது அந்த இடத்தில் நிறுத்தப்படும். அதாவது அந்தக் கட்டுரையின் இறுதியில் மென்பக்க நிறுத்தத்தை சொல்செயலாக்கம் அல்லது அறிக்கை நிரல் தொடரில் நடப்பு அமைப்புகளுக்கேற்ப உருவாக்கப்படும். மென்பக்க நிறுத்தங்கள் தரவு சேர்க்கப்படும் போதோ அல்லது பக்க நீளம் மாறும் போதோ மாறக்கூடியது.

page composition programme : பக்க அமைப்பு செயல்முறை;பக்க அமைவு நிரல் தொடர் : தொழில் முறையாகத் தோன்றும் ஆவணங்களை உருவாக்கும் நிரல்தொடர். டீ. டீ. பி. நிரல் தொடர் என்றும் அழைக்கப்படும்.

page counter : பக்க எண்ணி : பக்க எண்களைக் கூட்டி ஒவ்வொரு பக்கத்தின் மேற்பகுதியிலும் பக்க எண்ணை அச்சிடும் ஒரு எண் மாறி.

page description language : பக்க விளக்க மொழி : அச்சக வெளியீட்டை வரையறை செய்யும் உயர்நிலை மொழி. பக்க விளக்க மொழியில் ஒரு பயன்பாடானது வெளியீட்டை உருவாக்கினால், அந்த வெளியீடு அதனை ஆதரிக்கும் எந்த அச்சுப்பொறியிலும் அச்சிடப்படும். எழுத்து மற்றும் வரை கலை உருவாககங்களை பயனாளர் கணினியில் செய்வதற்குப் பதிலாக அச்சுப்பொறியே செய்து கொள்ளும்.

paged memory management unit : பக்க நினைவக மேலாண்மை அகம்;பக்க நினைவக மேலாண்மை அலகு : பல்வேறு மென்பொருள் பயன்பாடுகள் அல்லது மெய்நிகர் நினைவக இயக்க முறைமைகள் பயன்படுத்துகின்ற நினைவகப் பகுதியை அணுகுதல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்ற பணிகளை நிறைவேற்றுகின்ற ஒரு மென்பொருள் பாகம்.

page down;கீழ்ப்பக்கம்;இறங்கு பக்கம்.

page down key : கீழ்ப்பக்க விசை : பெரும்பாலான கணினி விசைப் பலகைகளில் காணப்படும் அடிப்படையான விசை. PgDn எனக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். பெரும் பாலானவற்றில் இதை அழுத்தியதும் காட்டி (cursor) ஆவணத்தின் அடுத்த பக்கத்தின் தொடக்கத்தில் நிற்கும். அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிகளைக் கடந்து நிற்கும்.

page, end : முடிவுப் பக்கம்.

page fault : பக்கக் கோளாறு : மாய நினைவகக் குறுக்கீடு. அடுத்த நிரல் அல்லது தரவு நினைவகத்தில் இல்லையென்றால் வட்டிலிருந்து தேவையான பக்கத்தை இது படித்தெடுக்கிறது.

page footer : பக்க முடிப்பு.

page footer key : பக்க முடிப்பு விசை.

page frame : பக்க அமைவிடம்;பக்கச் சட்டம் : ஆணைகளின் அல்லது தரவுகளின் ஒரு பக்கத்தை (பொதுவாக 2k அல்லது 4k சொற்கள்) சேமித்து வைக்கக் கூடிய கணினியின் பின்புலச் சேமிப்பகத்தின் அமைவிடம்.

page header : பக்கத் தலைப்பு : ஒவ்வொரு பக்கத்தின் மேற் பகுதியில் அச்சிடப்படும் பொதுவான சொற்தொகுதி. அதில் பொதுவாகப் பக்க எண்ணும் ஒவ்வொரு பத்தியின் தலைப்புகளும் இருக்கும்.

page header band : பக்கத் தலைப்புப் பட்டை.

page-image buffer : பக்க படிம இடையகம் : பக்க அச்சுப் பொறியில் பயன்படுத்தப்படும் நினைவகம். ஒரு பக்கத்திலுள்ள பிட்மேப் படிமத்தை தாங்கியிருக்கும். அச்சுப்பொறியிலுள்ள ராஸ்டர் படிமச்செயலி பக்கத்தை வடிவமைக்கும் அச்சுப்பொறி அப்பக்கத்தை அச்சிடும்.

page-image file : பக்க-படிமக் கோப்பு : ஒரு பக்கத்தை அல்லது திரைப் படிமத்தை அச்சுப்பொறியோ அல்லது பிறக்காட்சிச் சாதனங்களோ உரு வாக்குவதற்குத் தேவையான குறிமுறைகளைக் கொண்டுள்ள ஒரு கோப்பு.

page in : சேமிப்பக மாற்றம்;பக்கம் புகுத்தல் : வட்டுச் சேமிப்பகத்திலிருந்து முதன்மைச் சேமிப்பகத்து செயல்முறைகளை அல்லது தரவுகளைப் பரிமாற்றம் செய்வதற்கான செய்முறை.

page layout : பக்க உருவரை.

page lay out programme : உருவரை நிரலாக்கத் தொடர் : மேசை மேல் பதிப்பக முறையாக உள்ள ஒரு பயன்பாட்டு நிரல் தொடர். இது பலவகை யான கோப்புகளில் இருந்து சொற்பகுதி மற்றும் வரைகலைகளை சேர்ப்பிக்கிறது. சரியான இடத்தில் வைத்தல், அளவெடுத்தல், கூட்டல் மட்டும் திரையில் குறிப்பிடப்படும் பக்க வடிவமைப்பிற்கேற்ப நறுக்குதல் போன்றவற்றை செய்யும். புகழ்பெற்ற பக்க வடிவமைப்பு நிரல் தொடர்களாக பேஜ்மேக்கர் குவார்க் எக்ஸ்பிரஸ் மற்றும் வென்ச்சுரா பப்ளிஷர்ஸ் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

page layout view button : பக்க உருவரைக் காட்சிப் பொத்தான்.

pagemaker : பேஜ்மேக்கர் : ஆல்டஸ் கார்ப்பரேஷன் பீ. சி மற்றும் மெக்கின்டோஷுக்காக உருவாக்கிய முழு தன்மைகள் கொண்ட மேசைமேல் பதிப்பக நிரல் தொடர். மெக்குக்காக (Mac) 1985 இல் அறிமுகப் படுத்தப்பட்ட இதுதான் மேசை மேல் பதிப்பக முறைக்கு தர நிருணயத்தை அமைத்தது. சொல்லப்போனால் ஆல்டஸ் நிறுவனத் தலைவரான பால் பிரெய்னியார்ட் என்பவர்தான் மேசைமேல் பதிப்பகம் (Desk Top Publishing) என்ற சொல் தொடரை உருவாக்கினார். இதன் பீ. சி பதிவு 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

page makeup : பக்க உருவாக்கம் : ஒரு அச்சிடப்படும் பக்கத்தை அமைத்தல் (வடிவம் ஆக்கல்). இதில் தலைப்புகளை அமைத்தல், அடிப்பகுதிகள், பத்திகள், பக்க எண்கள், வரைகலை, விதிகள் மற்றும் எல்லைக் கோடுகள் ஆகியவற்றை வடிவமைப்பது அடங்கியுள்ளது.

page mode memory : பக்கமுறை நினைவகம் : பொதுவான மாறும் ரேம் சிப்பு வடிவமைப்பு. நினைவக துண்மிகள் வரிசை மற்றும் பத்தி ஒருங்கிணைப்புகளால் அணுகப்படும். இல்லையென்றால், ஒவ்வொரு பக்கமுறையும் அணுக தேர்ந்தெடுக்கப்படும் வரிகளில் உள்ள வரிசைகளை யும், பத்திகளையும் நகர்த்தியாக வேண்டும். பக்க முறையில் ஒரு வரிசையில் உள்ள துண்மிகள் அனைத்தும் ஒரேஒரு முறை தேர்ந் தெடுக்கப்படுவதால், வேகமாக அணுக முடியும்.

page number : பக்க எண்.

page orientation : பக்க திசையமைவு : நீள்மை ஆண்மை இரண்டில் ஒன்று.

page out : வட்டு மாற்றம்;பக்கம் வெளியேற்றம் : கணினியின் முதன்மை நினைவகத்திலிருந்து வட்டுச் சேமிப்பிக்குச் செயல்முறைகளை அல்லது தரவுகளை மாற்றும் செய்முறை.

page preview : பக்க முங்காட்சி : சொல் செயலாக்க நிரல் தொடர்கள் மற்றும் பக்க வடிவமைப்புகள் பலவற்றில் காணப்படும் முறை. அச்சிடப்படும்போது ஒரு பக்கம் எவ்வாறு தோன்றும் என்று முழுப்பக்க அளவில் முன்னதாகவே காணலாம். இதில் தலைப்புகள், பகுதிகள் மற்றும் ஒரங்கள் போன்ற சேரும் தன்மைகளும் காணப்படும்.

page printer : பக்க அச்சடிப்பி;பக்க அச்சுப்பொறி : எழுத்து வாசகம் அடங்கிய ஒரு முழுப் பக்கத்தையும் அச்சடிக்கும் அச்சடிப்பி. இது, நிமிடத்திற்கு 2, 000 வரிகளை அச்சடிக்கக் கூடியது.

page reader : பக்க படிப்பி : தகவல்களின் பல வரிகளை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒளி யியல் நுண்ணாய்வுச் சாதனம். இதில் நுண்ணாய்வு முறையானது உட்பாட்டுத் தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைக் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாட்டுக் குறியீடு மூலம் தீர்மானிக்கப் படுகிறது.

page recognition : பக்கம் கண்டறிதல் : கணினியில் ஸ்கேன் செய்யப் படும் அச்சிட்ட பக்கத்தில் உள்ள உள்ளடக்கங்களைக் கண்டறியக்கூடிய மென்பொருள். ஒளி எழுத்து கண்டறிதலைப் பயன்படுத்தி அச்சிடப்படும் சொற்களை கணினி சொற்பகுதியாக மாற்றும். ஆனால் அதேவேளையில் ஒரு பக்கத்தில் உள்ள படங்கள் மற்றும் தலைப்புகளில் இருந்து சொற்பகுதி தானாகவே வேறு படுத்தப்பட்டு அறியப்படும்.

page set-up : பக்க அமைப்பு : காகிதத்தில் சொற்பகுதி வரை படங்கள் எவ்வாறு அளிக்கப்படுகின்றது என்பதையே இது குறிப்பிடுகிறது. பக்க அமைப் பில் இடம் பெறுவனவாக ஒரங்கள், தொடர் தலைப்புகள், பக்க எண்ண மைத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

page setup/page preview : பக்க அமைவு/பக்க முன்காட்சி.

page size : பக்க அளவு;தாள் உருவளவு.

page skip : பக்கம் விடுதல்;பக்கத் தாவல் : நடப்புப் பக்கத்தின் எஞ்சிய பகுதியை தள்ளி விட்டு அடுத்த பக்கத்தின் உச்சிப்பகுதிக்கு அச்சடிப்பி நகர்ந்து செல்லும்படி செய்யக் கூடிய கட்டுப்பாட்டு எழுத்து.

pages per minute : பக்கங்கள் ஒரு நிமிடத்தில் : சுருக்கமாக பீ. பீ. எம் (PPM அல்லது ppm) எனக் குறிக்கப்படும். ஒர் அச்சுப் பொறியின் வெளியீட்டுச் செயல்திறனைக் குறிக்கும் அளவீடு. ஒரு நிமிடத்தில் எத்தனை பக்கங்கள் அச்சிடும் என்பதைக் குறிக்கிறது. இந்த அளவீட்டை அச்சுப்பொறியைத் தயாரிக்கும் நிறுவனங்களே குறிப்பிடுகின்றன. பக்கம் என்பது வழக்கமான சாதாரணமான (ஏ4) பக்கத்தைக் குறிக்கும். அச்சிடும் பக்கங்களில் அதிகப்படியான வரைகலைப் படங்களோ எழுத்துரு அமைப்புகளோ இருப்பின் அச்சிடும் வேகம் அச்சுப்பொறியில் குறிப்பிட்டுள்ள பீபீஎம் வேகத்தைவிட வெகுவாகக் குறைந்திருக்கும்.

page up : மேல் பக்கம்;ஏறு பக்கம்.

Page Up key : மேல் பக்க விசை : பெரும்பாலான கணினி விசைப் பலகைகளில் காணப்படும் அடிப்படையான விசை. PgUp எனக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். பெரும்பாலானவற்றில் இதை அழுத்தியும், காட்டி (cursor) ஆவணத்தின் முந்தைய பக்கத்தின் தொடக்கத்தில் நிற்கும் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிகளுக்கு முன்னால் சென்று நிற்கும்.

pagination : பக்க வரிசைப்பாடு;பக்கமாக்கல் : 1. ஒரு முழுப் பக்கத்தையும் வடிவமைக்கும் நோக்கத்திற்காக வரைகலைகளையும் அச்செழுத்துத் தொகுதிகளையும் மின்னணுவியல் முறையில் திறம்படக் கையாள்தல். 2. ஒர் அச்சிட்ட வாசகத்தைப் பக்கங்களுக்கு இணையான அலகுகளாகப் பகுத்தல். 3. பக்க எண் குறியீட்டு முறை.

paging : பக்கக் குறியீட்டு முறை;பக்கமாக்கம் : 1. இயல்புச் (முதன்மை) சேமிப்பகத்திலிருந்து உள்ளபடியான (துணை) சேமிப் பகத்துச் செயல் முறைகளை முன்னும் பின்னும் நகர்த்துவதற்கான உத்தி. 2. காட்சித்திரையில் காட்சியாக காட்டப்படும் பக்கத்திற்குப் பதிலாக அடுத்த அல்லது முந்திய பக்கத்தைக் காட்டுவதற்கான விசைப்பலகையிலுள்ள விசையின் செயற்பாடு.

paging memory : பக்கமாக்கும் நினைவகம்.

paging rate : பக்க குறியீட்டு வீதம்;பக்கமாக்க வீதம் : உள்ள படியான சேமிப்புப் பொறியமைவுகளில் ஒரு கால அலகின்போது நடைபெறும் சேமிப்பக மாற்றங்கள், வட்டு மாற்றங்கள் ஆகியவற்றின் சராசரி எண்ணிக்கை.

paint : படம்;வரைகலை : 1. கணினி வரைகலையில், திரையில் உண்மையாகவே ஒவியம் வரையப்படும். இதற்குப் பலகைக் குச்சி அல்லது சுட்டியைப் பயன்படுத்தி வண்ணபுருசுபோல இயக்கப்படும். 2. திரையில் ஏதாவது ஓரிடத்தில் தட்டச்சு செய்ததும் திரைவடிவம் ஏற்படுத்தல். திரையினை சொற் பகுதியில் வண்ணப்படுத்தல்.

paint brush : வண்ணத் தூரிகை : பல்வேறு கணினி வரைகலைப் பொறியமைவுகளில் பயனாளருக்குப் பலவகைத் துரிகை வடிவங்களை அளிக்க அமைந்துள்ள திறம்பாடு. காட்சித்திரையில் சுட்டியின் முள்ளை நகர்த்து வதன்மூலம் இது பயன்படுத்தப்படுகிறது.

painter : வரைகலைஞர்;ஒவியர். painting : வண்ணத்தீட்டல்;வண்ணப் பூச்சு : 1. ஒரு வரை கலை உட்பாட்டுச் சாதனத்தின் இயக்கப் பாதையினைக் காட்சியாகக் காட்டுதல். 2. கணினி வரைகலையில் தேர்ந்தெடுத்த பரப்பினை ஒரு திண்ணிய வண்ணத்தால் நிரப்புதல். 3. ஒரு காட்சித்திரையில் வரைகலைத் தரவுகளைக் காட்சியாகக் காட்டும் செய்முறை.

வண்ணப்படுத்தும் நிரல் தொடர்

paint programme : வண்ணப்படுத்தும் நிரல்தொடர் : வரை கலை பலகை அல்லது சுட்டியைப் பயன்படுத்தித் திரையில் ஒவியம் வரைவதுபோலச் செய்யும் வரைகலை நிரல் தொடர். ராஸ்டர் கிராஃபிக் உருவங்களை வண்ணப்படுத்தும் நிரல் தொடர் மூலம் உருவாக்கலாம்.

PAL : பிஏஎல் : "நிலை மாற்ற வரி" எனப் பொருள்படும்"Phase Alternation Line"என்ற ஆங்கிலச் சொல்லின் தலைப்பெழுத்துச் சுருக்கம். பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் வண்ணத் தொலைக் காட்சிப் பொறியமைவு.

palatino : வண்னத் தட்டு : பல போஸ்ட்ஸ்கிரிப்ட் லேசர் அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் உள்ள்மைந்த அச்செழுத்து.

palette : வண்ணத் தொகுதி;வண்னத் தட்டு : ஒரு கணினி வரைகலைப் பொறியமைவில் அமைந்திருக்கக்கூடிய வண்ணங்களின் தொகுதி.

palette code : வண்ணத் தட்டு குறியீடு : கிடைத்துள்ள வண்ணத்தட்டி லிருந்து குறிப்பிட்ட நிறத்துடன் தொடர்புள்ள ஒரு எண்.

palette register : வண்ணத் தட்டு பதிவேடு : ஈஜிஏ (EGA) அல்லது பிசிஜே ஆரில் உள்ள 16 பதிவேடுகளில் ஒன்று. காட்சி நினைவகத்தில் வருகின்ற நிறத்திற்குத் தொடர்பான நிறத்தைத் திரையில் காட்டுகின்ற பதிவேடு. palmtop : கையகக் கணினி;கையளவு : ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால். இயக்கக்கூடிய அளவு சிறியதாக உள்ள கணினி. கையளவு சிறப்பு விசைப் பலகைகள் அல்லது விசை அட்டைகள் அமைக்கப்பட்டு தரவு நுழைவு பயன்பாடுகள் செய்யப்படும். அல்லது குவெர்ட்டி (Qwerty) விசைப் பலகைகள் இருக்கும்.

PAM : பீஏஎம் : "துடிப்பு வீச்சு ஏற்ற இறக்கம்"என்று பொருள்படும்"Pulse Amplitude Modulation"என்ற ஆங்கிலச் சொல்லின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதில் துடிப்பு வீச்சு ஏற்ற இறக்கச் சகடத்தின் மூலம் ஏற்ற இறக்க அலை உண்டாக்கப்படுகிறது.

pan : இடவல நகர்வு : ஒரு ஆவணம் அல்லது விரிதாளின் ஒரு பக்கத்திலிருந்து வேறொருப் பக்கத்திற்கு பக்கவாட்டாக நகர்வது. திரையைவிட ஆவணம்/விரிதாள் கூடுதல் அகலமாக இருக்குமானால் இது மிகவும் பயனுள்ளதாகும்.

pane : சாளரப் பாளம், சாளரப் பிரிவு : தனியொரு சாளரத்தைப் பிரித்து உருவாக்கப்படும் பகுதிகள்.

panel : பலகைப் பாலம்.

panel, control : கட்டுப்பாட்டுப் பலகம்.

panning : பக்கவாட்டு நகர்வு;இட வல நகர்வு : ஒரு காட்சித் திரையின் குறுக்கே காட்சியாகக் காட்டப்படும் வரைகலை தரவுகளின் கிடைமட்ட நகர்வு.

PAP : பீஏபீ : 1. நுழைசொல் சான்றுறுதி நெறிமுறை என்று பொருள்படும் Password Authentication Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முனைக்குமுனை நெறிமுறையை (point-to-point protocol) பயன்படுத்தும் வழங்கனில் பயனாளர் நுழைய முயலும்போது அவருடைய அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான ஒரு வழிமுறை. இதை விடக் கண்டிப்பான சாப் (CHAP-Challenge Hand-Shake Authentication Protocol) நெறி முறை இல்லாதபோது பீஏபீ மிகவும் பயன்தரும். பயனாளர் பெயரையும் நுழைசொல்ல்லையும் மறையாக்கமின்றி வேறொரு நிரலுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் நேரும் போதும் இது பயன்படும். 2. அச்சுப்பொறி அணுகல் நெறிமுறை என்று பொருள்படும் (Printer Access Protocol) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயராகவும் கொள்ளலாம். ஆப்பிள்டாக் பிணையங்களில் கணினிகளுக்கும் அச்சுப்பொறிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பினை மேலாண்மை செய்யும் நெறிமுறை ஆகும்.

paper feed : காகித ஊட்டம்;தாள் ஊட்டம் : ஒர் அச்சடிப்பிக்குள் காகிதத்தைச் செலுத்தும் முறை.

paper jam : காகித அடைப்பு : அச்சுப்பொறி, தொலை நகல் அல்லது ஒளிநகல் பொறிகளில் காகிதம் மாட்டிக் கொள்ளுதல். காகித அடைப்பை தடுப்பது மற்றும் சமாளிப்பதுபற்றிய ஆலோசனை விளக்கக் கையேட்டில் பொதுவாக இருக்கும்.

paperless office : காகிதமற்ற அலுவலகம் : தாளிலா அலுவலகம் : காகிதமற்ற அலுவலகம் பற்றி நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதும் ஒரு கட்டுக் கதையாகவே உள்ளது. சில நிறுவனங் களில் காகிதப்பயன் குறைந்தாலும் பலவற்றில் உண்மையாகவே கூடியிருக்கிறது. மேலும் காகித ஆவணமே இப்போதும் பரிமாற்றங்கள்மூலம் நிலை நாட்டப்பட்டு உள்ளது. சமயத்தில் அதிக சேமிப்பும் துல்லியத் திரைகளும் உள்ள கையகக் கணினிகள் பயணம் செய்யும் போது காகிதத்திற்கு மாற்றாக உள்ளன. ஒளி இழை கட்டமைப்புகள், தரவு, படம், குரல் மற்றும் காட்சியை விரைவாக அனுப்ப உதவுகின்றன. வண்ண லேசர் அச்சுப்பொறிகள் எங்கும் பரவி உள்ளதால், எத்தகைய சிக்கலானதாக இருந் தாலும், ஆவணத்தை மீண்டும் உருவாக்குவது எளிதானதே.

paper-out sensor : காகித வெளி உணர் கருவி : பிளேட்டனுக்குப் பின்னால் உள்ள ஒரு சிறிய பொத்தான். காகிதத்துடன் அதன் தொடர்புவிட்டுப் போகும் போது உடனடியாக சைகை தருகிறது. இந்த சைகை பொதுவாக, அச்சுப்பொறியினை நிறுத்துகிறது.

paper source : தாள் வைப்பிடம்.

paper tape : காகித நாடா : தாள் நாடா : கணினிகளில் பயன்படுத்தப்படும் முதலாவது உட்பாட்டுச் சாதனம். இது தொலையச்சு (Telex) எந்திரங்களில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு தொடர்ச்சியான பட்டைக் காகிதம் ஆகும். இந்தப் பட்டைக் காகிதத்தின் அகலத்தின் குறுக்கே, குறித்துரைக் கப்பட்ட எண்ணிக்கையிலான வரிசைகளிலும் (chemicals), காகிதப் பட்டையின் நீளவாக்கில் பத்தி களிலும் (frames) வட்டத் துளைகளைத் இடுவதன் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வரிசையும் ஒர் எழுத்தினைப் பற்றி நிற்கின்றது. ஒருவரிசை பொதுவாக 8 அலை வரிசைகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். ஒரு தனிவகை விசையைப் பயன்படுத்தித் தரவுகள் துளையிடப்படுகின்றன. இவை எழுத்துப் படிப்பி உதவியால் படிக்கப்படுகின்றன.

paper tape code : காகித நாடாக் குறியீடு;தாள் நாடா குறி முறை : காகித நாடாவிலுள்ள துளைகளின் தோரணிகளை அவை குறிக்கும் ஆல்ஃபா எண்மான எழுத்துகளுடன் தொடர்பு படுத்தப் பயன்படுத்தப்படும் குறியீட்டு முறை.

paper tape punch : காகித நாடாத் துளையிடல் தாள் நாடா துளையிடல் : குறியீட்டு உணர்வு வெளிப்பாட்டுச் சாதனம். இது கணினிக் குறியீட்டினை காகித நாடாவில் ஒரு புறக்குறியீடாக மாற்றுகிறது.

paper tape reader : காகித நாடாப் படிப்பி, தாள் நாடா வாசிப்பி : துளையிட்ட காகிதச் சுருளிலுள்ள துவாரங்களை எந்திரத்தின் மூலம் செய்முறைப் படுத்தக்கூடிய வடிவில் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உட்பாட்டுச் சாதனம்.

paper tape verifier : காகித நாடா சரிபார்ப்பி;தாள்நாடா சரி பார்ப்புச் சாதனம்.

paper-white : தாள் வெண்மை : ஒற்றைநிற கணினித் திரையகத்தில் ஒருவகை. வெண்மைநிறப் பின்புலத்தில் கறுப்புநிற எழுத்துகளைக் கொண்டிருத்தல் இதன் இயல்பு. இத்தகைய திரையகங்கள், கணினிப் பதிப் பகம் மற்றும் சொல்செயலாக்கச் சூழல்களில் மிகவும் செல்வாக்குப் பெற்றவை. ஏனெனில், வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்துகள் அச்சிட்டது போன்ற ஒரு தோற்றத்தை இவை தருகின்றன.

paper-white monitor : தாள்-வெண்மைத் திரையகம் : அச்சிட்ட பக்கத்தை ஒத்திருக்கும், வெண்மைநிறப் பின்புலமும் கறுப்புநிற எழுத்துகளும் கொண்ட கணினித் திரையகம். சில உற்பத்தியாளர்கள் தாள்-வெண்மை என்பதை பாண்டுத் தாளில் இருப்பதுபோன்ற இழைக்கப்பட்ட வெண்ணிறப் பின்புலத்தைக் குறிக்கப் பயன் படுத்துகின்றனர்.

parabola : நீள்வட்ட வடிவம்;பர வளையம் : வட்டக் கூம்பின் ஒரு பகுதியை ஊடு பொருள்களில் ஒன்றுக்கு இணையாகவுள்ள சமதளத்தினால் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் வரைகலை வளைவு. ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்தும், ஒரு குறிப்பிட்ட காலக் கோட்டி லிருந்தும் சமதூரத்தில் இருந்து வரும் வகையில் நகர்ந்து செல்லும் ஒரு புள்ளியின் பாதை என்றும் இதனைக் கூறலாம்.

parabolic reflector : பரவளைய எதிரொளிர் : யு. எச். எஃப் பேண்டுக்கு மேல் இறுதியிலும், எஸ்எச்எஃப் பேண்டிலும் உள்ள அலைவரிசைகளை ஒளிக் கற்றைகள்போலவே நடத்தலாம். பரவளைய எதிரொளிர்வைப் பயன்படுத்தி தேடுஒளியை உருவாக்கும்போது சக்திமிக்க ஒளிக்கற்றை பரவளைய எதிரொளிர்வு உள்ள இடங்களில் விழுவதுபோல் இதை (தட்டு என்று சொல்லப்படுவது) யும் பயன்படுத்தி இணைக்கற்றையில் தொகுக்கப்பட்டுள்ள வானொலி சக்தியுடன்கூடிய அதிகத் திறன்மிக்க அலைவாங்கியை அளிக்க முடியும். தட்டு குறுக்களவு வீட்டுத் தொலைக்காட்சி வாங்கிக்கு 20 செ. மீ. முதலாக செயற்கைக் கோள்களின் தரை நிலையங்களுக்கு 30. மீ. வரை கொண்டிருக்கும்.

paradigm : கருத்தியல்;எடுத்துக் காட்டு;மேற்கோள், வாய்பாடு : ஒரு செயலாக்கத்துக்கோ அல்லது ஒரு முறைமைக்கோ மாதிரியத்தை வழங்கக்கூடிய ஒரு சரியான எடுத்துக்காட்டு அல்லது தோரணி.

paradise : பேரடைஸ் : வெஸ்டர்ன் டிஜிட்டல் கார்ப்பரேஷனின் பேரடைஸ் துணை நிறுவனம் உருவாக்கிய புகழ்பெற்ற காட்சி அட்டைகள்.

paradox : பேரடாக்ஸ் : போர் லாண்ட் நிறுவனத்திலிருந்து வரும் பீசிக்களுக்கான கட்டமைப்புக்குத் தயாராக உள்ள, தொடர்பு முறை டி. பி. எம். எஸ். பயன்படுத்த எளிதாகவும் எடுத்துக்காட்டு முறையில் கேள்விகேட்கும் அமைப்பும் கொண்டது. அதனுடைய பால் (PAL) நிரல் தொடரமைப்பு மொழி தனித்தன்மை கொண்டது. பல பால் தொடர்கள் பரிமாற்ற பேரடாக்ஸ் கட்டளைகளைக் கொண்டது. இதனால் பேரடாக்ஸ் பயனாளர்கள் நிரல் தொடரமைப்பதை எளிதாகச் செய்ய முடியும். பேரபிக்ஸ் எந்திரம் (தகவல் தளப் பகுதி) தனியாகக் கிட்டும்."சி"நிரல் தொடர்கள் மூலமும் இதை அணுக முடியும். paragraph : பத்தி : ஒரு தருக்க முறைச் செய்முறைத் தொகுதியாக அமைந்துள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோபால் மொழி (Common Business Oriented Language COBOL) வாக்கியங்களின் தொகுதி. இது ஒரு பெயரின் பத்தித் தலைப்புக்கு முந்தியதாக அமைந்திருக்கும்.

paragraph assembly : பத்தி இணைப்பு : ஒரு சொல் செயலியில் அல்லது வட்டுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பத்தியிலிருந்து ஒர் ஆவணத்தை இணைக்கும் செய்முறை.

paragraph number : பத்தி எண் : நினைவகத்தில் உள்ள நிலையை வரையறுக்கும் எண். 16 எட்டியல்களாக நினைவகத்தைக் குறிப்பிடுகிறது. சான்றாக பத்தி எண் 2 என்றால் இரண்டாவது 16 எட்டியல்கள் நினைவகத்தைக் குறிப்பிடுகிறது. இப்பத்தியினை நோக்கி காட்டி திரும்பினால் நினைவகத்தின் 17 எட்டியலை அது காட்டுகிறது என்று பொருள்.

parallel : ஒரு போகு;இணையான : ஒரு சொல்லில் அல்லது செய்தியிலுள்ள ஊடுபொருள்கள் அனைததையும் ஒரே சமயத்தில் கையாள்தல். 2. கணினி வரைகலையில் நேரிணையான புள்ளி ஒவ்வொன்றிலிருந்தும் சமதூரத்தில் இருக்கின்ற ஒரு வரைகலைக் கோப்பில் உள்ள கோடுகளை அல்லது சமதளங்களை இது குறிக்கிறது.

parallel access : ஒரு போகு அணுகுதல்;இணை அணுகல் : ஒரு சேமிப்பிலிருந்து தகவல்களைப் பெறுவதற்கு அல்லது அதில் தகவலை களைச் செலுத்துவதற்கு உதவும் செய்முறை. இதில் இத்தகைய அணுகு தலுக்குத் தேவையான நேரம் ஒரு குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடத் திலிருந்து ஒரு சொல்லின் ஊடுபொருள்கள் அனைத்தையும் ஒரே சமயத் தில் மாற்றுவதைப் பொறுத்ததாக இருக்கும். இது, தொடர் வரி அணுகுதலுக்கு மாறானது.

parallel adder : ஒரு போகு கூட்டல் கருவி;இணை கூட்டி : ஒவ்வொரு எண்ணளவிலுமுள்ள எல்லா எண்களையும் உள்ளே கொண்டுவந்து செயற் பாடுகளைச் செய்கிற கூட்டல் கருவி. இது தொடர்வரிசைக் கூட்டல் கருவியிலிருந்து வேறுபட்டது.

parallel algorithm : இணை நிலை படிமுறை : ஒரு படி முறையில் ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படிமுறைப் பகுதிகள் செயல்படுமாறு அமைத்தல். இணை நிலைப் படிமுறைகள் பெரும்பாலும் பல்செயலாக்க சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன.

parallel and serial port : இணை நிலை மற்றும் நேரியல் துறை.

parallel arrays : இணை வரிசைகள் : ஒன்றோடொன்று தொடர்புள்ள இரண்டு அல்லது மேற்பட்ட வரிசைகள்.

parallel circuit : ஒருபோகு (மின்) சுற்றுவழி;இணைச்சுற்று : அமைப் பிகள் ஒவ்வொன்றின் இருமுனைகளும். ஒன்றுக்கொன்று இணையாக இணைக் கப்பட்டுள்ள மின்சுற்று வழி.

parallel computer : ஒரு போகு கணினி;இணைக் கணினி : எண்கள் அல்லது தரவு வரிகள் கணினியின் தனித்தனி அலகுகளினால் ஒருங்கே செய்முறைப் படுத்தப்படக்கூடிய கணினி.

parallel computing : இணை நிலை கணிப்பணி : ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண அல்லது ஒரு பணியைச் செய்து முடிக்க பல கணினிகளையோ அல்லது பல செயலிகள் கொண்ட கணினியையோ பயன்படுத்தும் முறை.

parallel conversation : இணை உரையாடல்.

parallel conversion : மாற்றம்;இணை மாற்றம் : ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது பழைய மற்றும் புதிய பொறியமைவுகள் இரண்டையும் இயக்கும்படி செய்து ஒரு புதிய தரவு செய்முறைப்படுத்தும் பொறி யமைவுக்கு மாற்றக் கூடிய செய்முறை.

parallel database : இனை நிலை தரவுத் தளம் : ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் அல்லது இயக்க முறைமைச் செய லாக்கங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தரவுத்தள அமைப்பு. எஸ்கியூஎல் வினவல்கள், ஏடுகள் புதுப்பித்தல்கள், தரவு பரிமாற்றங்கள், உள்ளீடு/வெளியீடு கையாளல், தரவு இடையக நிறுத்தம் போன்ற தரவு மேலாண்மைக் கோரிக்கைகளை நிறைவேற்ற இவை பயன்படுத்திக் கொள்ளப்படும். ஒரு இணைநிலை தரவுத் தளம், ஏராளமான உடன்நிகழ் பணிகளை பல செயலிகள் மூலமாகவும் பல சேமிப்புச் சாதனங்களிலுள்ள தரவுகளிலிருந்தும் நிறைவேற்றிக் கொள்ளும் திறன்படைத்தது. பல நூறு கிகாபைட் தரவு சேமிக்கப்பட்டுள்ள தரவு தளங்களிலும் விரைவான அணுகல் இயல்கிறது. parallel error : இணைப் பிழை;நோக்கு மயக்கப் பிழை;விழிக் கோட்ட வழு.

parallelelizing : இணையாக்கல் : இணை செயலாக்கக் கணினிக்காக நிரல்களை உருவாக்குதல்.

parallel input/output : ஒரு போகு உட்பாடு/வெளிப்பாடு;இணை உள்ளீடு/வெளியீடு : ஒவ்வொரு துண்மிக்கும் தனக்கெனச் சொந்தக் கம்பியைக் கொண்டிருக்கிற தரவு அனுப்பீடு. அனைத்துத் துண்மிகளும் ஒரே சமயத்தில் அனுப்பப்படுகின்றன. இது, ஒரு சமயத்தில் ஒரேயொரு துண்மியை மட்டுமே அனுப்புவதிலிருந்து வேறுபட்டது. இது தொடர் உட்பாடு/வெளிப்பாடு என்பதற்கு மாறுபட்டது.

parallel interface : ஒருபோகு இடைமுகப்பு;இணை இடை முகம் : ஒரு பாதைத் தொகுதியின் வழியே ஒரே சமயத்தில் தகவல்களை மாற்றக்கூடிய சாதனத்தின் வரம்பெல்லை.

parallel operations : இணைச் செயல்பாடுகள்.

parallel operator : இணைநிலை செயற்குழு;ஒருபோகு செயற்பாடு; இணை இயக்கம் : ஒரே தன்மையுடைய பல செயற்பாடுகளை அத்தகைய செயல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான ஒரேமாதிரியான அல்லது சரி யொத்த சாதனங்களை அமைப்பதன்மூலம் ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல்.

parallel port : இணை துறை : உ/வெ இணைப்பு. அச்சுப்பொறி அல்லது பிற இணை இடை முக சாதனத்துடன் இணைக்கப் பயன்படுகிறது. பீசியில் இது 25-பின் பெண் டிபி-25 இணைப்பி எனப்படும்.

parallel printer : ஒரு போகு அச்சடிப்பி;இணை அச்சுப் பொறி : ஒரே சமயத்தில் 8 கம்பிகளின் வழியே ஒர் எழுத்தினை (எழுத்து எண் முதலியன) கணினியிலிருந்து பெறுகின்ற அச்சடிப்பி.

parallel printing : ஒரு போகு அச்சடித்தல்;இணை அச்சிடல் : ஒரே சமயத்தில் ஒரு வரிசை முழுவதையும் அச்சடித்தல்.

parallel processing : இணைச் செயல்பாடு;இணை அலசல்;ஒருபோகு செயல்பாடு;இணைச் செயலாக்கம்;ஒருபோகு செய்முறைப்படுத்துதல் : பன்முகச் சாதனங்களில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செய் முறைகளை ஒருங்கே அல்லது ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல். parallel reading : ஒரு போகு படிப்பு;இணை வாசிப்பு : ஒரு தரவு அட்டையிலிருந்து வரிசை வரிசையாகப் படித்தல். இது தொடர் படிப்பிலிருந்து வேறு பட்டது.

parallel run : ஒருபோகு ஓட்டம்;இணையோட்டம் : ஒரு புதிய பொறியமைவினை அல்லது செயல்முறையினை பழைய பொறி யமைவுக்கு இணையாக ஒட்டுதல். இது எளிதான அனுப்பீட்டுக்கும் பிழையின்றி மாற்றம் செய்வதற்கும் உதவுகிறது.

parallel server : இணைநிலை வழங்கன் : வழங்கனின் செயல்திறனை மேம்படுத்த ஏதேனும் ஒருவகை இணைநிலைச் செயலாக்கத்தை நடைமுறைப்படுத் தும் கணினி அமைப்பு.

parallel transmission : இணைப் பரப்புகை;ஒருபோகு அனுப்பீடு;இணை செலுத்தம் : தகவல் தொடர்புகளில் தரவு மாற்றத்திற்கான ஒரே முறை. இதில் ஒரு கணினியின் துண்மிகள் அனைத்தும் ஒரே சமயத்தில் பொருத்தப்படுகின்றன. இது, தொடர் அனுப்பீட்டிலிருந்து வேறுபட்டது.

parameter : நிலையளவுரு : 1. வரம்பற்ற மாறி, முக்கியமாக ஒரு குறிப்பிட்ட பொறியமைவின் ஒரு பண்பு அல்லது வரை நிலை அடை மொழி. 2. ஒரு மாறிலியின் பண்புகளைத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளும் ஒர் இயற்கணித எண்ணுருக் கோவையிலுள்ள மாறிலி.

parameter block : அளவு கோல் கட்டம் : ஒரு சாதனம் அல்லது இயக்க அமைப்புப் பணியில் பயன்படுத்திய தரவுவை நீடித்திருக்க நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாறிலிகளின் தொகுதி.

parameter-driven : அளபுரு முடுக்கம் : ஒரு நிரல் அல்லது செயல்பாட்டின் இயல்பு அல்லது வெளியீடு, அதற்கு வழங்கப்படும் அளபுருக்களின் மதிப்புகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது.

parameter passing : அளபுரு அனுப்புகை : நிரலாக்கத்தில் ஒருவகைச் செயலாக்கம். ஒரு செயல்முறை அல்லது செயல்கூறின் அழைப்பு செயல் படுத்தப்படும்போது குறிப்பு அளபுருக்களுக்கு மெய்யான அளபுருக்களின் மதிப்புகளைப் பதிலீடு செய்வது.

parameter RAM : அளபுரு ரேம் : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளின் தாய்ப்பலகை களில் மின்கலத்தின் உதவியால் பாதுகாக்கப்படும் சீமாஸ்-ரேமில் உள்ள ஒரு பகுதி. கணினி அமைப்பின் தகவமைவு பற்றிய தரவு இதில் சேமிக்கப்பட்டிருக்கும். பீரேம் (PRAM) என்று சுருக்கமாகக் கூறுவர்.

parametric : நிலையளவுருக்கள் சார்ந்த : ஒரு கோட்டு வளைவினை அல்லது இடப்பரப்பினை சில தற்காப்பு மாறிலிகளின் அடிப்படையில் வரை யறுக்கிற உத்தி தொடர்பானது. கணினிவழி வடிவமைப்புப் பொறியமை வுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

parent : தாய்க்கோப்பு : புதிய பதிவுருக்களை உருவாக்குவதற்குத் தேவைப்படுகிற, ஒரே தரவு ஆதாரமாக இருக்கக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்டது.

parent-child : பெற்றோர்குழந்தை : தகவல் தள மேலாண்மையில் இரண்டு கோப்புகளுக்கு இடையிலான உறவு முறை. பெற்றோர் கோப்பில் தொழிலாளர், வாடிக்கையாளர் போன்ற ஒரு பொருளைப் பற்றிய தேவையான தரவு இருக்கின்றது. குழந்தை அதிலிருந்து உருவானது. சான்றாக, ஒரு நிறுவனக் கோப்பின் குழந்தை என்று அதன் தொழிலாளர் கோப்பினைக் குறிப்பிடலாம்.

parentheses : இடை முறிப்புக் குறிகள்;பிறை வளைவான : பிறை வடிவ வளை அடைப்புக் குறிகள். இவை ( ) என்று குறிக்கப்படும். கணிதக் கணிப்பு களில் வளை அடைப்புக் குறிகளுக்குள் உள்ள செயற்பாடுகள் முதல் முந்துரிமை வாய்ந்த தனிச்செயற்பாடுகளாகக் கருதப்படுகின்றன.

parent menu : தலைமைப் பட்டி.

parent process : பெற்றோர் செயலாக்கம் : வேறொரு துணைப்பகுதி (அல்லது குழந்தை) செயலாக்கத்தை உருவாக்குகின்ற நிரல்தொடரின் (செயல் முறை) ஒரு பகுதி.

parent programme : பெற்றோர் நிரல் தொடர் : நினைவகத்தில் ஏற்றப்படும் முதல் அல்லது தலைமை அல்லது அடிப்படை நிரல் தொடர்.

parent/child relationship : தாய்/சேய் உறவு நிலை : செய்திகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுதல். புதிய செய்தியை (சேய்) உருவாக்கு வதற்குப் பழைய செய்தி (தாய்) இன்றி யமையாததாகும்.

parity : சமன் : சமமாய் இருத்தலைக் குறிக்கும். கணினித் தகவல் பரிமாற்றத்தில் பிழையைச் சோதிக்கும் செயல் முறைக்கு சமன் சரிபார்ப்பு (parity check) என்று பெயர். ஒரு துண்மித் தொகுதி ஒரு முனையி லிருந்து இன்னொரு முனைக்கு அனுப்பப்படும்போது எத்தனை 1. கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிட்டு அந்த எண்ணிக்கை ஒற்றைப்படையா இரட்டைப்படையா என்பதைப் பார்த்து 1 அல்லது 0-வை அந்தத் துண்மித் தொகுதியோடு சேர்த்து அனுப்புவர். இந்த 1 அல்லது 0, சமன் துண்மி (parify bit) எனப்படும். பெறும் முனையில் சமன் துண்மி அடிப்படையில் அந்தக் குறிப்பிட்ட துண்மித் தொகுதி பெறப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்படும். துண்மித் தொகுதி ஒர் எழுத்துக் குறி எனில், செங்குத்து மிகைமைச் சரிபார்ப்பு (vertical redundancy check) என்றும் வேறுவகையான தொகுதி எனில், கிடைமட்ட மிகைமைச் சரிபார்ப்பு என்றும் கூறுவர். இரண்டு இணக்கிகளுக் கிடையேயான தகவல் தொடர்பு சமன் சரிபார்ப்பு ஒரு முக்கிய அளபுரு ஆகும். சமன் துண்மி சரியாக இருந்தால் மட்டுமே இரண்டு இணக்கிகளும் தரவுவைப் பரிமாறிக் கொள்ளும்.

parity bit : சமநிலைத் துண்மி : எட்டியல்களின் ஒரு வரிசையுடன் பின்னிணைப்புச் செய்யப்படும் ஒரு சோதனைத் துண்மி. இதனால் இந்தத் தடுப்புத் துண்மிக்கு உட்பட்ட எட்டியல்கள் அனைத்தின் கூட்டுத் தொகையானது எப்போதும் ஒற்றைப்படையாக அல்லது எப்போதும் இரட்டைப்படையாக இருக்குமாறு செய்யப்படுகிறது.

parity check, odd : ஒற்றைச் சமன் சரிபார்ப்பு.

parity checking : சமநிலைச் சோதனை;இணைச் சரிபார்ப்பு : தரவுத் துண்மிகளுடன் சேர்த்துச் சோதனைத் துண்மிகளைப் பயன்படுத்தி தன்னியக்கமாகப் பிழைகளைக் கண்டறிதல்.

parity drive : சோதனை இயக்கி : ஒரு வட்டு வரிசையில் சோதனை துண்மிகளை வைத்திருக்கும் தனி வட்டு இயக்கி.

parity error : சோதனை பிழை : ஒரு எழுத்தின் சோதனை துண்மி யானது தவறாக இருக்குமானால் ஏற்படும் பிழை நிலை.

park : நிறுத்து : ஒரு படி/எழுது முனை நிலை வட்டினைத் தொடு மானால் அதனால் ஏற்படும் சேதத்தினைத் தடுக்க அந்த அலகை அதன் இருப்பிடத்திற்குக் கொண்டு வருமுன் படி/எழுது முனையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளல். மின்சாரம் நிறுத்தப்படும்போது பெரும்பாலான நவீன இயக்கிகள் இவ்வாறு நிறுத்திக் கொள்கின்றன.

