உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/054

விக்கிமூலம் இலிருந்து


51

அழகும் அருவருப்பும்!


அழகாய் உடுப்பதை
அளவில் குறைத்தால்
அருவருப் பாக
இருந்திடும்! அது
தெருவில் யார்க்கும்
விருந்திடும்!-பிறர்
பழகும் முறையில்
பண்பைத் தவிர்த்தால்
பழுதே வந்து
நிறைந்திடும்-உளப்
பான்மை மிகவும்
குறைந்திடும்!

தொடைகள் தெரிய
உடைகள் உடுப்பது
தொந்தரை களையே
விளைத்திடும்!-பெருந்
துன்பம் கூட
முளைத்திடும்!-உயர்
நடையும் ஒழுங்கும்
நம்மைக் காக்கும்;
நாட்டைக் காக்கும்;
நலந்தரும்!-மன
வாட்டம் போக்கும்;
வளந்தரும்!

-1977

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/054&oldid=1839289" இலிருந்து மீள்விக்கப்பட்டது