கணினி களஞ்சியப் பேரகராதி/X

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
X

X. 25 : எக்ஸ்-25 : பன்னாட்டுத் தொலைத்தொடர்பு தர வரை யறை அமைப்பான ஐடியு-டீ (முன்னாள் சிசிஐடீடீ) வெளியிட்டுள்ள பரிந்துரை. பொதி இணைப்புறு பிணையத்துக்கும், ஒரு முனையத்துக்கும் இடையேயான இணைப்பை வரையறுக்கிறது. எக்ஸ். 25 மூன்று வரையறைகளைக் கொண்டது. 1. பிணையத்துக்கும் முனையத் துக்குமிடையே மின்சார இணைப்பு. 2. தரவு பரப்புகை அல்லது தொடுப்பு-அணுகு நெறிமுறை. 3. பிணையப் பயனாளர்களிடையே மெய்நிகர் இணைப்புத் தடங்களை செயலாக்குதல். மூன்று வரையறைகளும் இணைந்து ஓர் ஒத்திசைவான, முழு இருதிசை, முனைபிணைய இணைப்பை வரையறுக்கின்றன. பொதி வடிவம், பிழைக் கட்டுப்பாடு மற்றும் பிற பண்புக்கூறுகள், ஐஎஸ்ஓ வரையறுத்த ஹெச்டிஎல்சி (High Level Data Link Control) நெறி முறையை ஒத்ததாகும்.

X-acto knife : எக்ஸ்-ஆக்டோ கத்தி : ஒட்டும் சமயத்தில் வெட்டவும், நகலெடுக்கவும், படங்களை ஒட்டவும் பயன்படும் கருவி.

x-address : எக்ஸ்-முகவரி : நினை வகத்தின் சரியான வரிசை குறிப் பிடப்படும் ஒருங்கிணைப்பு.

X axis : எக்ஸ்-அச்சு : ஓர் ஆயத் தொலைவுத் தளத்தில், கிடைமட்ட அச்சு. இது ஒய் அச்சு, இசட்-அச்சு என்பவற்றிலிருந்து வேறுபட்டது.

xbase : எக்ஸ்பேஸ் : கிளிப்பர், ஃபாக்ஸ்புரோ போன்ற டிபேசை ஒத்த மொழிகள். ஆரம்பத்தில் டிபேசைப் போன்றதாகவே இருந்தாலும், புதிய கட்டளைகளும், தன்மைகளும் இதை டிபேசுக்கு ஏற்றவையாக ஓரளவே ஆக்கி உள்ளன.

xCMD : எக்ஸ்சிஎம்டி : புறக்கட்டளை (External Command) என்பதன் சுருக்கம். மெக்கின்டோஷ் கணினிகளுக்காக உருவாக்கப்பட்ட, ஹைப்பர்கார்டு என்னும் மீஊடக நிரலின் புறக்குறிமுறை.

X Consortium : எக்ஸ் கூட்மைப்பு : பல்வேறு வன் பொருள் நிறுமங்களின் கூட்டமைப்பு. யூனிக்ஸின் வரைகலை பணிச்சூழலான எக்ஸ் -விண்டோஸின் தர வரையறைகளை நிர்வகிக்கும் அமைப்பு. இப்போது ஓப்பன் குரூப்பின் எக்ஸ் பணித் திட்டக்குழு எக்ஸ் விண்டோஸ் அமைப்பின் பொறுப்புகளை வகிக்கிறது.

x copy : எக்ஸ் காப்பி : கோப்புகளையும், துணைவிவரத் தொகுப்புகளையும் நகலெடுக்கின்ற டாஸ் மற்றும் ஒஎஸ்/2 பயன்பாடு.

X-datum line : எக்ஸ் விவர-வரி : துளையிட்ட அட்டையில் மேல்மூலையின் ஓரத்தில் உள்ளதாகப் பயன்படும் ஒரு கற்பனைக்கோடு. சான்றாக, ஹொலரித்தின் 12 துளை வரிசை ஓரத்தின் அருகே உள்ளகோடு.