Parkingson’s Law : பார்க்கின்சன் விதி.

parse : அலகு : ஒரு சொற்பகுதி சரத்தினை அதன் பிரிவு பகுதிகளுக்கு கொண்டு செல்லுதல். டாஸ் (DOS) மூலம் கட்டளை வரி தகவலை அலகிட்டு கோப்பு அணுகு பணிகளில் பயன்படுத்துவதற்காக திருத்தி அமைக்க முடியும்.

parser : பாகுபடுத்தி/பகுப்பாய்வி : அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்து, அறிந்து கொள்கிற செயல்முறை அல்லது துணை வாலாயம்.

parsing : பாகுபடுத்தல்;அலகிடல் : 1. அறிக்கைகளைச் சொற்றொடரியல் அலகுகளாகத் தனித்தனியாகப் பாகுபடுத்தும் செயல்முறை. 2. ஒரு எழுத்துச் சரத்தினைப் பகுப்பாய்வு செய்து அதனை இன்னும் அதிக எளிதாகச் செய்முறைப்படுத்தும் அமைப்புக் குழுமங்களாகப் பகுத்தல்.

part address : முகவரிப் பகுதி.

participatory media : பங்கேற்கும் தகவலகம்.

partition : பிரிவினை : நினைவகத்தில் ஒரு செயல்முறை நிறை வேற்றப்படும்போது அச்செயல் முறைக்கெனக் குறித்தொதுக்கப்படும் பகுதி.

partitioning : பிரிவினை செய்தல்;பிரிப்பு : ஒரு கணினியின் சேமிப்புப் பகுதியைக் குறிப்பிட்ட பணிகளுக்காக அல்லது அலுவல்களுக்காக ஒதுக்கப் பட்ட சிறுசிறு அலகுகளாக உட்பகுப்பு செய்தல்.

partition table : பிரிவினைப் பட்டியல் : ஒரு நிலையான வட்டின் முதன்மைத் தொடக்கப் பதிவில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியல். ஒவ்வொரு பிரிவின் அளவு மற்றும் இருப்பிடம் பற்றிய தகவலை அது கொண் டிருக்கிறது.

parts explosion : உறுப்பு வரைதல் : ஒர் இணைப்பில் அடங்கியுள்ள அனைத்துக் கூறுகளையும் வரைதல். இது இந்தக் கூறுகள் ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பினைக் காட்டும்.

parts list : உறுப்புப் பட்டியல் : உற்பத்தி செய்யப்பட்ட ஒர் இனத்தை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உறுப்புகள் அனைத்தின் அளவுகள், பெயர்கள், எண்ணிக்கைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. கணினி உதவிபெற்ற வடிவமைப்பு (Computer Aided Design-CAD) பொறியமைவுகளில் பெரும்பாலானவை இத்தகைய பட்டியல்களை ஒரு வடிவமைப்பு மற்றும் உற்பத்திச் செய்முறையின்போது தானாகவே புதுப்பித்துப் பேணிக் கொள்கின்றன.

parts programmer : உறுப்புச் செயல் முறையாளர் : எந்திர உறுப்பு களுக்கான இயற்பியல் விளக்கங்களைக் கணிதப்படி நிலைகளின் ஒரு தொடர் வரிசையாக மாற்றி அந்தப் படி நிலைகளுக்குக் கணினிக் குறி யீடுகளை வகுத்தமைக்கிற செயல்முறையாளர்.

party check, even : இரட்டைச் சமன் சரிபார்ப்பு.

party line : தொகுப்புக் கம்பித் தொடர்;குழுமக் கம்பி : மையச் செயலகத்திலிருந்து புறப்படும் தனியொரு கம்பியுடன் இணைக்கப்பட்டுள்ள ஏராளமான சாதனங்களைக் குறிக்கும் சொல்.

Pascal : பாஸ்கல் (பாஸ்கல் எனும் கணினி மொழி) : கணினியுடன் தொடர்பு கொள்வதற்கும் சில கணிப்புகளைச் செய்யும் படி அறிவுறுத் துவதற்கும் பயன்படும் உயர்நிலைக் கணினி மொழிகளில் ஒன்று. இது பொது நோக்கத்திற்காக கட்டமைவு செய்யப்பட்ட செயல் முறைப்படுத்தும் மொழியாகும். இதனை சூரிச்சைச் சேர்ந்த நிக்லாஸ் விர்த் (Niklaus wirth) என்பவர் 1968 இல் கண்டுபிடித்தார். பிளைஸ் பாஸ்கல் (Blaise Pascal) என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதையின் நினைவாக இதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

Pascal, Blaise (1623-1662) : பாஸ்கல், பிளைஸ் (1623-1662) : ஃபிரெஞ்சுக் கணித மேதை;மேசைக் கணிப்பி வகையைச் சேர்ந்த முதலாவது கூட்டல் எந்திரத்தை 1642இல் கண்டுபிடித்தவர்.

pascaline : பாஸ்கலைன் : 1642 இல் ஃபிரெஞ்சு கணிதவியலார் பிளெய்ஸ் பாஸ்கல் உருவாக்கிய கணிப்பி எந்திரம். அதனால் கூட்டவும், கழிக்கவும் மட்டுமே முடியும். ஆனால் ஐரோப்பாவின் முக்கிய பகுதிகளில் அதன் 50 எந்திரங்கள் அமைக்கப்பட்டதால் அது மிகுந்த கவனத்தைப் பெற்றது.

Pascal's calculator : பாஸ்கல் கணிப்பி : பிளைஸ் பாஸ்கல் என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதை 1612இல் கண்டுபிடித்த முதலாவது கூட்டல் எந்திரம். இது மேசைக் கணிப்பி வகையைச் சேர்ந்தது. இது பல்லிணைகளைக் கொண்ட"0முதல்"9வரையிலான இலக்கங்களைக் கொண்டது. இது கூட்டல், கழித்தல் கணிப்புகளைச் செய்யக்கூடியது.

pass : ஒட்டம் : 1. ஒரு கணினி செயல்முறையை நிறைவேற்று வதில் ஒரு முழுமையான உட்பாட்டுச் செய்முறைப் படுத்தலையும் வெளிப் பாட்டுச் சுழற்சியையும் குறிக்கிறது. 2. ஒர் ஆதாரக் குறியீட்டினை ஒரு தொகுப்பி அல்லது இணைப்பி நுண்ணாய்வு செய்தல்.

pass by address : முகவரி மூலம் அனுப்பல் : ஒரு துணை நிரல்கூறுக்கு தருமதிப்பு அல்லது அளபுருக்களை அனுப்பி வைத்தலில் ஒரு வகை. இம் முறையில் அழைக்கும் துணை நிரல் அழைக்கப்படும் துணை நிரலுக்கு அளபுருவின் முகவரியை (நினைவக இருப் பிடத்தை) அனுப்பி வைக்கும். அழைக்கப்பட்ட துணைநிரல் அளபுருவின் மதிப்பை எடுத்தாளவோ, மதிப்பை மாற்றியமைக்கவோ, அதன் முகவரியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

pass by value : மதிப்பு மூலம் அனுப்பல் : ஒரு துணை நிரல் கூறுக்கு தரு மதிப்பு அல்லது அளபுருவை அனுப்பி வைப்பதில் இன்னொரு வகை. இம்முறையில் அளபுருவின் மதிப்பு நகலெடுக்கப்பட்டு அந்நகல் மதிப்பு அழைக்கப்பட்ட துணைநிரலுக்கு அனுப்பி வைக்கப்படும். அழைக்கப்பட்ட துணைநிரல் நகல் மதிப்பைப் பயன்படுத்தலாம். மாற்றியமைக்கலாம். ஆனால் அளபுருவின் மூலமதிப்பை மாற்றியமைக்க முடியாது.

passive device : ஓட்டச் சாதனம் : குறியீடுகளை மாற்றியமைக்காமல் ஒட விடுகிற சாதனம்.

passive graphics : ஓட்ட வரைகலை.

passive hub : அமைதியான முனை : இயங்கக்கூடிய மின்னணு எதுவுமில்லாத, அனுப்பப் படும் சமிக்கைகளுடன் எதையும் சேர்க்கவியலாத கட்டமைப்பு முனை.

passive matrix LCD : இயங்காத எழுத்துரு எல்சிடி : பொதுவான எல். சி. டி. தொழில்நுட்பம். தேவையான பத்தியிலும் வரிசையிலும் மின்சாரத்தை அனுப்பு வதன்மூலம் ஒரு படப்புள்ளியில் வெளிச்சம் ஏற்படுத்துகிறது. passive-matrix display : முனைப்பிலா அணி காட்சித் திரை : விலை மலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித்திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப்படுத்தப்படுகின்ற ஏராளமான திரவப்படிகக் கலங்களை (Cells) கொண்டது. ஒரு மின்மப்பெருக்கி ஒரு முழு நெடுக்கை (Column) அல்லது கிடக்கை (Row) யின் படப்புள்ளிகளை கட்டுப்படுத்தும். முனைப்பிலா அணித்திரைகள் பெரும்பாலும் மடிக்கணினி கையேட்டுக் கணினிகளில் பயன் படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவை மிகவும் தட்டையாக இருக்கும். ஒற்றைநிற திரைக்காட்சிக்கு இவை தெளிவாக இருக்கும். ஆனால் வண்ணத் திரைக்காட்சி எனில் தெளிவு சற்றுக் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி திரையில் நேரெதிர் நோக்கினால்தான் தெளிவாகத் தெரியும். பிற கோணங்களில் பார்த்தால் தெளிவாக இருக்காது. முனைப்பு அணி (Active Matrix) திரைக்காட்சி களில் இக்குறைபாடுகள் கிடையாது. எனினும் முனைப்பிலா அணிக் காட்சித் திரை விலை குறைவானது.

passive star : அசைவற்ற நட்சத்திரம் : கட்டமைப்பு அமைப்பு முறை. கூடுதல் செயலாக்கமின்றி பலமுனைகளின் கம்பிகளை இணைப்பது.

password : அனுமதிச் சொல் உயிர்நிலைச் சொல் : கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட செயல் முறைகளை அல்லது தரவு கோப்புகளை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தனிச்சொல் குறியீடு அல்லது குழூஉக் குறி. ஒரு கணினியமைவில் அடையாளங் காண்பதற்காக வும், பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் இது பயன்படுகிறது. ஒவ்வொரு பயனாளருக்கும் ஒரு தனிச்சொல் ஒதுக்கப்பட்டிருக்கும்.

password protection : அனுமதிச் சொல் பாதுகாப்பு;அணுகுதல் காலப் பாதுகாப்பு.

paste : ஒட்டு : ஒர் ஆவணத்திலிருந்து முன்னதாக வெட்டி யெடுக்கப் பட்ட தகவலை ஒரு புதிய நிலையில் பொருத்துதல். சில கணினியமை வுகளில் வாசகத்தின் அல்லது வரைகலையின் பரப்புகளை ஒர் ஆவணத் திலிருந்து வெட்டியெடுத்து பாதுகாத்து பின்னர் இன்னொரு ஆவணத்தில் ஒட்டலாம். paste append : புது ஏடாக ஒட்டு.

paste as hyper link : மீத்தொடுப்பாக ஒட்டு.

paste insert : செருகு ஒட்டு.

pastelmix : ஒட்டு/சேர்.

paste special : சிறப்பு ஒட்டு.

patch : வட்டப்பட்டை : 1. ஒரு பிழையைத் திருத்துவதற்காக அல்லது ஒரு செயல்முறையை மாற்றுவதற்காக ஒரு செயல் முறைக்குள் செலுத்தப்படும் குறியீட்டு முறையின் ஒரு பகுதி. 2. தற்காலிக மின்னியல் இணைப்பு. 3. கணினி வரைகலையில் ஒரு நீள்வளைவுப் பகுதி. இது மூன்று அல்லது நான்கு பக்கங்களைக் கொண்டிருக்கும். பரப்புகளின் முப் பரிமா ணத்தை உருவாக்கும் வகையில் இவை அவற்றின் விளிம்புகளில் முதல்வரிசையுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு வட்டப்பட்டையின் இந்த விளிம்புகள் பெரும்பாலும் முப்பரிமாணத் தொடர் உருவங்களை உருவாக்கும். இந்த வட்டப் பட்டைகளைக் கையாள்வது கடினம் எனினும் ஒரு வட்ட ப்பட்டை நூற்றுக்கணக்கான பலகோணக் கட்டங்களை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதால் தரவு தளத்தின் வடிவளவு வெகுவாகக் குறைகிறது. 4. ஒரு செயல் முறையை அல்லது நிறைவேற்றத்தக்க கோப்பினை மாற்றமைவு செய்தல். இதனைப் பொதுவாக ஒரு வாடிக்கை யாளர் பொறியாளர் செய்கிறார்.

patch panel : ஒட்டுப் பலகை : கம்பி அமைப்புப் பலகை, பல தரப்பட்ட இடை இணைப்புகளுக்கான வசதியை நெட்டுளிகளின் வழியாக ஒட்டுப் பலகைகளுக்குப் பயன்படுத்துதல்.

patching : ஒட்டுதல் : 1. ஒரு செயல்முறையை மாற்றியமைப் பதற்காக அல்லது செயல் முறைப்படுத்தலின் பிழைகளைத் திருத்துவதற்காக அந்தச் செயல்முறையின் இலக்குக் குறியீட்டினை மாற்றுவதன் மூலம் மாற்றமைவு செய்வதற்கான தற்காலிக உத்தி. இது பெரும்பாலும் செயல்முறையின் மறுதொகுப்பினை அல்லது மறு இணைப்பினைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படுகிறது. 2. வன்பொருளுக்கு தற்காலிக வட்டப்பட்டைகள் செய்தல்.

patch string : ஒட்டுச்சரம் : தட்டு அணுகலின் கோப்பு கையாளும் முறையில் ஒரு கோப்பினை அடையாளம்காணப் பயன்படுத்தும் சரம். டாஸ் இயக்க அமைப்பு (DOS) கட்டளை அளவில் தேவைப்படும் அதே வடிவம்தான் இது. சிறப்பு இயக்கி யிலிருந்து தொடங்கி பின்சாய்வுக் கோட்டினால் பிரிக்கப்பட்ட துணைப் பட்டியல் எண்களைக் கொண்டதாக இருந்து அஸ்கி"0"எட்டியல் பின்தொடர முடியும். சர நீளத்தின் அதிக அளவு 63 எட்டியல்கள்.

path : பாதை வழி : தற்போதைய விவரக் குறிப்பேடு அல்லாத பிற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவரக் குறிப்பேடுகளிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறைவேற்றத்தக்க கோப்புகளைத் தேடியெடுக் கும்படி செயற்பாட்டுப் பொறியமைவுக்கு அறிவுறுத்தப் பயன் படுத்தப்படும் ஒர் நிரல்.

path menu : பாதைப் பட்டி : விண்டோஸ் சூழலில் ஒரு பகிர்வுப் பிணைய வளத்தினை அணுக உலகளாவியப் பெயர் மரபுப்படி அதன் பாதையை உள்ளீடு செய்வதற்குப் பயன் படுத்தப்படும் பட்டி அல்லது கீழ்விரி பட்டியல்.

pathname : பாதைப் பெயர் : ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில், நடப்புக் கோப்பகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட கோப்பினை அணுகக் குறிப்பிடப் படும் கோப்பகம்/கோப்புறைப் பெயர்களின் பட்டியல். கோப்பகப் பாதை எனவும் அழைக்கப்படுவதுண்டு. (எ-டு) user\work\project\pay. mdb.

path of execution : நிறைவேற்று வழி.

pattern : தோரணி;தினுசு.

pattern, bit : பிட் தோரணி.

pattern recognition : தோரணிஅடையாளம்;வடிவஅடையாளம்;உருவ மைப்புகாணும் செய்முறைகள்;உருவவகையறிதல் : வடிவங்கள், உருவங்கள், உருவரைகள் போன்றவற்றைத் தானியக்க வழிமுறைகளின்படி அடையாளங் காணல.

patterns : தோரணிகள்.

pause key : நிறுத்தல் விசை;நிறுத்தி வைப்பு விசை;இடை நிறுத்து விசை : 1. ஒரு நிரல் அல்லது கட்டளையின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் விசை. அனைத்து வகை விசைப்பலகைகளிலும் இத்தகைய விசை உண்டு. ஒரு நீண்ட பட்டியல் திரையில் வேகமாக மேல்நோக்கி உருளும்போது இந்த விசையைப் பயன்படுத்தி நிறுத்தி நிறுத்தி பட்டியலைப் பார்வையிடலாம். 2. குறிப்பிட்ட நிரலில், நிரலர் விருப்பப்படி விசைப்பலகையிலுள்ள ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தினால் நிரல்/செயல்பாடு தற்காலிமாக நிற்குமாறு செய்யலாம். குறிப்பாக கணினி விளை யாட்டு நிரல்களில் விளையாட்டை நடுவிலேயே நிறுத்தி வைக்க P என்னும் விசை பயன் படுத்தப்படுவதுண்டு.

pause printing : இடைவிடு அச்சிடல்.

PAX : பேக்ஸ் : Private Automatic Exchange என்பதன் குறும்பெயர். அலுவலகத்திற்குள் உள்ள தொலைபேசி அமைவு. (இணை கட்டுமான விரிவாக்கம் கொண்ட) இணைச் செயலக சூழ்நிலையில் இன்டெல்லின் 860 ரிஸ்க் (Risc) சிப்பின் தரத்தை ஒட்டிய, யூனிக்ஸ் சிஸ்டம் V மற்றும் அல்லையன்ட் கணினியின் இணை மற்றும் முப்பரிமாண (3-D) வரைகலை தொழில் நுட்பங்கள் கொண்டது.

pay to play : பணத்துக்குப் பாட்டு.

payware : பணப்பொருள் : பணத்திற்கு விற்கப்படும் மென்பொருள்.

PBX : பீபிஎக்ஸ் : Private Branch Exchange என்பதன் குறும்பெயர். அலுவலகத்தின் உள்ளே தொலைபேசி அமைக்கும் திட்டம். அங்குள்ள ஒவ்வொரு. தொலைபேசி இணைவுகளுடன் இணைக்கப்படுவது மட்டுமல்லாது வெளிப்புற தொலைபேசி கட்டமைப்புடனும் இணைக் கப்படும். குறைந்த செலவில் வெளிப்புற அழைப்பை அனுப்புதல், அழைப்பை மேலனுப்புதல், மாநாட்டு அழைப்பு மற்றும் அழைப்பு கணக்கிடல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.

PC : பீசி : சொந்தக் கணினி (Personal Computer) சட்டைப்பைக் கணினி (Pocket Computer), கையடக்கக் கணினி (Portable Computer), அச்சிட்ட மின்சுற்று வழி (Private Circuit), செயல் முறை மேடை (Programme Counter) ஆகியவற்றின் குறும்பெயர்.

PCB : பீசிபி;அச்சிணைப்பு அட்டை : அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை என்று பொருள் படும்"Printed Circuit Board"என்ற ஆங்கிலச் சொற்றொட ரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இந்தப்பலகை, பிளாஸ்டிக்கினாலானது. இதில் கணினியின் பல்வேறு மின்னனுவியல் அமைப்பான்கள் பற்றவைத்து இணைக்கப்பட்டிருக்கும். இவை, இப்பலகையின் மேற்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள ஒன்றோ டொன்று இணைந்த மெல்லிய கம்பிகள்மூலம் பிணைக் கப்பட்டிருக்கும்.

PC bus : பீசி பாட்டை : முதல் தலைமுறை பி. எம், பீசிக்களில் பயன்படுத்தப்பட்ட பாட்டை அமைப்பு முறை ஆரம்ப 8 துண்மி நடத்தையும், ஏடீ. யுடன் அறிமுகப்படுத்தப்படும் 16 துண்மி விரிவாக்கத்தையும் உள்ளடக்கியது. 8 துண்மி அட்டைகள் 8 துண்மி மற்றும் 16 துண்மி அமைப்புகளுடன் சேரும். ஆனால் 26 துண்மி அட்டைகள் 16 துண்மி பகுதி யில் மட்டும்தான் சேரும். ஐ. எஸ். ஏ. பாட்டை என்றும் அழைக்கப்படும்.

PC card : பீசி அட்டை : நினைவக அட்டை அல்லது நினைவகம் மற்றும் உ/வெ அட்டை. பீசி-க்கான விரிவாக்க அட்டை.

PC-compatible : பீசி-ஒத்தியல்பு : ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/எக்ஸ்டீ மற்றும் பீசி/ஏடீ வன்பொருள், மென்பொருள் வரன் முறைகளைக் கொண்ட கணினிகளைக் குறிக்கிறது. இதுவே கணினித் தொழில்துறையில் சொந்தக் கணினிகளுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட தர வரையறை ஆகிப்போயிற்று. இவை இன்டெல் 80x86 அல்லது அதற்கு ஒத்தியல்பான சிப்புகளில் செயல்பட வல்லவை. இன்றைக்குப் பெரும்பாலான பீசி-ஒத்தியல்புக் கணினிகள் ஐபிஎம் அல்லாத நிறுவனங்களாலேயே தயாரிக்கப் படுகின்றன. சிலவேளைகளில் இவை நகலிகள் அல்லது வார்ப்புகள் (clones) என்று அழைக்கப் படுகின்றன. ஐபிஎம் பிசி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

PC-DOS : பீசி-டாஸ் : சொந்தக் கணினிக்கான வட்டு இயக்க முறைமை எனப் பொருள்படும் Personal Computer-Disk Operating System என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு. தொடக்க காலங்களில் ஐபிஎம் முக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸ் இயக்க முறைமையை வழங்கி வந்தது. பின்னாளில் மைக்ரோசாஃப்ட் சொந்தமாக எம்எஸ் டாஸ் என வெளியிடலாயிற்று. ஐபிஎம் தன் சொந்த இயக்க முறைமையை பீ. சிடாஸ் என்ற பெயரில் வெளி யிட்டது. எம்எஸ்-டாஸ், பீசி-டாஸ் இரண்டும் முழுக்க முழுக்க ஒத்திருக்கும். சில பயன்பாட்டு நிரல்களின் கோப்புப் பெயர் மட்டுமே இரண்டிலும் வெவ்வேறாக இருக்கும்.

P-Channel MOS : (PMOS) : பீ-அலைவரிசை மாஸ் (பீஎம்ஓஎஸ்) : பேரளவு ஒருங்கிணைப்புச் சாதனங்களுக்கான (LSID) மிகப் பழைய உலோக ஆக்சைடு மின் அரைக்கடத்தித் தொழில் நுட்பம். இது, N-அலைவரிசை மாஸ் என் பதிலிருந்து வேறுபட்டது.

PC Keyboard : பீசி. விசைப்பலகை : ஐ. பி. எம். பீசியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட விசைப் பலகை, எண் நுழைவு மற்றும் கட்டி நகர்த்தலுக்கான இரட்டைப் பணி விசைப்பலகையைத் தருகிறது. தரத்துக்கு அப்பாற்பட்டு மாற்றுவிசை அமைக்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இக் குறையை ஏ. டீ. விசைப்பலகையில் சரிசெய்யப்பட்டது. விசை அமைப்புக்குத் தொடர்பின்றியும் ஐபிஎம் விசைப்பலகைகளை பயனாளர்கள் பெரும்பாலும் புகழ்கிறார்கள்.

PCI local bus : பீசிஐ உள்ளகப்பாட்டை புற உறுப்பு சேர்த்திணைப்பு உள்ளகப் பாட்டை எனப் பொருள்படும் Pheripheral Component Interconnect Local Bus என்ற தொடரின் கருக்கம். ஒரு கணினியில் பீசிஐ வகை விரிவாக்க அட்டைகள் 10 வரை பொருத்த முடிகிற உள்ளகப் பாட்டை அமைப்பிற்காக இன்டெல் நிறுவனம் வரையறுத்த வரன்முறை. இப்பாட்டை செயல்பட பீசிஐ வகைச் செருகு வாய்கள் ஒன்றில் பீசிஐ கட்டுப்படுத்தி அட்டை செருகப்பட்டிருக்க வேண்டும். பாட்டையில் ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின்சமிக்கை பயணிக்கும் ஒருவகை ஒன்று சேர்ப்பு நுட்பத்தை (Multiplexing Technique) செயலாக்க பீசிஐ வரன்முறை அனுமதிக்கிறது.

PCL : பீசிஎல் : Printer Control Language என்பதன் சுருக்கம். எச். பி. லேசர்ஜெட் பிரின்டர்களுக்கான கட்டளை மொழி. பல அச்சுப்பொறிகள், எழுத்தச்சு அமைப்பாளர்களுக்கு அதுவே நடைமுறை தர நிருணயமாக ஆகிவிட்டது. 1990இல் லேசர்ஜெட் III உடன் அறிமுகப்படுத்தப்பட்ட பீசிஎல். லெவல் 5 கம்ப்யூட்டர் கிராபிக்சின் புத்திசாலி அளவு மாறும் எழுத்தச்சுகளுக்கு ஆதரவு தருகிறது.

PC LAN : பீசி லேன் : ஐ. பி. எம். கட்டமைப்பு அல்லது ஐ. பி. எம். ஏற்புடைய பீசிக்கள். தனிநபர் கணினிகளின் ஏந்தகையின் கட்டமைப்பு.

PCM : பீசிஎம் : "Plug Compatible Manufacturer" என்ற கணினிச் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதன் சாதனங்களை, தற்போதுள்ள கணினியமைவுகளில் செருகி, கூடுதலான வன்பொருள் அல்லது மென்பொருள் இடைமுகப்புகள் இல்லாமலேயே, அவற்றை இயக்கலாம்.

PCMCIA : பீசிஎம்சிஐஏ : சொந்தக் கணினி நினைவக அட்டைக்கான பன்னாட்டுச் சங்கம் என்று பொருள்படும் Personal Computer Memory Card International Association என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி வன்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் குழு. பீசி அட்டை அடிப்படையிலான புறச்சாதனங்கள் மற்றும் அவற்றைத் தாங்கும் செருகு வாய்கள்பற்றிய ஒரு பொதுவான தரவரையறையை உரு வாக்க இக்குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக மடிக்கணினி, உள்ளங்கைக் கணினி மற்றும் பிற கையகக் கணினி வகைகளுக்கும், ஏனைய நுண்ணறிவு மின்னணுச் சாதனங்களுக்குமான தரவரையறை இது. 1990 இல் முதன் முதலில்வெளியீடு-1 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட, பீ. சிஅட்டை களுக்கான தரவரையறையும் பீசிஎம்சிஐஏ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது.

PCMCIA connector : பீசிஎம்சிஐஏ இணைப்பி : 68-பின் உள்ள துளை இணைப்பி (Female Connector). பீசிஎம்சிஐஏ செருகு வாயில் உள்ளது. பீ. சி-அட்டை யிலுள்ள 68-பின் நுழை இணைப்பி (Male Connector) யுடன் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டது.

PCMCIA slot : பீசிஎம்சிஐஏ செருகுவாய்;கணினியின் கட்டமைப்பில் அதன் புறச்சாதனத்தில் அல்லது பிற அறிவு நுட்ப மின்னணுச் சாதனத்தில் பீசி அட்டை (PC card) யை இணைப்பதற்காக இடம் பெற்றுள்ள ஒரு திறப்பு. பீசி அட்டை செருகுவாய் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

PC memory card : பீசி நினைவக அட்டை :  : 1. ஒரு கணினியின் ரேம் நினைவகத்தை அதிகரிக்கின்ற கூடுதல் மின்சுற்று அட்டை. 2. பீசிஎம்சிஐஏ வரையறுத்துள்ள வகை-சார்ந்த பீசி அட்டை. இது வழக்கமான நிலைத்த ரேம் சிப்புகளைக் கொண்டிருக்கும். ஒரு சிறிய மின்கலனால் தரவுவைக் காப்பாற்றி வைக்கும். கணினிக்குக் கூடுதல் ரேம் நினைவகம் தருவதற்கென வடிவமைக்கப் பட்டது.

PC Network : பீசி இணையம் : ஐ. பி. எம். மின் கட்டமைவு மற்றும் ஐ. பி. எம். ஏற்புடை பீ. சி-க்களுக்கான இணையம் எந்தவகையான தனிநபர் கணினிகளின் கட்டமைப்பு. ஐ. பி. எம். நிறுவனத்தின் முதல் பீசி லேன் 1984இல் அறிமுகப் படுத்தப்பட்டது. சி. எஸ். எம். ஏ. சி. டி எண்முறையைப் பயன்படுத்தி நெட்பயாஸ் இடை முகத்தை அறிமுகப்படுத்தியது. அடையாள வளைய கட்டமைப்பு ஆதரவு பின்னர் சேர்க்கப்பட்டது. இதன் மைக்ரோ சாஃப்ட் வடிவம் எம். எஸ். நெட் என்று அழைக்கப்படுகிறது.

P-code : பீ-குறியீடு : ஒர் ஆதாரக் குறியீட்டினை ஒரு தொகுப்பி மூலம் பீ-குறியீடு எனப்படும் ஒர் இடையீட்டுக் குறியீடாக மாற்றக்கூடிய உத்தி. இது பிறகு ஒரு தாய் எந்திரத்தின் மீதுள்ள ஒரு தனிவகை பீ. குறியீட்டு மொழிபெயர்ப்பி மூலமாக, நிறைவேற்றத்தக்க இலக்குக் குறியீட்டினைப் பெறுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. பாஸ்கல் மொழியின் பல்வேறு வடிவங்கள் இந்த பீ. குறியீட்டினைப் பயன் படுத்துகின்றன.

PC Paintbrush : வண்ணத்தூரிகை : இசட் சாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய பீசி வண்ண மடிக்கும் நிரல் தொடர். பரவலாகப் பயன் படுத்தப்பட்டது. வரைகலை படிவத்திற்கு துறையின் தர நிருணயத்தை உருவாக்கியது. அதன் பீசி எக்ஸ் ராஸ்டர் வரைகலை வடிவம் பல வரை கலை அமைப்புகள் சொல் செயலாக்க மற்றும் மேசைமேல் பதிப்பக நிரல் தொடர்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

PCT : பீசிடீ : நிரலைப் புரிந்து கொள் கருவி எனப் பொருள்படும் Programme Comprehension Tool என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு மென்பொருள் பொறிநுட்பக் கருவியாகும். கணினி நிரல்களின் புரிதல் மற்றும்/அல்லது செயல்படு தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வழி வகுக்கும்.

PC tools deluxe : பீசி டூல்ஸ் டீலக்ஸ் : சென்ட்ரல் பாயின்ட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பீசி பயன்பாடுகளுக்கான ஒட்டு மொத்த பேக்கேஜ். டாஸ் ஷெல் மற்றும் கோப்பு மேலாண்மை, தகவல் தொடர்புகள், வட்டு நினைவகப்படுத்தல், பின் ஆதரவு மற்றும் தரவு நெருக்குப் பயன் பாடுகளைக்கொண்டது.

PCX : பீசிஎக்ஸ் : இசட் சாஃப்ட் கார்ப்பரேசன் உருவாக்கிய பரவலாகப் பயன்படுத்தப் படும் ராஸ்டர் வரைகலை சேர்ப்புப் படிவம். இது மோனோ கிராம் மற்றும் வண்ண முகப்பின் 2 துண்மி, 4 துண்மி, 8 துண்மி மற்றும் 24 துண்மிகளைக் கையாள்வதுடன் 1 : 1 : 1 முதல் 1 : 5 : 1 வரையிலான சுருக்க விகிதத்தை எட்டுகிறது.

PC/XT : பீசி/எக்ஸ்டீ : 1981இல் அறிமுகப்படுத்தப்பட்ட மூல ஐபிஎம் சொந்தக் கணினி. இன்டெல் 8088 மையச் செயலகத்தைக் கொண்டது.

பீசி/எக்ஸ்டி விசைப் பலகை

PC/XT keyboard : பீசி/எக்ஸ்டீ விசைப்பலகை : ஐபிஎம் சொந்தக் கணினிக்கான மூல விசைப்பலகை திடமானது. நம்பகமானது. 83 விசைகள் கொண்டது. இதில், விசைகளை அழுத்தும்போது ஒரு தட்டச்சருக்கு கிளிக் என்னும் சத்தம் கேட்கும்.

PDA : பீடிஏ : சொந்த இலக்க முறைத் துணைவன் என்று பொருள்படும் Personal Digital Assistant என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறுபயன் உள்ளங்கைக் கணினி. குறிப்பிட்ட சில வசதிகளை மட்டும் கொண்டது. நாட்காட்டி, குறிப்பெடுத்தல், தரவுத் தளம், கணிப்பான் போன்ற சில தனிநபர் பயன்பாடுகளையும் தகவல் தொடர்பு வசதியையும் கொண்டது. பெரும்பாலான பீடி. ஏ. க்கள் விசைப்பலகை, சுட்டி போன்ற உள்ளிட்டுக் கருவிகளுக்குப் பதிலாக பேனா அல்லது அது போன்ற சுட்டுக் கருவிகளைக் கொண்டுள்ளன. ஆனால் சிலவற்றில் பேனா தவிர தொட்டச்சு செய்யக்கூடிய மிகச்சிறிய விசைப்பலகையும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. தரவுவைச் சேமித்து வைக்க, மின்சாரம் அதிகம் தேவைப்படும் வட்டு இயக்க கங்களுக்குப் பதிலாக பளிச்சிடு நினைவகத்தைக் (Flash Memory) கொண்டுள்ளன.

PD-CD drive : பீடி-சிட் இயக்கம் : அழித்தெழுது குறுவட்டு இயக்ககம் எனப் பொருள்படும் Rewriteable Disc-Compact Disc Drive என்பதன் சுருக்கம். இது ஒரு சேமிப்புச் சாதனம். ஒரு குறுவட்டு இயக்ககமும், இணைக்கப்பட்ட ஒன்று. அழித்தெழுது ஒளிவட்டுப் பேழைகளில் 650 மெகாபைட் வரை தரவுவைச் சேமிக்க முடியும்.

PDD : பீடிடி : கையாளத்தகு இலக்க முறை ஆவணம் என்று பொருள்படும் Portable Digital Document என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மேக் ஓஎஸ் இயக்க முறைமையில் குவிக்டிரா ஜிஎக்ஸ் மென்பொருளில் உருவாக்கப்பட்ட ஒரு வரைகலைக் கோப்பு. இக்கோப்புகள், அச்சுப்பொறியின் தெளிவு சாரா வடிவமைப்பில் சேமிக்கப்படுகின்றன. பயன்படுத்தப்படும் அச்சுப்பொறியின் உச்ச அளவு தெளிவு நிலையில் அச்சிடப்படுகின்றன. ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட மூல எழுத்துருக்களை அப்படியே அச்சில் பெறலாம். எனவே பீடிடி ஆவணங்களை அவை உருவாக்கப்பட்ட கணினி அல்லாத பிற கணினிகளிலும் அச்சிட முடியும்.

.pdf : . பீடிஎஃப் : அடோப் சிஸ்டம்ஸ் உருவாக்கிய கையாளத்தகு ஆவண வடிவாக்க (Portable Document Format) முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர். (file extension) ஒரு பிடிஎஃப் கோப்பினை திரையில் பார்வையிட அல்லது அச்சிட, அடோப் அக்ரோபேட் ரீடர் என்னும் இலவச மென்பொருள் உள்ளது.

PDM : பீடிஎம் : "துடிப்புக் கால ஏற்ற இறக்கம் எனப்பொருள் படும்"Pulse Duration Modulation" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இந்தத் துடிப்புக் கால ஏற்ற இறக்கத்தில், ஒரு துடிப்பின் கால நீட்சியானது மாறுபடுகிறது. இது"பீஏஎம்" (Pam), "பீபீஎம்" (PPM) என்பவற்றுக்கு வேறுபட்டது. PDP : பீடிபீ : ஒரு வகைக் கணினி. டிஜிட்டல் எக்யூப் மென்ட் கார்ப்பரேஷன் (Digital Equipment Corporation) என்ற அமைவனம் தயாரிக்கும் கணினிகளின் பெயர்.

PDS : பீடிஎஸ் : 1. நேரடி செயலிக் செருகுவாய் எனப் பொருள்படும் Processor Direct Slot என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மெக்கின்டோஷ் கணினிகளில் மையச் செயலகத்தின் சமிக்கைகளோடு நேரடியாக இணைக்கக் கூடிய விரிவாக்கச் செருகுவாயைக் குறிக்கிறது. ஒரு கணினியில் செயல்படும் மையச்செயலியைப் பொறுத்து பல்வேறு எண்ணிக்கையிலான பின்கள் மற்றும் பல்வேறு சமிக்கைத் தொகுதி கொண்ட பல்வேறு வகை பீடிஎஸ் செருகுவாய்கள் உள்ளன. 2. இணைநிலை தரவு கட்டமைப்பு என்று பொருள்படும் Parallel Data Structure என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறுக்கம். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களில் மூலக்கோப்பகத்தில் (Root Directory) மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு. ஆப்பிள் ஷேர் நிரலின்கீழ் பகிர்ந்து கொள்ளப்படும் கோப்பு இது. பல்வேறு கோப்புறைகளின் அணுகு சலுகைத் (Access Privilege) தரவுவைக் கொண்டிருக்கும்.

. pe : . பீஇ : ஒர் இணைய தள முகவரி பெரு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

peak load : உச்சச் சுமை.

peak volume : உச்ச ஒலி அளவு.

. pe. ca : . பீஇ. சிஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வார்டு தீவுகளைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

pedagogical development : கற்பித்தல் நெறிமுறை.

