உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 3/097

விக்கிமூலம் இலிருந்து

93 

பகை வென்றிட விலையெனில்
முழு இனம் விழுமே!

கோரிடக் கோரிடக்
கொஞ்சமும் இரங்கிலாக் கொடியர்
நேரிடைப் பேச்சென
நீண்ட இடைவெளி செய்தார்!
ஆரிடர்ப் படுபவர்?
ஐயகோ, தமிழீழ மக்கள்!
போரிட்டு வெல்கவே
பொங்கி யெழுந்து, நம் புலிகள்!

சிற்சில பூசலில்
சிக்கிநாம் இணைந்திடாச் சிறுமை
கற்சுதை போலப்
பொடிந்துநம் கதையினை முடிக்கும்!
பற்சிதை வுற்றிட
முகவாய் பொடிந்திடப்- புலிகள்
முற்பகை வென்றிட
விலையெனில் முழுஇனம் விழுமே!

-1987

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_3/097&oldid=1837719" இலிருந்து மீள்விக்கப்பட்டது