XENix : ஜெனிக்ஸ் : இது, யூனிக்ஸ் என்ற செயற்பாட்டுப் பொறியமைவின் ஒரு திருத்திய பதிப்பு. இதனை நுண்கணினிகளில் பயன்படுத்துவதற்கு மைக்ரோசாஃப்ட் கழகம் தயாரித்துள்ளது.

xerographic printer : மின்துகள் ஒளிப்பட அச்சுப்பொறி : காகிதத்தில் ஓர் ஒளியியல் உருக்காட்சியை அச்சடிப்பதற்கான சாதனம். இதில், காகிதத்தில் மின்நிலைப்பாட்டு முறைப்படி மின்னேற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளை ஒளி மற்றும் இருள் பகுதிகள் குறிக்கின்றன. காகிதத்தில் ஒரு பொடித்த மைத்துகளைப் பூசும்பொழுது மின்னேறிய பகுதிகளில் அந்தப் பொடி ஒட்டிக்கொள்கிறது. ஒட்டிய பொடியை வெப்ப மூட்டுதல் மூலம் காகிதத்தில் உருகச் செய்யப்படுகிறது.

Xerox PARC : ஜெராக்ஸ் பார்க் : ஜெராக்ஸ் பாலோ ஆல்ட்டா ஆய்வு மையம் (Xerox Palo Alto Research Center) என்பதன் சுருக்கம். கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்ட்டோவிலுள்ள ஆய்வு மற்றும் உருவாக்க மையத்தைக் குறிக்கிறது. குறும்பரப்புப் பிணையம் (LAN), லேசர் அச்சுப்பொறி, வரைகலைப் பயனாளர் இடைமுகம் (GUI) போன்ற நவீனக் கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம் ஜெராக்ஸ் பார்க்தான்.

XFCN : எக்ஸ்எஃப்சிஎன் : புறச் செயல்கூறு (External Function) என்பதன் சுருக்கம். முதன்மையான நிரலுக்கு வெளியே நிலவு கின்ற ஒரு கட்டளைத் தொகுதி. முதன்மையான நிரலிலிருந்து அழைப்பு வரும்போது இது செயல்படத் தொடங்கும். இது செயல்பட்டு முடிந்தவுடன் ஒரு மதிப்பினை முதன்மையான நிரலுக்குத் திருப்பி அனுப்பும். மெக்கின்டோஷ் கணினிகளுக்கான ஒரு மீஊடக (Hypermedia) நிரலான ஹைப்பர் கார்டு என்னும் நிரலில் எக்ஸ்எஃப்சிஎன்-கள் பயன்படுத்தப்படுகின்றன.

 : x-height : எக்ஸ்-உயரம்' : ஏற்றம் அல்லது இறக்கம் இல்லாத சிறிய எழுத்தின் உயரம். தேர்ந்தெடுக்கப்பட்ட அச்செழுத்தில் எக்ஸ் எழுத்தின் உயரத்திற்குச் சமமானது.

x link : எக்ஸ்-தொடுப்பு.

xmodem : எக்ஸ்மோடம் : ஒத்திசையாத் தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு கோப்புப் பரிமாற்ற நெறிமுறை. இது தரவுவை 128பைட்டுகள் கொண்ட தொகுதிகளாக அனுப்பிவைக்கும்.

xmodern-CRC : எக்ஸ்மோடம்-சிஆர்சி : எக்ஸ்மோடம் கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மேம்பட்ட பதிப்பு. தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிய, 2 பைட்டுகள் கொண்ட, சுழற்சிமிகைச் சரிபார்ப்பு (Cyclical Redundancy Check-CRC) முறையைக் கொண்டுள்ளது.

xmodem 1k : எக்ஸ்மோடம் 1கே : கோப்புப்பரிமாற்ற நெறிமுறையான எக்ஸ்மோடத்தின் ஓர் உட்பிரிவு. தொலைதூர, மிகஅதிகத் தகவல் பரிமாற்றத்துக்காக வடிவமைக்கப்பட்டது. இதில், தகவல், 1 கிலோ பைட் (1024 பைட்) கொண்ட தகவல் தொகுதிகளாக அனுப்பப்படுகின்றது. மிகவும் நம்பிக்கைக்குரிய பிழைச் சரிபார்ப்பு நுட்பமும் கொண்டது.

xon/xoff : எக்ஸ்ஆன்/எக்ஸ்ஆஃப் : எக்ஸ்நிகழ்/எக்ஸ்அகல் : ஓர் ஒத்திசையாத் தகவல் தொடர்பு நெறிமுறை. இதில், தகவலைப்பெறும் சாதனம்/ கணினி, தகவலை அனுப்பும் சாதனம் கணினியிலிருந்து தரவுப் பாய்வினைக் கட்டுப்படுத்த தனிச்சிறப்பான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தரவுவைப் பெறும் கணினி தொடர்ந்து தரவுவைப் பெற முடியவில்லையெனில் எக்ஸ்அகல் கட்டுப்பாட்டுக் குறியீட்டை அனுப்பும். அதனைப் பெற்றவுடன் அனுப்பும் கணினி தரவு அனுப்புவதை நிறுத்திக் கொள்ளும். இது போல எக்ஸ்நிகழ் சமிக்கை கிடைத்தவுடன் தரவுவை அனுப்பத் தொடங்கும்.