PEEK : கூர்நோக்கு : கணினியின் செயல்முறைப்படுத்தத்தக்க நினை வகத்தில் அமைவிடம் எதனையும் கூர்ந்து நோக்கு வதற்குச் செயல் முறையாளரை அனுமதிக்கிற கணினி மொழி நிரல்.

peek-a-boo system : துளைகாண் முறை : அட்டைகளை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி வைத்து அவற்றிலுள்ள ஒரு படித்தான அமைவிடங்களில் துளைகள் இருக்கின்றனவா, இல்லையா என்பதைச் சரி பார்க்கும் முறை.

peep : எச்சரிக்கையொலி.

peer : சக : தகவல் தொடர்புகளில் ஒரே வரைமுறை அளவில் உள்ள வேறொரு இயங்கும் அலகு.

peer to peer : சம உரிமை;சகாவுக்குச் சகா ;சமனிக்குச் சமணி.

peer-to-peer architecture : சம உரிமைக் கட்டுமானம் : தரவு தொடர் புக்கும் தரவுவைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரே நிரலை அல்லது ஒரே வகையான நிரலைப் பயன்படுத்துகின்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் பிணைக்கப் பட்ட ஒரு பிணையம். சமணி (peer) என அழைக்கப்படும் ஒவ்வொரு கணினியும் சமமான கடப்பாடுகளைக் கொண்டவை. பிணையத்தில் ஒவ்வொரு கணினியும் பிறவற்றுக்கு வழங் கனாகச் செயல்படுகின்றன. கிளையன்/வழங்கன் கட்டுமானத்தில் உள்ளதுபோல் ஒரு தனி கோப்பு வழங்கன் இப்பிணையத்தில் தேவையில்லை. எனினும் தரவு போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது கிளையன்/வழங்கன் அமைப்பினைப்போல் செயல்திறன் இருக்காது. இக்கட்டுமானம் சம உரிமைப் பிணையம் (peer-to-peer network) என்றும் அழைக்கப்படும்.

peer-to-peer communications : சம உரிமைத் தகவல் தொடர்பு : அடுக்கு நிலைக் கட்டுமான அடிப்படையில் அமைந்த ஒரு பிணையத்தில் ஒரே தகவல் தொடர்பு மட்டத்தில் செயல்படக்கூடிய சாதனங்களுக் கிடையேயான தகவல் பரிமாற்றம். ஒன்று வழங்கன் (server) இன்னொன்று கிளையன் (client) என்கிற பாகுபாடு இதில் இல்லை.

peer-to-peer network : சகாவுக்கு சகா பிணையம் : அனைத்து பயனாளர் களும் அனைத்துப் பணி நிலையங்களில் தரவுகளை அணுக அனுமதிக்கும் குறும்பரப்பு பிணையம். அர்ப்பண கோப்பு வழங்கிகள் தேவைப்படாது. ஆனால் பயன் படுத்தப்படலாம்.

PEL : பீஈஎல் : படப்புள்ளி.

pen-based computing : பேனா சார்ந்த கணிப்பு : கணினியில் கையெழுத்து மற்றும் அடையாளங்களை நுழைக்க பேனாவைப் பயன்படுத்துதல்.

Pen Carriage : பேனாச் சகடம்.

pen computer : பேனாக் கணினி : முதன்மை உள்ளீட்டுச் சாதனமாக விசைப்பலகைக்குப் பதி லாக பேனா (எழுத்தாணி) பயன்படுத்தப்படுகிற கணினி வகை. பேனாக் கணினி பெரும்பாலும் மிகச்சிறியதாக கையடக்கமான சாதனமாக இருக்கும். எல்சிடி திரை போன்ற குறைகடத்தி அடிப்படையிலான தட்டை வடிவ திரை யகம் கொண்டவை. பேனா உள்ளிட்டுச் சாதனத்தில் பணி யாற்றுவதற் கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனியான இயக்க முறைமையில் செயல் படும். அல்லது இத்தகு சிறப்புப் பயன் சாதனத்துக் கென்றே உரு வாக்கப்பட்ட தனிப்பட்ட இயக்க முறைமையில் செயல்படும் சொந்த இலக்கமுறைத் துணைவர்கள் (Personal Digital Assistants) எனப்படும் நவீன கணினி வகையின் முன்னோடி மாதிரிகளாக பேனாக் கணினிகள் விளங்குகின்றன.

Pen Plotter : பேனா வரைவி : பார்க்க : வரைவி (Plotter), முரசு வரைவி (Drum Plotter) இது, நிலை மின்னியல் வரைவிலிருந்து (Electrostatic Plotter) வேறுபட்டது.

penpoint : பென்பாயுன்ட் : கோ கார்ப்பரேஷன் உருவாக்கிய இயக்க அமைப்பு. கையால் எழுதும் உள்ளிடுக்கு இடைமுகத்தை அறிவது. டாஸ் ஏற் புடை கோப்பு அமைப்பை அது பயன்படுத்துகிறது. ஆனால் டாஸ் பயன்பாடுகளை ஏற்பதில்லை. எழுதுபவரின் பேனா வீச்சுகளின் போக்கு, வேகம் மற்றும் ஒழுங்கு ஆகியவை ஆராய்ந்து ஏற்கப்படுகின்றன.

pentium : பென்டியம் : மார்ச்சு 1993இல் இன்டெல் நிறுவனம், இன்டெல் ஐ486 செயலிக்கு வாரிசாக அறிமுகப்படுத்திய புதிய நுண்செயலி. சிஸ்க் (CISC) அடிப்படையிலான நுண்செயலி. 33 இலட்சம் மின்மப் பெருக்கிகளைக் கொண்டது. 32 பிட் (துண்மி) முகவரிப் பாட்டை, 64 பிட் (துண்மி) தரவு பாட்டை, உள்ளிணைக்கப் பட்ட இரண்டு 8. கேபி நிலை-1 (L1) இடை மாற்றகம் ஆகியவை கொண்டது. முறைமை மேலாண்மைப் பாங்கு உண்டு. இதன்மூலம் கணினி மையச் செயலகம் தொடர்பிலாப் பணி செய்யும்போதும் எப்பணியுமின்றி வாளா இருக்கும்போதும் சில முக்கிய கணினி உறுப்புகளை மெதுவாக இயக்க அல்லது நிறுத்திவிட நுண்செயலியால் முடியும். தரவு நம்பகத்தன்மை, செயல்பாட்டு மிகைமைச் சரிபார்ப்பு ஆகிய வசதிகளும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. Pentium Pro : பென்டியம் புரோ : நவம்பர் 1995இல் இன்டெல் வெளியிட்ட 150-200 மெகா ஹெர்ட்ஸ் வேக 32 பிட் (துண்மி) செயலிகளின் குடும்பம். 8086 குடும்பச் செயலிகளின் அடுத்த தலைமுறை செயலிகளாகப் பென்டியம் புரோ விளங்கியது. பென்டியம் செயலிகளின் அடுத்தகட்ட வளர்ச்சி ஆகும். 32 பிட் (துண்மி) இயக்க முறைமைகளும் பயன்பாடுகளும் இதில்செயல் படும். இந்த வரிசையில் அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்டுள்ள செயலி பன்டியம் 4 ஆகும். 1. 7 GHz வேகத்தில் செயல்படுகிறது.

pentium upgradable : பெண்டியமாய் மேம்படுத்தத்தகு : 1. பென்டியம் வகைச் செயலியைப் பொருத்த முடிகிற ஐ486 தாய்ப் பலகை, 2. பென்டியம் செயலி பொருத்தி பென்டியம் வகை பீசியாய் மேம்படுத்த முடிகிற 486பீசி.

peopleware : அலுவலாளர்கள்;மனித வளம் : செயல்முறைகளை வடிவமைத்தல், கணினிச் சாதனங்களை இயக்கிப் பேணி வருதல் போன்ற பணிகளைச் செய்கிற அலுவலர்கள்.

pepper board : மிளகு அட்டை : நெம்பர் நைன் கம்ப்யூட்டர் கார்ப்பரேசன் உருவாக்கிய பீசி-க்களுக்கான வரைகலை காட்சி அட்டைகளின் குடும்பம். கேட் (CAD) மற்றும் உயர் வரைவு வரைகலை பயன்பாடுகளுக்குத் தேவைப் படும் அதிகத் தெளிவான உருவங்களை வழங்குகிறது.

perfective : முழுமையாக்கல்.

perforator : துளையிடு விசை;துளைப்பி : காகித நாடாவில் துளையிடு வதற்கான விசைச் சாதனம்.

perform : நிறைவேற்று;செயலாற்று : ஒரு கணினியில் நிரல்களை நிறைவேற்றுதல்.

performance : நிறைவேற்றத் திறன்;செயலாற்றல் : ஒரு பொறியமைவின் மொத்த உற்பத்தித் திறனை அறுதியிடுவதற்கான முக்கியக் காரணி. இது பெரும்பாலும், அணுகு வசதி, வெளிப்பாடு, நிறைவேற்றக் காலம் ஆகிய வற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

performance monitor : செயற்பாட்டு முகப்பு;நிறைவேற்ற அறிவிப்பி; செயலாற்றல் கண்காணிப்பி : ஒரு கணினியினால் நிறைவேற்றப்படும் பணிகளின் அளவுகளைக் கண்காணித்துக் காட்டும் செயல்முறை. perfory : துளைப்பட்டை : விசிறி மடிப்புக் கணினிக் காகிதத்தின் இரு பக்கங்களிலும் உள்ள, பிரித்தெடுக்கத்தக்க துளையிட்ட பட்டைகள்

perts : துளைகள் : குண்டுசி ஊட்டு விளிம்புகளை அகற்றி விட்டு தொடர் காகிதத்தை தனித்தனிப் பக்கங்களாகக் கிழித்தெடுப்பதற்கு உதவக் கூடிய துளைகள்.

period : காலம்;நேரம் : ஒர் அதிர்வலை ஒரு முழுசுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம். ஒர் அதிரும் மின்அலையில் திரும்ப நிகழ்வுகளுக்கு இடையே உள்ள காலஇடவெளி. f என்பது அதிர்வின் அலைவுஎண் (ஹெர்ட்ஸில்), t என்பது நேரம் (வினாடியில்) எனில், t=1/f ஆகும்.

periodic reports : காலமுறை அறிக்கை : பயன்படுத்துவோருக்கு ஒழுங்கான முறையில் தகவல்களை அளிக்கிற அறிக்கை.

period, retention : தக்கவைப்புக் காலம்.

Peripheral : வெளிப்புற;சுற்றப்பட்ட;வெளிப்பட்ட : கணினியுடன் இணைக்கப்படும் முகப்பு, விசைப்பலகை, அச்சுப் பொறி, பிளாட்டர், வட்டு அல்லது நாடா இயக்கி, வரைகலை டேப்லெட், ஸ்கேனர், ஜாய்ஸ் டிக், பேடில் மற்றும் சுட்டி எந்த ஒரு வன்பொருள் சாதனமும்.

peripheral device : வெளிப்புறச் சாதனம் : ஒரு கணினி அமைப்பால் மையச் செயலகத்தைத் தவிர்த்த வெளிப்புற தகவல் தொடர்பினை வழங்கும் எந்த ஒரு கருவி அலகும், மையச் செயலக அல்லது அமைப்புப் பெட்டியின் வெளிப்புறத்தில் இணைக்கப்படுவதால் அவற்றை வெளிப்புறச் சாதனங்கள் என்று அழைக்கிறோம்.

Peripheral equipment : புற நிலைக் கருவி;புறநிலைச் சாதனம் : ஒரு கணினியமைவில் மையச் செயலகத்திலிருந்து வேறுபட்டுள்ள புறநிலைச் செய்தித் தொடர்புக்கு வசதி செய்து கொடுக்கிற சாதனங்களின் ஒர் அலகு. மைய செயலகத்தின் புறப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இவை "புறநிலைச் சாதனங்கள்"எனப்படுகின்றன. எடுத்துக் காட்டு : உட்பாட்டு/வெளிப் பாட்டு அலகுகள்;துணைச் சேமிப்பு அலகுகள்;அட்டைப் படிப்பி தட்டச் சுப்பொறி, வட்டுச்சேமிப்பு அலகு.

peripheral equipment operator : புறநிலைச் சாதன இயக்குநர் : சந்தடி மிகுந்த ஒரு கணினிக்கூடத்தில், கணினி இயக்கு நருக்கு கணினியின் சேர்முனைப் (console) பொருப்பு குறித்தளிக்கப்படுகிறது. அவர் அதை விட்டுமிக அரிதாகவே அப்பால் செல்கிறார். வட்டு அடுக்குகளை ஏற்றி இறக்கவும், நாடாக்களைப் பொருத்தவும், அட்டைகளை அடுக்கவும், வெளிப்பாடுகளுக்கு முத்திரையிடவும், பல்வேறு உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்களை இயக்கவும் கூடுதல் ஆட்கள் உதவுகிறார்கள். இவர்கள் பொதுவாகப் புறநிலைச் சாதன இயக்குநர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

peripheral power supply : மாற்று மின்வழங்கி : ஒரு கணினி அல்லது ஒரு சாதனத்துக்கு வழங்கப்படும் வழக்கமான மின்வழங்கியில் பழுதேற் படும் போது மாற்று ஏற்பாடாக வைக்கப்பட்டுள்ள துணை நிலை மின்வழங்கி.

peripherals : வெளிப்புறக் கருவிகள் : ஒரு கணினி அமைப்பின் உள்ளீடு/வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் துணை நிலை சேமிப்பு அலகுகள்.

Periphery : சுற்றுவரை.

Perl : பேர்ல் : ஒரு கணினி மொழி. செய்முறைப் பிழிவு மற்றும் அறிக்கை மொழி என்று பொருள்படும் Practical Extraction and Report Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சி-மொழி மற்றும் யூனிக்ஸின் பல்வேறு பயன் கூறுகளின் அடிப்படையில் அமைந்த நிரல் மாற்றி (Interpreter) அடிப்படையிலான மொழி. உரைக் கோப்புகளிலிருந்து தகவலைப் பிரித்தெடுக்க மிகவும் திறன்வாய்ந்த, சரம் கையாளும் வசதிகளைக் கொண்டது பேர்ல் மொழி. சொற்களை இணைத்து ஒரு சரத்தைத் தொடுத்து அதனை ஒரு கட்டளை வடிவில் செயல் தளத்துக்கு (shell) அனுப்பும் திறனுள்ள மொழி. எனவே, பேர்ல் பெரும்பாலும் முறைமை மேலாண்மைப் பணிகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. பேர்ல் மொழியில் எழுதப்படும் ஒரு நிரல் உரைநிரல் (script) எனப்படும். அமெரிக்க நாட்டு நாசா நிலையத்தின் பொறி உந்துதல் ஆய்வுக்கூடத்தில் லேரி வால் (Larry Wall) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

permanent font : நிலையான அச்செழுத்து : அச்சுப்பொறி நிறுத்தப் படும்வரை அச்சுப்பொறியின் நினைவகத்தில் தங்கியுள்ள அச்செழுத்து மென்பொருள். permanent storage:நிலைச் சேமிப்பி;நிலைத் தேக்கம்.

permanent swap file:நிலைத்த மாறுகொள் கோப்பு:விண்டோஸ் இயக்க முறைமையில்,மெய்நிகர் நினைவகச் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தப் படும் தொடர்ச்சியான வட்டுப் பிரிவுகளில் எழுதப்பட்ட ஒரு கோப்பு.

permission:அனுமதி:ஒரு பிணைய முறை அல்லது பல் பயனாளர் கணினி அமைப்புகளில் தன்னுடைய பயனாளர் கணக்கு மூலமாக ஒரு தரவுவை/வசதியை அணுகிப் பெற ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு வழங்கப்படுவது.இத்தகைய அனுமதிகளை முறைமை நிர்வாகி அல்லது அதிகாரம் தரப்பட்ட வேறு நபர் பயனாளருக்கு வழங்குகிறார்.இந்த அனுமதி கள் பற்றிய தரவு மையக் கணினியில் பெரும்பாலும் அனுமதிக் குறிப்பேடு permission log என்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன.பயனாளர் கணினி அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வளத்தை(தரவு/வசதி)அணுக முற்படும் போது அனுமதிக் குறிப்பேட்டில் சரி பார்க்கப்பட்டு முடி வெடுக்கப்படுகின்றன.

permission,access:அணுகு அனுமதி.

permutation:வரிசை மாற்ற வகை:ஒரு பெரிய தொகுதியில் உள்ள பொருள்களின் ஒரு வகையான சேர்ப்பு முறை.சான்றாக, 1, 2, 3 என்னும் தொகுதி எண்களில் 6 வகையான பெர்முட்டேஷன்களைச் செய்ய முடியும். 12, 21, 13, 31, 23 மற்றும் 32.

perpendicular recording:செங்குத்துப் பதிகை:காந்த ஊடகங்களின் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான ஒரு வழி முறை.இம்முறையில் பதிவு செய்யும் தளத்துக்குச் செங்குத்து திசையில் அமையும் காந்தத் துருவங்களின் போக்கு,துண்மி(பிட்)மதிப்புகளைத் தீர்மானிக்கின்றன.

Persistence:உறுதிப்பாட்டுத் திறன்;நீடிப்பாற்றல்:ஒரு செறிவற்ற எரியத்தின்(Phosphor)ஒளியாற்றல் நீடிப்புத் திறன்.ஒர் எரியத்திற்கு எலெக்ட்ரான் துப்பாக்கிகள் மூலம் கிளர்ச்சியூட்டிய பிறகு அது மங்கத் தொடங்குவதால்,அது மிகவும் மெதுவாக மங்குவதற்கு ஒரு நீண்ட உறுதிப்பாட்டுத் திரை உதவுகிறது. persistent data : நிலைத்த தரவு : தரவுத் தளத்திலோ, நாடா போன்ற சேமிப்புச் சாதனங்களிலோ ஒருமுறை பதியப்படும் தரவு அடுத்த முறை அணுகும்போது அழிந்து விடாமல் நிலைத்திருத்தல்.

persistent storage : நிலைத்த சேமிப்பு : 'ரோம் (ROM) போன்ற நினைவகச் சேமிப்புச் சாதனங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்ட பின்னும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்படும் தரவு.

personal and personality interview : நேரடி மற்றும் ஆளுமைக்கான நேர்காணல்.

personal communication : தனி வழி தகவல் தொடர்பு.

Personal computer : சொந்த கணிணி;தனிமுறைக் கணிணி : நியாயமான விலையில் கிடைக்கும் நுண்கணினியமைவு. இது சொந்தப் பயன்பாட்டுக்கு உரியது. வணிகப் பயன் பாட்டுக்கு உரியதன்று.

Personal computing : சொந்த கணினி முறை : தரவுகளைப் பெறுதல் அல்லது பதிவு செய்தல் போன்ற பயன்பாடு களுக்காகத் தனிநபர்கள், ஒரு சொந்தக் கணிணியை-பொது வாக ஒரு துண்கணினியைப் பயன்படுத்துதல். இது பெரும்பாலும் தானியங்கி விரைவுக் காசாளர் எந்திரங்களுடன் (Automatic Teller Machines) பயன் படுத்தப்படுகிறது.

personal finance manager : சொந்தக் கணக்கு மேலாளர் : பணம் கொடுத்த ரசீதுகள், காசோலைகள் போன்ற எளிய வரவு-செலவுக் கணக்கு வைப்புப் பணிகளுக்கு உதவுகின்ற ஒரு மென்பொருள் பயன் பாட்டுத் தொகுப்பு.

personal form letter : தனியாள் படிவக் கடிதம்.

Personal identification number : தனியாள் அடையாள எண்.

Personal Information Manager (PIM) : தனி நபர் தகவல் மேலாளர் (பிஐஎம்) : சொற்பகுதி, எண் தரவு ஆகியவற்றை குறிப்புகள், பட்டியல்கள் குறிப்புரைகள் மற்றும் பலதரப்பட்ட பிற வகைகளில் இறுதிப்பயனாளர்கள் சேமித்து ஒழுங்குபடுத்தி, திரும்பப் பெறுவதற்கான மென்பொருள் தொகுப்பு.

Personalized form letter : உருப்படிவக் கடிதம் : ஒரு சொல் செய் முறைப்படுத்தும் பொறியமைவினால் அல்லது ஒர் இணைப்பு அச்சடிப்புச் செயல்முறை யினால் கணினிவழி உருவாக்கப்பட்ட படிவக் கடிதம். personal video recorder (PVR) : தனியாள் ஒளிக்காட்சிப் பதிப்பி.

Personal Workstation : தனிநபர் பணி நிலையம் : தனிநபர் கணினி அல்லது பணி நிலையங்கள் போன்றதே.

perspective view : தொலையணிமைக் காட்சி : கணினி வரைகலையில் பொருள்களை முப்பரிமாணத்தில் (உயரம், அகலம், ஆழம்) காட்டும் ஒரு காட்சிமுறை. ஆழத்தன்மையை விருப்பப்படும் அளவுக்கு அமைத்துக் கொள்ளும்முறை. மனிதக் கண்களுக்கு ஒர் உண்மையான காட்சியைக் காண்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

PERT : பெர்ட் : திட்ட மேலாண் முறை : செயல்முறை மதிப்பீடு மற்றும் மறு ஆய்வு உத்தி என்று பொருள்படும்Programme Evaluation and Review Techniqueஎன்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, ஒரு செய்முறையின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தேவைப்படும் காலவரம்பினையும், ஒவ்வொரு நடவடிக்கையின் முடிவுக்கும், அடுத்து வரும் நடவடிக்கையின் செயலுக்குமிடையிலான தொடர்புகளையும் பகுப்பாய்வு செய்வதை உள்ளடக்கிய நீண்ட காலப் பேரளவுத் திட்டங் களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மேலாண்மை உத்தி.

PERT chart : பெர்ட் வரைபடம் : காலத்திற்கு எதிரான பணிக் கூறுகளின் கூட்டுச் சார்புடைமைகளைக் குறிக்கும் வரை படம். இது வட்டங்களாகவும், இணைப்புக் கோடுகளாகவும் வரைகலை முறையில் காட்டப் பட்டிருக்கும்.

peta : பீட்டா : ஒரு குவாட்ரில்லியனைக் (1010) குறிக்கும். P என்ற எழுத்தால் குறிப்பர். 2-ஐ அடியெண்ணாகக் கொண்ட இரும எண் முறையில் பீட்டா என்பதன் மதிப்பு 1, 122, 899, 906, 842, 624 ஆகும். இரண்டின் அடுக்காகக் கூறுவதெனில் 230எனலாம்.

petabyte : பீட்டாபைட் : PB என்ற எழுத்துகளால் குறிக்கப்படும். ஒரு குவாட்ரில்லியன் பைட்டுகளைக் (1, 125, 899, 906, 842, 624) குறிக்கிறது.

PET computer : பெட் கணினி : Personal Electronic Transaction Computer என்பதன் குரும்பெயர். 1977 இல் கம்மோடர் நிறுவனம் சிபி/எம் மற்றும் ஃபிளாஸ்டிக் சார்ந்த தனிநபர் கணினியை அறிமுகப் படுத்தியது. முதல் மூன்று தனி நபர் கணினிகளில் இதுவும் ஒன்று.

Petri nets : பெட்ரி வலைகள் : ஒரு போகு ஒருங்கிணைவுடன் கூடிய பொறியமைவுகளைக் குறிப்பதற்கான பயனுள்ள மாதிரி உருவம்.

. pg : பீஜி : ஒர் இணைய தள முகவரி பாப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

PGP : பீஜிபீ : மிகச் சிறந்த அந்தரங்கம் என்று பொருள்படும் Pretty Good Privacy என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஃபிலிப் ஸிம்மர் மான் (Philip Zimmermann) உருவாக்கிய ஆர்எஸ்ஏ படிமுறைத் தருக்கத்தின் அடிப்படையில் அமைந்த பொதுத்திறவி மறையாக்க (Public Key Encryption) முறைக்கான ஒரு நிரல். பீஜிபீ. மென்பொருளின் பராமரிப்பு உதவியில்லாத இலவசப் பதிப்பும், உதவியுள்ள வணிகப் பதிப்பும் கிடைக்கின்றன.

. ph : பிஹெச் : ஒர் இணைய தள முகவரி ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

phase : அலையிடைப்படி;மாறுபாட்டுக் கோணம்;அலை ஒப்புப் படிநிலை : ஒரே அலை வரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு 360 டிகிரிகள். ஒரு சமிக்கை இன்னொன்றை 0 முதல் 180 டிகிரிகள் வரை முந்தவோ பிந்தவோ முடியும்.

Phase change recording : நிலை மாற்றப் பதிவிடல் : ஒளிமுறை பதிவாகும் தொழில் நுட்பம். உலோக மேற்பரப்பின் படிகப் பகுதியில் மாற்றியமைப்பதன் மூலம் துண்மியை உருவாக்க லேசர் பயன் படுத்தப்படுகிறது. படிக்கும்போது துண்மி ஒளியைப் பிரதிபலிக்கிறது அல்லது ஏற்றுக் கொள்கிறது.

Phased conversion : படிப்படி மாற்றம் : பழைய தரவு அமைப்பிற்குப் பதிலாகப் புதிய அமைப்பினைப் படிப்படியாகப் புகுத்துவதற்கான பொறி யமைவு நிறைவேற்ற முறை. இது நேரடி மாற்றத்திற்கு (direct conversion) மாறுபட்டது.

phase encoding : அலையிடைப் படி குறியாக்கம் : 1. தொடர் முறை (Analog) சுமப்பி அலை மீது இலக்க முறைத் தரவுவை ஏற்றும் செயலாக்க முறை. குறிப்பிட்ட கால இடவெளியில் சுமப்பியின் படிநிலைக் கோணத்தை மாற்றி, தரவு அனுப் புகையில் துண்மி (பிட்) அடர்வு அதிகரிக்கப்படுகிறது. 2. மின்காந்த சேமிப்புச் சாதனங்களில் தரவுவைப் பதியும் ஒரு வகைத் தொழில்நுட்பம். இந்த முறையில் தரவு சேமிப்பு அலகு இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ் வொன்று எதிரெதிர் துருவநிலை கொண்டதாக காந்தப்படுத்தப்படுகிறது.

Phase locked : நிலைபூட்டிய : ஒரு மின்னணு மின்சுற்றில் ஒரே நேரத்திய தாக்குதலைப் பராமரிக்கும் தொழில்நுட்பம். உள்ளீட்டு சமிக்கைகளிடமிருந்து மின்சுற்றுகள் அவற்றின் நேரத்தை அமைத்துக் கொள்கின்றன. மேலும், ஒரேநேரத்தில் எல்லாம் இயங்குகின்றனவா என்பதற்கான பதில்பெறும் மின்சுற்றுகளையும் அவை வழங்குகின்றன.

Phase modulation : நிலைக் குறிப்பேற்றம் : அனுப்பும் தொழில்நுட்பம் தரவு சமிக்கையை அதனைக் கொண்டு செல்லும் அமைப்புடன் சேர்க்கிறது. கேரியரின் நிலையை மாற்றியமைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது.

phase-shift keying : படிநகர்வு குறியாக்கம் : தகவலைக் குறியாக்கம் செய்ய இணக்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு தொடர்பு வழிமுறை. இலக்க முறைத் தரகவலை ஏந்திச் செல்ல ஒரு சுமிப்பி அலையின் படி நிலை நகர்வு, அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. இந்த நுட்பத்தின் எளிய வடிவம், சுமப்பி அலையின் படிநிலை இருநிலைகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கும். 0 டிகிரி நகர்வு இருக்கும் அல்லது 180 டிகிரி நகர்வு இருக்கும். அலையின் படிநிலையை நேரெதிராக மாற்ற முடியும்.

Pheripheral Slots : புறநிலைத் துளை விளிம்புகள் : சில கணினிகளின் இல்லத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வெற்றுத் துளை விளிம்புகள். இவற்றின் மூலம், வன்பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் திறம்பாடுகளைப் பெருக்குவதற்கு, அச்சிட்ட மின்சுற்று வழி அட்டைகளைச் சேர்க்கலாம். மின்சுற்றுவழிப் பலகைகளைச் செருகுவதற்கான தாய்ப் பலகை குழிப் பள்ளங்கள்.

phoenix BIOS : ஃஃபோனிக்ஸ் பயாஸ் : ஃபோனிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரிக்கும் ரோம் பயாஸ் (ROM BIOS). ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளுக்கு உகந்தது. பீசி வார்ப்புக் கணினி களுக்கான மிகவும் செல்வாக்குப் பெற்ற ரோம் பயாஸ். ஐபிஎம் ஒத்தியல் புக் கணினிகளிடையே, சந்தையில் அறிமுகப்படுத்தப் பட்டவுடனேயே ஃபோனிக்ஸ் மிகவும் புகழ்பெற்று விட்டது.

பேசி இணைப்பி

phone connector : பேசி இணைப்பி : நுண்பேசி அல்லது ஒரு இணைதலைபேசி (Head phone) போன்ற ஒரு சாதனத்தை ஒரு கேட் பொலிக் கருவி அல்லது கேட்பொலித் திறனுள்ள தகவி ஆகியவற்றுடன் இணைக்கப் பயன்படும் ஒர் உடன் இணைப்பு.

phone dialer : தொலைபேசிச் சுழற்றி.

phone hawk : தொலைபேசிக் கொள்ளையன் : மோடெத்தின் மூலம் ஒரு கணினியை அமைத்து தரவுகளை நகலெடுப்பது அல்லது அழித்தலைச் செய்பவனைக் குறிப்பிடும் குழு உச் சொல்.

phoneme occurance : சொல்லில் எழுத்து வருகை.

Phonemes : ஒலியன்கள் : மனிதர் பேசும்முறையில் அடங்கியுள்ள மாறுபட்ட ஒலிகள். பேசும் சொற்களின் மிகச்சிறிய அலகுகள். எடுத்துக்காட்டு : க், ச், ஷ்.

phonetic key board : ஒலியியல் விசைப்பலகை.

Phonetic System : ஒலியியல் முறை : குரல் தகவல் (ஒலியன்கள்) அடிப்படையிலான தரவுகளைப் பயன்படுத்திப் பேச்சு மொழி போன்ற ஒலிகளை உண்டாக்கும் முறை.

phonological analysis : ஒலியமைப்புப் பகுப்பாய்வு.

phosphor : எரியம் : பூமியில் அரிதாகக் கிடைக்கும் பொருள். இது எதிர் மின்கதிர்க் குழலின் உள்முகப்பில் பூசுவதற்குப் பயன்படுகிறது. ஒரு செய்தி அறிவிப்பின் எலெக்ட்ரான் துப்பாக்கிகள் உண்டாக்கும் ஒளியினை இது இருத்தி வைத்துக் கொள்கிறது. திரையில் காணும் ஒவ்வொரு புள்ளியும் உண்மையில் ஒரு குறிப் பிட்ட நேரம் ஒளிரக்கூடிய ஒர் எரியமே ஆகும். புள்ளிகள் ஒர் உருக் காட்சியை உருவாக்கப் பயன்படுகின்றன.

photo composition : ஒளிப்பட அச்சுக்கோப்பு : அச்செழுத்துகளைக் கோப்பதற்கு மின்னணுவியல் செய்முறைப் படுத்துதலைப் பயன்படுத்துதல். அச்செழுத்துகளை வரையறுப்பதையும், அமைப்பதையும், அதனை ஒளிப்படச் செய்முறைப்படித் தயாரிப்பதையும் இது உள்ளடக்கும்.

photoCD : ஃபோட்டோ சிடி;ஒளிப்பட சிடி;ஒளிப்படக் குறுவட்டு : கோடாக் நிறுவனம் உருவாக்கய இலக்கமுறையாக்கத் தொழில் நுட்பம், 35மிமீ சுருள், நெகட்டிவ்கள், படப்பலகைகள் (slides), வருடப்பட்ட படிமங்கள் ஆகிய வற்றை ஒரு குறுவட்டில் சேமிக்கும் முறை. கோடாக் ஃபோட்டோ சிடி இமேஜ் பேக் என்னும் கோப்பு வடிவாக்கமுறை என்றழைக்கப்படுகிறது. சுருக்கமாக பீசிடி என்பர். பெரும்பாலான ஒளிப்பட, படச் சுருள் தொழி லகங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. ஃபோட்டோ சிடியில் சேமிக்கப் படும் படிமங்களை சிடி-ரோம் மற்றும் பீசிடி கோப்புகளைப் படிக்கும் மென்பொருள் உள்ள எந்தவொரு கணினியிலும் பார்க்கமுடியும். சி. டி-க்களில் பதியப்பட்டுள்ள படிமங்களைப் பார்வையிடுவதற்கென வடி வமைக்கப்பட்ட எந்தவொரு கருவியிலும் இப்படிமங்களைக் காணமுடியும்.

photoconductor : ஒளியில் கடத்தி : ஒளிபடும்போது கடத்தும் திறம் அதிகரிக்கின்ற ஒரு பொருள். ஒளியில் கடத்திகள் பெரும்பாலும் ஒளி யுணர்வுகளில் பயன்படுத்தப் படுகின்றன. ஒளியிழை வடங்களில் ஒளியை ஏற்று அதனை மின்துடிப்பாக மாற்றும் பணியை இவை செய்கின்றன.

photoelectric devices : ஒளிப்பட மின்னியல் சாதனங்கள் : கண்ணுக்குப் புலனாகும் அகச்சிவப்பு அல்லது புறவூதாக் கதிர்வீச்சின் விளைவாக ஒரு மின்னியல் சைகையினை உண்டாக்கும் சாதனங்கள்.

photo editor : ஒளிப்பட தொகுப்பி : வருடப்பட்ட ஒளிப்படம் போன்ற படிமங்களை இலக்கமுறை வடிவில் கையாள் வதற்கான வரைகலைப் பயன்பாடு.

photo pattern generation : ஒளிப் படத் தோரண உருவாக்கம் : ஒன்றன்மேல் ஒன்று படிந்துள்ள அல்லது அடுத்தடுத்துள்ள செவ்வகப் பரப்புகளின் ஒரு தோரணியில் ஒளிபடும்படி செய்து ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்று வழித்திரையை உண்டாக்குதல்.

photo plotter : ஒளிப்பட வரைவி : அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை வடிவமைப்புக்கும், ஒருங்கிணைந்த மின்சுற்று வழித்திரைகளுக்கும் ஒளிப்பட முறைப்படி உயர்ந்த அளவு துல்லியமான கலைப்படைப்பு மாதிரிகளை உருவாக்குவதற்கான வெளிப்பாட்டுச் சாதனம்.

Photo sensitive : ஒளியுணர்வு.

photo typesetter : ஒளிப்பட அச்சுக் கோப்பி;ஒளி அச்சுக்கோப்பி : வாசகங்களைத் தொழில்முறையான உயர்தர அச்செழுத்துகளாக மாற்றக் கூடிய கணினிக் கட்டுப்பாட்டுச் சாதனம். பெரும்பாலான நூல்கள், ஒளிப்பட அச்சுக் கோப்பிகளில் அச்சுக்கோக்கப்படுகின்றன.

photographic : ஒளிப்படம்.

photo lithography : ஃபோட்டோ லித்தோகிராஃபி : ஒரு சிப்புவில் உள்ள மின்சுற்றுப் பாதைகள் மற்றும் மின்னணுப் பொருள்களின் வடிவமைப்பை தகடின் மேற்பரப்புக்கு மாற்றுகின்ற லித்தோகிரஃபி நுட்பம். சிப்புவின் ஒவ்வொரு அடுக்குக்கும் ஒரு ஒளிப்பட மூடி உருவாக்கப்படும். தகட்டின் மீது ஒளி உணர் திரைப்படப் பூச்சு அளிக்கப்பட்டு ஒளிப்பட மூடி மூலம் ஒளிரும் ஒலியில் காட்டப்படும். தகடினைச் சென்றடையும் ஒளி, படத்தை கடினப் படுத்துகிறது. தகட்டை அமிலத்தில் அல்லது வெப்ப கியாஸ்களில் நனைத்தால் கடினப்படுத்தப்படாத பகுதி செதுக்கி எறியப்படுகின்றன.

photomask : ஒளிப்பட மூடி : ஒளி புகக்கூடிய தகட்டின் தெளிவற்ற உருவம். ஒரு சாதனத்திலிருந்து வேறொன்றுக்கு ஒரு உருவத்தை மாற்ற வேண்டுமென்றால் ஒளி வடிகட்டி பயன்படுத்தப்படுகிறது.

photomicrography : ஒளிப்பட நுண்ணியல் : நுண்காட்டிப் படங்களை ஒளிப்படமெடுத்தல்.

photon : போட்டோன்;ஒளித்துகள் : ஒளியின் அடிப்படைப் பகுதிகள். அதன் மின்னணு இணைப்பகுதியைவிட அது சிறியது. ஆகவே போட் டோனிக் மின்சுற்றுக்குள்ளேயே அதனால் அதிக அளவு சிற்றுரு வாக்க முடியும்.

photonics : ஒளிப்படவியல் : மின்சாரத்திற்குப் பதிலாக ஒளியைப் பயன்படுத்தி எந்திர மின்சுற்றுகளை உருவாக்கிய அறிவியல்.

photo-optic memory : ஒளிப்பட-ஒளியியல் நினைவகம்;ஒளி ஊடக நினைவகம் : சேமிப்புக்காக ஒளியியல் ஊடகத்தைப் பயன்படுத்தும் நினைவகம். எடுத்துக்காட்டு : ஒளிப்படச் சுருளில் பதிவுசெய்வதற்கு ஒரு லேசரைப் பயன்படுத்தலாம்.

photorealism : நடப்பியல் ஒளிப்படம்;ஒளிப்பட நடப்பியல்;ஒளிப்பட எதார்த்தம் : ஒளிப் படத்துக்கு அல்லது நடப்பு வாழ்வின் தரத்துக்கு படங் களை/படிமங்களை உருவாக்குகின்ற செயலாக்கம். கணினி வரைகலையில் எதார்த்த ஒளிப் படத்திற்குத் திறன்மிக்க கணினிகள் தேவை. சிக்கலான கணிதத்தின் அடிப்படையிலான நுட்பம்மிக்க மென்பொருளும் தேவை.

photorealistic image synthesis : ஒளிப்பட நிகழ்வுணர் உருவப் பிரிவு : கணினி வரைகலையில், வரையறை செய்வதற்கான தொரு படிவம். உண்மையான உருவத்தை அது உள்ளபடியே காட்டுகிறது. மேற்பரப்பு உள்ளமைப்பு, ஒளிமூலங்கள், இயக்கத் தடங்கள், பிரதிபலித்தல் போன்ற தன்மைகளை அது உள்ளடக்கியுள்ளது.

photoresist : ஒளித்தடுப்பு : செதுக்குருவ மின்கடத்தாச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் செய்முறை. இதில், ஒரு சிலிக்கன் தகட்டு வில்லையில், இருக்க வேண்டிய பகுதியைத் திரையிட்டு மறைத்து, ஆக்சிகரமான பரப்பு அகற்றப்படுகிறது.

photosensor : ஒளிப்பட உணர் கருவி : ஒளி உணர் சாதனம். ஒளி முறை நுண்ணாய்வு எந்திரத்தில் பயன்படுத்தப்படுவது.

phrase search : சொல்தொடர் தேடல்.

phreak1 : அத்துமீறி : ஒரு தொலைபேசிப் பிணையம் அல்லது பிற பாதுகாக்கப்பட்ட கணினி அமைப்புகளின் அரண்களை உடைத்து நொறுக்குபவர் அல்லது அத்துமீறி உள்ளே நுழைபவர்.

phreak2 : அத்துமீறல் : தொலை பேசிப் பிணையம் அல்லது கணினிஅமைப்புகள்-இவற்றின் அரண்களை உடைத்து நொறுக்கி அத்துமீறல்.

physical : பருப்பொருளான : மின்னணு அல்லது எந்திர நிலையிலான சாதனங்களைக் குறிப்பிடுகிறது. physical address:பருப்பொருள் முகவரி:ஒரு பொருள் அல்லது சாதனத்தின் உண்மையான,எந்திர முகவரி.

physical coordinates:பருப்பொருள் ஒருங்கிணைப்புகள்:ஒளிக் காட்சியமைப்பின் ஒரு இடத்தின் ஒருங்கிணைப்புகள்.இதுமேல் மூலையில் அளப்பதை ஒட்டி அளக்கப்படும்.இது 0.0 என்று கூறப்படும்.

physical design:வடிவமைப்பு;பருப்பொருள்:சேமிப்புச் சாதனங்களில் தரவுகள் எவ்வாறு வைத்து வரப்படுகின்றன என்பதையும் அவை எவ்வாறு அணுகப்படுகின்றன என்பதையும் குறிக்கும் சொல்.

physical-image file:பருநிலை படிமக் கோப்பு:குறுவட்டில்(சிடி ரோம்) பதிவதற்காக வைத்துள்ள தரவுவை நிலை வட்டில் சேமித்து வைத்துள்ள கோப்பு.இவ்வாறு ஒரு கோப்பில் சேமித்து வைப்பது சில சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.குறிப்பாக குறு வட்டில் எழுதும் நேரம் மிச்சமாகிறது. சிதறிக்கிடக்கும் கோப்புகளை தேடிப்பிடித்து தொகுத்து எழுதுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் அதிக நேரம் தவிர்க்கப்படுகிறது.

physical layer:பருநிலை அடுக்கு:ஏழு அடுக்குகள் கொண்ட ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்கின் முதல் அல்லது மிக அடியிலுள்ள அடுக்கு.முற்றிலும் வன்பொருளைச் சார்ந்தது.தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள இரு கணினி களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளின் அனைத்துக் கூறுகளையும் கவனித்துக் கொள்கிறது.வட(cable)இணைப்பு,மின்சார சமிக்கைகள் மற்றும் எந்திர இணைப்புகள் ஆகியவை இவ்வடுக்கின் வரன்முறைகளுள் சில.

physical link:பருபொருள் இணைப்பு:இரண்டு சாதனங்களுக் கிடையிலான மின்னணு இணைப்பு.தரவு மேலாண்மையில்,ஒரு பட்டியல் அல்லது பதிவகத்தில் உள்ள காட்டி வேறொரு கோப்பில் தரவு எந்த இடத்தில் உள்ளது என்பதை அது குறிப்பிடும்.

physical lock:பருநிலைப் பூட்டு:தரவுவை பயனாளர் அணுகுவதைத் தடுத்தல்.பூட்டினைத் திறத்தல்,மூடல்,பொத்தான் அல்லது கோப்பு பாதுகாப்பு எந்திர அமைப்பு மூலம் வழங்கப்படுகிறது.நெகிழ்வட்டின்மேல் செய்வது போன்றது. physical memory : பருநிலை நினைவகம் : ஒரு கணினி அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள மெய்யான நினைவகம். இது மெய்நிகர் நினைவகத்துக்கு (Virtual Memory) மாறானது. 4 எம்பி மட்டுமே பருநிலை ரேம் (RAM) நினை வகம் பொருத்தப்பட்டுள்ள ஒரு கணினியில் 200 எம்பிவரை மெய்நிகர் நினைவகம் வைத்துக் கொள்ள முடியும்.

Physical object : பருநிலை பொருட்கள்.

Physical parts : பருநிலை உறுப்புகள்.

physical record : பருப்பொருள் பதிவேடு : உட்பாட்டுக்கான அல்லது வெளிப்பாட்டுக்கான தரவு அலகு. துளை அட்டை, நாடா வட்டகை, ஒரு வட்டில் பதிவுசெய்தல் போன்றவை இவ்வகையின. ஒர் பருப்பொருள் பதிவுநூல் ஒன்று அல்லது மேற்பட்ட தருக்க முறைப் பதிவுகள் அடங்கி யிருக்கலாம்.

physical security : பருப்பொருள் பாதுகாப்பு : ஒரு கணினி மையத்தில் சாதனங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதற்கான காப்புகள், சிறப்புக் குறி யீடுகள், பூட்டுகள், மணியொலி அமைப்புகள் ஆகியவை.

