உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 3/090

விக்கிமூலம் இலிருந்து

86  போக்கற்றோம் ! போக்கற்றோமே!


இலங்கையிலே குருதியாற்றில்
எந்தமிழர் பிணம்மிதக்கும்!
எரிதழுவும் வீடுகளை!
என்செய்வோம்! என்செய்வோமே!

விலங்கினங்கள் ஊர்புகுந்து,
வெவ்வாயில் உயிர்கவ்வி,
வெற்றுடலைக் குதறுகின்ற
வெறிகண்டோம்! வெறிகண்டோமே!

கலங்கையிலே நமது விழி
கண்ணீரைப் பொழியும்!உளம்
கனன்றுவிம்மும்! குலைவெடிக்கும்!
கையற்றோம்! கையற்றோமே!

புலங்கெட்டோம்! பொறிகெட்டோம்!
போயொளியும் வழியில்லை!
புன்மையிது! அடடா! ஓர்
போக்கற்றோம்! போக்கற்றோமே!

-1986

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_3/090&oldid=1837585" இலிருந்து மீள்விக்கப்பட்டது