உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 3/089

விக்கிமூலம் இலிருந்து

85  தமிழீழம் வாழ்க!

தங்கத் தாயகம் தமிழீழம் வாழ்க!
தமிழர்கள் உரிமையால் தழைத்தின்பம் சூழ்க!
பொங்கிய உணர்வினால் பூத்தது நாடு!
புதுமையும் நலன்களும் பொலிந்ததெம் வீடு! (தங்கத்)

ஊமைகள் பேசினர்; ஒழிந்ததிங் கடிமை!
உன்மத்தம் தொலைந்தது; ஓய்ந்தது மிடிமை!
ஆமைகள் எழுந்தன! ஆர்த்தன புலிகள் !
அயலவர் ஆட்சி அகன்றது நாட்டில்! (தங்கத்)

ஒற்றுமை மலர்ந்தது; உரிமைகள் கண்டோம்!
ஒழிந்தன பிளவுகள்! உறவுகள் கொண்டோம்!
வெற்றி முரசங்கள் விண்வெளி தோயும்!
வீரச் சுடரொளி நிலமெங்கும் பாயும்! (தங்கத்)

-1985

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_3/089&oldid=1837583" இலிருந்து மீள்விக்கப்பட்டது