Pi (pye & π) : பை : “பை”என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்து. வட்டத்தின் விட்டத்திற்கும் சுற்று வரைக்குமுள்ள வீதத்தினைக் குறிக்கும் அடையாள எழுத்து. இதன் மதிப்பு எட்டு பதின்மத் தானங்கள்வரைக் கணக்கிடப் பட்டுள்ளது. π : 3. 14159265'

pica : பிக்கா;அச்செழுத்து அளவீடு : 1. ஒர் அங்குலத்தில் ஆறுவரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப் படிவம்.

picking device : பதிவுச் சாதனம்;பொறுக்குச் சாதனம் : ஒரு காட்சித் திரையில் தரவுகளைப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்பேனா, சுட்டிப் பொறி போன்ற உட்பாட்டுச் சாதனம்.

pico : பிக்கோ : நூறாயிரங் கோடியில் ஒரு பகுதி.

pico computer : பிக்கோ கணினி : ஒரு வினாடியின் நூறாயிரங் கோடி யில் ஒரு பகுதி நேரத்தில் தரவுகளைச் செய்முறைப்படுத்தும் திறன்வாய்ந்த ஒரு கணினி.

pico Java : பிக்கோஜாவா : ஜாவா மொழி நிரல்களை நிறை வேற்றுகிற நுண்செயலி. சன் மைக்ரோசிஸ்.

pico second : பிக்கோ வினாடி : ஒரு வினாடியில் நூறாயிரங் கோடியில் ஒரு பகுதி. Pics : பிக்ஸ் : இணைய உள்ளடக்கத் தேர்வுக்கான பணித்தளம் எனப் பொருள்படும். Platform for internet Content Selection என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி இணையப் பயனாளர் ஒருவர் இணையத்திலுள்ள தமக்குப் பிடித்த தகவலடங்கிய குறிப்பிட்ட தளங்களைத் தாமாகவே தேடி அணுகுமாறு செய்ய முடியும். அதேவேளையில் விரும்பத்தகாத தகவலடங்கிய தளங் களைப் புறக்கணிக்குமாறும் செய்யமுடியும். இவ்வாறு தளங்களைத் தேர்வு செய்ய வெவ்வேறான தரமதிப்பீட்டு முறைகள் பயன்பாட்டில் உள்ளன.

. pict : பிக்ட் : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் பிக்ட் (PICT) வடிவாக்க முறையில் பதிவு செய்யப்படும் வரைகலைப் படிமக்கோப்பு களை அடையாள்ங்காட்டும் கோப்பு வகைப்பெயர்.

PICT : பிக்ட் : பொருள்நோக்கு முறையிலோ பிட்-மேப் முறையிலோ வரைகலைப் படிமங்களைச் சேமிப்பதற்கான ஒரு கோப்பு வடிவாக்க வரையறை. ஆப்பிள் மெக்கின்டோஷ் பயன்பாடுகளில் முதன்முதலாக பிக்ட் கோப்பு வடிவாக்க முறை பயன்படுத்தப்பட்டது. எனினும், பல ஐபிஎம் ஒத்தியல்புப் பயன்பாடுகளும் பிக்ட் கோப்புகளை படிக்க முடியும்.

picture : படம்.

picture box : படப் பெட்டி.

picture element : படத் துகள்;படப் புள்ளி.

picture graph : படவரைவு : பட்டைகளுக்குப் பதிலாகக் குறியீடுகளைப் பயன்படுத்தும் பட்டை வரைபடம்.

picture in picture : படத்துள் படம்.

picture processing : பட அலசல்.

picture tube : படக்குழல் : மின் கதிர்க் கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரைமீது விழச்செய்ய உதவும் அமைப்பு. இது தொலைக்காட்சிப் படக்குழ லாகப் பயன்படுத்தப்படுகிறது.

pie chart : வட்ட வரைபடம் : தகவல்களைக் குறித்துக் காட்ட உதவும் வரைபடம். இதில் தகவல்கள் ஒரு வகை வட்ட வடிவில் வரிசைப் படுத்தப்படு கின்றன. இதனால் தகவலின் ஒவ்வொரு இனத்தையும் ஒருங் கிணைந்த தகவலாகக் கண்ணால் பார்க்கலாம்.

piezoelectric : மின் அமுக்கம் : மின்னழுத்தத்திற்கு உட்படும் போது எந்திரவியல் அழுத்தத்திற்கு உள்ளாகிற அல்லது எந்திரவியல் அழுத்தத்திற்கு உட்படும்போது மின்னழுத்தத்தை உண்டுபண்ணுகிற சில படிகங்களின் பண்பியல்பு.

piggyback board:குட்டி துணைப் பலகை;மின்சுற்று வழிப் பலகை:ஒரு பெரிய மின்சுற்று வழிப் பலகைக்குக் கூடுதல் ஆற்றல் சேர்ப்பதற்காக அந்தப் பெரிய மின்சுற்றுவழிப் பலகையில் பொருத்தப்படும் ஒரு சிறிய அச்சிட்ட மின்சுற்று வழி.

piggyback file:துணைக் கோப்பு;குட்டிப் பைக் கோப்பு:ஒரு கோப்பு முழுவதையும் படியெடுக்காமல் கோப்பின் முடிவில் கூடுதல் பதிவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய கோப்பு.

PILOT:பைலட்(ஒரு கணினி மொழி):வாசகம் அடிப்படையிலான கணினி மொழி.முதலில்,கணினி உதவியுடனான அறிவுறுத்தத்திற்கான ஒர் எழுத்தாளர் மொழியாக வடிவமைக்கப்பட்டது.தொடக்க மாணவர்களுக்கு கணினிச் செயல்முறைப் படுத்துதலைக் கற்பிக்கவும் பயன்படுகிறது.இதில், ஆற்றல் வாய்ந்த,சொற்றொடரியல் உரையாடல் செய்முறைப்படுத்தும் கட்டளைகள் அடங்கியுள்ளன்.

pilot method:வெள்ளோட்ட முறை:விரிவான நடவடிக்கைப் பரப்பில் அல்லாமல்,ஒரே பகுதியில் புதிய கணினி யமைவினைக் கையாள முயலும் நடவடிக்கை.எடுத்துக்காட்டு:ஒர் அமைவனத்தில் புதியதொரு தரவு பொறி யமைவினைப் புகுத்தி,அது வெற்றிகரமாக இயங்குகிறது என்பதைக் கண்டறியும்வரை அதனை அந்த அமைவனத்தின் ஒரு பகுதி மட்டுமே பயன் படுத்துமாறு செய்தல்.

pin:பின்:"சொந்த அடையாள எண்"என்று பொருள்படும்“Personal Identification Number"என்ற ஆங்கிலச் சொல்லின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

பிஞ்ச் ரோலர்

pinch roller:பிஞ்ச் ரோலர்:ஒரு நாடா இயக்கியில் உள்ள சிறிய தாராளமாகத் திரும்பும் சக்கரம் அதை நகர்த்துவதற்காக மோட்டாரால் இயங்கும் நாடாவை அது தள்ளுகிறது.

pin compatible : மாற்றுச் சாதனங்கள் : ஒரே மாதிரியான செயற் பணிகளை ஆற்றும் சிப்புகள் மற்றும் சாதனங்கள் தொடர்புடையது. இவற்றை ஒன்றுக்கு மற்றொன்றை மாற்றிப் பொருத்தலாம். இந்தச் சாதனங்கள் ஒரே உட்பாட்டு/வெளிப்பாட்டுக் குறியீடுகளுக்கு ஒரே இணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

pincushioning : பிங்குஷனிங் : பக்கவாட்டில் சாய்கின்ற திரை தடு மாறல்கள்.

pin feed : குத்தூசி ஊட்டம் : அச்சு எந்திரத்தில் காகிதத்தை வாங்கிக் கொள்ளும் உருளையில் குத்துசி மூலம் காகிதத்தை விடுதல். இது உராய்வு ஊட்டத் திலிருந்து வேறுபட்டது.

குததூசி ஊட்டம்

ping of death : மரண பிங்;மரண அடி ; மரணத் தாக்கு : இணையத்தில் தீங்கெண்ணத்துடன் செய்யப்படும் ஒர் அழிவு நடவடிக்கை. இணையத் தரவு பரிமாற்றத்தில் ஒரு தரவுப் பொதி என்பது 64 பைட்டுகளுக்கு மிகாமல் இருக்கும். இதை விடப் பெரிய பொதி ஒன்றை பிங் நெறிமுறையில் இணையத்தின் வழியாக ஒரு தொலைவுக் கணினிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அக்கணினியை நிலைகுலையச் செய்யமுடியும்.

ping pong : ஒன்றாடப் பயன்பாடு ; மாறி மாறி : உள்ளபடிக்கு கணக்கற்ற கோப்புத் தொகுதியில் செய்முறைப்படுத்துதல் தொடர்ந்து நடைபெறும் வகை யில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புச் சாதனங்களை மாற்றி மாற்றிப் பயன் படுத்துதல்.

ping-pong buffer : பிங்-பாங் இடையகம் : இரு கூறுகளான இடை நினை வகம். இரட்டை இடையகம் எனலாம். இதிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் மாற்றி மாற்றி உள்ளிட்டால் நிரப்பப் படுவதும் வெளியீட்டுக்கு வழித் தெடுப்பதும் நடைபெறும். இதன் காரணமாய் ஏறத்தாழ தொடர்ச்சியான உள்ளிட்டு/வெளியீட்டுத் தரவுகளின் தாரை பாய்ந்து கொண்டிருக்கும்.

pin grid array : பின் கட்டக்கோவை : பலகையில் சிப்புகளைப் பொருத்தும் வழிமுறை. குறிப்பாக ஏராளமான பின்களைக் கொண்ட சிப்பு களுக்குப் பொருத்தமான முறை. பின்கட்டக் கோவை சிப்புகளில், பின்கள் சிப்புவின் அடிப்பாகத்திலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இரட்டை உள்ளிணைப்புத் தொகுப்புள்ள சிப்புகளிலும், ஈயமில்லா சிப்புச் சுமப்பித் தொகுப்புகளிலும் பின்கள் சிப்புவின் பக்கவாட்டு ஒரங்களில் நீட்டிக் கொண்டிருக்கும்.

pinouts : ஊசி வெளியீடுகள் : பல் கம்பி இணைப்பியில் உள்ள ஒவ்வொரு இணைப்பியையும் பற்றிய விளக்கமும், நோக்கமும்.

pins : இணைப்பிகள் : ஒர் இரட்டை உட்பாட்டுத் தொகுதியில், ஒரு அச்சடிப்பி மின்சுற்று வழிப் பலகையிலுள்ள குதை குழிகளில் செருகக் கூடிய சிறிய உலோக இணைப்பிகள்.

இணைப்பிகள்

pipe : குழாய் : ஒரு நிரல் தொடரின் வெளியீட்டை வேறொன்றின் உள்ளீடாக ஏற்றுக்கொள்ள பங்கிடும் இடம். டாஸ் மற்றும் ஒஎஸ்/2இல் குழாய் நிரல் என்பது செங்குத்தான வரி "சுர்" என்ற சொல்லாணை பட்டியலின் வெளியீட்டை வகைப்படுத்தும் பயன்பாட்டுக்கு அனுப்புகிறது.

pipeline : குழாய் இணைப்பு;தேக்க நீக்கம்;குழாய் தொடர் : ஒன்றன்மேல் ஒன்று அழுந்திச் செயற்படும் சுழல் செயற்பணி. கணினிகளின் வேகத்தை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு கணினி நிரலை பல பகுதிகளாகப் பகுத்து, அவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்ற இது உதவுகிறது.

pipelining : முறைவழிப்படுத்தல் : 1. நினைவகத்திலிருந்து நிரல்களைக் கொணர்ந்து குறி விலக்கம் செய்து செயல்படுத்துவதில் ஒரு வழிமுறை. இம்முறையில் ஒரே நேரத்தில் பல நிரலாணைகளை வெவ்வேறு செயல் நிலைகளில் கொணர்ந்து குறிவிலக்கம் செய்து செயல்படுத்த முடியும். இதனால் ஒரு குறிப்பிட்ட நிரலை வேகமாகச் செயல்படுத்த முடியும். நுண் செயலி தேவையின்றிக் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நுண்செயலி ஒர் நிரலையைச்செயல்படுத்தி முடிக்கும்போது அடுத்த நிரல் தயாராக இருக்கும். 2. இணை நிலைச் செயலாக்கத்தில் (parallel processing) நிரல்கள் ஒரு செயலாக்க அலகிலிருந்து இன் னொன்றுக்கு அனுப்பி வைக்கப்படும். தொழிலகங்களில் தொகுப்புப் பணித்தொடர் அமைப்பு (assembly line) போன்றது. ஒவ்வோர் அலகும் ஒரு குறிப்பிட்ட வகைச் செயல்பாட்டில் திறன் பெற்றிருக்கும்.

piracy : கள்ளத்தனமான : தனிப்பட்ட அல்லது வணிகப் பயன் பாட்டுக் காக சட்டத்தை மீறி மென்பொருளை நகலெடுத்தல்.

piracy investigaters : களவினைக் கண்டுபிடிப்பவர்கள்.

pirate : திருட்டு, களவு : உரிமை பெற்ற மென்பொருளை திருடுகின்ற (அல்லது அனுமதியின்றி நகலெடுக்கின்ற) ஒரு நபர் அல்லது நிறுவனம். புதிய இந்தி"எழுத்தச்சு"ஒன்றுக்கு'Software Pirate” என்று பெயரிடப் பட்டுள்ளது.

. pit : . பிட் : பேக்ஐடீ (pack IT) என்னும் முறையில் இறுக்கிச் சுருக்கப் படும் ஆவணக் கோப்புகளின் வகைப்பெயர் (extension).

pit and land : குழி;சமதளம் : குறுவட்டில் 0, 1 பிட்டுகளை எழுதும் இடம்.

Pitch : அச்சுச் செறிவு;எழுத் தடர்வு : அச்சிட்ட வரியிலுள்ள எழுத்துகளின் செறிவரைவு. இது, பொதுவாக ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் என்ற வீதத்தில் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு : 10 செறிவளவு என்பது ஒவ்வொரு அங்குலத்திலும் 10 எழுத்துகள் அடங்கியுள்ளன என்று பொருள்படும். pits : குழிகள்.

pivot table : ஆய்ந்தறி அட்டவணை.

pivote table report : ஆய்ந்தறி அட்டவணை அறிக்கை.

pixel (picture element) : படுக் கூறுகள், படப்புள்ளி, படத்துணுக்கு படத் துகள் : ஒர் எழுத்தினை அல்லது ஒரு வரைகலை உருக்காட்சியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தனித்தனிப் புள்ளிகளில் ஒன்று. இது, காட்சித் திரையில் காணப்படும் உருக்காட்சியின் மிகச்சிறிய அலகு. இதனை, சேமித்து வைத்து, வரவழைத்து, காட்சியாகக் காட்டலாம்.


படப்புள்ளி

படப்புள்ளி

pixel map : படப்புள்ளி இயல் படம் : ஒரு வரைகலைப் படத்தின் படப் புள்ளிப் படிமத்தை அதன் நிறம், படிமம், தெளிவு, நீள அகலம், சேமிப்பு வடி வாக்கமுறை மற்றும் ஒரு படப் புள்ளியைக் குறிக்க ஆகும் துண்மி (பிட்) கள் இவை உட்பட விளக்கும் ஒரு தரவு கட்டமைப்பு (data structure).

PJ/NF : பீஜே/என்எஃப் : முன்னிறுத்து சேர் இயல்புப் படிவம் என்று பொருள்படும் Projection-join Normal form என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

. pk : . பீகே : ஒர் இணைய தள முகவரி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந் தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

PKUNZIP : பீகேஅன்ஸிப் : ஒரு பகிர் மென்பொருள் பயன்கூறு நிரல். பீகேஸிப் (PKZIP) என்னும் நிரல் மூலம் இறுக்கிச் சுருக்கிய கோப்புகளை விரிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் பீகேஸிப், பீகே அன்ஸிப் இரண்டும் சேர்ந்தே கிடைக்கும். பீகேவேர் (PKware) என்னும் நிறுவனம் இவற்றை வெளியிடுகிறது. இந்த மென்பொருள்களை இந்த நிறுவனத்தின் அனுமதி யின்றி வணிகப் பயன்பாடுகளுக்காக வெளியிட முடியாது.

PLA : பிஎல்ஏ;நிரலாக்கு தருக்கக் கோவை : "செயல் முறை வகுத் திடத்தக்க தருக்க முறை வரிசை"என்று பொருள் படும்"Programmable Logic Array"என்ற ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர். இது, ஒரு குறிப்பிட்ட அலுவல் பணியை மட்டுமே செய்வதற்குச் செயல் முறைப்படுத்தப்பட்டுள்ள, ஒரு தரப்படுத்திய தருக்கமுறை இணைவனத்தைப் பயன்படுத்துகிற, படிப்பதற்கு மட்டுமேயான நினைவகத்துக்கு (Rom) மாற்றாகப் பயன்படக்கூடியது.

plaintext : நேரடிவாசகம் : வழக்கமான செய்தியை அதன் மூலப்பொருள் வடிவில் குறிப்பிடுவதற்கு மறைமொழி வல்லுநர்கள் பயன்படுத்தும் சொல்.

planar : ஒருதள நிலை : 1. கணினி வரைகலையில் பொருள்கள் ஒரே தளத்தில் தோற்றமளிப்பவை. 2. குறை கடத்திப் பொருள்கள் உற்பத்தி முறையில் செயலாக்கத்தின் போது முழுமையும் சிலிக்கான் மென் தகடுகளின் மேற்பரப்பின் மூலத்தட்டை அமைப்பு மாறாமல் பராமரித்தல். மின்னோட்டப் பாய்வைக் கட்டுப்படுத்தும் தனிமங்களடங்கிய வேதியல் பொருட்கள் இந்த மேற்பரப்பின் கீழ் பரப்பப்பட்டுள்ளன.

planar area : பிளேனர் பகுதி : கணினி வரைகலையில், எல்லைகள் உள்ள பொருள். சதுரம் அல்லது பல்கோணம் போன்றது.

planar transistor : ஒருதள மின்மப் பெருக்கி : மின்மப் பெருக்கிகளுள் ஒரு தனிச்சிறப்பான வகை. மின்மப் பெருக்கியின் மூன்று பகுதிகளும் (திரட்டி, உமிழி, அடிவாய்) குறைகடத்திப் பொருளின் ஒற்றை அடுக்கில் இழையப் பட்டிருக்கும். வழக்கத்தைவிட அதிக அளவிலான வெப்பம் வெளியேறுவதற்கேற்ற வகையில் ஒருதள மின்மப் பெருக்கியின் கட்டமைப்பு அமைந்துள்ளது. எனவே இது மின்சக்தி மின்மப் பெருக்கிகளுக்கு (Power Transistors) உகந்த வடிவமைப்பாகத் திகழ்கிறது. planimeter : சமதளமானி : ஒரு சமதள உருவம், ஒரு எழுத்தாணியால் வரையப்படும் போது, அந்த உருவத்தின் மேற்பரப்பினை அளவிடுவதற்கான புறநிலைச் சாதனம்.

planit : பிளானிட் : "பரிமாற்றுப் போதனையைச் செயல்முறைப் படுத்தும் மொழி"என்று பொருள்படும்"Programming Language for Interactive Teaching"என்ற ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர். கணினி வழி அறிவுறுத்தப் பொறியமைவுகளுடன் பயன் படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மொழி.

plansheet : சம தளத் தகடு;விரி தாள் : அகல் தகட்டுப் பணிப்பாளம் போன்றது.

plasma display panel : படிகக் காட்சி முனையம்;மின்மக் காட்சித் திரை : பொறியமைவு செய்த நியோன் ஆர்கான் வாயுவைப் பயன் படுத்துகிற காட்சி முனைய வகை. காட்சிப் பரப்பில் அடங்கியுள்ள ஓர் அச்சு வார்ப்புருவில் புள்ளிகளைத் திருப்புவதன் மூலம் உருக்காட்சி உருவாக் கப்படுகிறது. உயர் ஆற்றல் உருக்காட்சி உறுதிப்பாடுடையது. நீண்ட நேரம் ஒளிரக்கூடியது;சுடர் நடுக்கம் இல்லாதது.

platen : தாள் அழுத்துத் தகடு, அழுத்துத் தட்டு;அழுந்துந் தகடு, அச்சு உருளை : அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளம்.

அழுத்துத் தட்டு

தாள் அழுத்துத் தட்டு

தாள் அழுத்துத் தட்டு

platform : மேடை : ஒரு குறிப்பிட்ட மாதிரி அல்லது கணினி குடும்பத்திற்கான வன்பொருள் கட்டுமான அமைப்பு. மென்பொருள் உருவாக்குபவர்கள். தங்கள் நிரல் தொடர்களை எழுதுவதற்கு இது ஒரு தர அமைவாகும். இயக்க அமைப்பையும் இச்சொல் குறிப்பிடுகிறது. platform-dependent : பணித்தளம் சார்ந்த.

platform independant : பணித்தளம் சாராமை.

platform independent development environment : பணித்தளம் சாரா உருவாக்கச் சூழல்.

platform independent language : பணித் தளம் சாரா மொழி.ஜாவா மொழியை இவ்வாறு சிறப்பித்துக் கூறுவர்.

PLATO : பிளேட்டோ : "தானியக்கப் போதனைச் செயற்பாடுகளுக்கான செயல்முறைப்படுத்திய தருக்கமுறை" எனப் பொருள்படும்"Programmed Logic for Automatic Teaching Operations"என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும் பெயர். இது, கணினி அடிப்படையிலான அறிவுறுத்தப் பொறியமைவு. இது பெரிய கணினிகளிலும், படிகக்காட்சி முனையங்களிலும் பயன்படுத்தப் படுகிறது. இதில் கிண்டர்கார்டன் முதல் பட்டப்படிப்பு வரையிலான மாணவர் களுக்கான பல்லாயிரம் பாடங்கள் அடங்கியுள்ளன.

platter : வட்டத்தட்டு : வட்டு இயக்கியில் உள்ளபடிக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் பகுதி. இது வட்டமான தட்டை வடிவ உலோகத் தகடு. இதன் இருபரப்புகளிலும் பழுப்புநிற காந்தப்பொருள் பூசப்பட்டுள்ளது.

இணைவான இரு வட்டத்தட்டுகள்

வட்டுத் தட்டு

வட்டுத் தட்டு

play button : இயக்குக் குமிழ்.

player : இயக்கி.

PL/C : பீஎல்/சி : PL/I என்ற செயல்முறைப்படுத்தும் மொழியின் ஒரு பதிப்பு. இது கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

PLCC : பீஎல்சிசி : ஈயமற்ற பிளாஸ்டிக் சிப்புச் சுமப்பி என்ற பொருள்படும் Plastic Leadless Chip Carrier என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பலகைகளில் சிப்புகளைப் பொருத்துவதில் பின்பற்றப்படும் ஈயமற்ற சிப்பு சுமப்பி முறையின் ஒரு வேறு பாடான வகை. செலவு குறைவானது. இரண்டு சுமப்பிகளும் தோற்றத்தில் ஒன்றுபோல இருப்பினும் பீஎல்சிசி-க்கள் பருநிலையில் ஈயமற்ற சிப்புச் சுமப்பியுடன் ஒத்தியல்பற்றவை. ஏனெனில் அவை பீங்கான் (ceramic) பொருளால் ஆனவை.

PL/I : பிஎல்/I : "செயல்முறைப் படுத்தும் மொழி - I" (Programming Language-I) என்பதன் குறும்பெயர். இது பொது நோக்கத்திற்கான உயர்நிலை செயல்முறைப் படுத்தும் மொழி. இது அறிவியல் மற்றும் வணிகப் பயன் பாடுகளுக்காக வடிவமைக்கப் பட்டது. கோபால் (Cabol), ஃபோர்ட்ரான் (Fortran), ஆல்கால் (Algol) ஆகிய மொழிகளின் அம்சங்களை ஒருங் கிணைத்துள்ளது.

PL/M : பிஎல்/எம் : நுண் கணினிகளை செயல்முறைப்படுத்து வதற்குப் பயன்படுத்தப்படும் செயல்முறைப்படுத்தும் மொழி. இதனை"இன்டெல் கார்ப்பொ ரேஷன்" (Intel Corporation) என்ற நிறுவனம் வடிவமைத்தது. இது துண்கணினிகளை மிக விரைவாக இயக்குவதற்கு நிரலிடுவதற்குரிய உயர்நிலை மொழி. இது PL/I என்ற பொதுநோக்குச் செயல்முறைப்படுத்தும் மொழியிலிருந்து வடிவமைக்கப் பட்டதாகும்.

PL/M plus : பீஎல்/எம் பிளஸ் : "பீ. எல்/எம்"என்ற செயல் முறைப்படுத்தும் மொழியின் விரிவாக்கிய வடிவம். இதனை"நேஷனல் செமி கண்டக்டர்ஸ்" (National Semi Conductors) ஏன்ற நிறுவனம் தனது நுண் செய்முறைப்படுத் திகளுக்காக வடிவமைத்தது.

plot : வரைவு : ஒரு வரைவி மூலம் வரைபடம் அல்லது உருவப்படம் வரைதல்.

plotter : வரைவி;வரைவான் : தானியக்கக் கட்டுப்பாட்டுப் பேனாக்கள் மூலம் காகிதத்தில் படங்களையும் வரைகலைக் காட்சிகளையும் வரைகிற ஒரு வெளிப்பாட்டுச் சாதனம். வரை கலைகளிலும், கணினி உதவியால் உருவாக்கப்படும் வடிவமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல் துறையிலும், துணி நெசவுத் துறையிலும் பணிபுரியும் வடி வமைப்பாளர் களுக்கு இது பெரிதும் உதவுகிறது. இதில், காகிதம் ஒரு தட்டையான படுகைமீது ஏற்றப்பட்டிக்கும். இதன்மீது வரைவதற்குரிய பேனா, XYஅச்சுகளில் வரை படங்களை வரைகிறது. இதில் பல்வேறு வண்ணங்களில் வரைபடங்களைப் பெறுவதற்கு பல்வேறு வண்ணப் பேனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

plotter, data : தரவு வரைவி : தரவு வரைவுபொறி.

plotter in a cartridge : பெட்டியில் நினைவகத் தட்டுப் பகுதி : சான்டியாகோவின் பசிஃபிக் டேட்டா புராடக்ட்ஸ் நிறுவனத்தின் லேசர் அச்சுப்பொறிகளுக்காக ஒரு பெட்டியில் அமையும் எச்பிஜிஎல் போலச் செய்தது.

plotter resolution : வரைவு தெளிவுத் திறன்.

plotter software : வரைவி கணினிச் செயல்முறை : வரைவி மென்பொருள்.

piotter, x-y : x-y வரைவி.

plotting a curve : வளைகோடு வரைதல் : ஆயத்தொலைவு களிலிருந்து புள்ளிகளை இடங்குறித்து, அந்தப் புள்ளிகளை இணைத்து வளைகோடாக வரைதல். இது, மாறிலிகளுக் கிடையிலான தொடர்பினைச் சித்தரிக்கும் உள்ளபடியான வளைகோட்டினை ஏறக்குறைய ஒத்திருக்கும்.

plug : இணைப்பி;செருகி : ஒரு கம்பி படத்திலுள்ள இணைப்பு. இது பொறியமைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும்.

plug and play : இணைத்து- இயக்கு;பொருத்தி-இயக்கு : இன்டெல் நிறுவனம் உருவாக்கிய வரன்முறைத் தொகுதி. ஒரு பீசியை இயக் கும்போது, திரையகம், இணக்கி மற்றும் அச்சுப்பொறி போன்ற புறச் சாதனங்களை தானாகவே அடையாளங்கண்டு தகவமைவுகளை அமைத்துக் கொள்ளும். பயனாளர் ஒருவர் புறச்சாதனம் ஒன்றை கணினியுடன் இணைத்து இயக்கிக் கொள்ளலாம். தனியாகத் தகவமைவுகளைக் குறிக்க வேண்டியதில்லை. இணைத்து இயக்கு வசதி வேண்டிய பீ. சி-க்களில், இணைத்து இயக்கு வசதியுள்ள பயாஸ், இணைத்து இயக்குவதற்கான விரிவாக்க அட்டையும் இருக்க வேண்டும்.

plugboard : இணைப்பிப் பலகை;செருகுப்பலகை : அலகுப் பதிவுச் சாதனங்களின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்தும் துளையிட்ட பலகை. இதனைக் கட்டுப்பாட்டுப் பலகை (Control Panel) என்றும் கூறுவர்.

plug compatible : மாற்று இணைப்பி;செருகுப் பொருத்தம் : இடைமுகப்பு மாற்றமைவு தேவைப்படாத புறநிலைச் சாதனம். இதனை மற்றொரு உற்பத்தியாளரின் பொறி யமைவுடன் நேரடியாக இணைக்கலாம்.

plug-in : கூடுதல் வசதி : 1. ஒரு பெரிய பயன்பாட்டுத் தொகுப்பில் கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சிறிய மென்பொருள் நிரல். 2. தொடக்க காலங்களில் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் இணைய உலாவிக்காக இத்தகைய கூடுதல் வசதி மென்பொருள்கள் வெளியிடப்பட்டன. பொதுவாக இணைய உலாவி (Internet Browser) ஹெச்டீஎமெல் ஆவணத்திற்குள் உட்பொதித்த, அசைவூட்டம், ஒளிக்காட்சி, கேட்பொலி தொடர்பான கோப் புகளை அடையாளம் காணாது. கூடுதல் வசதி மென்பொருளை நிறுவிக் கொண்டால் இது இயல்வதாகும். இப்போதெல்லாம் அனைத்து நிறுவனங் களுமே தத்தமது மென்பொருள் தொகுப்புகளுக்குக் கூடுதல் வசதி மென்பொருள்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.

plugs and sockets : செருகிகளும் துளைகளும் : எல்லா வகையான மின்னணுச் சாதனங்களையும் ஒன்றாக இணைக்கும் பருப்பொருள் இணைப்புகள்.

. pm : . பீ. எம் : ஒர் இணைய தள முகவரி செயின்ட் பியாரே மிக்குலான் நாட்டைச் சேர்ந்ததுஎன்பதைக் குறிக்கும் பெரும்புவிப் பிரிவுக் களப்பெயர்.

PMOS : பீஎம்ஓஎஸ் : "P-அலை வரிசை உலோக ஆக்சைடு மின்கடத்தாப் பொருள்கள் (P-channel metallic oxide semi conductors) என்பதன் குறும் பெயர். இது உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் மின்சுற்று வழிகளில் மிகப் பழமையானது. இதில் பாயும் மின்னோட்டத்தில் நேர்மின்னழுத்தம் பாய்கிறது. இது, N-அலை வரிசை உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் களிலிருந்து (N-channel MOS) வேறுபட்டது.

. pn : பிஎன் : ஒர் இணைய தள முகவரி பிட்கைர்ன் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

PN : பீஎன் : "போலந்துக் குறிமானம்" என்று பொருள்படும்."polish notation"என்னும் ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர்.

PNP transistor : பீஎன்பீ மின்மப் பெருக்கி : இருதுருவ (bipolar) மின்மப் பெருக்கிகளுள் ஒரு வகை. இதன் அடிவாய் (base) என் (N) -வகைப் பொருளால் ஆனது. பீ. வகைப் பொருளால் ஆன உமிழி (emitter) மற்றும் திரட்டி (collector) இவற்றுக்கு இடையே செயல்படும். ஒரு மின்மப் பெருக் கியின் மூன்று முனையங்களான அடிவாய், உமிழி, திரட்டி ஆகிய மூன்றுக்குமிடையே மின்னோட்டம் பாயும். ஒரு பீஎன்பீ மின்மப் பெருக்கியில் துளைகளே (மின்னணு இடம் பெயர்ந்த வெற்றிடம்) பெருமளவு மின்சுமப் பிகளாகச் செயல்படுகின்றன. அவை உமிழியிலிருந்து திரட்டியை நோக்கி நகர்கின்றன.

poaching : கரவு அணுகுதல்;ஊடுருவல் : ஒரு பயனாளர் தனக்கு உரிமையுடையதாக இல்லாத தகவல்களைத் தேடிக் கோப்புகளை அல்லது செயல்முறைப் பட்டியல்களை அணுகுதல்.

pocket computer : பையளவுக் கணினி : கையில் கொண்டு செல்லக்கூடிய கையடக்கக் கணினி. விண்டோஸ் சிஇ என்னும் இயக்க முறைமையில் செயல்படும் இக்கணினியில், மேசைமேல் கணினியில் செயல்படும் அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளையும் இயக்க முடியும்.

point : புள்ளி;சுட்டு : வரை கலைத் தகவலில் மிகச்சிறிய அலகு. இது ஆயத்தொலைவு முறையில் தனியொரு அமைப்பிடத்தைக் குறிக்கிறது.

point-and-click : சுட்டு-பின்-சொடுக்கு : பயனாளர் ஒரு குறிப்பிட்ட தரவினைத் தேர்வு செய்து உரிய நிரலினை இயக்குவதற்கான ஒரு சுட்டி அல்லது பிற சுட்டுக் கருவிகள் மூலம் இதனை எளிதாகச் செய்ய முடியும். சுட்டியில் பொத் தானைச் சொடுக்கியும், பிற சுட்டுக் கருவிகளில் அதற்குரிய பகுதியில் அழுத்தியும் இதனைச் சாதிக்கலாம்.

point and shoot : சுட்டுவும் பாய்வும் : சுட்டியை (கர்சர்) ஒரு வரியிலோ அல்லது ஒரு பொருளின் மீதோ நகர்த்துவதன் மூலம் ஒரு பட்டியல் தேர்வை தேர்ந்தெடுப்பது அல்லது ஒரு பயன்பாட்டை இயக்குவது திரும்பச் செல்லும் விசை அல்லது எலிவடிவச் சுட்டிப் பொத்தானை நகர்த்தியும் இவ்வாறு செய்யலாம்.

point arithmatic, fixed : நிலைப்புள்ளிக் கணக்கீடு.

point arithmatic, floating : மிதவைப் புள்ளிக் கணக்கீடு.

point, assumed decimal : எடுகோள் பதின்மப் புள்ளி. PointCast : பாயின்ட்காஸ்ட், முன் பரப்பு : இணையத்தில் ஒவ்வொரு பயனாளருக்கும் அவருக்கே உரித்தான செய்திக் கட்டுரைகளைத் தொகுத்துக் காட்டும் இணையச்சேவை. வைய விரிவலையில் உள்ள ஏனைய இணையப் பயன்பாடு களைப்போலன்றி பாயின்ட்காஸ்ட் தள்ளு தொழில் நுட்பத்தை (push technology) பின்பற்றுகிறது. கிளையனிலிருந்து குறிப்பிட்ட கட்டளை வரப் பெறாமலே, வழங்கன் தானாகவே தரவுவை அனுப்பி வைக்கும்.

point, decimal : பதின்மப் புள்ளி.

point, entry : நுழைவுப் புள்ளி;உள்ளீட்டு புள்ளி.

pointer : சுட்டு;சுட்டுவான்;குறி, காட்டி சுட்டி : 1. தொடர்புடைய ஒரு பதிவின் முகவரியைக் கொண்டிருக்கிற ஒரு கோப்பு அட்டவணை, ஒரு பதிவேடு, அல்லது வேறு தரவுத் தொகுதியுடன் தொடர்புடைய ஒரு தரவுக் கூறு. 2. சில கணினியமைவுகளில், நுண்பொறியின் அமைவிடத்தைக் குறிக்கிற காட்சித்திரையின் உருவமைப்பு.

pointer arithmatic : சுட்டுக் கணக்கீடுகள்.

pointer type : சுட்டு இனம்.

point identification : புள்ளி அடையாளம் : ஆயத்தொலைவு அமை விடம், அதன் தனிச் செய்முறைப்படுத்தல் அலுவற்பணிகள் உட்பட ஒரு வரைகலைப் புள்ளி பற்றிய முழு விவரிப்பு.

pointing : சுட்டுதல்.

pointing devices : காட்டும் சாதனங்கள்;சுட்டிகள்;சுட்டிக் காட்டும் சாதனம் : இறுதிப் பயனாளர்கள் கட்டளைகளைச் செலுத்தவும், தேர்வுகளைச் செய்யவும் அனுமதிக்கும் சாதனங்கள். விசைப்பலகையைப் பயன்படுத் துவதற்கு மாற்றாக கணினி அமைப்பில் உள்ள எண்ணெழுத்து அல்லது தரவுகளை நேரடியாக நுழைக்க அனுமதிக்கும் சாதனங்கள். எலிவடிவ சுட்டி மற்றும் இயக்கப்பிடிகளைக் காட்டும் சாதனங்களாகும்.

point listing : சுட்டுப் பட்டியலிடல் : பலரும் விரும்பிப் பார்வையிடும் வலைத்தளங்களை கொண்ட ஒரு தரவுத் தளம். தலைப்பு வாரியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். வடிவமைப்பு, உள்ளடக்கத்தின் அடிப்படையில் வலைத்தளங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

point of presence : கிளைப் புள்ளி;தொடு முனை, கிளை முனை;தொடு புள்ளி : 1 விரிபரப்புப் பிணையத்தில் ஒரு பயனாளர் தொலைபேசி மூலமாகப் பிணைத்துக் கொள்ளும் முனை. 2. நீண்ட தொலைவு தொலைபேசி இணைப்புத் தடத்தில், உள்ளுர் தொலைபேசி இணைப்பகத்துக்கு அல்லது தனிப்பட்ட ஒரு பயனாளருக்கான இணைப்பு பிரிந்து செல்லும் புள்ளி/முனை.

point of sale software : விற்பனை முனைய மென்பொருள்.

point of sale termination : விற்பனை முனைய முடிவிடம்.

point representation, fixed : நிலைப் புள்ளி உருவகிப்பு.

point representation, floating : மிதவைப் புள்ளி உருவகிப்பு.

point set curve : புள்ளித் தொகுதி வளைகோடு;புள்ளி இணைப்பு வளைவு : புள்ளி களிடையே குறுகிய கோடுகளின் ஒரு வரிசையை வரைவதன் மூலம் வரையப்படும் வளைகோடு.

point to point : நேரடி இணைப்பு.

point to point line : நேரடித் தொடர் பிணைப்பு : ஒரு தாய்க் கணினிக்கும் ஒரு சேய்மை முனையத்திற்குமிடையில் ஒரு நேரடித் தொடர்பினைக் கொண்டுள்ள செய்தித் தொடர்பு பொறியமைவு.

point-of-sale (POS) terminal : விற்பனை முனை முகப்பு : 1. உடனடியாக விற்பனையையும், இருப்பு பதிவேடுகளையும் ஒரு மையச் செயலகத்தில் புதுப்பித்து, 2. அச்சிடப்பட்ட விற்பனை பரிமாற்ற இரசீதினைத் தருகின்ற திறனுடைய ஒரு உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம்.

point-to-point channel : நேரடி இணைப்புத் தடம்.

point-to-point protocol (PPP) : நேரடி இணைப்பு நெறிமுறை : நேரடி இணைப்பு மரபொழுங்கு.

point-to-point Tunneling Protocol : நேரடி இணைப்பு சுரங்க வழி நெறிமுறை : மெய்நிகர் தனியார் பிணையங்களுக்கான (Virtual Private Networks-VPN) நெறிமுறை. குறும்பரப்புப் பிணையத்தின் சில கணுக்கள் இணையத்தோடு தொடர்பு கொள்ள முடியும்.

poisson distribution : பாய்சான் விநியோகம் : 18ஆம் துற்றாண்டு ஃபிரெஞ்சு கணிதவியலார் எஸ். டி. பாய்சான் உருவாக்கிய புள்ளிவிவர முறை. நடக்கக் கூடிய நிகழ்வுத் தொடரின் விநியோகத்தைக் கண்டுரைக்க இது பயன்படுத்தப்படுகிறது. சான்றாக தகவல் தொடர்பு அமைப்பு ஒன்றின் சராசரி பரிமாற்றத்தின் அளவினை மதிப்பிடக்கூடுமென்றால், ஒரு குறிப் பிட்ட காலத்தில் நடைபெறக்கூடிய பரிமாற்றங்களின் அதிக அளவு அல்லது குறைந்த அளவு எண்ணிக்கையையும் மதிப்பிடலாம்.

poisson theory : பாய்சான் கோட்பாடு : தரவு செய்தித் தொடர்புப் போக்குவரத்தின் ஒரு குறிப்பிட்ட அளவினைக் கையாள்வதற்குத் தேவைப்படும் இணைப்புக் கம்பிகளின் எண்ணிக்கையை மதிப்பிடு வதற்கான கணித உத்தி.

POKE : ஒரு கணினி மொழி நிரல் : கணினியின் செயல் முறைப்படுத்தத் தக்க நினைவுப் பதிப்பியில் இட அமைவு எதிலும் ஒரு மதிப்பளவினை நுழைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கணினி மொழி நிரல்.

POL : பீஓஎல் : இரும"1"ஒரு திசையில் பாயும் மின்னோட்டத்தினாலும் இரும'O'எதிர் திசை மின்னோட்டத்தினாலும் குறிக்கப்படுகிற ஒரு நிலை. இது, ஆக்க முறை உண்மைத் தருக்க முறைக்கு வேறுபட்டது.