ΧΟR : எக்சோர் (விலக்கும் அல்லது) : '"Exclusive OR"என்ற ஆங்கிலப் பெயரின் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

xposition : எக்ஸ் நிலை;எக்ஸ்அச்சு ஆயத்தொலை.

X protocol : எக்ஸ் விண்டோ அமைப்பின் நெறிமுறை.

X-punch : எக்ஸ்-துளை : ஒரு ஹொலரித் அட்டையில் 11 ஆவது துளையிடும் நிலையில் துளையிடுதல். இதனை 11ஆம் துளை என்றும் கூறுவர்.

x-ray lithography : எக்ஸ்-கதிர் லித்தோகிராஃபி : ஒரு நுண் மீட்டருக்கும் குறைவான கோடுகளைப்போட ஒருங்கிணைந்த மின்சுற்றைச் செயல்படுத்தும் ஒரு நுட்பம்.

x-seriers : எக்ஸ் தொடர்.

'x terminal : எக்ஸ் முனையம் : ஓர் ஈதர்நெட் பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள அறிவுநுட்பமுள்ள ஒரு காட்சிச்சாதனம். எக்ஸ் விண்டோ அமைப்பில் கிளையன் பயன்பாடுகளிலிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் செயல்பாடுகளை நிகழ்த்தும்.

X windows : எக்ஸ் விண்டோஸ் : டிஜிட்டலும் ஐபிஎம்மும் சேர்ந்து எம்ஐடியில் உருவாக்கிய வரைகலை பணிநிலையத்துக்கான சாளர அமைப்புச் சூழ்நிலை. கட்டமைப்பில் உள்ள ஒரு கணினி அமைப்பில் உருவாக்கப்பட்ட வரைகலையை வேறொரு பணிநிலையத்தில் காட்டுவதற்கு வரைகலைக்காக வடிவமைக்கப்பட்டது. எக்ஸ் விண்டோஸ் எல்லா செயலாக்க அமைப்பிலும் ஓடுமாறு அமைக்கப்பட்டு எல்லா பணிநிலைய விற்பனையாளர்களின் ஆதரவும் பெற்றது.

x-window system : எக்ஸ் விண்டோ சிஸ்டம் : எம்ஐடீயில் காட்சிப்படுத்தலைக் கையாள்வதற்கான தரப்படுத்தப்பட்ட நிரல்கூறுகளின் தொகுப்பு. எந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாதது. யூனிக்ஸ் பணிநிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு குறிப்பிட்ட வன்பொருளையோ, இலக்க முறைமையையோ சாராதது.

X-Y chart : எக்ஸ்-ஒய் வரைபடம் : ஒரு தரவு தொடரை ஒரு நேர அச்சு இல்லாமல் இன்னொரு தரவு தொடருக்கு எதிராக வரைவதற்கு அனுமதிக்கிற வடிவம். இது இரு தொடர்களுக்குமிடையில் இணைத்தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது.

x-y matrix : எக்ஸ்-ஒய் அணி : கிடைமட்ட அச்சும் (x-axis), செங்குத்து அச்சும் (y- axis) இணைந்து குறுக்கை/நெடுக்கை கொண்ட ஓர் அமைப்பு.

X-Y plotter : எக்ஸ்-ஒய் வரைவி : ஒரு காகிதத்தில், கணினி மூலம் எக்ஸ் ஒய் ஆயத்தொலைவுகள் அடிப்படையில் புள்ளிக்கோடுகளை அல்லது வளைகோடுகளை வரையும் வெளிப்பாட்டுச் சாதனம்.

x-y-z coordinate system : எக்ஸ்-ஒய்-இஸட் ஆயத்தொலை அமைப்பு : முப்பரிமாண கார்ட்டீசியன் ஆயத்தொலை அமைப்பு. கிடைமட்ட (x), செங்குத்து (y) அச்சுகளுக்கு செங்கோணமாய் அமைந்துள்ள மூன்றாவது (z) அச்சினையும் கொண்டிருக்கும். இந்த x-y-z ஆயத்தொலை அமைப்பு, கணினி வரைகலையில் நீளம், அகலம், ஆழம் கொண்ட மாதிரியங்களை உருவாக்கவும், முப்பரிமான வெளியில் மாதிரியங்களை நகர்ந்துசெல்லச் செய்யவும் பயன்படுகிறது.