உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/062

விக்கிமூலம் இலிருந்து


59

உயர்வைப் பின்பற்று!


உயர்வும் தாழ்வும்
உலகில் இருக்கும்;
உயர்வைப் பின்பற்று!-தாழ்(வு)
உணர்வை நீ, அகற்று!-அறி(வு)
ஓங்குக நூல் கற்று!-மன

அயர்வும் சோர்வும்
அச்சமும் இன்றி
ஆர்வத் துடன் வினைசெய்-நல்
ஆக்கங்கள் வரும்; இதுமெய்-உனை
அழிப்பவை மடி, சினம், பொய்!
பெயரும் புகழும்
பொருளும் கருதிப்
பிழையாய் நடக்காதே!-நெறி
பேணுதல் கடக்காதே;-புறம்
பேசுதல் தொடுக்காதே!-பெருந்

துயரம் வரினும்
தூற்றுதல் பெறினும்
தூய்மை இழக்காதே!-மனந்
தொய்ந்திடக் கொழுக்காதே!-கீழ்மைத்
தொழும்பில் வழுக்காதே!

-1978

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/062&oldid=1839299" இலிருந்து மீள்விக்கப்பட்டது