Polar : துருவ முனைப் போக்கு.

polar coordinates : துருவ ஆயத்தொலைவுகள்;முனை ஆயங்கள் : ஒரு நிலையான புள்ளியிலிருந்து கோணத்தையும் தொலைவையும் பொறுத்து ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் குறித்துரைக்கின்ற வரைகலை முறை.

polarity : காந்தப்போக்கு : மின் சக்தி ஏறிய பகுதிகளின் போக்கு. ஒரு துண்மியின் இரும நிலையை இதுவே முடிவு செய்கிறது. நுண் வரைகலை யில் படிகளை எடுக்கும்போது ஒரு தோற்றத்திலிருந்து மற்றொன்றுக்கான வெளிச்சத்திலிருந்து இருளுக்குள்ளான உறவு. பாசிட்டிவ் காந்தப் போக்கு என்றால் வெளிச்சப் பின்னணியில் கறுப்பு எழுத்துகள் இருக்கும். நெகட்டிவ் காந்தப்போக்கு என்றால் கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துகள் காணப்படும்.

polarized component : துருவப் பட்ட கருவிப்பொருள் : ஒரு மின்சுற்றில் ஒரு கருவிப் பொருளை இணைக்கும்போது, மின்சுற்றின் துருவம் பார்த்து கருவிப்பொருளின் முனைகளை ஒரு குறிப்பிட்ட திசைப் போக்கில் இணைக்கவேண்டும். இருதிசையன்கள், மின்திருத்திகள் மற்றும் சில மின்தேக்கிகள் ஆகியவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.

polarizing filter : ஒளி வடிகட்டி : முனையத் திரைகளில் கண்ணை உறுத்தும் கூசொளியைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் துணைச் சாதனம்.

polish notation (PN) : போலந்துக் குறிமானம் : ஒரு தொடர் கணிதச் செயற்பாடுகளுக்கான தருக்க முறைக் குறிமானம். இதில் குழுமக் குறியீடு எதுவும் பயன்படுத்தப்படு வதில்லை. மாறாக போலந்து தருக்கவியலறிஞர் ஜான் லுக்காசியே வீக்ஸ் 1926இல் உருவாக்கிய முன்னடைக் குறிமானம் பயன்படுத்தப்படுகிறது.

polling : சாதன நுண்ணாய்வு : சில கணினி முனையப் பொறி யமைவுகளில் பயன்படுத்தப்படும் செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு உத்தி. இதில் மையச்செயலகம், ஒவ்வொரு சாதனத்திற்கும் செய்முறைப் படுத்துவதற்கு நேரம் தேவையா என்பதைச் சரி பார்க்கிறது. தேவைப்படுமாயின் அந்த அலகு தொடர்ந்து மற்றச் சாதனங்களை நுண்ணாய்வு செய்கிறது. இதற்கு ஒவ்வொரு சாதனத்தையும் விரைவாக இடைவிடாமல் நுண்ணாய்வு செய்திட வேண்டும்.

polling cycle : தேர்வுச் சுழற்சி : ஒரு நிரல் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு சாதனம் அல்லது பிணையக் கணு ஆகியவற்றுக்கு தகவல் அனுப்ப எடுத்துக்கொள்ளும் நேரமும் தொடர் நிகழ்வுகளும்.

pollution free : மாசு அற்ற;மாசு இல்லாத.

polygon : பாலிகன் : கணினி வரைகலையில் ஒரு தனிப் பொருளாக நகர்த்தக்கூடிய அல்லது வண்ணத்தில் நிரப்பக் கூடிய பல பக்கங்களை உடைய பொருள்.

polyhedron : பல்தளப் பிழப்புரு : ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களுடைய பொருள். இணைக்கப்பட்ட பாலிகான்களின் ஒரு குழு.

polyline : பல்வரி : கணினி வரைகலையில் இணைக்கபட்ட வரிகளின் ஒரு தொடராக அமைக்கப்படும் ஒரு தனிப்பொருள்.

polymorphic tweening : பாலிமார்ஃபிக் ட்வீனிங் : உயிர்ப்பட தொழில் நுட்பம். ஒரு இருள் வேறு ஒன்றாக மாற்றும்போது இடைப்பட்ட உருவங்களை ஆரம்ப மற்றும் முடிவு வடிவங்களை வைத்து உருவாக்குவது. polymorphism : பல்லுருப் பெறல் : பல உருவங்கள் என்பது பொருள். பொருள் சார்ந்த நிரல் தொடரமைப்பில் அனுப்பப்படும் பொருளுக்கு மாறுபட்ட முடிவுகளைத் தரக்கூடிய ஒரு பொதுவான வேண்டுகோளை (செய்தி) அனுப்பும் திறன்.

polyphase sort : பல கட்ட வரிசையாக்கம்;பன்முக நிலை வகைப்படுத்தி : புற நாடா வகைப்படுத்தி. இது ஆறு அலலது அதற்குக் குறைவான நாடாக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

polyvision : பல்காட்சி : அல்பைன் பாலிவிஷன் நிறுவனத்தின் தட்டை அட்டைக்காட்சி. செங்குத்தான மற்றும் கிடைமட்டமான மின்வாய்களுக் கிடையில்வரும் உலோக அயனிகளினாலான பிளாஸ்டிக் திரைப்படத் தினைப் பயன் படுத்துகிறது. இதில் மின்சாரம் குறுக்கிடும்போது உலோக அயனிகள் கறுப்பாகிவிடும்.

pong : பாங்க் : 1972ஆம் ஆண்டில் அட்டாரிக்கைச் சேர்ந்த நோலன் புஷ்நெல் (Nolan Bushnell) என்பவர் உருவாக்கிய உலகின் முதல் வணிக ஒளிக்காட்சி விளையாட்டு (first commercial video game) மேசை டென்னிஸ் போன்ற விளையாட்டு.

pooler : கூட்டிணைப்பி : முக்கிய நுழைவுத் தகவலை முதன்மை கணினிக்கு ஏற்புடைய வடிவத்தில் ஒருங்கிணைப்பதற்கான அல்லது மாற்றுவதற்கான சாதனம்.

pop : எடு : ஒர் அடுக்கை (stack) யில் மேலே உள்ள (கடைசியாகச் சேர்க்கப்பட்ட) உறுப்பினைக் கொணர்தல். இந்தச் செயலாக்கத்தில் அடுக்கை யிலிருந்து அவ்வுறுப்பு நீக்கப்பட்டு விடுகிறது.

pop instruction : ஒத்தியல்பு நெட்வேர் : மீட்பு செயற்பாட்டினை நிறைவேற்றுகிற கணி நிரல்.

POP-2 : பாப்-2 : பட்டியல் செய்முறைப்படுத்தும் மொழி. இது, எடின்பரோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.

ΡΟΡ-3 : பாப்-3 : அஞ்சல் நிலைய நெறிமுறை 3 என்று பொருள்படும் Post Office Protocol 3 என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ பிணையங்களில் மிகப்பரவலாகப் பயன்படுத்தப்படும் அஞ்சல் நிலைய நெறிமுறையின் தற்போதைய பதிப்பு. populate : பொரிவு;சோப்பு : ஒரு அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டையில் சில்லுகளையும் பொருள்களையும் பொருத்துதல். முழுதும் இனப்பெருக்கம் செய்த அட்டை என்பது, அதனுள் சேர்க்கக்கூடிய அனைத்துச் சாதனங் களையும் கொண்டிருக்கிறது என்றாகும்.

populated board : நெரிசல் பலகை : தனது மின்னணுவியல் அமைப்பிகள் அனைத்தையும் கொண்டுள்ள மின்சுற்று வழி. இது.'நெரிசலற்ற பலகை' unpopulated board என்பதிலிருந்து வேறுபட்டது.

popup : மேல் மீட்பு : திரையில் உள்ள சொற்பகுதி அல்லது உருவத்தின் மேற்பகுதியில் அழைக்கப்பட்டு காட்டப்படுகின்ற ஒரு வகையான பட்டியல். தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்தபோது பட்டியல் மறைகிறது. திரை மீண்டும் வருகிறது.

pop-up help : மேல்விரி உதவி : ஒரு மென்பொருளில் வழங்கப்பட்டுள்ள நிகழ்நிலை (Online) உதவி அமைப்பு. பயனாளர் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் மீது சொடுக்கினால் உதவிச் செய்திகள் மேல்விரி சாளரங்களில் தோற்ற மளிக்கும். பெரும்பாலும் சுட்டியின் வலது பொத்தானை அழுத்துவதால் இத்தகைய உதவி விளக்கக் குறிப்புகள் கிடைக்கும்.

pop-up menu or popup menu : மேல்விரி பட்டி : வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில், பயனாளர். ஒரு குறிப்பிட்ட உருப்படிமீது வைத்து, சுட்டியில் வலப்பொத்தானைச் சொடுக்கினால் உடனடியாய்த் திரையில் தோற்ற மளிக்கும் ஒரு பட்டி. திரையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் மேல்விரி பட்டி தோன்றும். பொதுவாக, பட்டியில் ஒர் உருப்படியைத் தேர்வு செய்தவுடன் பட்டி மறைந்துவிடும்.

pop-up messages : மேல்விரி செய்திகள் : மேல்-விரி உதவிக் குறிப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்போது திரையில் தோன்றும் செய்திகள்.

pop-up window : மேல்விரி சாளரம் : ஒரு குறிப்பிட்ட விருப்பத் தேர்வை தேர்ந்தெடுத்தவுடன் திரையில் தோன்றும் ஒரு சாளரம். பெரும்பாலும் சுட்டியின் பொத்தானை விடும்வரை இந்தச் சாளரம் பார்வையில் இருக்கும்.

port1 : துறை : ஒரு கருவியில் பிற சாதனங்களைப் இணைப் பதற்கான பொருத்துவாய். port2 : கையாண்மை;ஏற்றுமதி : 1. வேறுவகைக் கணினியில் இயங்கம் வகையில் ஒரு நிரலை மாற்றியமைத்தல். 2. ஆவணங்கள், வரை கலைப் படங்கள் மற்றும் பிற கோப்புகளை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு மாற்றுதல்.

portability : பெயர்வு ஆற்றல்;நகர்வுத் திறன் : ஒரு செயல் முறையினை ஒரு கணினி சூழலிலிருந்து மற்றொரு சூழலுக்கு எளிதாக மாற்றுவதற்குரிய வசதி.

portable : கையாளத்தகு;கையாண்மைத் திறன் : 1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளிலோ செயல் படும் திறன். மிகுந்த கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை மிக எளிதாக பிற கணினிகளில் இயக்கலாம். நடுத்தர கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை கணிசமான முயற்சிக்குப்பின் பிற கணினிகளில் இயக்கமுடியும். கையாண்மைத் திறனற்ற மென்பொருள்களைப் பிற கணினி களில் இயக்க வேண்டுமெனில் ஏறத்தாழ புது மென்பொருளை உருவாக் குவதற்கு எடுக்க வேண்டிய அளவுக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

portable computer : கையாண்மைக் கணினி;கையில் எளிதாக எடுத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்ட கணினி. உருவ அளவு சிறிதாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும். கையேட்டுக் கணினி, மடிக் கணினி, உள்ளங்கைக் கணினிகளை இவ்வகையில் அடக்கலாம்.

portable distributed objects : கையாளத்தகு பகிர்ந்தமைப் பொருள்கள் : நெக்ஸ்ட் (NeXT) நிறுவனம் உருவாக்கிய மென்பொருள். யூனிக்ஸில் செயல் படும். ஒருவகைப் பொருள் மாதிரியத்தை (object model) வழங்குகிறது. ஒரு பிணையத்தில் பல்வேறு கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மென் பொருள் கூறுகளை அவை ஒரே கணினியில் இருப்பது போன்று எளிதாக அணுக முடியும்.

Portable Document Format : கையாண்மை ஆவண வடிவாக்கம் : அடோப் நிறுவனத்தின் வரன்முறை. மின்னணு ஆவணங்களைப் பற்றியது. அடோப் அக்ரோபேட் குடும்ப வழங்கன்களிலும், படிப்பிகளிலும் பயன்படுத்தப்படும் ஆவண வடிவாக்கம். சுருக்கமாக பீடிஎஃப் (PDF) என அழைக்கப்படும்.

portable document software : கையாளத்தகு ஆவண மென்பொருள்.

portable language : கையாண்மை மொழி : வேறு வேறு கணினிகளில் ஒன்றுபோலச் செயல்படும் ஒரு கணினி மொழி. வெவ்வேறு கணினி அமைப்புகளுக்கான மென்பொருள்களை உருவாக்க இம்மொழியைப் பயன்படுத்தலாம். சி, ஃபோர்ட்ரான், அடா போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. ஏனெனில் இவை வெவ்வேறு கணினி இயக்கமுறைமைகளில் ஒன்று போலச் செயலாக்கப்படுகின்றன. அசெம்பிளி மொழி கையாண்மைத் திறனற்ற மொழியாகும். குறிப்பிட்ட அசெம்பிளி மொழியின் நிரல் தொகுதி குறிப்பிட்ட நுண்செயலியில் மட்டுமே செயல்படும்.

portable netware : ஒத்தியல்பு நெட்வேர் : நாவெலின் நெட்வேர் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தின் ஒ. இ. எம். பதிப்பு. குறிப்பிட்ட விற்பனையாளரின் எந்திரத்திற்காக அதைத் தொகுக்கலாம்.

Portable Network Graphics : கையாண்மைப் பிணையவரைகலை : பிட்மேப் வரைகலைப் படிமங்களைச் சேமிப்பதற்கான ஒரு கோப்பு வடிவாக்க முறை. ஜிஃப் (GIF) வடிவாக்க முறைக்கு மாற்றானது. ஆனால் ஜிஃப் வடிவாக்க முறைக்குள்ள சட்டக் கட்டுதிட்டங்கள் எதுவுமில்லை. சுருக்கமாக பீஎன்ஜி (png) என்பர்.

portable programme : ஒத்தியல்வுச் செயல்முறை : ஒத்தியல்வுக் கணினி யமைவில் பயன்படுத்தக்கூடிய பொருள்.

port address : துறை முகவரி : ஒரு துறைக்கு முகவரியிடும் 0 முதல் 65535-க்குள்ளான ஒரு எண். நினைவக முகவரிகளிட மிருந்து துறை முகவரிகள் வேறுபட்டவை. அசெம்பிளி மொழியின் நிரல்களும் பேசிக் மொழியின் நிரல்களும் துறைகளை அணுக உதவும்.

portal : வலைவாசல்.

port conflict : துறை முரண்.

port enumerator : துறைக் கணக்கெடுப்பி : விண்டோஸ் இயக்க முறைமையில் இணைத்து இயக்கு (play and play) அமைப்பின் ஒர் அங்கம். கணினியை இயக்கும்போது, இந்த நிரல் உள்ளிட்டு/வெளியீட்டுத் துறை களைக் கண்டறிந்து தகவமைவு மேலாளருக்குத் (configuration manager) தெரிவிக்கும்.

port expander : துறை விரிவாக்கி : ஒரே துறையில் பல சாதனங்களை இணைக்கப் பயன்படும் ஒரு வன்பொருள் நுட்பம். இம்முறையில் ஒரு துறையில் பல சாதனங்கள் பொருத்தப்பட்டாலும் ஒரு நேரத்தில் ஒரு சாதனம் மட்டுமே துறையைப் பயன் படுத்திக் கொள்ளும்.

portfolio management package : மேலாண்மை ஆவண வைப்பகத் தொகுப்பு : முதலீட்டு இருப்புகளின் மாறும் மதிப்பைத் தேடி ஆராயும் நிரல் தொடர். ஆவண வைப்பகத்தின் நடப்பு நிலைபற்றிய அறிக்கைகளை உருவாக்குவதன் மூலமும், (2) வாங்கும், விற்கும் விலைகள், முதலீட்டு வரு மானம், செலவுகள், இலாபங்கள், இழப்புகள் ஆகியவற்றைக் காட்டும் துல்லியமான வரி பதிவேடுகளை வைத்திருப்பதன் மூலமும் இதனைச் செய்கிறது.

port number : துறை எண் : இணையத்தில் இணைக்கப்பட்ட கணினியில் ஒரு குறிப்பிட்ட செயலாக்கத்துக்கென ஐபீ பொதிகளை அனுப்பிவைக்கப் பயன்படும் எண். சில துறை எண்கள் நன்கறிந்த துறை எண்கள் என்றழைக் கப்படுகின்றன. உலகளவில் ஒரு குறிப்பிட்ட சேவைக்கென நிரந்தரமாய் ஒதுக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, எஸ்எம்டீபீ யின்கீழ் மின்னஞ்சல் தரவுகள் எப்போதுமே துறையெண் 25-க்கு அனுப்பப் படுகின்றன. எஃடீபீ-க்கு துறை எண் 21. ஹெச்டீடீபீ-க்கு துறை எண்-80. டெல் நெட் போன்ற சேவைகளுக்கு அவை தொடங்கும்போது தற்காலிக நிலையில்லா துறை எண்கள் ஒதுக்கப் படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட தகவல் பரிமாற்றத்தில், அந்த எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். முடிந்தவுடன் அந்த எண்ணின் பயனும் முடிந்து விடும். டீசிபீ மற்றும் யுடிபீ நெறிமுறைகளில் மொத்தம் 65, 535 துறை எண்களைப் பயன் படுத்தமுடியும். 1 முதல் 1024 வரை சிறப்புத் துறை எண்கள். நிரலர்கள் தம் சொந்த நிரல்களில் 1024க்கு மேற்பட்ட எண்களையே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

portrait : உருவப்படம், செங்குத்து வடிவம் : வன்படி உருவங்களைச் சார்ந்தது பற்றிய குறிப்பு புத்தகத்தில் இருப்பது போல ஒரு பக்கத்தின் குறும் பகுதியில் அந்த பணி அச்சிடப்படுகிறது என்பதை உருவப் படம் குறிப்பிடுகிறது. portrait என்ற சொல் ஒவிய உலகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் உருவப்படங்கள் செங்குத்தாகவே அமைக்கப்படு கின்றன.

portrait formatநீள்மை வடிவம், செங்குத்து உருவமைவு.

portrait mode : உருவப் படமுறை : செயல்படுத்தப்பட்ட தீர்வு அல்லது அமைப்பின் விளைவுகளை செயல்படுத்தப் பட்டபின் கண்காணித்து மதிப் பீடு செய்தல்.

portrait monitor : நீள்மைத் திரையகம் : அகலத்தைவிட உயரம் அதிகமிருக்கும் கணினித் திரையகம். 8 1/2-11 அங்குலத் தாளின் அளவுக்கு ஒத்த விகிதத்தில் இருக்கும் (அதே அளவு இருக்கும் என்பதில்லை).

நீளமைத் திரையகம்

நீளமைத் திரையகம்

ports : துறைகள்.

port settings : துறை அமைப்புகள்.

POS : போஸ் : விற்பனை முனையம் எனப் பொருள்படும் Point Of Sale என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கடையில் பொருள் களுக்கான விலையைச் செலுத்தும் இடம். பெரும்பாலும் இந்த முனையங்களில் விற்பனைக்கான விலைச்சீட்டுத் தயாரிப்புப் பணிகள் முழுக்கவும் கணினி மயமாக்கப்பட்டிருக்கும். பொருளின்மீது ஒட்டப் பட்டுள்ள விலைச்சீட்டு அல்லது பட்டைக்கோடு, வருடி மூலம் படிக்கப்பட்டு விலைச் சிட்டை தயாரிக்கப்படும். மின்னணு பணப்பதிவேடுகள் இருக்கும். விற்பனை தொடர்பான அனைத்துத் தரவுகளும் சிறப்புச் சாதனங்கள் மூலம் பதியப்படும். இதுபோன்ற முனையங்கள் மிகப்பெரிய தானியங்கு பல்பொருள் அங்காடிகளில் செயல்படுகின்றன.

POSIT : போஸிட் : திறந்தநிலை முறைமை இணையச் செயல்பாட்டுத் தொழில் நுட்பத்துக்கான தனிக் குறிப்புகள் எனப் பொருள்படும் Profiles For Open Systems Internet Working Technology என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அமெரிக்க அரசின் பிணையக் கருவிகளுக்கான கட்டாயமற்ற தர வரையறைகள். டீசிபி/ஐபி நெறி முறையை முற்றிலும் போஸிட் ஏற்கிறது. இது காஸிப்பு (GOSIP) க்கு அடுத்து வந்ததாகும்.

position : நிலை.

positional notation : இடைநிலைக் குறிமானம்;இடம் சார்ந்த குறியீடு; இடமதிப்புக் குறியீடு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தி ஒர் எண்ணளவைக் குறிப்பிடும் முறை. இதில் வலமிருந்து இடமாக அடுத்தடுத்து வரும் எண்கள் அடிமூலத்தின் ஏறுமுக முழு எண் விசைப் பெருக்கமாகக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டு : 634 என்ற எண்னின் பதின்ம எண் விசைப் பெருக்கத்தின் (வர்க்கம்) அடி மூலம் 10; இதன் மதிப்பு = 4x 100 + 3x 101 + 6x 102.

position, bit : துண்மி நிலை;பிட் இட நிலை.

position x : x அச்சு ஆயத்தொலை.

position y : y அச்சு ஆயத்தொலை.

positive logic : உடன்பாட்டு தருக்கம் : 'O'துண்மிக்காக குறைந்த மின்னழுத்தத்தையும், '1'துண்மிக்காக அதிக மின் அழுத்தத்தையும் பயன் படுத்தல் Negative Logic என்பதற்கு எதிர்ச்சொல்.

positive true logic : ஆக்கமுறை உண்மைத் தருக்க முறை : இந்தத் தருக்க முறையில் ஒரு குறைந்த அழுத்தம் 'O' இன் ஒரு துண்மி மதிப்பளவைக் குறிக்கிறது;ஒர் உயர்ந்த அழுத்தம், '1' இன் ஒரு துண்மி மதிப்பளவைக் குறிக்கிறது.

Posix : போசிக்ஸ் : யூனிக்ஸுக்கான கையாண்மை இயக்க முறைமை இடைமுகம் எனப்பொருள்படும் Portable Operating System Interface for Unix என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். போசிக்ஸ் தர வரை யறைப்படி அமைந்த நிரல்களை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினியில் எளிதாக செயல்படுத்த முடியும். போசிக்ஸ், யூனிக்ஸ் முறைமைச் சேவைகள் அடிப்படையில் அமைந்தது. எனினும் வேறு பல இயக்க முறைகளாலும் செயல் படுத்தப்படும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது. post : அஞ்சல், அஞ்சல்செய்;அஞ்சலிடு : செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடலில் ஒரு கட்டுரை அளித்தல். பருநிலை யிலுள்ள அறிக்கைப் பலகையில் அறிவிப்புகளை ஒட்டுதல் என்ற சொல்லிலிருந்து இச்சொல் உருவானது.

post document operator : குறிப்பு செயற்குறி.

post edit : ஒட்டுத் தொகுப்பு;பின்னிலைச் செப்பம் : ஒரு முந்தையக் கணிப்பிலிருந்து வெளிப்பாட்டுத் தரவுகளைத் தொகுப்பித்தல்.

postfix notation : பின்னொட்டுக் குறிமானம் : ஒரு கணிதக் குறிமானமுறை. இதன் மூலம், 5, 3 என்ற இயக்கப்படு எண்களின் கூட்டலை 53+ என்று குறிப்பிட முடியும். மறுதலைப் போலந்துக் குறிமானம், இந்தக் குறிமானத்தின் ஒரு வடிவமாகும். இது, முன்னொட்டுக் குறிமானத்திலிருந்து வேறுபட்டது.

post implementation review : பின் நிறைவேற்ற மறுஆய்வு : பல மாதங்கள் பயன்பாட்டிலுள்ள ஒரு பொறியமைவினை மதிப்பீடு செய்தல்.

post increment operator : பின் கூட்டு செயற்குறி.

postmaster : போஸ்ட் மாஸ்டர் (அஞ்சல் அதிகாரி) : 1. ஓர் அஞ்சல் வழங்கனில் மின்னஞ்சல் சேவைகளைப் பராமரிக்கும் பொறுப்பினை வகிப்பவரின் புகுபதிகைப் (logon) பெயர் (அதுவே, அவரின் மின்னஞ்சல் முகவரியுமாகும்). மின்னஞ்சல் சேவையில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புதல்/பெறுதலில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதெனில் போஸ்ட்மாஸ்டர் என்ற பெயருக்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தால், அஞ்சல் வழங்கனின் நிர்வாகிக்கு சென்று சேர்ந்து விடும். (எ-டு) postmaster@yahoo. co. in. 2. மின்னஞசல் அனுப்புதல்/ பெறுதல் பராமரித்தலுக்கான ஒரு மென்பொருள். நூறு சதவிகிதம் ஜாவா மொழியிலேயே உருவாக்கப்பட்டது.

post mortem : பின்னாய்வு : ஒரு செயற்பாடு நிறைவேற்றப்பட்ட பின்பு அதனைப் பகுப்பாய்வு செய்தல்.

post mortem dump : பின்னாய்வு சேமிப்பு : ஒரு செயல்முறையின் நிறைவேற்றத்தின் முடிவில் செய்யப்படும் சேமிப்புக் குவிப்பு. இது, நொடிப்புச் சேமிப்புக் குவிப்பிலிருந்து வேறுபட்டது. post office protocol : அஞ்சல் நிலைய நெறிமுறை : இணையத்திலுள்ள அஞ்சல் வழங்கனுக்கான நெறிமுறை. மின்னஞ்சலைப் பெற்று சேமித்து வைக்கிறது. முகவரி தாரருக்கு அனுப்பி வைக்கிறது. வழங்கனில் பிணைத்துக் கொள்ளும் கிளையன் கணினியில் அஞ்சலைப் பதிவிறக்கம் செய்யலாம். பதிவேற்றமும் செய்யமுடியும்.

postprocessor : பின் செயலி : முதலில் வேறொரு செயலியினால் கையாளப்பட்ட தரவுகளில் மீது செயல்படக்கூடிய தொடுப்பி (linker) போன்ற ஒரு மென்பொருள் நிரல் அல்லது ஒரு சாதனம்.

PostScript : போஸ்ட் ஸ்கிரிப்ட் (பின்குறிப்பு) : அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பக்க விவரிப்பு மொழி. நெகிழ்வு மிக்க எழுத்துரு வசதிகளும் உயர்தர வரைகலை வசதிகளும் உடையது. உலகறிந்த பக்க விவரிப்பு மொழியான போஸ்ட் ஸ்கிரிப்ட், பக்க உருவரைக்கும், எழுத்துருக்களை ஏற்றி வடிவமைக்கவும் ஆங்கிலம் ஒத்த எளிய கட்டளைகளைக் கொண்டது. அடோப் சிஸ்டம்ஸ் டிஸ்பிளே போஸ்ட்ஸ்கிரிப்ட் என்னும் மொழியையும் வழங்குகிறது. டிஸ்பிளே போஸ்ட் ஸ்கிரிப்ட் முற்றமுழுக்க விஸிவிக் (WYSIWYG-What You See Is What You Get) வசதியை வழங்குகிறது. திரையில் பார்வையிடவும் அப்படியே அச்சிடவும் இவ்விரண்டு மொழிகளும் இணைந்து பயன் தருகின்றன.

Postscript font : போஸ்ட் ஸ்கிரிப்ட் எழுத்துரு : போஸ்ட் ஸ்கிரிப்ட் பக்க விவரிப்பு மொழியில் வரையறுக்கப்பட்டுள்ள ஒர் எழுத்துரு. போஸ்ட்ஸ்கிரிப்டுக்கு ஒத்தியல்பான அச்சுப்பொறியில் அச்சிடுவதற்கென உருவாக்கப்பட்டது. போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துருக்கள் பிட்மேப் எழுத்துருக் களிலிருந்து மாறுபட்டவை. நளினம், தெளிவு உயர்தரமானவை. அச்சுக்கலைத் துறையில் நிலை பெற்றுவிட்ட தரக்கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் இசைந்தவை.

PostScript printer : போஸ்ட் ஸ்கிரிப்ட் அச்சுப்பொறி : போஸ்ட்ஸ்கிரிப்ட் ஆவணங்களை அச்சிடுவதற்கான அச்சுப்பொறி.

post system : பதிவு பொறியமைப்பு : பண்டக சாலைகளும், பேரங்காடி களும் விற்பனை முனையப் பொறியமைவு களைப் பயன்படுத்தி வருகின்றன. இதிலுள்ள பணப்பதி வேடுகள், உண்மையில் ஒரு தனி நோக்கக் கணினி முனையமாகும். இது, வணிக நட வடிக்கைகளை அப்பண்டக சாலையின் தரவுக் கோப்புகளில் நேரடியாகப் பதிவு செய்து, காட்சித் திரையில் காட்டுகிறது. இது, பட்டியலிடுவதைக் கட்டுப்படுத்துகிறது;கடன் வசதி அட்டை செல்லத்தக்கது தானா என்று சரிபார்க்கிறது;பிற தரவுகளைக் கையாள கைப்பணிகளைச் செய்கிறது.

posture : நிலைப்பாடு.

potentiometer : மின்னழுத்த ஆற்றல் மானி;மின்னழுத்தஅளவி : எந்திரவியல் இயக்கத்திற்கு வீத அளவில் மின்னியல் வெளிப்பாட்டுக் குறியீடுகளை உண்டாக்குவதற்குப் பயன்படும் சாதனம்.

pots : பாட்ஸ் : மிகப் பழைய தொலைபேசி சேவை என்று பொருள்படும் Plain Old Telephone Service என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அடிப்படையிலான எண் சுழற்றுத் தொலைபேசி இணைப்புகளிலிருந்து பொது இணைப்பகப் பிணையத்துடன் தொடர்பு ஏற்படுத்தும் முறையில் அமைந்தது. கூடுதல் வசதிகள், செயல்பாடுகள் எதுவும் இல்லாதது. ஒரு பாட்ஸ்இணைப்பு என்பது, மேசை மீதுள்ள ஒரு சாதாரண தொலைபேசிக் கருவியுடனான இணைப்பைக் குறிக்கிறது.

pour : ஊற்று : ஒரு கோப்பினையோ அல்லது ஒரு நிரலின் வெளிப்பாட் டையோ இன்னொரு கோப்புக்கு அனுப்பி வைத்தல் அல்லது இன்னொரு சாதனத்துக்கு அனுப்பி வைத்தல்.

power : வர்க்கம்;ஆற்றல் : எண்னின் விசைப் பெருக்கத்தை (வர்க்கம்) குறிக்கும் குறியீடு. இதனை"அடுக்குப் பெருக்கம்"என்பர். நான்கின் மூன்று வர்க்கம் என்றால் 4x4x4 என்பதாகும். இதனை 43 என்று எழுதுவர்.

power amplifying circuit : மின் பெருக்க மின்சுற்றுவழி : ஒர் உட்பாட்டு மாற்று மின்னோட்ட (AC) மின்னழுத்தத்தை ஒரு வெளிப்பாட்டு நேர் மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றக்கூடிய மின்னணுவியல் மின்சுற்றுவழி.

powerbook : பவர்புக் : ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் கணினிக் குடும்பத்தைச் சேர்ந்த கையகக் கணினிவகை. இதனை கையேட்டுக் கணினி (Notebook Computer) என்பர். power down : விசை நிறுத்தம் : 1. ஒரு கணினியை அல்லது புறநிலைச் சாதனத்தை நிறுத்தி விடுதல். 2. மின்தடங்கல் ஏற்படும்போது அல்லது மின் விசை நிறுத்தப்படும்போது, கணினிக்கு அல்லது அதனுடன் இணைந்துள்ள புறநிலைச் சாதனங்கள் சேதமடைவதைத் தடுப்பதற்காக கணினி மேற் கொள்ளும் நடவடிக்கை.

power fail/restart : மின்தடங்கல்/தொடங்கல் : மின்தடங்களுக்குப் பிறகு ஒரு கணினி தனது இயல்பான செயற்பாட்டினைத் தொடங்குவதற்கு இயல்விக்கும் வசதி.

power failure : மின் நிறுத்தம்;மின்தடங்கல்;மின் துண்டிப்பு : கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைப்படல். மாற்று மின் வழங்கி இல்லையெனில் கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) தேங்கியுள்ள தரவுகள் இழக்கப்பட்டுவிடும்.

powerful : ஆற்றல்வாய்ந்த : வன்பொருள் விரைவாக இயங்குவ னவாகவும், வடிவளவில் பெரிதாகவும், தம்மையொத்த எந்திரங்களை விட அதிகப் பணிகளைச் செய்யக் கூடியனவாக இருப்பின் ஆற்றல் வாய்ந்தவை எனக் கருதப்படும். மென் பொருள் திறமையாகச் செயற் படுவனவாகவும், பெருமளவுப் பணிகளைச் செய்யக்கூடிய வையாகவும் இருந்தால் அவை வாய்ந்தவை எனக்கருதப்படும்.

power macintosh : பவர் மெக்கின்டோஷ் : பவர்பீசி (Power PC) செயலி பொருத்தப்பட்ட ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி. பவர் மெக்கின்டோஷ் 6100/60, 7100/66, 8100/80 கணினிகள் முதன்முதலில் 1994 மார்ச்சில் வெளியிடப்பட்டன.

பவர் மெக்கின்டோஷ்

power management : மின் மேலாண்மை. power, memory : நினைவகத் திறன்.

power off : மின்னிணைப்புத் துண்டிப்பு.

power on : மின்விசைத் தொடுப்பு : மின்விசையைத்'தொடுப்பு'நிலையில் வைத்து மின்னோட்டம் நடைபெறுவது அல்லது ஒரு சாதனத்திற்கு மின்னோட்டம் செல்லுமாறு செய்தல். இதனை விசையேற்றம் (Power up) என்றும் கூறுவர்.

power-on key : மின் இயக்கு விசை;மின் நிகழ்த்து விசை : ஆப்பிள் ஏடீபி மற்றும் நீட்டித்த விசைப் பலகைகளில் மெக்கின்டோஷ் II கணினிகளை இயக்குவதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசை. இடப்புறம் நோக்கிய முக்கோணக் குறி இடப்பட்டிருக்கும். மின்சார நிகழ்/அகல் (on/off) நிலை மாற்றிக்குப் (switch) பதிலாகப் பயன்படுகிறது. மின்சாரத்தை நிறுத்துவதற்கென தனியான விசை கிடையாது. கணினியில் சிறப்புப் பட்டியிலிருந்து (menu) கட்டளையைத் தேர்வு செய்தால் கணினியின் இயக்கம் நின்றுபோகும்.

Power-On Self Test : மின்-நிகழ் சுயசோதனை : கணினியின் அழியா நினைவகத்தில் (ROM) சேமித்து வைக்கப்பட்டுள்ள நிரல் கூறுகளின் தொகுப்பு. நிலையா நினைவகம் (RAM), வட்டு இயக்ககங்கள், விசைப்பலகை போன் றவை சரியாக இணைக்கப்பட்டு செயல்படும் நிலையில் உள்ளனவா என்பதைப் பரிசோதிக்கும் நிரல்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் இந்த நிரல்கூறுகள், பீப் ஒலி எழுப்பியோ, பிழை சுட்டும் செய்தி மூலமாகவோ பயனாளருக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இச் செய்திகள் பெரும்பாலும் வழக்கமான கணினித் திரையில் காட்டப்படும். மின்-நிகழ் சுயபரிசோதனை வெற்றிகரமாக முடிந்தபின், கட்டுப்பாடு, கணினியின் இயக்கத் தொடக்க நிரலேற்றிக்கு மாற்றப்படும்.

power PC : பவர் பிசி : பிஎம்/ஆப்பிளின் கூட்டு முயற்சிக்காக மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கும் 'ரிஸ்க்' (risc) சிப்பு.

power PC platform : பவர் பீசி பணித் தளம் : 601 மற்றும் அதன்பின் வந்த சில்லுகளின் அடிப்படையில் ஐபிஎம், ஆப்பிள், மோட்டோரோலா நிறுவனங்கள் உருவாக்கிய பணித்தளம். ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளைப் பயன்படுத்த இப்பணித்தளம் வழிசெய்கிறது. மேக் ஓஎஸ், விண்டோஸ் என்டி, ஏஐஎக்ஸ் இயக்கமுறைமைகளில் செயல்படலாம். அந்த இயக்க முறைமைகளுக்காக வடிவமைக்கப் பட்ட மென்பொருள்களையும் பயன்படுத்தலாம்.

Power PC Reference Platform : பவர்பீசி மேற்குறிப்புப் பணித்தளம் : ஐபிஎம் உருவாக்கிய திறந்தநிலை முறைமை தர வரையறை. பல்வேறுபட்ட நிறுவனங்கள் உருவாக்கிய பவர்பீசி முறைமைகளுக் கிடையே ஒத்தியல்பை உறுதி செய்வதே ஐபிஎம் இதனை வடிவமைப்பதற்கான நோக்கமாகும். தற்போதைய ஆப்பிள் பவர்பீசி மெக்கின்டோஷ் முறைமைகள் ஐபிஎம்மின் பவர் பீசி மேற்குறிப்பு பணித்தளத்துடன் ஒத்தியல்பற்றவையாய் உள்ளன. வருங்காலப் பதிப்புகள் ஒத்தியல்புடையவையாய் இருக்க வாய்ப்புண்டு. சுருக்கமாக பீ-ரெப் (PReP) என்று அழைக்கப்படுகிறது.

powerpoint : பவர்பாய்ன்ட் : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மற்றும் மெக்கின்டோஷ் அறிமுக பிரசென்டேஷன் நிரல் தொடர். மெக்கின் டோஷ் முதல் மேசைமேல் வழங்கும் நிரல்தொடரான இது, ஒட்டு மொத்தங்கள், கைவெளியீடுகள், பேசுபவர் குறிப்புகள் மற்றும் திரைப்பட பதிவிகளை வழங்குகிறது. ஜெனிகிராபிக் படவில்லைகளுக்கான வண்ணத் தொகுதி இதனுடன் சேர்ந்து வரும.

power supply : மின்வழங்கி : மாற்று மின்னோட்ட (AC) மின் அழுத்தத்தை நேர்மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றுகிற மின்சுற்றுவழி. ஒலித் துடிப்புகளும், மின்னழுத்த மாறுபாடுகளும் கணினியின் மின்சுற்று வழிகளைச் சீர்குலைக்காதவாறு ஒரு விசை வழங்கீட்டு வெளிப்பாடு கண்டிப்பாக ஒழுங்கு முறைப்படுத்தப்படுகிறது.

power surge : மின் எழுச்சி;மின்னெழுப்பி : மின்னோட்டம் பாய்தல் திடீரென அதிகரித்துச் சிறிது நேரம் நீடித்திருத்தல். இதனால், கணினிச் செயற்பாடு முறையாக இயங்குவதில் சில சிக்கல்கள் உண்டாகலாம்.

power telephone network : திறன்மிகு தொலைபேசிப் பிணையம்.

Power up : மின்னேற்றம் : மின் இணைப்பு வழங்கல் : 1. ஒரு கணினியை அல்லது புறநிலைச் சாதனத்தை இயக்குவதற்கு முடுக்கிவிடுதல். 2. விசையோட்டம் செய்யப்படுகிற போது அல்லது மின்தடங் களுக்குப் பிறகு மீண்டும் விசை யூட்டப்படுகிறபோது ஒரு கணினிச் செய்முறைப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை இது, "விசை நிறுத்தம்" என்பதிலிருந்து வேறுபட்டது.

power user : சக்தி பயனாளர் : தனிநபர் கணினியில் மிகவும் திறமையுள்ள நபர். பலதரப் பட்ட மென்பொருள் பொதிகங்கள் பற்றிய அறிவுள்ளவர் என்பதைக் குறிப்பிடுகிறது.

pph : பிபிஎச் : 'மணிக்கு இத்தனை பக்கங்கள்'என்று பொருள்படும்“Pages per hour"என்ற ஆங்கில சொற்றொடரின் குறும்பெயர்.

PPM : பிபிஎம் : "துடிப்பு இட நிலை ஏற்ற இறக்க", "துடிப்பு நேர ஏற்ற இறக்கம்" என்று பொருள்படும்"Pulse Position Modulation", "Pulse Time Modulation"என்ற ஆங்கிலச் சொற்றொடர்களின் குறும்பெயர்.

PPP : பீபீபீ : நேரடி இணைப்பு நெறிமுறை என்று பொருள்படும் Point to Point Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொலைபேசி இணைப்பு வழியாக ஒரு கணினியை இணையத்தோடு இணைப்பதற்கென 1991ஆம் ஆண்டில் இணையப் பொறியியல் முனைப்புக் குழு (Internet Engineering Task Force) உருவாக்கிய தரவு தொடுப்பு நெறி முறை (Data Link Protocol). ஸ்லிப் (SLIP) நெறிமுறையை விடக் கூடுதலான தரவு ஒழுங்கு மற்றும் தரவு பாதுகாப்புக் கொண்டது. ஆனால் சற்றே சிக்கல் மிகுந்தது.

. pr : . பீஆர் : ஒர் இணைய தள முகவரி போர்ட்டோ ரீக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

Pragmatics : செயல்துறை உறவு;நடைமுறையியல் : குறியீடுகளுக்கும். அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவோர்க்கு மிடையிலான உறவு நிலையை ஆராய்தல்.

PRAM : பிரேம் : அளபுரு ரேம் எனப்பொருள்படும் parameter RAM என்பதன் சுருக்கம். மெக்கின்டோஷ் கணினிகளில் ரேம் நினைவகத்தின் ஒரு பகுதி. கணினியின் தேதி, நேரம், திரைத்தோற்றம் மற்றும் பிற கட்டுப்பாட்டுப் பலகத்தின் அமைப்புக் கூறுகள் போன்ற தகவமைவுத் தரவுகளை பதிந்து வைத்துள்ள ரேம் நினைவகப் பகுதி.

P-rating : பீ-தரமிடல் : பீ-தர அளவீடு : செயல்திறன் தர அளவீடு என்று பொருள்படும் perfor-mance rating என்பதன் சுருக்கம். சிரிக்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நுண்செயலி தர அளவீட்டு முறை. நடப்புநிலைப் பயன்பாடுகளின் ஒட்டுமொத்தத் பலன் (throughput) அடிப் படையில் அமைந்தது. முன்பெல்லாம் நுண் செயலியின் கடிகார வேகமே தர அளவீட்டின் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. சிப்புக் கட்டுமானங்களில் உள்ள வேறுபாடு, கணினியைப் பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்துவது போன்றவை கணக்கில் கொள்ளப்படவில்லை.

Precaution : முன்னெச்செரிக்கை.

precedence : முன்னுரிமை : ஒரு கணக்கீட்டுத் தொடரில் மதிப்புகள் கணக்கிடப்படும் வரிசை. பொதுவாக, பயன் பாட்டு நிரல்களில் பெருக்கல், வகுத்தல் முதலிலும், கூட்டல் கழித்தல் அதன்பிறகும் செய்யப் படுகின்றன. இந்த வரிசை முறையை மாற்ற வேண்டுமானால் பிறை அடைப்புக் குறிகளைப் பயன்படுத்தலாம். அடைப்புக் குறிகளுக்குள் இருப்பது முதலில் நிறைவேற்றப்படும். 344x5=23 (3+4) x5=35. காண்க : Operator Precedence.

pre decrement operator : முன் குறைப்பு செயற்குறி.

Precision : துல்லியம்;சரி நுட்பம் : ஒரு எண்ணளவினை குறித்திடும் துல்லியத்தின் அளவு. ஒரு கணிப்பு ஏறத்தாழத் துல்லியமாகச் செய்யப் படுகிறது. பை (π) என்பதன் உண்மையான மதிப்பு 3. 14162 ஆகும். இது ஆறு எண்கள் வரைத் துல்லியமானது.

precompiler : முந்தொகுப்பி : இன்னொரு கணினி செயல்முறையின் ஆதாரக் குறியீடுகளை அந்தச் செயல்முறை தொகுக்கப்படுவதற்கு அடுத்து முந்திச் செய்முறைப்படுத்துகிற கணினிச் செயல்முறை. இது அந்தச் செயல்முறைக்குப்பின் வரும் திறம்பாடுகளை அளிக்கலாம் : 1. தொகுப்பிக்கு ஏற்புடையதல்லாத வசதியான சுருக்கங்களைப் பயன்படுத்துவதற்கான திறம்பாடு;2. தொகுப்பிக்கு ஏற்புடையதாக இல்லாத, தர அளவுப்படுத்தாத செயல்முறைப்படுத்தும் கட்டளைகளைப் பயன்படுத்து வதற்கான திறம்பாடு;3. ஒரு செயல் முறையாளர் எழுதும் ஆதார கட்டளைத் தர நிலைப்படுத்தும் திறம்பாடு.

predefined function : முன்வரையறுத்த செயற்பணி : பயன் படுத்துவோர் ஒரு செயல்முறையில் சேர்த்துக் கொள்வதற்கு உள்ள தர அளவுக் கணித நடைமுறை.

predefined process : முன் வரையறுத்த செயல்முறை : 1. வேறெங் கேனும் வரையறுக்கப்பட்டு பெயரால் மட்டுமே அடையாளங் காணக்கூடிய செய்முறை. 2முடிவுறுத்திய துணை வாலாயம்.

predefined process symbol : முன் வரையறுத்த செய்முறைக் குறியீடு : ஒரு துணை வாலாயத் தினைக் குறிப்பதற்குப் பயன் படுத்தப்படும் செவ்வகப் பாய்வு வரைபடக் குறியீடு.

predicate : பயனிலை : நிரல்தொடரில் வரும் ஒரு சொற்றொடர். இது ஒரு வெளிப்பாட்டை மதிப்பீடு செய்து தரவுவின் நிலைமையை அனுசரித்து உண்மை அல்லது பொய் என்ற பதிலைத் தரும்.

predictive reports : ஊக அறிக்கைகள்;முன் கணிப்புஅறிக்கை : திறமார்ந்த தந்திரமான முடிவுகள் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் வணிக அறிக்கைகள்.

pre edit : முன்னிலைத் திருத்தம்.

preemptive multitasking : முற்படு பல்பணியாக்கம் : பல் பணி யாக்கத்தில் ஒருவகை. இயக்க முறைமையானது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நிரலின் செயல்பாட்டில் குறுக்கிட்டு, கணினியின் கட்டுப் பாட்டை, காத்திருக்கும் இன்னொரு நிரலுக்கு மாற்றித்தரும். இம்முறையில், ஏதேனும் ஒரு நிரல், கணினிச் செயல்பாட்டை ஏகபோகமாய் ஆக்கிரமித்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

preferences : முன்தேர்வுகள்;முன்னுரிமைகள்;விருப்பத் தேர்வுகள் : பெரும்பாலான வரைகலைப் பயனாளர் இடை முகங்களில், ஒரு பயன்பாட்டு நிரல் ஒவ்வொரு முறை இயக்கப் படும்போதும் எவ்வாறு செயல் படவேண்டும் என்பதை பயனாளர் வரையறுத்துக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக ஒரு சொல்செயலிப் பயன்பாட்டில் அளவுகோல் (ruler) தோன்றவேண்டுமா, கருவிப்பட்டை, நிலைமைப் பட்டை போன்றவை இருக்க வேண்டுமா, ஆவணத்தின் தோற்றம் அச்சுக்குப் போவது போன்ற ஓர இடைவெளிகளுடன் தோற்றமளிக்க வேண்டுமா மற்றும் இது போன்ற விருப்பத் தேர்வுகளை முன்கூட்டியே அன்மத்துக் கொள்ள முடியும்.

prefix notation : முன்னொட்டுக் குறிமானம் : கணித எண்ணுருக் கோவைகளை உருவாக்குவதற்கான முறை. இதில் ஒவ்வொரு இயக்கு எண்ணும் இயக்கப்படு எண்களுக்கு முன்னதாக வருகிறது. எடுத்துக்காட்டு : (x+y) xz என்னும் கோவையை 'xy+xz' என்று குறிக்கலாம். 5 ஐயும் 3 ஐயும் கூட்டுவதை +53 என்று போலந்துக் குறிமானத்தில் குறிக்கலாம்.

p-register : செயல்முறைப் பதிவேடு : செயல்முறை மேடைப் பதிவேடு. இதில் நடப்பு கட்டளைகளின் அமைவிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

pre-increment operator : முன் கூட்டுச் செயற்குறி.

Preliminary study : ஆரம்ப நிலை ஆய்வு.

preloaded : முன்பதிய வைத்த.

premium rate service : உயர் மதிப்புக் கட்டண சேவை ஐஎஸ்டின் (ISDN-Integrated Services Digital Networks) தொலைதொடர்புச் சேவையில் ஒருவகை சேவை.

preparation, data : தரவுத் தயாரிப்பு.

prepress : முன் அச்சு : அச்சிடல் மற்றும் அச்செழுத்துக் கலையில், ஒளிப்படக் கருவிக்குத் தயாராகும் பொருள்களை அச்சு நிலைவரை தயாரித்தல். அச்சுக் கோப்பு மற்றும் பக்கமாக்குதல் இதில் அடங்கும்.

preprinted forms : முன் அச்சிட்ட படிவங்கள் : கணினி உருவாக்கிய வெளிப்பாட்டினைக் கொண்டிருக்கும் படிவங்கள். இவற்றில் ஏற்கெனவே அச்சிட்ட தலைப்புகளுடனும் அடையாளத் தரகவல்களுடனும் கூடிய ஒரு கணினியமைவு பதிவு செய்யப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் புறநிலை அறிக்கைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

preprocessor : முன்செய்முறைப் படுத்தி;முன்னிலைச் செயலாக்கி : உட்பாட்டுத் தரவுகளில், மேற்கொண்டு செய்முறைப்படுத்துவதற்கு முன்பு, மாற்றம் செய்தல், படிவமாக்குதல், சுருக்கஞ் செய்தல் போன்ற செயற்பணிகளைச் செய்கிற செயல்முறை. presentation : கருத்து விளக்கம்;முன் வைப்பு.

presentation graphics : அறிமுக வரைகலை;நிகழ்த்து வரை கலை : முன்வடிவுகள், திட்டங்கள், வரவு செலவுத் திட்டங்கள் ஆகியவற்றை உயர் மேலாண்மைகளுக்கு அளிப்பதில் முக்கியக் குறிப்புகளை வலியுறுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உயர்தர வணிக வரை கலைக் காட்சியுருக்கள்.

presentation manager : அறிமுக மேலாளர் : ஒஎஸ்/2 இல் உள்ள மைக்கப்பட்ட விண்டோஸ் சூழ்நிலையில் உருவான வரைகலைப் பயனாளர் இடைமுகம் டாஸ்-க்கான சாளரத்தில் விண்டோஸில் உள்ளதுபோல இதுவும் ஒரு பயன்பாடு.

preset : முன் நிறுவுதல் : முதல் நிலைத் தகுநிலையை நிருணயித்தல். ஒரு வளைவின் கட்டுப்பாட்டு மதிப்பளவுகளை அறுதியிடுதல் அல்லது அட்டவணைகள், பதிவேடுகள் போன்ற வற்றில் முதல்நிலை மதிப் பளவுகளை நிருணயித்தல் இதற்கு எடுத்துக்காட்டு,

prespecified reports : முன்வரையறுக்கப்பட்ட அறிக்கைகள் : வேண்டும்போதோ அல்லது விதி விலக்காகவோ மேலாளர்களுக்கு கால முறைப்படி தரவுவை முன்னதாகவே வழங்குமாறு வடிவமைக்கப்பட்ட அறிக்கைகள்.

press : அழுத்து : ஒரு நுண்பொறியில் விசைப்பொத்தானை அழுத்தும் செயல்.

pressure-sensitive : அழுத்தம் உணரி : ஒரு மெல்லிய பரப்பின்மீது அழுத்தம் கொடுக்கும்போது ஒரு மின் இணைப்பு ஏற்பட்டு, கணினியால் உணர்ந்து பதிவுசெய்யும் வகையில் ஒரு நிகழ்வினை ஏற்படுத்தும் ஒரு சாதனம். தொடுஉணர்வு வரைவு பேனாக்கள், தொடுவிசைப் பலகைகள், சில தொடுதிரைகள் இந்த வகையைச் சார்ந்தவை.

pressure sensitive keyboard : அழுத்த உணர்வு;விசைப் பலகை : மின்கடத்தும் மையினாலான ஒரு மின்சுற்று வழி பொருத்தப்பட்ட, இரு மெல்லிய பிளாஸ்டிக் தகடுகளால் உருவாக்கப்பட்ட விசைப்பலகை. இது சிக்கனமானது;குட்டை வடிவமானது மலிவான பல துண்கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது.

pressure sensitive pen : அழுத்த உணர்வுப் பேனா : ஒர் எண்ணாக்கியின் உதவியுடன் பயன்படுத்தப்படும் பேனா. இதில் ஒரு அழுத்த நுண்ணிடை இயக்கமானி அடங்கியுள்ளது. இது எழுதும் அழுத்தத்தை உணர்ந்தறிந்து z-அச்சுத் தரவுவாக அனுப்புகிறது.

prestel : பிரெஸ்டெல் : இங்கிலாந்திலுள்ள வணிகமுறை ஒளிப்பேழை வாசகச் சேவைமுறை.

prety print : அழகு அச்சு; ஒழுங்கு அச்சு : அச்சிடும்போது நிரல் கட்டளைகளை எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கும் வசதி சில உரைத்தொகுப்பான்களில் உள்ளன. (எ-டு) நிரல் கூறுகளுக்கிடையே ஒரு வெற்று வரி சேர்த்தல், பின்னல் நிரல் கூறுகளுக்கு ஒர இடம்விடல், சில கட்டளை அமைப்புகளில் வரிகளை உள்ளடங்கி அமைத்தல்.

preventive maintenance : தடுப்புப் பராமரிப்பு; தவிர்நிலை பேணல் : சாதனங்களைத் தொடர்ந்து செயற்பாட்டு நிலையில் வைத்து வருவதற்கு உதவ ஒரு கணினியில் பயன்படுத்தப்படும் செய்முறைகள். தவறுகள் நேர்வதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, திருத்தம் செய்வதற்கு இவை உதவுகின்றன. சாதனங்களை இயல்பு நிலையிலும் பழுது நிலையிலும் துப்புரவு செய்தல், சரியமைவு செய்தல், சோதனை செய்தல் போன்றவை இதில் அடங்கும்.

preview : முன்காட்சி : சொல்செயலி மற்றும் பிற பயன்பாடுகளில் உள்ள ஒரு வசதி. ஓர் ஆவணத்தை அச்சிடுவதற்கென வடிவமைத்தபின் நேராக அச்சுப்பொறிக்கு அனுப்பாமல், அச்சிடப்போகும் அதே வடிவமைப்பில் கணினித் திரையில் காணலாம். பயனாளருக்கு மனநிறைவு ஏற்படின் அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவிடலாம்.

previous : முற்பட்ட, முந்தைய.

previous page button : முந்தைய பக்கப் பொத்தான்.

primary and extended : முதன்மை மற்றும் நீட்டிப்பு.

primary channel : முதன்மைத்தடம் : இணக்கி போன்ற தகவல் தொடர்புச்சாதனத்தில் தரவு அனுப்பு தடத்தின் பெயர். primary cluster : அடிப்படைத்தொகுதி, முதன்மைத் தொகுதி : தனியொரு அட்டவணை அமைவிடத்தைச் சுற்றி அட்டவணை பதிவுகளைத் திரட்டுதல்.

primary colours : அடிப்படை வண்ணங்கள் : மற்ற வண்ணங்கள் அனைத்தையும் உருவாக்கக் கூடிய அடிப்படையான வண்ணங்களின் தொகுதி. சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவை அடிப்படை வண்ணங்கள். வண்ணம் பூசுபவர்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகியவற்றை அடிப்படை வண்ணங்கள் என்பர். இந்த அடிப்படை வண்ணங்களை ஒன்றிலிருந்து ஒன்று உண்டாக்க முடியாது. ஆனால் இவற்றை ஒன்றோடொன்றுகலந்து வேறு வண்ணச்சாயல்களை உருவாக்கலாம்.

primary data : அடிப்படைத் தரவு : மூலாதாரத்திலிருந்து பெறப்பட்ட தரவு. வானிலை அறிவிப்புத் துறையில் பெறப்பட்ட பயனுள்ள தரவு அடிப்படை தரவுக்கு எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.

Primary Domain Controller : முதன்மைக் களக் கட்டுப்படுத்தி : 1. விண்டோஸ் என்டீ-யில் பிணைய வளங்களையும், பயனாளர் கணக்குகளையும் மையப்படுத்தப்பட்ட முறையில் நிர்வகிக்க உதவும் ஒரு தரவுத்தளம். பயனாளர்கள் ஒரு குறிப்பிட்ட புரவன் கணினியில் துழைவதற்குப் பதிலாக ஒரு களத்தினுள் துழைய இந்த தரவுத் தளம் அனுமதிக்கிறது. ஒருகளத்தினுள் இருக்கும் கணினிகள் பற்றிய விவரங்களை வேறொரு கணக்குவைப்புத் தரவுத்தளம் கவனித்துக் கொள்கிறது. களத்தின் வளங்களைப் பயனாளர்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது. 2. ஒரு குறும்பரப்புப் பிணையத்தில், களத்தின் பயனாளர் கணக்குகளுக்கான தரவுத்தளத்தின் முதன்மை நகலைப் பராமரித்து, பயனாளர்களின் புகுபதிகைக் கோரிக்கைகளைச் சரிபார்க்கும் பணிகளைக் கவனித்துக் கொள்ளும் வழங்கன் கணினி.

primary index : அடிப்படை அட்டவணை : ஒரு கோப்பின் நடப்புச் செயலாக்க வரிசை முறையைக் கட்டுப்படுத்தும் அட்டவணை.

primary key : அடிப்படைப் புதிர்க் குறிப்பு : முதன்மைத் திறவுகோல் செய்முறைப்படுத்த பதிவேடுகளை வகைப்படுத்துவதற்கு அல்லது ஒரு கோப்பினுள் ஒரு குறிப்பிட்ட பதிவேட்டின் அமைவிடத்தைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வழிகாட்டுங்குறிப்பு.

primary memory : முதன்மை நினைவகம்; அடிப்படை நினைவகம் : இது மையச் செயலகத்துடன் நேரடியாகத் தொடர்புடைய கணினி நினைவகம் (ரேம்) இது மின்சக்தி இல்லை யென்றால் நினைவகத்தில் சேமித்தவற்றை வைத்துக்கொண்டிராது.

primary storage : முதன்மைச் சேமிப்பகம் : குறிப்பிலா அணுகு நினைவகமே (RAM) இவ்வாறு அழைக்கப்படுகிறது. முதன்மையான பொதுப்பயன் சேமிப்புப் பகுதி ஆகும். நுண் செயிலி இந்த நினைவகப் பகுதியை நேரடியாக அணுகும். கணினியில் வட்டு, நாடா போன்ற சேமிப்புச் சாதனங்கள் துணைநிலை சேமிப்பகங்கள் அல்லது சில வேளைகளில் காப்புச் சேமிப்பகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

prime factors : பகாஎண் காரணிகள்.

prime number : பகாஎண்.

primer : முதன்மை ; ஆரம்ப : ஒரு ஆரம்ப விளக்கக் கையேடு.

prime shift : முதற்படி முறை மாற்றம் : ஓர் அமைவனத்தின் இயல்பான அலுவல் நேரத்துடன் ஒத்திருக்கிற வேலை முறைமாற்றம், முடிவு முறைமாற்றம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.

primitive : ஆதிநிலை; தொடக்கநிலை : 1. ஆதாரமான அல்லது அடிப்படையான அலகு. ஒரு எந்திர நிரலின் மிக அடிமட்ட நிலையினை அல்லது ஒரு மொழி பெயர்ப்பின் மிகவும் கீழ்மட்ட அலகினைக் குறிக்கிறது. 2. கணினி வரைகலையில் புள்ளிகள், கோடுகள், கூறுகள், எழுத்துகள் போன்ற கூறுகளைக் குறிக்கிறது.

primitive data type : மூலத் தரவு இனம்.

primitive element : ஆதிநிலைக் கூறு; தொடக்க நிலைக்கூறு : கோடு, கூறு, புள்ளி போன்ற வரைகலைக் கூறு. சிக்கலான உருவங்களை அல்லது உருக்காட்சிகளை உருவாக்குவதற்கு இவற்றை வரவழைக்கலாம் அல்லது மற்ற ஆதி நிலைக்கூறுகளுடன் இணைக்கலாம்.

print : அச்சு; அச்சிடு : கணிப்பணியில் தகவலை அச்சுப்பொறிக்கு அனுப்புதல். சில மென்பொருள்களில் சில வேளைகளில் இச்சொல், காண்பி, நகலெடு என்ற பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பேசிக் மொழியில் PRINT என்னும் கட்டளை வெளியீட்டைக் கணினித் திரையில் காட்டும். அதுபோலவே சில பயன்பாட்டுத் தொகுப்புகளில், PRINT என்னும் கட்டளைமூலம் ஒரு கோப்பினை அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்குப்பதில் வட்டில் பதிவு செய்யும்படி திசை மாற்றமுடியும்.

print area : அச்சு பரப்பு.

print buffer : அச்சு இடையகம்; அச்சு இடைநினைவகம் : ஒரு தகவலை அச்சுப் பொறிக்கு அனுப்பும்போது, அச்சுப்பொறி அச்சிடத்தயாராக இல்லாத தருணத்தில், அனுப்பப்பட்ட தகவலை, நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக இருத்தி வைக்கப்படுகிறது. இந்த நினைவகப் பகுதி அச்சு இடையகம் அல்லது அச்சு இடைநினைவகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடைநினைவகப் பகுதி (1) ரேம் (RAM) நினைவகம் (2) அச்சுப்பொறி (3) கணினிக்கும் அச்சுப்பொறிக்கும் இடையேயுள்ள ஒரு தனி சாதனம் (4) வட்டு - ஆகிய இவற்றுள் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு இருப்பினும், மெதுவாகச் செயல்படும் அச்சுப்பொறிக்கும் வேகமாகச் செயல்படும் கணினிக்கும் இடையே, தகவலின் தற்காலிகத் தங்குமிடமாகச் செயல்படுகிறது. அச்சு இடையகங்கள் வசதிகள் அடிப்படையில் வேறுபடுகின்றன. சிலவற்றில் ஒருசில எழுத்துகளையே இருத்த முடியும். சிலவற்றில் அச்சிடுவதற்கான கோப்புகளை ஒரு சாரை (Quene) யில் நிறுத்திவைத்துக் கையாள முடியும். மறு அச்சிடல், சில அச்சுப்பணிகளை நீக்கிவிடுதல் போன்ற பணிகளைச் செய்ய முடியும்.

print chart : அச்சு வரைபடம் ; அச்சிட்ட படிவம் : ஓர் அச்சடிப்பிக்கு ஒரு வெளிப்பாட்டு அறிக்கையின் உருப்படிவத்தை வரைவதற்குப் பயன்படும் படிவம். இது அச்சடிப்பி இடப்பரப்பு வரைபடம், அச்சடிப்பி வடிவமைப்புப் படிவம், அச்சுப்பக்க அமைப்புத் தகடு என்றும் அழைக்கப்படும்.

print column : அச்சுப் பத்தி : துணைக் கூட்டல் அல்லது கூட்டலிடப்படக்கூடிய வகையில் அச்சு அறிக்கையின் மீதுள்ள தகவல் பத்தி. அறிக்கை எழுதுபவரின் விளக்கக் குறியில் அச்சுப்பத்திகளே இன்றியமையாதவை.

print control character : அச்சுக்கட்டுப்பாட்டு எழுத்துரு : ஒரு வரி வாரி அச்சடிப்பியில் செயற்பாட்டுக்கான கட்டுப்பாட்டு எழுத்து. சகட மீட்சி, பக்க வெளியேற்றம், வரிஇட பரப்பு போன்றவை இதில் அடங்கும்.

print density : அச்சு அடர்த்தி : 'ஒர் அளவீட்டு அலகில் அடக்கக்கூடிய அச்செழுத்துகளின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு : ஒரு பக்கத்தில் அடங்கியுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை.

printed circuit : (PC) : அச்சிட்ட மின்சுற்று வழி (பீசி) : மின்கடத்தாத ஒரு தட்டையான தகட்டில் அச்சிடப்பட்ட, வெற்றிடம் அடைவு செய்த மின்முலாம் பூசிய மின்னணுவியல் மின் சுற்றுவழி.

printed circuit, board (PCB) : அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை : பலகையிலுள்ள மின்கடத்தும் பொருளின் மூலம் மின்னியல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மின் சுற்றுவழி. இதில் கம்பிகள் வாயிலாக இணைப்புகள், செய்யப்படவில்லை. ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புகள், எதிர்ப்பிகள், மின் பெருக்கிகள், விசைகள் ஆகியவை இந்தப் பலகையில் ஏற்றப்படுகின்றன.

அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை

அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை

printed density : அச்சிடப்பட்ட அடர்த்தி : காகிதத்தில் எழுத்துகள் அல்லது வரைகலைகளை எவ்வளவு கறுப்பாக அச்சிடப் படுகிறது என்பதைக் குறிப்பிடுவது.

Printed materials : அச்சுப்படிகள்.

print element : அச்சுக்கூறு : உருக்காட்சியை உள்ளபடிக்குக் காகிதத்தில் பதிவு செய்கிற அச்சிட்ட பகுதி. தளமட்டச் சக்கரம், விரல் சிமிழ் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்படும். அச்சுக்கூறுகள். இதனை'அச்சுத் தலைப்பு' என்றும் கூறுவர்.

printer : அச்சுப்பொறி;அச்சடிப்பி : வன்படி வெளிப்பாட்டினை உரு வாக்குகிற வெளிப்பாட்டுச் சாதனம்.

printer, barrel : சுழல் உருளை அச்சு. printer buffer : அச்சடிப்பி இடை நினைவகம்;அச்சுப்பொறி இடை நினைவகம் : ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளிடமிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்புகின்ற நினைவகச் சாதனம். ஒவ்வொரு பக்கமும் அச்சிடும்வரை காத்திராமல், முழு வெளியீட்டையும் கணினிக்கு உதவுவது. அச்சுப் பொறி இடை நினைவகம் மற்றும் தானியங்கிப் பொத்தானுடன் இரண்டுக்கு மேற்பட்ட கணினிகள் இணைக்கப்பட்டு வெளியீட்டை முதலில் வந்தது முதலில் வழங்கப்படுகிறது என்ற முறையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

printer cable : அச்சுப் பொறிக் கம்பி : ஒரு அச்சுப் பொறியைக் கணினியுடன் இணைக்கும் கம்பி. ஒரு பீசியில் கேபிளிடம் 25 பின் டி. பி. 25-ஆண் இணைவி கணினிக்காகவும் அச்சுப் பொறிக்காக 36 பின் சென்ட் ரானிக்ஸ் ஆண் இணைப்பியும் இருக்கும்.

printer, chain : தொடர் அச்சுப்பொறி.

printer, character : எழுத்து அச்சுப்பொறி.

Printer Control Language : அச்சுப்பொறி கட்டுப்பாட்டுமொழி : ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் தன்னுடைய லேசர் ஜெட், டெஸ்க் ஜெட் மற்றும் ரக்டுரைட்டர் ஆகிய அச்சுப்பொறிகளில் பயன்படுத்திய மொழி. லேசர் அச்சுப்பொறிச் சந்தையில் லேசர்ஜெட் முன்னணி இடம் வகிப்பதால் அச்சுப்பொறி கட்டுப்பாட்டு மொழியே நிலைத்த தர வரையறையாய் ஆகிவிட்டது.

printer controller : அச்சுப் பொறிக் கட்டுப்படுத்தி : ஒர் அச்சுப்பொறியில் குறிப்பாக ஒரு பக்க-அச்சுப் பொறியின் செயலாக்கத்திற்கான வன்பொருள். இது ராஸ்டர் படிமச் செயலி, நினைவகம் மற்றும் பொதுப்பயன் நுண்செயலி களையும் உள்ளடக்கியது. அச்சுப்பொறிக் கட்டுப்படுத்தி சொந்தக் கணினியின் ஒர் அங்கமாகவும் இருக்க முடியும். மிகுவேக வடத்தின் மூலமாக கணினி யுடன் இணைக்கப் பட்டிருக்கும்.

printer, daisy wheel : டெய்ஸி சக்கர அச்சுப்பொறி.

printer, dot : புள்ளி அச்சுப் பொறி.

printer, dotmatrix : புள்ளியணி அச்சுப்பொறி.

printer driver : அச்சுப்பொறி இயக்கி : பல்வேறு பயன் பாட்டுத் தொகுப்புகள் ஒரு குறிப்பிட்ட அச்சுப்பொறியில் அச்சிடுவதைச் இயல்விப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள்.அக்குறிப்பிட்ட அச்சுப்பொறியின் வன்பொருள் அமைப்பு,அகநிலை மொழிபற்றிக் கவலை யின்றி அச்சிடலாம்.பயன்பாட்டுத் தொகுப்புகள் பல்வேறு வகையான அச்சுப்பொறிகளை அவற்றுக்குரிய சரியான இயக்கி நிரல்களின் உதவி களுடன் பயன் படுத்திக் கொள்ள முடியும். இக்காலத்தில் வரைகலைப் பணித் தள இயக்க முறைமைகள் தம்மகத்தே கொண்டுள்ள இது போன்ற இயக்கி நிரல்களை பயன்பாட்டுத் தொகுப்புகள் ஒவ்வொன்றும், தங்களுக்கென இயக்கி நிரல்களை வைத்துக் கொள்ளத் தேவையில்லை.

printer engine:அச்சுப்பொறி எந்திரம்:லேசர் அச்சுப்பொறி போன்ற பக்க அச்சுப்பொறிகளில் அச்சிடும் பணியை நிறை வேற்றுகிற பாகம்.பெரும் பாலான அச்சுப்பொறி எந்திரங்கள் தன்னிறைவு பெற்றவையாய்,மாற்றத்தகு மைப்பேழைகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன.இந்த எந்திரம் அச்சுப் பொறிக் கட்டுப்படுத்தி யினின்றும் வேறுபடுகிறது.உலகில் பெருமளவு பயன்படுத்தப்படும் அச்சுப்பொறி எந்திரங்கள் கேனன்(Canon)நிறுவனம் தயாரித்தவை.

printer file:அச்சுப்பொறி கோப்பு;அச்சுப்பொறிக் கோப்பு:அச்சிடப்படத் தயாராக அச்சு உருவ வடிவத்தில் உள்ள ஆவணம்.அச்சுப்பொறிக்கு அச்சிட அனுப்பப்படும் தரவுகளை ஒரு கணினிக் கோப்புக்கு திசை திருப்பி சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.இத்தகைய கோப்பு பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப் படுகிறது.எடுத்துக்காட்டாக,அச்சுக்கு அனுப்பப்படும் வெளி யீட்டை அப்படியே இன்னொரு கணினிக்கு அல்லது இன்னொரு நிரலுக்கு உள்ளீடாகத் தரமுடியும்.பின்னொருநாளில் இக்கோப்பினை நேரடியாக அச்சுப் பொறிக்கு அனுப்பி எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.சில வேளைகளில் அச்சுப்பொறி இயக்கிக் கோப்பினைத் தவறுதலாக சிலர் அச்சுப் பொறிக் கோப்பு எனக் குறிப் பிடுகின்றனர்.

printer font:அச்சுப்பொறி எழுத்துரு:அச்சுப்பொறிக்குள் தங்கியிருக்கும் அல்லது அச்சுப் பொறிக்கென வைத்திருக்கும் ஒர் எழுத்துரு. இத்தகைய எழுத் துருக்கள் அச்சுப் பொறிக்குள்ளேயே உள்ளமைக்கப் பட்டிருக்கலாம். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துருப் பொதியுறைகளிலும் கிடைப்பதுண்டு.

printer format : அச்சடிப்பி உருப்படிவம் : அச்சுப் படிவம் : அச்சடிப்பு மண்டலங்களாகப் பகுக்கப்பட்ட அச்கத்தாள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மதிப்பளவினை மட்டுமே அச்சடிக்க முடியும்

printer head : அச்சுமுனை.

printer interface : அச்சு இடைப்பிணைப்பு.

printer interrupt : அச்சுப்பொறி குறுக்கீடு : “Not Pusy"சமிக்கையை அச்சுப்பொறி அனுப்பும்போது ஏற்படும் வன்பொருள் குறுக்கீடு. குறுக்கீடும் வாலாயமானது. பொதுவாக வெளியீட்டுத் தரவுவின் எழுத்தை அச்சுப் பொறிக்கு அனுப்பிவிட்டு கட்டுப்பாட்டை மையச் செயலகத்துக்கு அனுப்பும். இந்த நடைமுறையானது அச்சுப்பொறியை இயக்கும் அதேவேளையில் கணினியை வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தும்.

printer layour sheet : அச்சுப் பொறி உருவரைத் தாள்.

printer, line : வரி அச்சுப்பொறி.

printer maintenance : அச்சுப்பொறி பாராமரிப்பு.

printer, matrix : அணி அச்சுப்பொறி.

printer, page : பக்க அச்சுப்பொறி.

printer port : அச்சுத்துறை;அச்சுப் பொறித்துறை : ஒரு சொந்தக் கணினியில் ஒரு அச்சுப் பொறியை இணைக்கக் கூடிய இடம். பீசி ஒத்தியல்புக் கணினிகளில் பெரும்பாலும் இணைநிலைத் துறைகளே (parallel ports) அச்சுத் துறையாக பயன்படுத்தப்படுகின்றன. இயக்க முறைமை, இதனை எல்பீடீ (LPT) என்னும் தருக்க சாதனப் பெயராக அடையாளம் காண்கிறது. சில அச்சுப்பொறிகளுக்குத் நேரியல் துறைகளை யும் (serial ports) பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் முன்கூட்டியே இயக்க முறைமைக்கு இதை உணர்த்திவிடவேண்டும். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் பெரும்பாலும் நேரியல் துறைகளே அச்சுப்பொறிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

printer, quality : அச்சுத்தரம். printer service : அச்சுப்பொறி வழங்கி : ஒன்று அல்லது மேற்பட்ட அச்சுப்பொறிகளைக் கட்டுபடுத்தும் கட்டமைப்புள்ள ஒரு கணினி. அந்த அமைப்பின் அனைத்துப் பயனாளர்களிட மிருந்தும் வருகின்ற வெளியீட்டு அச்சுத் தோற்றத்தினைச் சேமித்து ஒரு நேரத்தில் ஒரு வேலை என்ற வகையில் அச்சுப் பொறிக்கு வழங்குவது. இப்பணியானது பிணைய (Network) இயக்க அமைப்பின் ஒரு பகுதியாகவோ அல்லது சேர்க்கப் பட்ட பயன் பாடாகவோ இருக்கலாம்.

printer stand : அச்சடிப்பி நிலையடுக்கு : ஒர் அச்சடிப்பித் தாங்கி யிருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மரத்தாலான நிலையான அடுக்கு விசிறி மடிப்பு. அச்சடிப்பி காகிதத்திற்காக உச்சிப்பகுதியில் ஒரு திறப்பினைக் கொண்டிருக்கும்.

printer, thermal : வெப்ப அச்சுப்பொறி.

printer, wheel : சக்கர அச்சுப்பொறி.

printer, wire : கம்பி.

print head : அச்சு முனை : புள்ளி அச்சுருவாக்கிய டாட் மாட்ரிக்ஸ்; இங்க் ஜெட், தெர்மல் அச்சுப்பொறி போன்றவற்றில் உள்ள அச்சு ஊடகத்தில் தோற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு. அச்சு ஊடகத்தின் ஒரு பக்கத்திலிருந்து வேறொன்றுக்கு அச்சுமுனை மாறுவது வழக்கம்.

print image : அச்சு உருவம் : பேசிக் மொழியில்'Print Using' சொற்றொடரில் அச்சிட்ட வெளியீட்டை வடிவமைக்கப் பயன்படும் சரம்.

printing station : அச்சிடும் நிலையம்.

print job : அச்சுப் பணி : பல எழுத்துகள் சேர்ந்து ஒரே தொகுதியாக அச்சிடப்படுதல். ஒர் அச்சுப்பணி என்பது பெரும்பாலும் ஆவணத்தை அச்சிடும் பணியாக இருக்கும். அந்த ஆவணம் ஒரு பக்கமாக இருக்க லாம்;நூறு பக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். ஒவ்வொரு ஆவணத்தையும் தனித்தனியாக அச்சிடுவதைத் தவிர்க்க, சில மென்பொருள் கள், பல ஆவணங்களை ஒரு குழுவாகச் சேர்த்து ஒரு அச்சுப்பணியாகச் செய்வதும் உண்டு.

print layout sheet : அச்சு விரிவமைப்புத் தகடு;அச்சமைப்புத் தாள் : ஒர் அச்சிட்ட அறிக்கைக்குக் தேவையான ஒர விளிம்புகளையும் இடை வெளிகளையும் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வரைபடம்.

print medium : அச்சு ஊடகம் : அச்சிடப்பட்ட தோற்றம் வெளி வரக்கூடிய மேற்பரப்பு. பெரும் பாலானவற்றில் அச்சு ஊடகம், காகிதம்தான்ய ஆனால், நுண் படல அட்டைகள், ஊடுருவு ஒளிப்படம் போன்றவையும் ஊடகமாக அமையும்.

print mode : அச்சுப் பாங்கு : அச்சு வெளியீட்டின் வடிவமைப்பைக் குறிக்கும் பொதுவான சொல். நீளவாக்கில் (portrait), அகலவாக்கில் (landscape) அச்சிடலாம். எழுத்தின் தரம், உருவளவு ஆகியவற்றையும் இச்சொல் குறிக்கும். புள்ளியணி அச்சுப்பொறி (dot. matrix printer) இரண்டு வகையான அச்சுப் பாங்குகள் உள்ளன. எழுத்துத்தரம் (Letter Quality-LQ), உயர் எழுத்துத் தரம் (Near Letter Quality-NLQ). சில அச்சுப்பொறிகள் ஆஸ்கி மற்றும் போஸ்ட்கிரிப்ட் எழுத்து வடிவங்களையும் ஏற்கும்.

printout : அச்சுப்படிவம் : கணினியமைவு வெளிப்பாட்டின் படிவம். இது ஒர் அச்சடிப் பானால் ஒரு பக்கத்தில் அச்சிடப்படுகிறது.

print position : அச்சு நிலை.

print preview : அச்சு முங்காட்சி.

print quality : அச்சுத் தரம் : அச்சடிப்பியில் அச்சிடப்பட்ட ஒர் அச்சுப் படிவத்தின் தரம்.

print queue : அச்சு வரிசை : அச்சுப்பொறிக்காக ஒதுக்கப்பட்ட வெளியீட்டை அச்சுப்பொறி ஏற்கும்வரை வைத்திருக்கும் வட்டின் இடம்.

print screen : அச்சுத் திரை : திரையில் அப்போது உள்ள உருவத்தை அச்சிடும் திறன்.

print screen key : திரை அச்சு விசை : ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளின் விசைப்பலகைகளில் இருக்கும் ஒரு விசை. இவ்விசையை அழுத்தும்போது திரையில் தோற்றமளிக்கும் எழுத்துகளை அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவைக்கும். விண்டோஸ் இயக்க முறைமையில் இந்த விசையை அழுத்தினால் திரைத் தோற்றம் கிளிப்-போர்டில் பதியும். அதனை ஒரு வட்டுக் கோப்பாகச் சேமிக்கலாம். மாற்று (Alt) மற்றும் திரையச்சு (print screen) ஆகிய இரு விசைகளையும் சேர்த்து அழுத்தினால் இயக்கத்தில் இருக்கும் சாளரம் (Active Window) மட்டும் கிளிப் போர்டில் பதியும்.ஆப்பிள் கணினிகளில் ஒத்தியல்பு கருதி இவ்விசை வைக்கப்பட்டுள்ளது.

print server:அச்சு வழங்கன்:ஒரு பிணையத்தில் அச்கப்பொறிகளை மேலாண்மை செய்வதற்கென தனியாக ஒதுக்கப்படும் ஒரு பணி நிலையக் கணினி.பிணையத்திலுள்ள எந்தவொரு பணிநிலையக் கணினியும் அச்சு வழங்கனாகச் செயல்பட முடியும்.

print setup:அச்சு அமைப்பு முறை;அச்சு அமைவு.

print spooler:அச்சு சுருளி:முன்னணியில் மற்ற பணிகள் நடந்து கொண்டிருக்க பின்னணியில் அச்சிடுதல் நடைபெற அனுமதிக்கும் மென்பொருள்.

print statement:அச்சிடு கட்டளை:பேசிக் மொழியில்,ஒரு தரவுவை திரையில் காட்டுவதற்கான கட்டளை.

print text page:உரைப்பக்கம் அச்சிடு.

print to disk:அச்சிலிருந்து வட்டுக்கு:வழக்கமாக அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும் வெளியீட்டை வட்டை நோக்கி அனுப்புவது.உருவாக்கப்படும் கோப்பானது தேவையான வடிவமைப்பு அல்லது படிவம் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.அதை உருவாக்கிய டி.டீ.பீ. நிரல் தொடர் அல்லது சொல் செயலகத்தின் தேவையின்றியே வேறு ஒரு சமயத் திலோ அல்லது தொலைவிலுள்ள ஒரு அச்சுப்பொறிக்கு அனுப்பியோ அச்சிட்டு கொள்ளலாம்.பொதுவாக முதலில் வட்டுக் கோப்பினை உருவாக்கி,பின்னரே அச்சிடப்படுகிறது.ஆனால் அச்சிலிருந்து வட்டுக்கு என்ற செயல்முறையில் கோப்பினை அச்சிடும் வேலை விலக்கப்படுகிறது.

print to file:கோப்பில் அச்சிடு:அச்சிடுவதற்கென வடிவமைக் கப்பட்ட ஒர் ஆவணத்தை அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்குப் பதிலாக, அப்படியே ஒரு கோப்பில் சேமித்து வைப்பதற்கான கட்டளை.பெரும் பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இத்தகைய வசதி உள்ளது.

print using the following driver:கீழ்க்காணும் இயக்கி மூலம் அச்சிடு.

print wheel:அச்சுச் சக்கரம்;அச்சு சுருளை:ஒரு சக்கர அச்சடிப்பியின் ஒர் அச்சடிப்பு இடநிலையில் எழுத்துகளின் தொகுதியை அடக்குகிறகிறது தனியொரு கூறு.

print zone : அச்சு வட்டாரம்;அச்சு மண்டலம்;அச்சுப் பகுதி : செயல் முறைப்படுத்தலில் ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட நீளப் பகுதி. இதனுள் தரவுகள் புத்திகளில்'வரிசைப்படுத்தப் படுகின்றன'.

priority : முன்னுரிமை;முந்துரிமை : நுண்செயலியின் கவனத்தைக் கவர்வதில், கணினியின் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னுரிமை பின்பற்றப்படுகிறது. கணினி, கண்ணுக்குப் புலனாகாத முன்னுரிமைகளின் அடிப்படையிலேயே பல்வேறு வகையான முரண்களும் மோதல்களும் தவிர்க்கப்படுகின்றன. அதேபோல கணினியால் நிறைவேற்றப்படும் பணிகளும், எப்போது, எவ்வளவு நேரம் நுண்செயலியின் நேரத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. கணினிப் பிணையங்களில் பணி நிலையங்கள் எப்போது, எவ் வளவு நேரம் தகவல் தொடர்பு இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற முன்னுரிமை நிர்ணயிக்கப்படுகிறது. எவ்வளவு விரைவில் அனுப்பப்பட வேண்டும் என்கிற முன்னுரிமை செய்திப் பரிமாற்றத்துக்குப் வரையறுக்கப்படுகிறது.

priority assignment : முன்னுரிமைப் பணி.

Priority Frame : பிரியாரிட்டி ஃபிரேம் : (முன்னுரிமைச் சட்டம்) : இன்ஃபோ நெட் அண்ட் நார்தான் டெலிகாம் இன்க் நிறுவனம் உருவாக்கிய ஒரு தொலைத் தொடர்பு நெறிமுறை. தரவு, படநகல் மற்றும் குரல் தகவல்களைச் சுமந்து செல்வதற்கென வடிவமைக்கப் பட்டது.

priority interrupt : முந்துரிமை இடையீடு : பொறியமைவினுள் மற்ற இடையீடுகளுக்கு மேலாக முந்துரிமையளிக்கப் பட்டுள்ள ஒர் இடையீடு.

priority processing : முந்துரிமைச் செய்முறைப்படுத்துதல் : ஒரு பணியின் வரிசை முறையைக் குறித்தளிக்கப்பட்ட முந்துரிமைகளின் அடிப்படையில் செய்முறைப்படுத்துதல்.

privacy : தனிமறைவு;அந்தரங்கம் : ஒரு பயனாளரின் சேமிக்கப்பட்ட கோப்புகள், மின்னஞ்சல் போன்ற தரவுகள் அவருடைய அனுமதியின்றி வேறெருவரும் பார்வையிடக் கூடாது என்கிற கருத்துரு. தனி மறைவுக்கான உரிமை என்பது பொதுவாக இணையத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. கணினி அமைப்புகளை நிறுவிப் பராமரிப்பவர்கள் தங்கள் அமைப்புகளில் பதிவாகும் எந்தவொரு தரவுவையும் பரிசோதிக்கும் உரிமையினைக் கோருகின்றனர். தனி மறைவினை முழுமையாகப் பெறப் பயனாளர்கள் மறையாக்கம் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

privacy enhanced mail : அந்தரங்க மேம்பாட்டு அஞ்சல்;தனிமறைவு மேம்பாட்டு அஞ்சல் : இணையத்தில் மின்னஞ்சல் செய்திகளின் தனி மறைவுத் தன்மை மற்றும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் மறையாக்க நுட்பங்களை பயன்படுத்துகின்ற மின்னஞ்சல் முறைமைக்கான இணைய தர வரையறை.

private : தனியார்.

private automatic branch : தனியார் தானியங்கு கிளை.

private automatic branch exchange (PABX) : தனியார் தானியக்கக் கிளை இணைப்பகம் : ஒரு வணிக அமைவனத்திற்குள் அல்லது தொழிற் சாலைக்குள் தொலைபேசித் தொடர்பினை ஏற்படுத்தி பொதுத் தொலைபேசி இணைப்பகத்திற்குச் செல்லும், அதிலிருந்துவரும் அழைப்புகளை அனுப்புவதைக் கட்டுப் படுத்துகிற தானியக்க தனியார் தொலைபேசி விசைப் பொறியமைவு.

private channel : தனியார் தடம் : இணையத் தொடர் அரட்டையில் (IRC) ஒரு குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தவர்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தடம். இத்தகைய தனியார் தடப்பெயர்கள் பிற பொதுப்பயனாளர்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு விடுவதுண்டு.

private chat : தனியார் அரட்டை, தனியார் உரையாடல்.

Private Communications Technology : தனிமுறைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் : இணையத்தில் பாதுகாப்பான பொதுப்பயன் வணிகத் துக்காகவும் சொந்தத் தகவல் தொடர்புகளுக்காகவும் வடிவமைக்கப்பட்ட வரன்முறை. தனி மறைவு, சான்றுறுதி, பரஸ்பர அடையாளங்காட்டல் போன்ற பண்புக் கூறுகளையும் உள்ளடக்கியது.

private database : தனியார் தரவுத் தளம்.

private folders : தனிமுறை கோப்புறைகள் : ஒரு பகிர்ந்தமைப் பிணையச் சூழலில், ஒரு பயனாளரின் கணினியில் இருக்கும் கோப்புறைகள். பிணையத்தின் பிற பயனாளர்கள் இந்தக் கோப்புறைகளை அணுக முடியாது.

private key : தனித்திறவி;தனிமறைக் குறி : மறைக்குறியீட்டு முறையில் இருதிறவி மறையாக்கத்தில் பயனாளர் பயன்படுத்தும் திறவி. பயனாளர் தன்னுடைய தனித்திறவியை கமுக்கமாய் வைத்துக் கொள்கிறார். தன்னுடைய இலக்க முறைக் ஒப்பங்களை மறையாக்கம் செய்யவும், பெறுகின்ற செய்திகளை மறைவிலக்கம் செய்யவும் பயன்படுத்திக் கொள்கிறார்.

private key encryption : சொந்தச் சாவியினாலான உருமாற்றம்.

private line : தனியார் இணைப்பு;தனியார் தடம் : ஒரு பயனாளருக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள அலை வரிசை அல்லது சுற்று வழி.

privately leased line : தனியார் குத்தகைத் தடம் : தனியொரு வாடிக்கையாளரின் பயன்பாட்டுக்கான செய்தித் தொடர்பு இணைப்பு.

private property : தனிப் பண்புகள்.

privatization : தனியார் மயமாக்கம் : பெரும்பாலும் ஒரு நிர்வாகத்தை, வணிக அமைப்பை கட்டுப்பாட்டிலிருந்து வணிகத் தொழிலகத்துக்கு மாற்றியமைப்பது. கணினித் துறையைப் பொறுத்தமட்டில் இணையத்தின் முதுகெலும்பான பல்வேறு பிணையக் கட்டமைப்புகளை தனியார் துறைக்கு மாற்றுதல். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் 1992 இல் என்எஸ்எஃப் நெட் அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் வணிக அமைப்புகளுக்கு மாற்றித் தரப் பட்டுள்ளது.

privileged instruction : சிறப்புரிமை நிரல் : பயனாளர் எழுதிய வழக்கமான செயல்முறைகளில் பயன்படுத்துவதற்குக் கிடைக்கத்தக்கதாக இராத கணினி நிரல். இதனைச் செயற்பாட்டுப் பொறியமைவின் வாலாயங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். privileged mode : சலுகைபெற்ற பாங்கு : இன்டெல் 80286 மற்றும் அதனினும் மேம்பட்ட நுண்செயலிகளின் பாதுகாக்கப் பட்ட இயக்கப் பாங்கில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சிறப்பு வகை இயக்கப்பாங்கு. இதில், நினைவகம் மற்றும் உள்ளிட்டு/வெளியீட்டுத் துறைகள் (தடங்கள்) போன்ற கணினியின் உயிர்நாடியான உறுப்புகளைக் கையாளும்போது, மென்பொருள்கள் மிகவும் வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளையே நிறைவேற்ற முடியும்.

PRN : பீஆர்என் : அச்சுப் பொறியின் தருக்கமுறைச் சாதனப்பெயர். டாஸ் இயக்க முறைமையில் வழக்கமான அச்சு சாதனத்துக்கென ஒதுக்கப்பட்ட பெயர். பீஆர்என் என்பது பெரும்பாலும் கணினியின் முதல் இணை நிலைத்துறையை (parallel port) குறிக்கும். எல்பீடி1 என்றும் அறியப்படும்.

probabilistic model : நிகழ்தகவு உருமாதிரி : நிகழ்தகவுக் கணிதத்தைப் பயன்படுத்துகிற உருமாதிரி. எந்தத் தரவுகளின் தனி மதிப்பளவுகள் அறியப் படாமலிருந்து, ஆனால் அவற்றின் நீள் வீச்செல்லை நடவடிக்கையை ஊகிக்க முடியுமோ அந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

probability : நிகழ்தகவு : ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிகழ்வதற்கான வாய்ப்புகளைக் கணக்கிடுதல். எடுத்துக்காட்டு : ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டால் தலைவிழுவதற்கான நிகழ்தகவு 1/2, பூ விழுவதற்கான நிகழ் தகவு 1/2;0-9 வரைக் குறியிடப்பட்ட 10 சிப்புகளை ஒன்று கலந்து மேசையில் போட்டு ஆறுக்கு மேற்பட்ட எண்ணுடைய ஒரு சிப்பினை எடுப் பதற்கான நிகழ்தகவு 3/10 ஆகும்.

probability theory : நிகழ்தகவுக் கோட்பாடு : ஒரு தற்செயல் நிகழ்ச்சி நிகழ்வதற்கான வாய்ப்புகளின் அளவீடு. இது ஒரு குழுமத்தின் நடத்தை முறையை ஊகிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

problem analysis : சிக்கல் பகுப்பாய்வு : ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண ஒரு திட்டத்தைப் பயன்படுத்துதல். செயல்முறை உருவாக்கச் சுழற்சியில் முதல் நடவடிக்கை.

problem defining : சிக்கல் வரையறுத்தல்.

problem definition : சிக்கல் வரையறை : 1. ஒரு சிக்கலை வரையறுத்துக்கூறப் பயன்படுத்தப்படும் தருக்க முறையை வகுத்தல். 2. செய்யப்பட வேண்டிய ஒரு பணியினை வரையறுத்துக் கூறுதல்.

problem description : சிக்கல் விவரிப்பு : தகவல் செய்முறைப் படுத்தலில், ஒரு சிக்கலை உரைத்தல். இதில், தீர்வுமுறை பற்றிய விவரிப்பும் உள்ளடங்கி யிருக்கலாம். இந்தத் தீர்வேகூட, தரவு, உருமாற்றம், நடைமுறை கள், தரவுகள், தடைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக் கிடையிலான உறவு நிலையாக இருக்கலாம்.

problem oriented language (POL) : சிக்கல் சார்ந்த மொழி : ஒரு குறிப்பிட்ட வகைச் சிக்கல்களை வசதியாக எடுத்துரைப் பதற்காக வடிவமைக்கப்பட்ட செயல்முறைப்படுத்தும் மொழி. இது, இணைப்பு மொழி, எந்திர மொழி, நடை முறை சார்ந்த மொழி ஆகிய வற்றிலிருந்து வேறுபட்டது.

problem programme : சிக்கல் செயல்முறை : மையச் செய்முறைப்படுத்தும் அலகு சிக்கலான நிலையில் இருக்கும்போது நிறைவேற்றப்படும் செயல்முறை;சிறப்புரிமை நிரல்களைக் கொண்டிராத ஒரு செயல்முறை.

problem solving : சிக்கல் தீர்வு;சிக்கல் தீர்த்தல் : ஒரு கணினியினால் தீர்க்கப் படக்கூடிய ஒரு சிக்கல். இதற்கு ஒரு துல்லியமான கணிதச் சமன் பாடு தேவைப்படுவதில்லை. எனினும், கணினி உணர்ந்து கொள்ளக்கூடிய சில விதிகளின் தொகுதி தேவைப்படும். இது ஆறு நடவடிக்கைகள் அடங்கிய ஒரு செய்முறையாகும்; (1) சிக்கலை அடையாளங்காணல் (2) தொடர்புடைய தரவுகளைச் சேகரித்து வகைப்படுத்துதல் (3) மாற்று உத்திகளை உருவாக் குதல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் (4) செயல் முறைப்படுத்துதல் (5) செயல் முறையை நிறைவேற்றுதல் (6) தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுதல். அனுபவமும், உரிய சிக்கல் தீர்வு உத்திகளைக் கையாளுவதும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதை எளிதாக்கும்.

procedurai language : நடை முறை மொழி : கோபால், ஃபோர்ட்ரான், பேசிக், சி, பாஸ்கல் மற்றும் டிபேஸ் போன்ற நிரல்தொடரமைப்பு பிரிவு தேவைப்படும் நிரல் தொடரமைப்பு மொழி. நிரல் தொடராளர்கள் அத்தகைய மொழிகளில் எழுதும்போது தரவு செயலாக்கம் மற்றும் நிரல் தொடரமைத்தல் சார்ந்து சிக்கல்களை தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கை முறையினை உருவாக்குவார்கள்.

procedure : நடைமுறை;செயற்படுமுறை;செயல்முறை : ஒரு நிரலில் ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும் நிறைவேற்றுகின்ற கட்டளைத் தொகுதி. இக் கட்டளைத் தொகுதிக்கு ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு செயல் முறைக்கும் உரிய மாறிகள், மாறிலிகள் அவற்றின் தர வினங்கள் வரை யறுக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு செயல்முறை இன்னொரு செயல் முறையால் அழைக்கப் படுவதுண்டு (இயக்கப்படுவ துண்டு). நிரலின் பிரதான செயல்பகுதியிலும் அழைக்கப்படலாம். சில கணினி மொழிகளில் செயல்முறை, செயல்கூறு (procedure and function) என்று வேறுபடுத்திப் பேசப்படுகிறது. செயல்கூறு என்பது தன் பணியை முடித்தபின் ஒர் ஒற்றை மதிப்பை (குறிப்பிட்ட தரவின மதிப்பை) அழைத்த நிரலுக்குத் திருப்பி யனுப்பும். செயல்முறை, தனக்கிட்ட பணியைச் செவ்வனே செய்து முடிக்கும். மதிப்பு எதையும் திருப்பியனுப்பாது.

procedure call : செயல்முறை அழைப்பு : நிரலாக்கத்தில் ஒரு செயல்முறையைச் செயல் படுத்துவதற்கான நிரல். ஒரு செயல்முறை அழைப்பு இன்னொரு செயல்முறையில் உட்பொதிந்து இருக்க முடியும். அல்லது நிரலின் முதன்மையான பகுதியில் இடம்பெறும்.

procedure division : நடைமுறைப் பகுப்பு;செயல்முறைப் பகுப்பு : ஒரு "கோபால்" செயல்முறையின் நான்கு முக்கிய பகுதிகளில் நான்காவது பகுதி.

procedure oriented : நடைமுறை சார்ந்த : படி"ஏ"விலிருந்து படி 'பி'-க்குப் போவதற்காக பயனாளர் பின்பற்றுகின்ற பயன்பாடு. தரவு நுழைவு நிரலாக்கத் தொடர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

procedure oriented language : நடைமுறை சார்ந்த மொழி : விரிவான சிக்கல்களின் ஒரு தொகுதிக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்தப்படும் நடை முறைகளை வசதியாக எடுத்துரைப்பதற்கு வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல்முறைப் படுத்தும் மொழி. எந்திர மொழி, சிக்கல் சார்ந்த மொழி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. process : செய்முறை;செயற் பாங்கு நடைமுறை : 1. ஒரு குறிப்பிட்ட பலனை விளைவிப்பதற்கான, திட்டமிட்ட செயற்பாடுகளின் வரிசைமுறை. 2. செப்பமற்ற தரவுகளை பயனுள்ள செய்திகளாக உரு மாற்றுதல்.

process bound : வரம்புறு செய்முறை : செய்முறைப் படுத்தியின் வேகத்தினால் வரம் புறுத்தப்பட்டுள்ள கணினியமைவு.

process colour : நிறச் செயலாக்கம் : ஒர் ஆவணத்தில், அச்சிடுவதற்காக நிறங்களைக் கையாளும் வழிமுறை. ஒவ்வொரு நிறத்தொகுதியும் அதன் மூல அடிப்படை நிறக்கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. மூன்று அடிப்படை வண்ணங்கள் : வெளிர்நீலம் (Cyan), செந்நீலம் (Magenta), மஞ்சள் (Yellow). கறுப்பு நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். பிற நிறங்கள் அனைத்தும் இந்த அடிப்படை நிறங்களின் கலவையில் உருவாக்கப்பட்டு அச்சிடப்படுகின்றன.

process control : செய்முறைக் கட்டுப்பாடு : எண்ணெய்ச் சுத்திகரிப்பு, எஃகு உற்பத்தி போன்ற தொழில் செய்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்குக் கணினியைப் பயன்படுத்துதல்.

process control activity : செய்முறை கட்டுப்பாட்டு நடவடிக்கை.

process control computer : செய்முறைக் கட்டுப்பாட்டுக் கணினி : செய்முறைக் கட்டுபாட்டுப் பொறியமைப்பில் பயன்புடுத்தப்படும் எண்மானக் கணினி. இதில் பொதுவாக நிரல் திறம்பாடு, சொல் நீட்சி, துல்லியம் ஆகியவை வரம் புறுத்தப்பட்டிருக்கும். காற்றில்லாத சூழல் வசதிகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது.

process control system : செயற்பாங்குக் கட்டுப்பாட்டு முறைமை.

process conversion : செய்முறை மாற்றம் : கணினியமைவின் இயக்க முறையை மாற்றியமைத்தல்.

processing : செய்முறைப் படுத்தல் : ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குத் தரவுகளைக் கணினி மூலம் பலவிதமாகத் திறம்படக் கையாள்தல்.

processing, automatic data : தானியங்கு தரவுச் செயலாக்கம்.

processing, background : பின்புலச் செயலாக்கம். processing, commercial data : வணிகத் தரவுச் செயலாக்கம்.

processing, data : தரவுச் செயலாக்கம்.

processing, electronic data : மின்னணுத் தரவுச் செயலாக்கம்.

processing mode, batch : தொகுதிச் செயலாக்கப் பாங்கு.

processing part : செயல்முறைப் பகுதி.

processing symbol : செய்முறைப்படுத்தல் குறியீடு : கணக்கிடுதல், நகரும் தரவுகளை முதல்நிலைப்படுத்தல் போன்ற செய்முறைப்படுத்தும் செயற் பாட்டினைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிற செவ்வகத் தொடர் வரைபடக் குறியீடு.

processing, remote : தொலை நிலைச் செயலாக்கம்.

processing unit, central : மையச் செயலகம்.

processor : செயலி;செய்முறைப்படுத்தி;செயலாக்கம் : தரவுகளைக் கொண்டு செயற்பாடுகளைச் செய்யும் திறனுடைய சாதனம் அல்லது பொறியமைவு. எடுத்துக்காட்டு : மையச் செயலகம் (வன்பொருள்) அல்லது சொல்செயலி (மென்பொருள்). ஒரு கணினியைச் சிலசமயம் மொழி (language processor) ச் செய்முறைப்படுத்தி என்பர்.

processor, array : கோவைச் செயலி.

processor bound : வரம்புறு செய்முறைப்படுத்தி : உள்ளபடியான செய்முறைப்படுத்துதலை அல்லது கணிப்புகளைச் செய்வதற்கு மையச் செய்முறைப் படுத்தும் அலகினைக் கொண்டு செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தினால் கணக்கம் செய்யப்படுகிற பொறியமைவுச் செயற் பாடு. இது வரம்புறு கணினி போன்றது. இது வரம்புறு உட்பாடு/வெளிப்பாடு என்பதிலிருந்து மாறுபட்டது.

processor control : செயலாக்கக் கட்டுப்பாடு : அதன் அடிப்படை, மையப் படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக்காக ஒரு செயலகத்தைப் பயன்படுத்தும் எந்த ஒரு சாதனமும். சான்றாக, தொலைபேசி அமைப்புகள் மற்றும் கண்ணாடி செய்தல் போன்ற பல தொழில்துறை நடைமுறைகள்.

processor, data : தரவுச் செயலி.

processor load : செயலகச் சுமை : ஒரே நேரத்தில் ஒரு செயலகம் எத்தனை வேலைகளை எடுத்துச் செய்யும் என் பதற்கான அளவு. 1. 0 சுமை என்பது ஒரு செயலகம் ஒரு கடிகாரத்தின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் ஒரு வேலையைச் செய்தது என்று பொருள். 1. 0-க்குக் கீழான சுமை என்றால் செயலக நேரம் வீணாக்கப் படுகிறது என்பது பொருள். 1. 0. வுக்கு மேல் செயலக சுமை என்றால் ஒரு செயலகம் அப்போது கையாளும் சுமையை விட அதிகமாகச் செல்ல முடியும் என்பது பொருள்.

processor, micro : நுண்செயலி.

processor, remote : தொலை நிலைச் செயலி.

processor, word : சொல் செயலி.

process signal : செய்முறைக் குறிகை;செய்முறை சமிக்கை.

procomm : புரோகாம் : டேட்டா ஸ்டோர்ம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பீசி பங்குப் பொருள் தகவல் தொடர்புநிரல் தொடர். பல வகையான நடைமுறைகள் மற்றும் முகப்புகளை அது ஆதரிக்கும். புரோகாம் பிளஸ் என்பது கூடுதல் தன்மைகள் உள்ள வணிகத் தொகுப்பு.

Prodigy information Service : மேதமை தகவல் சேவை : ஐபிஎம் மற்றும் சியர்ஸ் இரண்டும் சேர்ந்து உருவாக்கிய நிகழ்நிலை தகவல் சேவை. இதன் போட்டியாளர்களான அமெரிக்கா ஆன்லைன் மற்றும் காம்பு செர்வ் ஆகியவற்றைப் போலவே, தரவுத் தள அணுகல், கோப்பு நூலகங்கள், நிகழ்நிலை அரட்டை, சிறப்பு ஆர்வக் குழுக்கள், மின்னஞ்சல், இணைய இணைப்பு போன்ற சேவைகளை வழங்கி வருகின்றது.

product : பெருக்குத் தொகை;பண்டம்;அட்டவணைப் பெருக்கல் : 1. கணிதத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட எண்களைப் பெருக்கிவரும் தொகை 2. வடிவமைத்து உருவாக்கப்பட்டு விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு பண்டம். 3. தரவுத்தள மேலாண்மை அமைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி (operator). இரு அட்ட வணைகளைப் பெருக்கும் போது முதல் அட்டவணையிலுள்ள ஒவ்வொரு கிடக்கையும் இரண்டாவது அட்டவணையின் ஒவ்வொரு கிடக்கையுடனும் இணைந்து மூன்றாவதாக ஒர் அட்டவணை உருவாக்கப்படும். 10, 20 கிடக்கைகள் உள்ள அட்டவணைகளைப் பெருக்கினால் 200 கிடக்கைகள் உள்ள அட்டவணை கிடைக்கும். production database : உற்பத்தித் தரவுத் தளம் : ஒரு நிறுவனத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் அன்றாட பரிமாற்றக் கோப்புகளை கொண்ட மைய தரவுத் தளம்.

production run : உற்பத்தி ஒட்டம் : வாலாயமாகத் தன் நோக்கத்தை நிறைவேற்றுகிற ஒரு செயல்முறையில் தவறு நேரிடும்போது அச்செயல் முறையை நிறைவேற்றுதல். எடுத்துக்காட்டு : வாராந்திர சம்பளப்பட்டியல் தயாரிப்பதற்கு ஒரு சம்பளப் பட்டியல் செயல்முறையை இயக்குவது ஒர் உற்பத்தி ஒட்டம் ஆகும்.

production system : உற்பத்தி அமைப்பு : ஒரு நிறுவனத்தின் அன்றாட வேலையைச் செயலாக்கம் செய்யப் பயன்படுத்தும் கணினி அமைப்பு. வளர்ச்சி மற்றும் சோதனை அல்லது தற்காலிக கேள்விகளுக்கும் ஆய்வுக்கும் பயன்படும் அமைப்புகளுடன் இதனை மாறுபடுத்திப் பார்க்க.

productivity : உற்பத்தித் திறன் : ஒரு மென்பொருள்வன்பொருள் பொறியமைவு செய்யும் பணியினை அளவிடுதல். இது பெரும்பாலும் பொறியமைவின் வசதிகளையும் செயல்திறனையும் பொறுத்தது.

professional : தொழில்துறை;தொழில்சார்ந்த, தொழில் தரமான; தொழில்நெறிஞர்.

Professional Graphics Adapter : தொழில்முறை வரைகலைத் தகவி : கேட் (CAD) பயன்பாடு களுக்கென ஐபிஎம் நிறுவனம் அறிமுகப் படுத்திய ஒரு ஒளிக் காட்சித் தகவி. கிடைமட்டத் தெளிவாக 640 படப்புள்ளி களையும், செங்குத்துத் தெளிவில் 480 படப்புள்ளிகளையும் 256 நிறங் களையும் கொண்டது.

Professional Graphics Display : தொழில்முறை வரைகலைக் காட்சித்திரை : ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய தொழில் முறை வரைகலைத் தகவியுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அறிமுகப் படுத்திய தொடர்முறை (Analog) காட்சித்திரை.

professional write : தொழில்சார் எழுத்து : சாஃப்ட்வேர் பப்ளிஷிங் நிறுவனத்தின் டாஸ் மற்றும் விண்டோசுக்கான சொல் செயலாக்க நிரல் தொடர். பயன்படுத்த எளிதானது. குழப்பமில்லாத கடிதங்கள் மற்றும் குறிப்புகளை எழுதுபவர்களின் தேவைகளை-அது சமாளிக்கிறது. PFS : Write என்று முதலில் அழைக்கப்பட்ட இது பீசி சொல் செயலகங்களில் ஆரம்பத்தில் தோன்றிய ஒன்று.

profile : விவரக் குறிப்பு : ஒரு நிரலின் பல்வேறு பகுதிகள் இயங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதைத் தீர்மானித்து பகுப் பாய்வு செய்வதற்கான விவரக்குறிப்பு.

profiling service : பயனாளர் குறிப்புச் சேவை.

programmable : நிரல்படு; நிரலாக்கத் தகு : ஒரு பணியை அல்லது ஒரு செயல்பாட்டை நிறைவேற்ற, நிரல்களை ஏற்றுச் செயல்படும் நிலை. நிரலாக்கத் தகுநிலையில் இருப்பது என்பது கணினியின் பண்புக் கூறுகளில் ஒன்று.

programmable calculator : செயல்முறைப்படுத்தத்தக்க கணிப்பிகள் : கணினி போன்ற அம்சங்களைக் கொண்ட சில கணினிகளுடன் கூடிய கணிப்பி போன்ற சாதனம். பேசிக்மொழியில் எழுதப்ப்ட்ட சேமித்து வைக்கப்பட்ட செயல்முறையை நிறைவேற்றக் கூடிய கணிப்பி இதற்கு எடுத்துக் காட்டு.

programmable communication interface : செயல்முறைப் படுத்தத்தக்க செய்தித் தொடர்பு இடைமுகப்பு : செய்தித்தொடர்புக் கட்டுப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் இடை முகப்புப் பலகை.

programmable function key : செயல்முறைப்படுத்தத்தக்க செயற்பணித் திறவுகோல் : கணினியிலுள்ள செயல்முறையோடு சேர்ந்து மாறுகிற செயற்பணியைக் கொண்ட விசைப் பலகை திறவுகோல்.

programmable interrupt controller : நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப்படுத்தி : குறுக்கீட்டுக் கோரிக்கைகளை (IRQs) கையாளும் இன்டெல் சிப்பு. அதிக அளவாக 15 ஐஆர்கியூக்களை கையாளக்கூடிய இரண்டு நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப் படுத்திகள் ஐபிஎம் ஏடீ கணினிகளில் பயன்படுத்தப்பட்டன. பின்னாளில் இவற்றுக்குப் பதிலாக மேம்பட்ட நிரல்படு குறுக்கீட்டு கட்டுப்படுத்தி (APIC) கள் பயன்படுத்தப்பட்டன. இவை பல்பணியாக்கத்தை ஏற்கின்றன.

programmable logic array : செயல்முறைப்படுத்தத்தக்க தருக்கமுறை வரிசை : ஒரு குறிப்பிட்ட உட்பாடுகளின் தொகுதிக்கு வெளிப்பாடுகளுடன்கூடிய ஒரு பகுதிப் பொருளின் கூட்டுத்தொகையைக் கொடுக்கும் சாதனம். programmable logic device : நிரல்படு தருக்க சாதனம் : தயாரிப்பாளர் நிரலாக்காமல் வாடிக்கையாளரே நிரல் படுத்தக்கூடிய தருக்க சிப்பு. ஒரு வாயில் கோவையைப் (gate array) போன்று தருக்க வாயில்களின் தொகுதியைக் கொண்டிருக்கும். வாயில் கோவையைப் போன்று தயாரிப்பு நிலையிலேயே நிரலாக்கம் செய்து முடிக்கப்படவேண்டிய தேவையில்லை.

programmable memory : செயல் முறைப்படுத்தத்தக்க நினைவகம் : பொதுவாக பெரும்பாலான கணினிச் செயல்முறைகளும் தரவுகளும் சேமித்து வைக்கப்படும் உள்ளடக்கத்தை மாற்றக்கூடிய நினைவகம். பெரும்பாலும் குறிப்பின்றி அணுகும் நினைவகம் (RAM) அல்லது செயல்முறைப்படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம். (PROM)

programmable read only memory : செயல்முறைப் படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் : மின்னியல் துடிப்புகள் மூலம் செயல்முறைப்படுத்தக்கூடிய நினைவகம். ஒரு முறை செயல் முறைப்படுத்தியதும் அதனை படிக்கமட்டுமே செய்யலாம். செயல்முறைப்படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம், நினைவகச் செயல் முறைப்படுத்தி எனப்படும் ஒரு தனிவகை எந்திரம் வெற்றுச்சிப்புகளில் புதிய செயல் முறையை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

programmatic interface : நிரல்நிலை இடைமுகம் : 1. பயனாளரின் கட்டளைகளை அல்லது ஒரு தனிச் சிறப்பான நிரலாக்க மொழியின் அடிப்படையில் அமைந்துள்ள பயனாளர் இடைமுகம். வரைகலைப் பயனாளர் இடைமுகத்துக்கு மாறானது. யூனிக்ஸ், டாஸ் போன்ற இயக்க முறைமைகள் இத்தகைய இடைமுகத்தைக் கொண்டுள்ளன. ஆப்பிள் மெக்கின்டோஷ் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் ஆகியவை வரைகலைப் பயனாளர் இடை முகத்தைக் கொண்டுள்ளன. காண்க : command line interface, graphical user interface, iconic interface. 2. நிரலர் ஒருவர் ஒரு பயன்பாட்டு மென்பொருளை உருவாக்கும்போது அவருக்கு இயக்க முறைமை வழங்கும் செயல்கூறுகளின் தொகுதி.

programme : செயல் முறை; கட்டளைத் தொடர்; நிகழ்ச்சி நிரல்; கட்டளை நிரல்; ஆணை நிரல் : ஒரு கணினி தரவுகளைச் செய்முறைப்படுத்தும்படி செய்வதற்கான தொடர்வரிசை நிரல்கள். இது, ஒர் உயர்நிலை ஆதார வடிவில் இருக்கலாம்; இதில், இதனைக் கணினி நிறைவேற்றுவதற்கு முன்னர் ஒர் இடைநிலைச் செய்முறைப்படுத்துதல் தேவைப்படும்; அல்லது கணினியால் நேரடியாக நிறைவேற்றக்கூடிய ஒரு பொருள் வடிவமாகவும் இருக்கலாம்.

programme, application : பயன்பாட்டு நிரல்.

programme area : செயல் முறைப் பகுதி.

programme, assembly : சில்லுமொழி நிரல்.

programme, background : பின்புல நிரல்.

programme card : செயல்முறை அட்டை : குறிப்பிட்ட குறியீட்டு முறைப்படி துளையிடப்பட்டு முக்கியத் துளையீடு மற்றும் சரிபார்த்தல் எந்திரங்களின் தானியக்கச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தபடும் அட்டை.

programme chaining : செயல்முறைப் பிணைப்பு : செயல் முறைகளை அல்லது செயல் முறைப்பகுதிகளை ஒன்றாகப் பிணைக்கும் செய்முறை. உள்முக நினைவகத்தைவிட பெரிதாகவுள்ள செயல்முறைகளை வரிசைமுறைப் பளுவேற்றம், அந்தச் செயல்முறையின் அடுத்தடுத்த பகுதிகளின் அல்லது தகவமைவுகளின் நிறைவேற்றம் வாயிலாக நிறைவேற்றப்படுவதற்கு அனுமதிக்கிறது.

programme coding : செயல்முறைக் குறியீடிடுதல் : அறிவுறுத்தங்களை ஒரு செயல் முறைப்படுத்தும் மொழியில் எழுதும் செய்முறை.

programme, computer : கணினி நிரல்

programme control : செயல்முறைக் கட்டுப்பாடு : செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஒரு கணினி பயன்படுத்தப்படும் ஒரு பொறியமைவின் விவரிப்பு.

programme counter : செயல்முறை எண்ணி : கணினியினால் நிறைவேற்றப்பட வேண்டிய அடுத்த செயல்முறை நிரலின் அமைவிடத்தைக் குறித்துக் காட்டுகிற பதிவகம்.

programme creation : நிரல் உருவாக்கம்; நிரல் ஆக்கம் : ஒரு நிரலின் இயங்குநிலைக் கோப் பினை (executable file) தயார் செய்யும் செயல்முறை. வழக்கமாக, நிரல் உருவாக்கம் மூன்று படிநிலைகளைக் கொண்டது. (1) உயர்நிலை மொழியிலுள்ள மூலக் குறிமுறையை சிப்பு மொழி மூலக்குறிமுறையாக மொழிமாற்றுதல். (2) சிப்பு மொழிக் குறிமுறையை பொறி மொழி இலக்குக் கோப்புகளாக மாற்றியமைத்தல். (3) பொறி மொழிக் குறிமுறை இலக்குக் கோப்புகளை பல்வேறு தரவு கோப்புகள், இயக்க நேரக் கோப்புகள், நூலகக் கோப்புகளுடன் தொடுப்பு ஏற்படுத்தி இயக்குறு கோப்பாக மாற்றியமைத்தல்.

programmed check : செயல்முறைப்படுத்திய கட்டுப்பாடு : ஒரு சிக்கலுக்கான செயல் முறைப்படுத்திய அறிக்கையில் இடைச் செருகல் செய்யப்பட்டு கணினி நிரல்களைப் பயன் படுத்தி நிறைவேற்றப்படும் ஒய்வுகள் அடங்கிய கட்டுப்பாடு.

programme deck : செயல்முறை அடுக்கு : ஒரு கணினி செயல் முறையில் அடங்கியுள்ள நிரல்களைக் கொண்ட துளையிட்ட அட்டைகளின் தொகுதி.

programmed decision : முன் கூட்டி வரையறுக்கப்பட்ட தீர்வு : ஒரு குறிப்பிட்ட முடிவு தேவையென்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்னரே வரையறுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் தானியங்கியாக எடுக்கக்கூடிய முடிவு.

programme development cycle : செயல்முறை மேம்பாட்டுச் சுழற்சி : ஒரு கணினிச் சிக்கல் பகுப்பாய்வின் உதவியுடன் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் அடங்கியுள்ள படிமுறைகள். பதின்ம முறை எண்மான மேம்பாட்டுக் குறியீட்டுச் செயல்முறைச் சோதனை. ஆவணமாக்கம், ஒப்படைவு ஆகியவை இதில் அடங்கும்.

programme documentation : நிகழ்ச்சி நிரல் ஆவணப் படுத்துகை

programmed instruction : செயல்முறைப்படுத்திய நிரல் : ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்பிப்பதற்கான குறிப்பிட்ட நிரல்களின் வரிசைமுறை. பல்வேறு கணினிச் செயல்முறைப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் உள்ளடங்களாக கல்வித்துறைகளில் செயல்முறைப்படுத்திய நிரல் உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ளார்ந்த பின்னூட்ட வசதி இருப்பதால் இது முக்கியமாகத் தற்கல்வி வகுப்புகளில் பயன்படுத்தப் படுகிறது.

programmed label : செயல்முறைப்படுத்திய அடையாளச் சீட்டு : வட்டு நாடாக்கோப்புகள் ஆகியவற்றை எளிதாக அடையாளங் கண்டுகொள்வதற்காகப் பெரும்பாலான செயல்முறைகளில் கோப்பின் தொடக்கத்தில் ஒரு அடையாளச் சீட்டுப் பதிவினை உருவாக்குகிற உள்ளார்ந்த வாலாயத்தைக் கொண்டிருக்கின்றன. இது புறநிலை அடையாளச் சீட்டிலிருந்து வேறுபட்டது.

programme, executive : நிரைவேற்று நிரல்.

programme file : செயல்முறைக் கோப்பு : கணினிச் செயல்முறைகள் அடங்கிய கோப்பு.

programme flowchart : செயல்முறைத் தொடர்வரிசை வரை படம் : ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணக் கணினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய குறியீடுகள், அறிவுறுத் தக்கோடுகள். தரவுகள் அடங்கிய வரைபடம். இது பொறியமைவுத் தொடர் வரிசை வரை படத்திலிருந்து வேறுபட்டது.

programme generator : நிரல்இயற்றி : பயனாளர் தரும் சில வரன்முறைகள் மற்றும் உறவு முறைகள் அடிப்படையில் ஒரு நிரலை (வழக்கமாக, மூலக் குறிமுறையில்) உருவாக்கித் தரும் இன்னொரு நிரல். ஒரு பயன்பாட்டு மென்பொருளை உருவாக்கும் பணியை எளிமைப் படுத்திட இதுபோன்ற நிரல் இயற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன.

programme graph : செயல்முறை வரைபடம் : ஒரு செய் முறையினை வரைபடமுறையில் உருவாக்கிக் காட்டுதல்.

programme identification ID : செயல்முறை அடையாளம் : செயல்முறையை அடையாளங் கண்டு கொள்ளுதல்.

programme library : செயல்முறை நூலகம் : கிடைக்கத்தக்க கணினிச் செயல்முறைகள், வாலாயங்கள், செயல்முறைகளின் பகுதிகள் ஆகியவற்றின் தொகுதி. நூலகத்தின் தொடர்புகள் மறுபயன்பாட்டுக்காகச் சேமித்து வைக்கப்படுகின்றன. அவை முழுமையான செயல் முறைகளாக இருப்பின், அவற்றை அப்படியே மறுபடியும் பயன்படுத்தலாம். வேலையைக் குறைப்பதற்காக செயல் முறைகளின் பகுதிகளை மற்றச் செயல்முறைகளாகப் படியெடுக்கலாம். programme, linear : நேரியல் நிரல்.

programme listing : நிரல் வரைவு : நிரலின் மூல வரை வின் நகல். பொதுவாக தாளில் அச்சிடப்பட்ட நிரல் வரைவைக் குறிக்கும். சில மொழி மாற்றிகள் (compilers) நிரல் வரைவினை வரி எண்கள், குறுக்கு மேற் குறிப்புகள் போன்றவற்றுடன் உருவாக்கித் தரும்.

programme logic : நிரல் தருக்கம் : ஒரு நிரலின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்குப் பின்னாலுள்ள தருக்கம்-எப்படிச் செயல்பட வேண்டும் என்பதும் அப்படிச் செயல்படுவதற்கான காரணங்களும்.

programme maintenance : செயல்முறைப் பராமரிப்பு : செயல்முறைகளிலுள்ள பிழைகளைத் திருத்தி தேவைக்கேற்ற மாறுதல்களைச் செய்து, சாதன மாற்றங்களின் சாதகங்களை இணைத்துச் செயல்முறைகளில் மாற்றம் செய்து, செயல் முறைகளை நாளது தேதி வரையில் சீரமைப்புச் செய்யும் செய்முறை.

programme manager : நிரலாக்கத் தொடர் மேலாளர் : விண்டோஸ் 3. x இயக்கத்தின் கட்டுப்பாட்டு மையம், பயன்பாடுகளைத் துவக்கவும் மேசை அச்சை நிர்வகிக்கவும் உதவுகிறது.

programme, mircro : நுண்நிரல்.

programme, object : இலக்கு நிரல்.

programme planning : நிரல் தொடர் திட்டமிடல் : குறியீடமைவுக்குத் தேவையான நிரல் தொடர் அளவையை உருவாக்குவது. ஒரு படம், பரம்பரைப் படம், போலி, குறியீடு அல்லது மற்ற திட்டமிடல் முறைகளினால் இது செய்யப்படுகிறது.

programmer : நிரல்; செயல் வரைவாளர்; நிரல் தொடரமைப் பவர் : கணினி நிரல் தொடர்களை வடிவமைத்து எழுதி சோதனை செய்து தருகின்றவர்.

programmer/analyst : செயல்முறையாளர்/பகுப்பாய்வாளர் : பொறியமைவுப் பகுப்பாய் வினையும் வடிவமைப்புச் செயற்பணிகளையும் செயல் முறைப்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்கும் முக்கிய பணியினைச் செய்யும் ஆள்.

programmer board : செயல்முறையாளர் பலகை : ஒரு பயனாளர் தனது கணினியமை வில் பயன்படுத்துவதற்காக எழுதிப் படிக்கமட்டுமேயான நினைவகத்தை (PROM) அல்லது அழித்து எழுதிப் படிக்க மட்டுமேயான நினைவகத்தை (EPROM) செயல்முறைப்படுத்து வதற்கு அனுமதிக்கிற பலகை.

programmers switch : நிரலர் விசை; நிரலர் நிலைமாற்றி : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் இருக்கும் இணைப் பொத்தான்கள். கணினியை மீட்டியக்கவும் (reboot), இயக்க முறைமையின் அடிநிலைச் செயல்பாட்டில் கட்டளைவரி இடைமுகத்துக்கு மாறவும் இந்தப் பொத்தான்கள் பயன்படுகின்றன. தொடக்கக் காலங்களில் மென்பொருளை பரிசோதிக்கும் நிரலர்களுக்கே இத்தகைய செயல்பாடுகள் தேவைப்பட்டன. எனவே மெக்கின்டோஷின் தொடக்க மாதிரியங்களில் கணினிப் பெட்டியின் உள்ளே இந்தப் பொத்தான்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பிற்காலக் கணினிகளில் அவை வெளிப்படையாகவே வைக்கப்பட்டன. மீட்டியக்கு பொத்தான் இடப்புறம் திரும்பிய முக்கோணக்குறியாலும் மற்றது ஒரு வட்டக்குறியாலும் குறிக்கப் பட்டிருக்கும்.

programmes : நிரல்கள்.

programme, segmented : துண்டமாக்கிய நிரல்.

programme, service : பணிநிரல்.

programme, source : மூலநிரல்.

programme specifications : செயல்முறைக் குறியீடுகள் : ஒரு பொறியமைவின் தகவல் தேவைப்பாடுகள், தேவைப்படும் கோப்புகள், உட்பாட்டு வெளிப்பாட்டுக் குறிப்பீடுகள், செய்முறை தரவுகள் ஆகிய வற்றை அடையாளங் காட்டுகிற ஆவணம்.

programme stack : செயல்முறை அடுக்கு : தரவுகளையும் நிரல்களையும் குறிப்பாக ஒர் இடைத்தடுப்பின்போது தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்குக் கணினி நினைவகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதி.

programme state : நிரல்தொடர் நிலை : பயன்பாட்டு நிரல் தொடரில் நிரல்களை நிறைவேற்றுகின்ற கணினியின் இயக்கமுறை.

programme statement : நிரல்தொடர் அறிக்கை : உயர் நிலை நிரல் தொடரமைப்பு மொழியில் மரபுத் தொடர். நிரல் தொடர் தொகுக்கப்படும்போது நிரல் தொடரின் ஒரு சொற்றொடர் பல எந்திர நிரல்களை உருவாக்கும். programme step : செயல் முறைப்படி நிலை; நிரல்தொடர் படி : எந்திர மொழி நிரல் அல்லது சேர்ப்பிமொழி நிரல் போன்ற ஆரம்ப நிரல். Programme statement என்பதுடன் வேறுபடுத்துக.

programme stop : செயல்முறை நிறுத்தம் : செயல்முறையினுள் அமைக்கப்பட்டுள்ள நிறுத்த நிரல். இது சில நிலைகளில் ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாணும் செய்முறை முடிவுற்றதும் கண்னியின் இயக்கத்தைத் தானாகவே நிறுத்திவிடுகிறது.

programme storage : செயல்முறைச் சேமிப்பகம் : செயல்முறை வாலாயங்களையும் துணை வாலாயங்களையும் சேமித்து வைப்பதற்கு உள்முகச் சேமிப்பகத்தில் ஒதுக்கப் பட்டுள்ள பகுதி. பல பொறியமைவுகளில் உள்ளடக்கங்களைத் தவறுதலாக மாற்றிவிடுவதைத் தடுப்பதற்குப் பாதுகாப்புச் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

programme, supervisory : மேற்பார்வை நிரல்.

programme switch : செயல்முறை விசை : ஒரு செயல் முறைப்படுத்தும் வாலாயத்தில் இருவகை நடவடிக்கைப்போக்குகள் நடைபெறுவதை இயல்பிக்கும் முனை. இவற்றில் எது சரியானது என்பதை செயல்முறையில் வேறெங்கேனும் உள்ள ஒரு நிலை அல்லது பொறியமைவின் ஒர் உறுப்பு நிருணயிக்கிறது.

programme, test : சோதனை நிரல்.

programme testing : செயல்முறைச் சோதனை : ஒரு செயல் முறை எதிர்பார்க்கும் செயற்பணிகளைச் செய்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு செயல்முறையை நிறை வேற்றுதல்.

programme, utility : பயன்கூறு நிரல்.

programming : செயல்முறைப்படுத்தல் : ஒரு சிக்கலை அதன் இயற்பியல் சூழலிலிருந்து கணினி ஏற்றுக்கொண்டு, அடிபணியக் கூடிய ஒரு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஒரு செய்முறை. அதாவது ஒரு செயல்முறையை வடிவமைத்து எழுதி சோதித்துப் பார்த்தல்; ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறையைத் திட்டமிடுதல். இதில் சிக்கலைப் பகுப்பாய்வு செய்தல், அச்சிடுதலுக்குக் குறியிடுதல், உட்பாட்டு/வெளிப்பாட்டு உரு வமைப்புகளை அறுதியிடுதல், நடைமுறைகளைச் சரிபார்த்தல், சேமிப்பு இடத்தை ஒதுக்கீடு செய்தல், கணினியில் செயல் முறையின் ஒட்டத்தை மேற்பார்வையிடுதல் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

programming aids : செயல்முறைப்படுத்தல் உதவிகள் : கணினி பயன்படுத்துவோருக்கு உதவுகிற கணினிச் செயல் முறைகள். எடுத்துக்காட்டு : தொகுப்பிகள்; தவறு கண்டறியும் சாதனங்கள்; பிணைப்புப் பதிப்பிகள்; கணிதத் துணை வாலாயங்கள்.

programming environment : நிரலாக்கச் சூழல்.

programming language : செயல்முறைப்படுத்தும் மொழி : கணினிச் செயல்முறைகளில் நிரல்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மொழி. இது நூற்றுக் கணக்கில் உள்ள இவை முக்கியமாக மூன்று வகைப்படும். 1. எந்திர மொழிகள், 2. இணைப்பு மொழிகள்; 3. உயர்நிலை மொழிகள்; எந்திர மொழிகளில் கணித தருக்கமுறை அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு, நினைவக அலகு ஆகியவற்றின் வடிவளவைப் பொறுத்து நிரல் குறியீடுகளின் தொகுதி தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இந்த மொழிகளை எந்திரச்சார்பு மொழிகள் (machine depended language) என்றும் அழைப்பர். இணைப்பு மொழிகளில் நிரல்கள், தரவுகள், முகவரிகள் அனைத்தும், நினைவூட்டகங்களாகவும் குறியீடுகளாகவும் அடையாளச் சீட்டுகளாகவும் அளிக்கப்படுகின்றன. எந்திர மொழிகள், இணைப்பு மொழிகள் இரண்டும் தாழ்நிலை மொழிகள் (lowlevel language) எனப்படுகின்றன. உயர்நிலை மொழிகள் தாழ்நிலை மொழிகளைப்போல் எந்திரத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் சிக்கல் சார்புடையவனாக அமைந்துள்ளன. இதனால் சில குறிப்பிட்ட ஆங்கிலச் சொற்களையும் குறிமானங்களையும் பயன்படுத்தி நிரல்களின் வரிசை முறையினை உயர்நிலை மொழிகளில் எழுத முடிகிறது. உயர்நிலை மொழிகளில் எழுதப்படும் செயல்முறைகள் அனைத்தும் கணினியால் நிறை வேற்றப்படுவதற்கு முன்னர் எந்திரமொழியில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

programming librarian : செயல்முறைப்படுத்தும் நூலகர் : முதன்மைச் செயல்முறையாளர் குழுவைச் சேர்ந்த மூன்று தலையாய உறுப்பினர்களில் ஒருவர், உருவாக்க ஆதார நூலகத்தைப் பராமரித்து செயற் படுத்தி வருகிறார். குறியீடுகள் உருவாக்கம், கணினி விரை வோட்டத்தைக் கட்டுப்படுத்து தல், வெளிப்பாடுகள் அனைத் தையும் கோப்பிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவை சிலரது பணிகளில் அடங்கும்.

programming linguistics : செயல் முறைப்படுத்தும் மொழியியல் : சொற்றொடரியல், சொற்பொருளியல், செய்தித் தொடர்பியல் என்னும் ஒன்றோடொன்று இணைவுடைய மூன்று கோட்பாடுகளை ஏதேனும் இரு பொறியமைவுகளிடையே செய்தித் தொடர்புக்கான மொழிகளாக உருவாக்கப் பயன்படுத்துதல். எந்திரப் பொறியமைவு, மின்னியல் பொறியமைவு, மனிதர் தொகுதி ஆகிய மூன்றில் இரண்டிற்கிடையே செய்தித் தொடர்புக்கு இது பயன்படுகிறது.

programming team : செயல் முறைப்படுத்தும் குழு : ஒரு செயல் முறைப்படுத்தும் திட்டம் குறித்தளிக்கப்பட்டுள்ள தனியாட்களின் குழுமம்.

programming, structured : நிரல் தொடர் கட்டமைப்பு நிரலாக்கம்.

progress reporting : முன்னேற்ற அறிக்கையளிப்பு : ஒரு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது படிப்படியான அதன் நிறைவேற்றம் பற்றிய அறிக்கை.

project : திட்டப் பணி; செயல் திட்டம்; முன்னிறுத்து : 1. ஒரு குறிப்பிட்ட பணியை கணினிமயப்படுத்துவதற்கான திட்ட வரைவு. 2. தரவுத் தள மேலாண்மையில் உறவுநிலைச் செயலாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி. கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து குறிப்பிட்ட பண்புக்கூறுகளை (நெடுக்கைகள்) மட்டும் எடுத்து புதிதாக ஒர் அட்டவணையை உருவாக்கித் தரும்.

project control : திட்டக்கட்டுப்பாடு : ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியின் ஒரு நிலை இது. திட்டமிட்டுள்ள அட்டவணைப் பணியுடன், உள்ளபடி நிறைவேறிய பணியுடன், ஒப்பிட்டுப் பார்த்து, திட்டம் நிறைவேறு வதில் ஏற்படும் காலத் தாழ்வுகளைத் தவிர்ப்பதற்குத் தக்க திருத்த நடவடிக்கைகளை நிறை வேற்றுகிறது.

Project Gutenberg : கட்டன் பெர்க் திட்டப்பணி : இணையத்தில் பொதுக்களத்தில் பல்வேறு புத்தகங்கள் கிடைக்கும்படி செய்யும் திட்டப் பணி. இந்தப் புத்தகங்களுக்கான கோப்புகள் கூடுமானவரை அதிகமான மக்கள் அணுகும்வகையில் வெளிப்படையான ஆஸ்கி எழுத்து வடிவில் இருக்கும். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தினர் இத்திட்டப் பணியை உருவாக்கியுள்ளனர். இத்திட்டப் பணியின் எஃப். டீ. பீ. தளமுகவரி : ftp : //mrcnext. cso. uinc. edu. இதன். வலைப் பக்க முகவரி : http : //www. promo. net/pg.

projecting : திட்ட வரைதல் : ஒரு முப்பரிமாண காட்சியின் இருபரிமாண வரைகலைக் காட்சி உண்டாக்குதல்.

projection : திட்ட விரிவாக்கம் : கடந்த காலப் போக்குகளை வருங்காலத்திற்கு விரிவுபடுத்துதல். இது வணிக மேலாண்மை உத்தியாகும். இதற்குக் கணினி வழங்கும் தகவல்கள் அளவற்ற பயனுடையவை.

project library : திட்ட நூலகம் : திட்டங்கள், பணிகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் தரவுத் தளம். இதனை, புதிய திட்டங்களை வகுக்கும்போது மாற்றமைவு செய்து பயன்படுத்தலாம்.

project life cycle : திட்டப்பணி செயல்படுகாலச் சுழற்சி : ஒரு திட்டப்பணியின் தொடக்கம் முதல் இறுதிவரையுள்ள, முன் திட்டமிடப்பட்ட பல்வேறு கட்டப் பணிகளின் வரிசைமுறைத் தொகுதி.

project management : திட்டப்பணி மேலாண்மை : ஒரு குறிப்பிட்ட திட்டப் பணியின் நடைமுறை மற்றும் செயலாக்கத்தில் திட்டமிடல், கண்காணித்தல் மற்றும் கட்டுப்பாடு ஆகிய செயல்பாடுகளைக் குறிக்கின்றது.

project management programme : திட்டப்பணி மேலாண்மை நிரல்.

project manager : திட்ட மேலாளர் : ஒரு திட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாகவுள்ள ஆள். இவரைச் சில சமயம் திட்டக்குழுமத் தலைவர் என்பர்.

projector : ஒளிதரும் அலகு : கண்ணாடிகளையும் லென்ககளையும் கொண்டு ஒளியை ஒரு குறிப்பிட்ட திடகோணத்தில் செலுத்தி மிக அதிகமாக ஒளிரும் படத்தைத் தருவது.

project plan : திட்டநிலை : ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியில் ஒரு நிலை (கட்டம்). இதில், பணித் திட்டத்தின் மேம்பாடு, அமைப்பு முறை அடங்கும். project schedule : திட்டக்கால அட்டவணை : ஒரு திட்டத்தின் ஒவ்வொரு பணியும் நடவடிக்கையும் தொடங்கும் நேரம் முடிவுறும் நேரம் பற்றிய தகவல்களைக் கொண்ட அட்டவணை.

prokey : புரோகீ : ரோஸ்சாஃப்ட் நிறுவனம் தயாரித்த பீசிக்களுக்கான விசைப்பலகை பெரு செயலகம். சொற்பகுதி வருதல் அல்லது கட்டளை வரிசையைப் பேரளவில் வரச்செய்து மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்வதை நீக்க உதவுவது.

PROLOG : புரோலாக் (ஒரு கணினி மொழி) : "செயல்முறைப் படுத்தல் தருக்கமுறை" என்று பொருள்படும் programming logic என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும்பெயர். இது "செயற்கை நுண்ணறிவில்" (Artificial Intelligence) பயன்படுத்தப்படும் ஒர் உயர்நிலைச் செயல்முறைப்படுத்தும் மொழி. இது, ஜப்பானில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

PROM : புரோம் : "செயல்முறைப் படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம்" என்று பொருள்படும். "Programmable Read Only Memory" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும்பெயர்.

promiscuous mode : ஒழுங்கினப் பாங்கு.

promiscuous-transfer : ஒழுங்கினப் பாங்கு மாற்றி : ஒரு பிணையத் தகவல் தொடர்பில், கணுக் கணினியானது, வருகின்ற தரவு பொட்டலங்கள் அனைத்தையும் அவற்றின் இலக்கு முகவரியைப் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொள்கிற தரவு பரிமாற்றப் பாங்கு.

prom programmer : புரோம் செயல்முறைப்படுத்தி : செயல்முறைபடுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகங்களை செயல்முறைப்படுத்துவதற்கும், அழித்திடத்தக்க செயல்முறைப்படுத்தத்தக்க, படிப்பதற்கு மட்டுமேயான நினைவகங்களை மீண்டும் செயல்முறைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் சாதனம். இது சில சமயம், "புரோம் தகளி' என்றும் அழைக்கப்படுகிறது.

prompt : நினைவுக்குறிப்பு ; தூண்டு எழுத்து ; நினைவூட்டுத் தூண்டல் : கணினி, விசைப் பலகை உட்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதைக் குறிப்பதற்கான எழுத்து அல்லது செய்தி. பொதுவாக எந்தத் தரவுவைப் பதிவு செய்வது அல்லது எந்த நடவடிக்கையினை மேற்கொள்வது என்பதைப் பயன்படுத்துபவருக்குத் திரையில் காட்டுகிற எழுத்து.

proof : பிழைத்திருத்தப் படி : வெளியிடுவதற்குச் சரியாக இருக்கிறதா என்று சோதிக்கப் பயன்படும் ஒரு பக்கம் அல்லது வெளியீட்டின் சோதனை நகல்.

proofing programme : பிழை திருத்தச் செயல்முறை : அகராதிச் செயல்முறை அல்லது எழுத்துப் பிழைத் திருத்தம் போன்றது.

proof reader's marks : பிழை திருத்துபவரின் குறியீடுகள் : ஒரு பிழைதிருத்தப்படியில் திருத்தங்கள் அல்லது பிழைகள் உள்ளன என்பதைக் குறிப்பிடும் குறியீடுகள். டிடீபீயில் பயன்படுவது.

propagated error : பெருகிய பிழை; பரவும் பிழை; பரப்பிய பிழை : ஒரு செயற்பாட்டில் ஏற்பட்ட பிழை இன்னொரு செயல்பாட்டுக்கு உள்ளீடாக அமைதல். இதனால் புதிதாக இன்னொரு பிழை உருவாகும்.

propagation : பரவுதல் : ஓரிடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்குப் பரவுதல்.

propagation delay : பரப்புகைக் காலத்தாழ்வு; பரப்புகைச் சுணக்கம் : ஒரு செயற்கைக்கோள் செய்தித் தொடர்புப் பொறியமைவில் ஏற்படும் காலத்தாழ்வு.

properties : பண்பியல்புகள்; பண்புகள்.

properties and methods : பண்புகள் மற்றும் வழிமுறைகள்.

property : பண்பு; பண்பியல்பு : விண்டோஸ் குடும்ப (95/98/ எம்இ/என்டி/2000) இயக்க முறைமைகளில் ஒரு பொருள் அல்லது சாதனத்தின் பண்பியல்பு அல்லது அளபுருவைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கோப்பின் பண்புகள் அதன் வகை, அளவு, உருவாக்கப் பட்ட நாள் போன்றவற்றை குறிக்கின்றன. அந்த கோப்பின் பண்பியல்புத்தாளில் இது போன்ற விவரங்களை அறியலாம்.

property sheet : பண்புத் தாள் : விண்டோஸ் 95 மற்றும் அதன் குடும்ப இயக்க முறைமைகளில் இருக்கும் ஒரு வகை உரையாடல் பெட்டி. File என்ற பட்டித் தேர்வில் அல்லது ஒரு பொருள்மீது வலது சொடுக்கில் வரும் பட்டித் தேர்வில் Properties என்பதை தேர்வு செய்வதன் மூலம் இந்த உரையாடல் பெட்டியைப் பெற முடியும். இதில் ஒரு கோப்பு, பயன்பாடு அல்லது வன்பொருள் சாதனத்தின் பண்புக் கூறுகள் அல்லது தகவமைவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும். பெரும்பாலும் பண்புத் தாள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிய அடுக்குத்தாள் அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு தாளிலும் உரையாடல் பெட்டிகளில் காணப்படும் வழக்கமான கட்டுப்பாடுகள் இடம் பெற்றிருக்கும். பயனாளர் விருப்பப்படி அளபுருக்களை அமைத்துக் கொள்ள முடியும்.

proportion : வீத அளவு.

proportional font : சரிவிகித எழுத்துரு : ஒரு குறிப்பிட்ட பாணியில், அளவில் உருவாக்கப்பட்ட எழுத்துரு வகை. இதில் ஒவ்வொரு எழுத்தும் எண்ணும் வெவ்வேறு அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக இவ்வகை எழுத்துருவில் i என்னும் எழுத்தின் அகலம் m என்ற எழுத்தின் அகலத்தைவிடக் குறைவு.

proportional printing : விகிதாச்சார அச்சில் : ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளி இடம் அதன் அகலத்தை ஒட்டிய விகிதத்தில் இருக்குமாறு அச்சிடுதல். பெரிய எழுத்து w-வானது சிறிய எழுத்து 'i'யைவிட அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும்.

proportional spacing : வீத அளவு இட வெளியிடல் : ஒர் அச்செழுத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடை நிலை இட வெளி, அந்த எழுத்தின் அகலத்திற்கொப்ப இருக்குமானால் இடவெளியிடல் வீத அளவில் இருப்பதாகக் கருதப்படும். இந்த நூலிலுள்ள அச்சுக்கோப்பு வீத அளவு இடவெளியிடல் அடிப்படையில் அமைந்திருப்பதால், "Write" என்ற சொல்லிலுள்ள "W" என்னும் எழுத்து 'i' என்ற எழுத்தைவிட அதிக இடத்தை அடைத்துக் கொள்கிறது. இதற்கு மாறாக தர அளவுபடுத்திய தட்டச்சுப் பொறிமுறையில், எல்லா எழுத்துகளுக்கும் சரிசமமான இடவெளியே ஒதுக்கப்படுகிறது.

proposition : முற்கோள் : தருக்கமுறையில் ஒரு முன்மொழிவு. இது மெய்ம்மையாகவும் இருக்கலாம்; பொய்ம்மையாகவும் இருக்கலாம்.

proprietary : தனியுரிமையுடைய.

proprietary software : தனியுரிமை மென்பொருள் : ஒரு தனிமனிதருக்கு அல்லது வணிக நிறுவனத்திற்குச் சொந்தமான செயல்முறை. இது பதிப்புரிமை கொண்டதாக அல்லது இன்னும் பொதுமக்களுக்கு வெளியிடப்படாததாக இருக்கும், இந்த மென்பொருளை அனுமதியின்றி எவரும் சட்டப்படிப் பயன்படுத்தவோ, படியெடுக்கவோ முடியாது. இது 'பொது முறை மென்பொருள் (Public domain Software) ' என்பதிலிருந்து வேறுபட்டது .

protect : பாதுகாத்தல் : ஒரு கணினியமைவின் செயல் முறையை அனுமதி பெறாமல் அணுகுவதைத் தடுத்தல், தீங்கு ஏற்படுவதைத் தடுக்கக் காப்பிடுதல்.

protect document : ஆவணப்பாதுகாபபு.

protected : காக்கப்பட்ட

protected memory : பாதுகாக்கப்பட்ட நினைவகம் : அழுத்தப்பட்ட நினைவகம் போன்றது. ஆனால் அதிலிருந்து வேறானது. கணித்தலில் யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்புகள் வேறு செயலகங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நினைவகத்தை அணுகுவதைத் தடுக்கின்றனர். வேறு ஒரு செயல்முறை படுத்தும் நினைவக இடத்தை எந்த ஒரு செயல்முறையும் எழுத முடியாது. டாஸ் போன்றவற்றில் இந்தக் கட்டுப்பாடு அமைப்பு இல்லை. விண் டோஸ் 95இல் இந்தச் சிக்கல் இருக்காது.

protected mode : பாதுகாக்கப்பட்ட முறை : இன்டெல் 286-கள் மற்றும் பின்னர் வந்தவைகளில் உள்ள நினைவகத்தின் அனைத்துப் பகுதிகளையும் முகவரியிட கணினியை அனுமதிக்கும் ஒரு இயக்க நிலை. ஒரு நிரல்தொடர் மற்றொன்றின் நினைவக எல்லைக்குள் செல்லாமலும் இது தடுக்கிறது. இதனால் பல நிரல் தொடர்கள் பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் இயங்கமுடியும்.

protected storage : காப்பிட்ட சேமிப்பகம் : தனிவகை நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சேமிப்பக அமைவிடங்கள். இது சேமிப்பதற்குப் பொருத்தமானது தானா என்பதை உறுதி செய்யும் ஒரு நடைமுறைக்கு உள்ளாகாமல் தரவுகளைச் சேமிக்க இயலாது.

protection : காப்பு.

protection, data : தரவுக்காப்பு.

protection, file : கோப்புக்காப்பு.

protocol : மரபொழுங்கு; நெறி முறை; முறையான நடைமுறைகள்; விதி முறைத் தொகுப்பு : கணினியமைவுகளிடையே தகவல் பரிமாற்றம் பற்றிய விதி களின் தொகுதி. எடுத்துக்காட்டு : ஐபிஎம் சொந்தக் கணினி; ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி.

protocol stack : நடைமுறை இருப்பு : ஒரு தகவல் தொடர்பு கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் மரபொழுங்கு விதி முறைகள்.

protocol suite : நெறிக்முறை கூட்டுத் தொகுப்பு.

prototype : மூல முன்வடிவம்; முன் மூல அச்சு : ஒரு மென்பொருள் தொகுதியின் அல்லது கணினி வன்பொருள் சாதனத்தின் அல்லது பொறியமைவின் முதல் பதிப்பு அல்லது முன் மாதிரி வடிவம். இது உற்பத்திக்கு முந்திய சோதனைக்குப் பயன்படுகிறது.

prototyping : மாதிரியமைத்தல் : இறுதி இயக்கமுறை அமைப்பின் இயங்கும் மாதிரி ஒன்றை உருவாக்கி, மேம்படுத்தி, சீர் செய்தல்.

proving : மெய்ப்பித்தல்; நிறுவுதல் : ஒர் எந்திரம், திருத்தப் பராமரிப்புக்குப் பிறகு, குறைபாடுகள் இல்லாதிருக்கிறது என்பதை மெய்ப்பிப்பதற்கான சோதனை.

proxy server : பதிலாள் பணியகம் : ஒரு வாடிக்கையாளர் நேரடியாகக் கேள்விகள் கேட்காமல் அவருக்காக ஒரு பணியகம் கேட்பது. நெருப்புச் சுவர் கட்டமைப்பு முறையில் இணைய பாதுகாப்பான உள்கட்டமைப்பினுள் பதிலால் பணியகம் அமரும்போது இது ஏற்படுகிறது. உள்கட்டமைப்பில் உள்ள ஒரு பயனாளர் வெளிவுலகுக்கு நேரடியாகக் கேள்விகள் கேட்க முடியாது. அவர் சார்பாக இது ஆவணங்களைக் கேட்கும்.

psec : பிசெக் : பிக்கோ வினாடி என்பதன் குறும்பெயர். இது ஒரு வினாடியின் நூறாயிரங் கோடியில் ஒரு பகுதி.

pseudocode : போலிக் குறியீடு : 1. இயக்கிகள், இயக்கப்படு எண்கள், செயற்பாடுகள், அட்டவணைப் பதிவேடுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் கட்டுத்திட்டமற்ற குறியீடு. 2. தொடர் வரிசை வரைபடங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் செயல்முறை வடிவமைப்பு முறை. இது, ஆங்கிலம் போன்ற கட்டளைகளை உருவரையாகப் பயன்படுத்துகிறது.

pseudocompiler : போலி தொகுப்பு : ஒரு போலி மொழியை அல்லது இடைப் பட்ட மொழியை உருவாக்கிய

75 தொகுப்பு. இயக்கப்படுவதற்கு இது மேலும் தொகுக்கப்பட வேண்டும் அல்லது விளக்கப் பட வேண்டும்.

pseudocomputer : போலிக் கணினி : ஒரு மரபான நுண் செய்முறைப் படுத்தியின் தாயக எந்திர மொழியில் எழுதப்பட்டுள்ள மென்பொருள் மொழியாக்கச் செயல் முறை.

pseudolanguage : போலி மொழி : ஒரு கணினியினால் நேரடி யாகப் புரிந்து கொள்ள முடியாத மொழி; இது கணினிச் செயல் முறைகளை எழுதப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு போலிச் செயல்முறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அது, கணினி அறிந்து கொள்ளக்கூடிய ஒரு மொழியில் (எந்திர மொழி), மொழி பெயர்க்கப் பட வேண்டும். இது "குறியீட்டு மொழி" (symbolic language) போன்றது.

pseudo machine : போலிப் பொறி; போலி எந்திரம் : இவ்வகைப் பொறியில் நுண்செயலி வன்பொருளாக இருப்பதில்லை. மென்பொருளிலேயே அதுபோல உருவாக்கப்படுகிறது. போலிப் பொறிக்காக எழுதப்பட்ட ஒரு நிரலை மறுமொழி மாற்றம் செய்யாமலே வெவ்வேறு பணித்தளங்களில் இயக்க முடியும். எடுத்துக் காட்டாக, ஜாவா மெய்நிகர் பொறியைக் (Java Virtual Machine-JVM) கூறலாம். ஓரு முறை பைட் குறிமுறையாக (Bytecode) மொழிமாற்றம் செய்யப்பட்ட ஜாவா புரோ கிராம்களை (class கோப்புகள்) எந்தக் கணினியிலுள்ள ஜேவி எம்மிலும், மறுமொழி மாற்றம் செய்யாமலே இயக்க முடியும்.

pseudo-operation : போலிச் செயற்பாடு : கணினியின் செயற்பாட்டுத் தொகுதியாக வன்பொருளால் உணர்ந்தறியப்பட்டுள்ள தொகுதியின் ஒரு பகுதியாக இல்லாத செயற்பாடு. எனவே, இது எந்திரச் செயற்பாடுகளின் தொகுதியின் ஒரு விரிவாக்கம் ஆகும்.

pseudo random : போலி முறையிலா.

pseudorandom number : தொடர்பிலாப் போலி எண் ; போலி முறையிலா எண் : ஒரு நியதிவாத முறைப்படி ஒரு கணினியினால் உருவாக்கப்படும் எண். இந்த எண்கள் குறிப்பின்றிச் செய்யப்படும் பல புள்ளியியல் சோதனைகளுக்கு உள்ளாக்கப் படுகின்றன. பெரும்பாலான நடைமுறை நோக்கங்களுக்காக இதனை ஒரு குறிப்பிலா எண்ணாகப் பயன்படுத்தலாம். psychology : உளவியல் ;மனவியல் .

p-system : பி-பொறியமைவு : ஒரு நுண்கணினிச் செயற்பாட்டுப் பொறியமைவு. பல்வேறு எந்திரங்களில் பயன்படுத்தும் வகையில் இதில் செயல்முறைகளை எழுதலாம். இது, இந்தப் பொறியமைவின் முக்கிய நன்மையாகும். இது, பி-குறியீட்டினை ஒரு குறிப்பிட்ட கணினிக்குப் பொருத்தமான எந்திரமொழியில் மொழி பெயர்க்கிறது.

. pt : . பீடீ : ஒர் இணைய தள முகவரி போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

publication language : வெளியீட்டு மொழி : நூல் வெளியீடுகளுக்குப் பொருத்தமான நன்கு வரையறுக்கப்பட்டுள்ள ஒரு செயல்முறைப்படுத்தும் மொழி இன்றியமையாத தேவை. ஏனென்றால் சில மொழிகளில் பொதுவான எழுத்து முகப்புகளாக இல்லாத தனிவகை எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

public broadcasting : பொது ஒலி பரப்பு.

public data network : பொதுத்தரவுப் பிணையம்.

public directory : பொதுக்கோப்பகம் : ஒரு எஃப். டீ. பீ வழங்கனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பகம். பெயரிலாப் பயனாளர்கள் (anonymous users) கோப்புகளைப் பெறவும் தரவும் இதனை அணுக முடியும். சுருக்கமாக pub என அழைக்கப்படும்.

public domain : பொதுக்களம் : பதிப்புரிமை அல்லது பிற சொத்துரிமைப் பாதுகாப்பின் கீழ் வராத புத்தகங்கள், இசை அல்லது மென்பொருள் போன்ற படைப்பாக்கத்தின் தொகுதியைக் குறிக்கிறது. பொதுக் களத்தில் இருக்கும் படைப்புகளை இலவசமாக நகலெடுக்கலாம். திருத்தலாம். எந்தப் பயனுக்காகவும் எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இணையத்தில் கிடைக்கும் தரவுகளில் பெரும்பாலானவையும், உரைகள் மற்றும் மென்பொருள் பலவும் பொதுக்களத் தின் கீழேதான் உள்ளன. ஆனால் பதிப்புரிமை பெற்ற படைப்புகள் இணையத்தில் பொதுக்களத்தில் இடம் பெறுவதில்லை.

public domain software : பொது முறை மென்பொருள் : 1. பதிப்புரிமைச் சட்டங்களின் பாதுகாப்புக்கு உட்படாமலிருப் பதும் சட்ட வழக்குகள் தொடரப்படலாம் என்ற பயமின்றிச் சுதந்திரமாக எல்லோராலும் பயன்படுத்தப்படுவதுமான மென்பொருள். ஒரு செயல் முறையை உருவாக்கியவர் பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்கிய ஒரு கணினிச் செயல்முறை. 2. தொலைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் இலவசச் செயல்முறைகள். இது "தனியுரிமை மென்பொருள்" (Proprietary Software) என்பதிலிருந்து வேறுபட்டது.

public file : பொதுக்கோப்பு : ஒரு அமைப்பு அல்லது கட்டமைப்பின் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் கோப்பு.

public key : பொது மறைக்குறி; பொதுத்திறவி : தனித்திறவி, பொதுத்திறவி ஆகிய இரண்டு திறவிகளின் அடிப்படையிலான மறையாக்கம். ஒரு பயனாளர் தனக்குரிய பொதுத்திறவியை பொதுமக்களுக்கு அறிவிக்கிறார். இதன்மூலம் எவரும் செய்திகளை மறையாக்கம் செய்து பயனாளருக்கு அனுப்பலாம். பயனாளர் அச்செய்திகளை மறைவிலக்கம் செய்து படிக்க, தன்னுடைய இலக்கமுறைக் ஒப்பமாகிய (digital signature) தனித்திறவியைப் பயன்படுத்திக் கொள்வார்.

public key encryption : பொதுத்திறவி மறையாக்கம் : மறையாக்கத்திற்கு இரட்டைத் திறவிகளைப் பயன்படுத்துகிற ஒர் ஒத்திசைவில்லா மறையாக்கமுறை. பொதுத்திறவியைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியை, செய்திக்குரியவர் தனக்கே உரிய தனித்திறவி மூலம் மறைவிலக்கம் செய்து கொள்வார். இலக்கமுறைக் ஒப்பத்தைப் பொறுத்தவரை இந்த வழிமுறை எதிர்முறையானது. அதாவது செய்தியை அனுப்புபவர் இரகசியத்திறவியைப் பயன்படுத்தி ஒரு தனித்த மின்னணு எண்ணை உருவாக்குகிறார். இச்செய்தியினைப் படிக்க விரும்புபவர் அதற்கேற்ற பொதுத்திறவி மூலம் பரி சோதித்து குறிப்பிட்ட நபரிடமிருந்துதான் செய்தி வந்ததா என அறிந்து கொள்ளலாம்.

public network : பொதுப் பிணையம் : பொதுவாக ஒரு கட்டணம் செலுத்தி எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செய்தித் தொடர்புச்சாதனம்.

public object element : பொதுப்பொருள் உறுப்பு.

public property : பொதுப்பண்புகள்.

public rights : பொது உரிமைகள் : இணையத்தைப் பொறுத்த மட்டில் பொதுமக்கள் எந்த அளவுக்கு இணையத்தரவுகளைப் பெறலாம் என்பதற்கு அறிவுப்பூர்வச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள்.

public Switched data network (PSDN) : பொது இணைப்பகத் தரவுப் பிணையம்.

Public Switched Telephone Network (PSTN) : பொது இணைப்பகத் தொலைபேசிப் பிணையம்.

publish and subscribers : வெளியீடும் சந்தாவும் : கோப்புகளுக்கிடையே வெப்ப இணைப்புகளை ஏற்படுத்தும் மெக்கின்டோஷ் சிஸ்டம் 7-ன் திறன். ஒரு கோப்பின் அனைத்து அல்லது ஒரு பகுதியை பதிப்புக் கோப்பு என்று பதித்து, சந்தாதாரர் கோப்பாக மாற்றலாம். எந்த ஒரு பதிவித்த கோப்பைப் புதுப்பித்தாலும், சந்தாதாரர் கோப்பும் புதுப்பிக்கப்படும்.

puck : கைவரை கலைச்சாதனம் : ஒர் ஆள் கையில் பிடித்துக் கொண்டு கையால் இயக்கும் வரைகலை உட்பாட்டுச் சாதனம். இது ஒரு வரைகலைத்

கைவரை கலைச் சாதனம்

கைவரை கலைச் சாதனம் தகட்டில் ஆயத்தொலைவு ளைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது.

pull : இழு ; மீட்பு .

pulldown list : கீழ்விரிப்பட்டியல்.

pull down menu : கீழ்விரிப்பட்டியல் ; தலைவிரியும் பட்டியல் : சுட்டு நுண் பொறியின் சுட்டுமுள்ளை ஒரு தலைப்புக்கு நகர்த்தி, பிறகு கட்டு நுண் பொறிப் பொத்தானை அழுத்துவதன்மூலம் காட்சியாகக் காட்டத்தக்க விவரப் பட்டியல்.

pull instruction : மீட்பு நிரல் : செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்தத்தில் நேர்மின்னாகவோ எதிர்மின்னாகவோ திடீரென ஏற்படும் மாறுதல். இது மின்சுற்று வழிக்குத் தகவலை அனுப்புகிறது.

pulse code modulation : துடிப்புக் குறியீடு; துடிப்புக் குறிப்பேற்றம் : பீ. ஏஎம் அமைப்பில் ஒப்புமை சமிக்கையை தொடர்ந்து இடைவேளையில் மாதிரி எடுத்து ஒரு துடிப்பு அலைமாற்ற வீச்சு கலைமாற்ற (ஆம்ப்ளிட்டியூடு மாடுலேட்டர்) அலைவடிவை ஏற்படுத்தலாம். ஒரு சமிக்கையின் உயர்ந்த அலை வரிசையின் இரட்டை மதிப்பை மாதிரி அளவாகக் கொண்டு ஒரு உவமச் சமிக்கையைத் தொடர்ந்து மாதிரியெடுத்தால் குரலை மீண்டும் உருவாக்குவது போதுமானது. மாதிரித் துடிப்பின் கால இடைவெளிக்கு மட்டும் திறக்குமாறு அமைக்கப்பட்டுள்ள வாயிலைக் கொண்ட மின்சுற்றில் ஒத்திசைவு உவமச் சமிக்கையை அனுப்பி மாதிரி எடுக்கப்படுகிறது. இதில் வெளியீடாக வருவது PAM சமிக்கை.

pulse duration modulation : துடிப்பு கால அளவுப் பண்பேற்றம் : தொடர்முறை வடிவில் இருக்கும் தகவலை இலக்கமுறைச் செய்தியாக மாற்றியமைத்து குறியாக்கம் செய்வதில் ஒரு வழிமுறை. துடிப்பின் கால அளவை மாற்றியமைத்து இக்குறியாக்கம் செய்யப்படுகிறது. பண்பேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, சமிக்கையானது நிலையான அதிர்வெண், கால அளவு, வீச்சு கொண்ட தொடர்ச்சியான துடிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. பண்பேற்றத்தின் போது துடிப்பின் கால அளவு மாற்றப்பட்டு தகவல் குறியாக்கம் செய்யப்படுகிறது.

pulse modulation : துடிப்புப் பண்பேற்றம்; துடிப்பு ஏற்ற இறக்கம் : தகவல்களை அனுப்புவதற்கு ஏற்ற இறக்கம் செய்யப்பட்டுள்ள அல்லது பண்பியல்புப்படுத்தப்பட்டுள்ள துடிப்புகளின் தொடர் வரிசையைப் பயன்படுத்தல். PAM. PPM, PDM போன்றவை இந்த ஏற்ற இறக்க வகையைச் சேர்ந்தவை.

pulse position modulation : துடிப்பு இடநிலைப் பண்பேற்றம் : தகவலைக் குறியாக்கம் செய்யும்போது துடிப்புகளின் இட நிலையை மாற்றியமைத்து சமிக்கையைப் பண்பேற்றம் செய்யும்முறை. பண்பேற்றம் செய் யப்படுவதற்கு முன்பு சமிக்கையானது நிலையான அதிர்வெண், கால அளவு மற்றும் வீச்சு கொண்டதாக இருக்கும். பண்பேற்றத்தின்போது துடிப்பின் இடநிலை மாற்றப்பட்டு, தகவல், குறியாக்கம் செய்யப்படுகிறது.

pulse regenerators : துடிப்பு மீட்டுருவாக்கிகள் : தொலை பேசிக்கம்பியின் பாதை நெடுகிலும் டிடிஎம் சமிக்கைகள் வலுப்பெறுகின்றன; பிரிகின்றன. பிழைகள் சேர்க்கப் படவில்லையென்றால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் துடிப்பு இருக்கிறதா இல்லையா என்று கூறமுடியும். தேவைப்படும் துல்லியத்துக்குள் துடிப்பின் அலைவடிவத்தை வைத்திருக்க கம்பி நெடுகிலும் துடிப்பு மீட்டுருவாக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருமுறை துடிப்பு புதுப்பிக்கப்படும் போதும் ஒரு புதிய, சிதையாத துடிப்பு கம்பியில் அனுப்பப்படுகிறது. துடிப்பு இல்லை என்று கண்டுபிடிக்கப்படும் போது, துடிப்பு அனுப்பப்படுவதில்லை.

pulses, clock : கடிகாரத் துடிப்பு .

punch : துளையிடல்.

punch buffer, card : அட்டைத் துளை இடையகம்.

punched card : துளையிட்ட அட்டை : தரவு செய்முறைப்படுத்தும் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் காகித அட்டை. இதில் நூற்றுக்கணக்கான தனித்தனி அமைவிடங்களில் நுண்ணிய செவ்வகத் துளைகள் இடப்படுகின்றன. இத்துளைகள் எண்ணியல் மதிப்பளவுகளையும் ஆல்பா எண்ணியல் குறியீடுகளையும் குறிக்கின்றன.

punched card code : துளை அட்டை குறிமுறை.

punched tape : துளை நாடா .

punching card அட்டை துளைத்தல்.

punching position : துளையிடு இட நிலை : ஒர் அட்டைப் பத்தியின் பிரிவினைப் பகுதிகளில் ஒன்று. இதில் ஒரு துளையினை இடலாம்.

punching station : துளையிடும் நிலையம் விரற்கட்டைத் துளையிடு எந்திரம், அட்டைத் துளையிடு எந்திரம், ஆகியவற்றில். துளையிடும் செய்முறைக்காக ஒர் அட்டையினைப் பொருத்துவதற்கான பகுதி.

punch, key : விசைத் துளையிடல்.

punch, keyboard : விசைப்பலகை துளையிடல். punch, x : எக்ஸ் -துளை .

punch, y : ஒய் -துளை .

punctuation syntials : நிறுத்தக்குறி, பகுப்பாய்வு.

punctuator : நிறுத்தக்குறிகள்.

purchase order : கொள்முதல் கோரிக்கை

pure procedure : தூய முறை : நிறைவேற்றத்தின் போது தனது எந்த பகுதியையும் மாற்றமைவு செய்து கொள்ளாத நடைமுறை.

purge அழிப்பு : ஒரு கோப்பினை அழித்து விடுதல்.

purge print document : அச்சு ஆவணங்களை நீக்கு.

purpose computer, general : பொதுப்பயன் கணினி.

purpose computer, special : சிறப்புப்பயன் கணினி

push : தள்ளு : ஒரு செயல் முறை அடுக்கின் உச்சி அமைவிடத்தினுள் தரவுவைத் தள்ளிச் செலுத்துதல். அடுக்கின் சுட்டு முள், அடுக்கின் உச்சிக்கு வருகிற அடுத்த அமைவிடத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் தானாகவே உயர்ந்து விடுகிறது. இது "விரைவுத் தள்ளல்" (Pop) என்பதிலிருந்து வேறுபட்டது.

push instruction : தள்ளு நிரல் : தள்ளும் செயற்பாட்டினை நிறைவேற்றுகிற கணினி நிரல்.

pushdown list : கீழ்த்தள்ளுப்பட்டியல் . கீழிருந்து மேல் நோக்கி எழுதப்படும் பட்டியல். இதில் ஒவ்வொரு புதிய பதிவும் பட்டியலின் உச்சியில் இடம் பெறும். பட்டியலின் உச்சியிலுள்ள இனம் முதலில் செய்முறைப்படுத்தப்படும்.

pushdown stack : கீழ்த்தள்ளுஅடுக்கு : கணினியில் ஒரு கீழ்த் தள்ளுப்பட்டியலை நிறை வேற்றுகிற நினைவக அமைவிடங்களின் அல்லது பதிவேடுகளின் தொகுதி.

push pop stack : விரைவுக் கீழ்த் தள்ளு அடுக்கு : ஒரு செயல் முறை முகப்பிலிருந்து தகவல்களைப் பெற்று, நிரல்களின் முகவரி அமைவிடங்களை "முதலில் கடைசி வெளிப்பாடு" அடிப்படையில் சேமித்து வைக்கிற பதிவேடு. இரு செயற்பாடுகளும் அடுக்குச் செய்முறைப்படுத்துதலில் அடங்கியவை. தள்ளுதல் என்பது பதிவேடுகளிலிருந்து அடுக்கினை நிரப்புவதைக் குறிக்கிறது. விரைவுத் தள்ளுதல் என்பது பதிவேடுகளிலிருந்து அடுக்கினை நிரப்புவதைக் குறிக்கிறது; விரைவுத் தள்ளுதல் என்பது பதிவேடுகளுக்கு மாற்றுவதற்காக அடுக்கினைக் காலி செய்வதைக் குறிக்கிறது.

pushlpull tractor : தள்ளு/இழு டிராக்டர் : அச்சிடும் தாள் இழுவை காகிதத்தை பிளேட்டனுக்குத் தள்ளுமாறும் பிளேட்டனில் இருந்து அதை வெளியே எடுக்குமாறும் பொத்தானிடக் கூடியது. தனித் தாள் தொடர்படிவங்களைத் தள்ளலாம். பெரும்பாலான பல்பகுதி படிவங்களும் வில்லைகளும் மோதிக் கொள்வதைத் தடுக்க இழுக்கப்பட வேண்டும்.

pushup list : மேல் தள்ளுப்பட்டியல் : இனங்களின் பட்டியல். இதில் ஒவ்வொரு இனமும் பட்டியலின் இறுதியில் பதிவு செய்யப்படுகிறது. மற்ற இனங்கள் பட்டியலில் அவை இடம் பெற்றுள்ள இடத்தில் அப்படியே இருந்துவிடும்.

put : புட் : நிரலாக்கத் தொடரமைத்தலில் நடப்புப் பதிவேட்டை வெளியீட்டுக் கோப்பில் சேமிக்குமாறு கேட்கும் ஒரு வேண்டுகோள்.